search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நில தகராறு"

    • பிரச்சனைக்கு தீர்வு காண இரு தரப்பினரையும் போலீசார் வரவழைத்துள்ளனர்.
    • சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற பழமொழிக்கு, சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும் என்பது அர்த்தமாகும். இன்றைய காலத்தில் ஒருவர் மீது மற்றொருவர் கொள்ளும் கோபம் கொலை செய்யும் அளவுக்கு சென்று விடுகிறது.

    அதுபோல சம்பவம் தான் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. நிலம் தொடர்பான குடும்ப தகராறு ஒன்று உத்தரபிரதேச மாநிலம் அலிகரில் உள்ள கைர் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளது. மகனுக்கும், தாயுக்கும் தகராறு தொடர்பாக போலீசில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண இரு தரப்பினரையும் போலீசார் வரவழைத்துள்ளனர்.

    அப்போது தாய் மீது மகன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். சம்பவத்தை பார்த்த போலீசார் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் 40 சதவீத தீக்காயம் அடைந்த அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் பலியான பெண் ஹேமலதா என்றும் கைது செய்யப்பட்ட அவரது மகனான கவுரவுக்கு 22 வயதாகிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • பலத்த காயமடைந்த 3 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பி.டி.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 60). இவர்களுக்கு ராணி என்ற மகளும் சிவக்குமார், ரவி என்ற 2 மகன்களும் உள்ளனர். அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ரவி வீட்டுக்கு சென்று தாய் கன்னியம்மாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சிவக்குமாருக்கும் ரவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. சிவக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தம்பி ரவி, தங்கை ராணி, தாய் கன்னியம்மாள் மூவரையும் வெட்டினார்.

    இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாய் கன்னியம்மாள் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருத்தணி இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் சிவக்குமார், அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.
    • நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்.

    ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் டெல் ஃபேக்டரி பகுதியைச் சேர்ந்த காஸ்கிரஸின் பரான் நகரப் பிரிவுத் தலைவர் கவுரவ் சர்மா (43) தலவாரா சாலையில் வீட்டு மனை காண சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ராஜூ என்கிற ராஜேந்திர மீனா என்பவர் கவுரவ் சர்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    இருவருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை சண்டையாக மாறியது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கவுரவ் சுருண்டு விழுந்தார்.

    பின்னர், கவுரவை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • கனகராஜ் என்பவருக்கும் செல்வகுமார் நிலம் எதிரே விவசாய நிலம் உள்ளது.
    • கனகராஜ் மண்வெட்டியால் செல்வ குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 55) விவசாயி. இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் கந்தாடு பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் செல்வகுமார் நிலம் எதிரே விவசாய நிலம் உள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலினால் ஓரிரு இடங்களில் அதிகமாக மழை பெய்து ஏரி, குளங்கள் எல்லாம் நிரம்பி வயல்வெளிகளில் அதிகமான தண்ணீர் தேங்கியது. மரகாணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் தண்ணீர் அளவுக்கு அதிகமாக தேங்கியது.

    இதனால் செல்வகுமார் தனது வயலில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற வரப்புகளை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கனகராஜ் அவரது வயலில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த வரப்புக ளை சரி செய்ய முயன்றார். இதனால் செல்வ குமாருக்கும் கனகராஜு க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த கனகராஜ் தன் கையில் வைத்திருந்த மண்வெட்டியால் செல்வ குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார். இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் மரக்கணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மேலும் இதுகுறித்து செல்வகுமார் மரக்கணம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தூத்தூர் மண்டலத்திற்குட்பட்ட 8 பங்கு தந்தைகள் மற்றும் மீனவப் பெண்கள் நித்திரவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • முள்வேலி அகற்றுவதில் ஈடுபட்டதாக சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    தூத்தூர் புனித யூதா கல்லூரியின் பின்புறம் 13 ஏக்கர் நிலம் உள்ளது.

    இந்த நிலம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த அகமது ரஷீத் என்பவருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இந்த நிலத்திற்கு கல்லூரி நிர்வாகம் உரிமை கோரி வந்த நிலையில் வருவாய் துறையினர் அகமது ரசீதுக்கு உரிமை உள்ளது என்று அதற்கான சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து அகமது ரசீது நித்திரவிளை போலீசாரின் பாதுகாப்புடன் நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்தார். இதனை தூத்தூர் மண்டல மீனவ மக்கள் மற்றும் எட்டு ஊர் பங்கு தந்தைகள் சேர்ந்து முள்வேலியை அப்புறப்படுத்தியதாக தெரிகிறது.

    இது தொடர்பாக 8 பங்கு தந்தைகள் மற்றும் 50-க்கு மேற்பட்ட மீனவ மக்கள் மீது நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அந்த கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முள்வேலி அகற்றுவதில் ஈடுபட்டதாக சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரை போலீசார் கைது செய்தனர். ராஜு கைது செய்யப்பட்ட தகவல் அந்த பகுதி மீனவ மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தூத்தூர் மண்டலத்திற்குட்பட்ட 8 பங்கு தந்தைகள் மற்றும் மீனவப் பெண்கள் நித்திரவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட ராஜுவை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மீனவர்கள் சமாதானம் அடையவில்லை. அங்கேயே திரண்டு இருந்தனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட ராஜுவை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முயன்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் கைதான நபரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 10 மணிக்கு முடிவுக்கு வந்தது. சுமார் 11 மணி நேரம் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட தூத்தூர் பங்கு தந்தை ஷாபின், சின்னத்துறை பங்கு தந்தை ஜிபு, மார்த்தாண்டம் துறை பங்கு தந்தை சுரேஷ் பயஸ், நீரோடி பங்கு தந்தை கிளிட்டஸ், இரவிபுத்தன் துறை பங்கு தந்தை ரெஜிஸ் பாபு, இரயுமன்துறை பங்கு தந்தை அஜிஸ் ஜாண் சுமேஷ், பூத்துறை பங்கு தந்தை பென்சிகர், வள்ளவிளை பங்கு தந்தை ரிச்சார்டு சகாரியஸ் ஆகிய 8 பாதிரியார்கள் உள்பட 500 பேர் மீது நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 341, 353 ஆகிய 3 பிரிவுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • வீராணம் அருகே நிலத் தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை? தம்பியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள வேடப்பட்டி காளியம்மன் கோவில்காடு பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசி (வயது 70) இவருக்கு கமலா (63) என்ற மனைவியும் லோகநாதன் (47) என்ற மகனும் உள்ளனர். மேலும் அம்மாசிக்கு தனம் ( 61) என்ற இன்னொரு மனைவியும், அவர் மூலமாக வெங்கடாஜலபதி (45) என்ற மகனும் பானுமதி (42) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் அம்மாசிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை லோகநாதன் மற்றும் வெங்கடாசலபதிக்கு சரிபாதியாக பிரித்து கொடுத்துள்ளனர். இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி அண்ணன், தம்பி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அருகிலிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே நேற்று இரவு வீட்டில் இருந்த லோகநாதன் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். உறவினர்கள் உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகநாதன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடாசலம் தாக்கியதால் தான் தற்போது லோகநாதன் இறந்து விட்டதாக உறவினர்கள் வீராணம் போலீசாரிடம் கூறினர்.

    இதனைத் தொடர்ந்து இன்று லோகநாதன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது அதன் முடிவிலேயே லோகநாதன் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும்.

    இது தொடர்பாக போலீசார் வெங்கடாசலம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×