search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவனி"

    • நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 5-ம் திருவிழாவான நேற்று மாலை ஆன்மீக உரையும், இரவு திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் நாட்டிய குழுவினரின் பரதநாட்டியமும் நடந்தது.

    அதன் பிறகு பல வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகா ரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் தலைமையில் இலங்கை பக்தர்கள் கூடை, கூடையாக தாமரை, மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர்களை தூவி வழிபட்ட நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும் போது கோவில் ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடல் பாடியபடி அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிர கார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராத னையும் நடந்தது.

    6-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பிலும் காலை 10 மணிக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சார்பிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபர ணங்கள் மற்றும் சந்த னக்காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும், அதைத் தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் நடந்தது.

    மாலையில் சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிர காரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • கன்னியாகுமரி கோவிலில் நவராத்திரி 2-ம் திருவிழா

    கன்னியாகுமரி :

    உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாள் திருவிழா நேற்று வணிக வரித்துறை சார்பில் நடந்தது.

    இதையொட்டி நேற்று மாலை சமய உரையும் அதைத் தொடர்ந்து பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. இரவு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை முன்செல்ல வெள்ளிக்கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதுவார்களின் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

    3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. 3-ம்திருவிழாவான இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வருவாய்துறை சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11-30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள்மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும் ஆன்மீக அருள் உரையும் நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 8 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • அதனை தொடர்ந்து 15 ஆம் தேதி காலை திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படும் .
    • அதேபோல பூண்டி மாதா பேராலயமும் அதிநவீன விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள பூலோகம் போற்றும் பூண்டி மாதா பேராலயத்திபூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழா தொடக்கமான கொடியேற்று நிகழ்ச்சியில் அந்தமான் போர்ட் பிளேயர் மறை மாவட்ட பிஷப் விசுவாசம் செல்வராஜ் கலந்துகொண்டு கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றி பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும் பல்வேறு அருட்தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    திருவிழாவில் ஏழாவது நாளான இன்று மாலை மரியா-பாவிகளின் அடைக்கலம் என்ற பொருளில் கோயம்புத்தூர் மதுரை மாவட்ட முதன்மை ஜான் ஜோசப் ஸ்டெனிஸ் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    விழாவின் 8வது நாளான நாளை மாலை மரியா -மன்னிப்பின் சிகரம் என்ற பொருளில் செங்கல்பட்டு மறை மாவட்ட முதன்மை குரு ஜான்போஸ்கோ திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    பூலோகம் போற்றும் பூண்டி மாதாவின் திருவிழா நாளான நாளை மறுநாள் 14 ஆம் தேதி காலை பூண்டி மாதா பேராலயத்தில் அருட்தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் அடிகளார் நினைவு திருப்பலி நிறைவேற்ற ப்படுகிறது.

    மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி மரியா -அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    இதில் பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன்,துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ் ,ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இரவு 9.30மணி அளவில் மல்லிகை மலர்களாலும், அதிநவீன மின் விளக்கு அலங்காரத்தில் பூண்டி மாதாவின் தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி அடிகளார் தொடங்கி வைக்கிறார்.

    அப்போது சிறப்பு வாணவே டிக்கை நடைபெறும் .

    அதனை தொடர்ந்து 15 ஆம் தேதி காலை திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படும் .அன்று மாலை கொடி இறக்கத்துடன் பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா நிறைவு பெறும் .

    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பேராலய வளாகம் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல பூண்டி மாதா பேராலயமும் அதிநவீன விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

    அலங்கார தேர்ப்பவனி காண்பதற்காக நாடெங்கிலும் இருந்த பக்தர்கள் பூண்டி மாதா பேராலயத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் விரிவான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய நிர்வாகம் செய்து வருகிறது.

    • ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
    • குருத்தோலை பவனி நடைபெற்றது.

    ஆத்தூர்:

    கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்களின் தவக்காலம் 40 நாட்கள் சாம்பல் புதனில் தொடங்கி வரும் ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகையோடு முடிவடைகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

    ஜெருசலேம் நகரில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து ஒலிவ மரக்கிளைகளைக் கையில் ஏந்தி தாவிது மகனுக்கு ஓசன்னா, ஆண்டவர் பேரால் வருபவர் ஆசி பெற்றவர் என ஆர்ப்பரித்துக் கூறி பவனி வந்தனர்.

    அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை பவனி ஆனது கொண்டாடப்படுகிறது. இந்த குருத்தோலை ஞாயிறு திருப்பலியின் மூலம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட புனித வாரம் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. இதையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

    • திரளான மக்கள் பங்கேற்பு
    • திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியா குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த9-ந்தேதிகொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறை யுரை, திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, ஜெபமாலை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று அதிகாலையில் பழைய கோவிலில் திருப்பலியும் அதைத்தொடர்ந்து 6.15 மணிக்கு அஞ்சு கூட்டுவிளை இறைமக்கள் சிறப்பித்த திருப்பலி நிகழ்ச்சியும் நடந்தது.

    பின்னர் காலை 8 மணி முதல் 9 மணி வரை திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும் 10.30 மணிக்கு நோயாளி களுக்கான திருப்பலி யும் நடந்தது. கேசவன் புத்தன்துறை பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். இதனை தூய அடைக்கல அன்னை சகோதரிகள் சிறப்பித்தனர். மாலையில் சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. இதனை பங்குப் பேரவையினர் சிறப்பித்தனர். இரவு 8 மணிக்கு வாண வேடிக்கையும், இரவு 9 மணிக்கு புனிதசூசையப்பர் தங்கத் தேர்ப்பவனியும் நடைபெற்றது. திருத்தலம் முன்பு இருந்து புறப்பட்ட சூசையப்பர் தேர்4ரத வீதிகள் வழியாக பவனி வந்து அதிகாலையில் நிலைக்குநின்றது.

    10-ம் நாள் திருவிழாவான இன்று அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலியும், காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடந்தது. பங்கு மக்கள், குமரிப்பகுதி வாழ் மக்கள், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் குமரி மக்கள், திருப்பயணிகள் ஆகியோர் இதனை சிறப்பித்தனர். காலை 8 மணிக்கு ஆங்கில திருப்பலி நடந்தது காலை 10 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத் தேர்ப்பவனி நடந்தது. இதில் விஜய் வசந்த் எம். பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர். காலை 10.30 மணிக்கு மலையாளத் திருப்பலியும் பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலியும் நடந்தது. மாலை 5 மணிக்கு இரு தங்கத்தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக பவனி வந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. வழிநெடுகிலும் மக்கள் மாதாவுக்கு மாலை அணிவித்து காணிக்கை மற்றும் நேர்ச்சை செலுத்தி னார்கள். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசிர் போன்றவை நடைபெறு கிறது.

    திருவிழாவுக்கான ஏற் பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணியாளர் ஆன்றனி அல்காந்தர், இணைப்பங்கு தந்தையர்கள் பங்குப் பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொ ருளாளர் தீபக் இணை பங்கு தந்தையர்கள் மேக்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன் மற்றும் பங்குப்பேரவையினர், அருட் சகோதரிகள், அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

    • மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது
    • மயிலாடி பங்குத்தந்தை சைமன் மறையுறையாற்றுகிறாா்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும். ஆலய திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் பழையகோவிலில் திருப்பலி, புனிதசூசையப்பா் பீடத்தில் திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடைபெற்று வருகிறது.

    8-ம் திருவிழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலியும் நடந்தது. ஆலஞ்சி வட்டார முதல்வர் அருட்ப பணியாளர் தேவதாஸ் தலைமையில் திட்டுவிளை பங்குதந்தை அருட்பணியாளர் சஜுமறையுரை ஆற்றினார். இரவு 9 மணிக்கு திருச்சப்பர பவனி நடந்தது.

    9-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) அஞ்சு கூட்டுவிளை பங்கு இறைமக்கள் திருவிழாவை சிறப்பிக்கின்றனா்.காலை நடைபெற்ற நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலிக்கு கீழமணக்குடி பங்குத்தந்தை ஆன்றனி பிரபு தலைமை தாங்கி, திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றினார்.

    மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு மாலை ஆராதனைக்கு திருநயினாா் குறிச்சி பங்குத்தந்தை லியோன் எஸ்.கென்சன் தலைமை தாங்குகிறார். மயிலாடி பங்குத்தந்தை சைமன் மறையுறையாற்றுகிறாா். 9 மணிக்கு சூசையப்பர் தங்க தேர்ப்பவனி நடக்கிறது.

