search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சான்றுகள்"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம மக்களுக்கு வருவாய் துறை சான்றுகள் கிடைக்கப்பெறுகிறதா? என்பது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
    • அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கேட்டறிந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூர், புல்லமடை, எருமைப்பட்டி ஊராட்சிகளில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கிராம மக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் திருவாடனை ஊராட்சி ஒன்றியம், மருங்கூர் ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் பெற்று பயன்பெறுகிறீர்களா? என்று கேட்டறிந்ததுடன், மேலும் பல்வேறு துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பயனா ளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற கலெக்டர் குடும்ப உறுப்பினர்களிடம் தங்களுக்கு தேவையான வருவாய்த்துறை சான்றுகள் உரிய காலத்தில் கிடைக்கப்பெறுகிறதா? என்றும், நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியாக பொருட்கள் வழங்கப்படுகிறதா? குடிநீர் வழங்குவதன் விவரம் போன்றவற்றை பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    தங்களுக்கு தேவையான கோரிக்கைகளில் கால தாமதம் ஏற்பட்டால் இதுகுறித்து எனக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தர விடப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், புல்லமடை ஊராட்சி மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் எருமைப்பட்டி ஊராட்சியில் பொது மக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் பயன் குறித்து கேட்டறிந்த கலெக்டர் விஷ்ணுசந்திரன் தங்களின் அத்தியாசிய கோரிக்கைகளை உடனுக்குடன் ஆய்வு செய்து உரிய தீர்வு வழங்கப்படும் என்றார்.

    அதேபோல் தகுதியுடைய நபர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

    • குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்துக்கு மின்னஞ்சல் மூலம் நவம்பா் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் தஞ்சாவூா் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 30 நாள்கள் வேலைவாய்ப்புடன் கூடிய இலவசமாகக் கணினி கணக்கியல் பயிற்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இப்பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட தஞ்சாவூா் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த விருப்பமுள்ள மாற்றுத்தி றனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளை இணைத்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகா் பக்கிரிசாமி பிள்ளை தெருவிலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்துக்கு மின்னஞ்சல் மூலமாக நவம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசர் கல்லூரியில் தொல்காப்பியத் திருவிழா கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
    • தொல்காப்பியப் பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றுகளும் வழங்கப்பட்டன.

    திருவையாறு:

    திருவையாறு அரசர்க் கல்லூரியில் தொல்காப்பியத் திருவிழா கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.

    தஞ்சாவூர் நாகம்மாள் ஆறுமுகம் கல்விக் குழுமமும், திருவையாறு அரசர் கல்லூரியும் இணைந்து நடத்திய தொல்காப்பிய விழாவில் தொல்காப்பியப்பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றுகளும் வழங்கப்பட்டன.

    இவ்விழாவில் தஞ்சாவூர் நாகம்மாள் ஆறுமுகம் கல்விக் குழுமம் நிர்வாகி மல்லிகா மகாலிங்கம் மற்றும் முனைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அம்மன்பேட்டை குப்பு. வீரமணி முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.

    முன்னாள் அரசர் கல்லூரி பேராசிரியர் முனைவர் திருஞானசம்மந்தம் வாழ்த்துரை நல்கினார்.

    விழா நிறைவில் திருவையாறு அரசர்க்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ரஜினி தேவி நன்றி தெரிவித்தார்.

    • சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றுகளை கலெக்டர் வழங்கினார்
    • தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.

    தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு காணொளி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரகத்துறை சிறப்பு மருத்துவர்சரவணக்குமார் மற்றும் தனியார் மருத்துவமனையின்இருதய நோய் துறை சிறப்பு மருத்துவர் மனோஜ் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். 

    ×