என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலிண்டர் விபத்து"

    • ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • வீட்டில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.

    மேற்கு வங்காளத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    மேற்கு வங்கத்தின் சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதர் பிரதிமா பகுதியில் உள்ள தோலகாட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 9 மணியளவில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது.

    இதில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தீயை அணைத்த பின் மீட்புக் குழுவினர் உள்ளே இருந்த 7 உடல்கள் மீட்கப்பட்டன. வெடிப்புக்கான காரணாம் குறித்த ஆய்வு நடந்து வருகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

    வீட்டில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. அங்கு பட்டாசு தயாரிப்பு நடந்து வந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • ரமாதேவி வேறொருவடன் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    • சிலிண்டர், படுக்கையறைக்கு வந்தது எப்படி என்று போலீசார் விசாரணை.

    ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வீட்டில் சிலிண்டர் வெடித்து தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விவகாரம் கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமையலறையில் இருக்க வேண்டிய சிலிண்டர், படுக்கையறைக்கு வந்தது எப்படி என்று போலீசார் சந்தேகித்துள்ளனர்.

    உயிரிழந்த ரமாதேவியின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், ரமாதேவி வேறொருவடன் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரமாதேவியின் கள்ளக்காதலனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
    • லாரியில் 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே இன்று அதிகாலை கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி போபுரா சௌக் அருகே வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறும் சத்தம் 3 கி.மீ தூரத்திற்கு கேட்கிறது. உயிரிழப்பு குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    சிலிண்டர்கள் வெடித்து சிதறும் சத்தத்தை கேட்டு பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

    லாரியில் 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சிலிண்டர்கள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் தீயணைப்பு படையினரால் சம்பவ இடத்தை நெருங்க முடியவில்லை. இதன்பின் சம்பவ இடத்தை நெருங்கிய தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். 



    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    • மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் பாபநாசம் (வயது 74). இவர் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் கியாஸ் சிலிண்டர் கசிவு இருந்தது. இதனை அறியாத அவர் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டர் பயங்கரமாக வெடித்தது. இதில் வீட்டின் பெரும்பகுதி சேதமடைந்தது.

    கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வீரர்கள் இடிபாடுகளை அகற்றி தீக்காயமடைந்த பாபநாசத்தை மீட்டனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தீக்காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
    • திருமணத்தின்போது சிலிண்டர் வெடித்து 4 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் விக்ரம்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடித்து சிதறியது.

    இந்த விபத்தில், ஒரு சிறுமி, 3 பெண்கள் என நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 3 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    திருமணத்தின்போது சிலிண்டர் வெடித்து 4 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, சிலிண்டரின் ரெகுலேட்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதால் சிலிண்டர் வெடித்தது தெரியவந்துள்ளது.

    ×