    10-ம் திருவிழாவை முன்னிட்டு நாளை (18-ந்தேதி) அதிகாலை தங்கத் தேரில் திருப்பலி நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 6 மணிக்கு திருவிழா நிறைவுத் திருப்பலி அருட்பணியாளர் சுவக்கின் தலைமையில் நடைபெறும். அருட்பணியாளர் மில்லா் மறையுறையாற்றுகிறாா். காலை 8 மணிக்கு நடைபெறும் ஆங்கிலத் திருப்பலியை அருட்ப பணியாளர் ஆன்சல் ஆன்றனி நிகழ்த்துகிறாா்.

    தொடா்ந்து புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வா் ஜீன்ஸ் மறையுரையாற்றுகிறாா். காலை 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத் தோ் பவனி நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மலையாள திருப்பலியும், பகல் 12 மணிக்கு சிறப்பு திருப்பலியும் மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை திருத்தல பங்குமக்கள், பங்குத்தந்தை ஆன்றனி அல்காந்தா், இணை பங்குத்தந்தையா்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியா் அருள்நாதன், பங்குப்பேரவை துணை தலைவா் ஜோசப், செய லாளர் சுமன், பொருளா ளா் தீபக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • இன்று 10-ம் நாள் திருவிழா
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    நாகர்கோவில்:

    கேட்ட வரம் தரும் கோட்டார் சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழா நாட்களில் தினமும் காலை மாலை நேரங்களில் திருப்பலி மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்து வருகிறது .விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும்.அதன்படி நேற்று முன்தினம் முதல் நாள் தேர் பவனியும் நேற்று இரண்டாவது நாள் தேர்பவனியும் நடந்தது.

    10-ம் திருவிழாவான இன்‌று காலை 6 மணிக்கு புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை யில் நடந்த ஆடம்பர கூட்டு திருப்பலியில் மறை மாவட்ட குருகுல முதல்வர் கிலாரியூஸ் மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல் ராஜ் மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் வட்டார முதன்மை பணியாளர் சகாய ஆனந்த் சவேரியார் ஆலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன் இணைப்பங்கு தந்தை ஆன்றோஜெராபின் முன்னாள் பங்கு தந்தை குருஸ் கார்மல் மற்றும் அருள் பணியாளர்கள் அருள் சகோதரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு மலையாள திருப்பலி திருவனந்தபுரம் உயர்மறை மாவட்டத்தை சேர்ந்த கிளாடின் அலெக்ஸ் தலைமையில் நடந்தது. இதைத் தொடர்ந்து தேர் பவனி நடந்தது.

    முதலாவதாக மிக்கேல் அதிதூதர் தேரும் 2-வதாக செபஸ்தியார் தேரும் மூன்றாவதாக சவேரியார் தேரும் நான்காவதாக ஜெபமாதா தேரும் இழுத்து வரப்பட்டது. அப்போது பொதுமக்கள் நேர்ச்சைக்கட னாக மெழுகுதிரி, மிளகு ஆகியவற்றை வழங்கி னார்கள்.மாலைகளும் வழங்கப்பட்டது. தேருக்கு பின்னால் பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்தனர். ஆலயத்திலிருந்து தொடங்கிய தேர் பவனி தெற்கு ரதவீதி கம்பளம் ரயில்வே ரோடு வழியாக மீண்டும் சவேரியார் ஆலயத்தை இன்று இரவு வந்தடைகிறது. திருவிழாவை யொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் சவேரியார் ஆலயத்திற்கு வந்திருந்தனர்.

    வெளியூர்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.இதனால் காலை முதலே சவேரியார் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் ஆலயம் வரை உள்ள சாலையிலும் சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டமாக இருந்தது.

    திருவிழாவையொட்டி கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் ஆலயம் வரை உள்ள சாலைகளில் இருபுறமும் திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் ஆலயம் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் மாற்று பாதை வழியாக இயக்கப்பட்டது.

    கூட்டம் அலைமோதி யதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலை மையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருவிழாவை யொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. சவேரியார் ஆலயத்தில் இன்று இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது.

    • 1923-ஆம் ஆண்டு ரோம் நகரில் புனித குழந்தை இயேசுவின் தெரசா அருளாளராக அறிக்கையிடப்பட்டார்
    • கண்டன்விளை ஆலயத்தின் இரு ஆலய மணிகளும் புனித தெரசாவின் சொந்த சகோதரிகள் அன்பளிப்பாக அனுப்பி வைத்தவையாகும்.

