search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் வேலைவாய்ப்பு முகாம்"

    • சுயவிவரக் குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
    • பங்கேற்க விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையின் அனைத்து வேலைவாய்ப்பு மையங்களும் இணைந்து கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.

    இதில் 8-ம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை மற்றும் அறிவியல், ஐடி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவர்கள் பங்கேற்கலாம். 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைதேடும் இளைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    பங்கேற்க விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற 20-ந்தேதி சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

    முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    பணிக்காலியிடங்களுக்கு நபர்களைத் தேர்வு செய்ய

    வுள்ள தொழில் நிறுவனங்க ளும், சேலம் மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் இம்முகா மில் கலந்துகொண்டு பய னடையலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
    • இது ஒரு இலவச பணியே ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் நாளை வெள்ளிக்கி ழமை (12-ந் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும்,

    மாதத்தின் 2 மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    இம்மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையான நாளை (12-ந் தேதி) காலை 10 மணி அளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இது ஒரு இலவச பணியே ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    இம்முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 8-ந் தேதி வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
    • நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்புமற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    திருச்சி

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 8-ந் தேதி வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, மற்றும் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் (வயது வரம்பு: 18-க்கு மேல் 35-க்குள்) கலந்துகொள்ளலாம்.

    மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்புமற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் வருகிற 8-ந்தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகைபுரிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியாா் வேலை வேண்டி காத்திருக்கும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.
    • மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காங்கயம் கரூா் சாலையில் உள்ள ஸ்ரீ மகாராஜா மஹாலில் இன்று நடைபெற்றது.

    இம்முகாமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 15,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன.

    இம்முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு படித்தவா்கள் மற்றும் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் படிப்புகளிலும் இறுதியாண்டு படிக்கும் மாணவா்கள் மற்றும் முந்தைய ஆண்டு படிப்பை முடித்த மாணவா்கள், தனியாா் வேலை வேண்டி காத்திருக்கும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.

    முகாமில் வேலை வாய்ப்புகளோடு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன வழங்கப்பட்டது.

    முகாமில் இன்று மாலை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சி.வி.கணேசன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகின்றனர். கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். 

    ×