    கன்னியாகுமரி:

    அன்பிற்காகத் தம்மையே அர்ப்பணித்து எளிய முறையில் சிறிய வழியில் இறையன்பையும் பிறர் அன் பையும் நிறைவாக வாழ்ந்து காட்டிய எம் பாதுகாவலி புனித குழந்தை இயேசுவின் தெரசா இறையருளை வாரி வழங்கத் தேர்ந்தெடுத்த இடம்தான் கண்டன் விளை.

    கண்டன்விளை காரங் காடு பங்கின் ஒரு பகுதியாக இருந்தது. காரங்காடு பங்கு மிகப் பெரியதாக இருந்த மையால் புதிதாக இன்னும் ஓர் ஆலயம் கட்ட வேண் டுமென விரும்பிய அருட்தந்தை இக்னேஷியஸ் மரியா கண்டன்விளையில் இடம் தேர்வு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

    1923-ஆம் ஆண்டு ரோம் நகரில் புனித குழந்தை இயேசுவின் தெரசா அருளாளராக அறிக்கையிடப்பட்ட விழா வில் கலந்து கொண்ட அன்றைய ஆயர் பென்சிகர் கண்டன்விளையில் எழுப் பப்படும் ஆலயம் சிறு மலரின் முதல் ஆலயமாக அமையும் என ஆயர் பேரவையில் அறிவித்தது கண்டன்விளைப் பங்கை உலகறியச் செய்தது. இந்த ஆலயம் 7-4-1924 அன்று அர்ச்சிக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட புதிய ஆலயம் 7-4 1929 அன்று கட்டி முடிக்கப்பட்டது.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒலிக்கும் இரு ஆலய மணிகளும் புனித தெரசாவின் சொந்த சகோதரிகள் (அன்பளிப் பாக) அன்பாக அனுப்பி வைத்தவையாகும். அம்மணி களில் நான் அனைத்து இந்திய மக்களையும் சிறுமல ருக்கு வணக்கம் செலுத்த கண்டன்விளைக்கு அழைப் பேன் என்னும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புனித குழந்தை தெரசாவின் இரு சொரூபங் களும் கார்மல் மாதா சொரூபமும் ரோமிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவையாகும். திருத்தந்தையால் அனுப்பி வைக்கப்பட்ட புனிதையின் பேரருளிக்கமும் இங்கு பக்தர்களின் வணக்கத் திற்காக வைக்கப்பட்டுள் ளது. 1944-ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப்பட்ட கண்டன்விளைக்கு அருட் தந்தை. ஸ்டீபன் முதல் பங் குத்தந்தையாகப் பொறுப் பேற்றார். முன்னாள் பங்குத் தந்தையர் மற்றும் பங்கு மக்களின் முயற்சியால் புனித லூர்து அன்னை கெபி, ஒரே கல்லாலான கொடி மரம், சக்கரங்களையுடைய தேர், குருசடி, அருட்சகோத ரியர் இல்லம், அருட்பணிப்பேரவை அலுவலகம், அழகிய பீடம், முப்பக்கக் கோபுரங்கள், நடுநிலைப் பள்ளி, தெரஸ் அரங்கு, செபமாலை மலைச்சிற்றால யம், கூடாரம், யூடிக்கா மருத்துவமனை, புனித தெரசா மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளி ஆகிய அனைத்தும் உரு வாக்கப்பட்டுள்ளன.

    1994-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட பங்கு பொன் விழாவின் நினைவாக, அன்றுமுதல் வாரந் தோறும் வியாழக் கிழமை மாலை 6.15 மணிக்கு செபமாலையும் தொடர்ந்து நவநாள் திருப் பலியும் நடைபெற்று வரு கின்றன. பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்று இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர். இங்கு நாள்தோறும் காலை 6.15 மணிக்கு ஞாயிறு மற்றும் திருநாட்களில் காலை 7 மணிக்கும் திருப்பலி நடைபெற்று வருகிறது.இந்த ஆலயத் தின் நூற்றாண்டு விழா 2023-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ம் ஆண்டு நிறைவு பெறஉள் ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வரு கிறது.

    விழாவில் இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு, காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலியை திருத்துவபுரம் பங்குதந்தை பீட்டர் தலைமை தாங்கி நிறைவேற் றுகிறார். கருமாத்தூர் குருமட தேவராஜ் அருளுரை யாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்று கிறார். 9.30 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறுகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழ மை) அதிகாலை 5.30 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி திருப்பலி நிறை வேற்றுகிறார். காலை 8 மணிக்கு பாளையங் கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமை தாங்கி திருவிழா சிறப்பு திருப்ப லியை நிறைவேற்றுகிறார். காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் மறைமாவட்ட அருட்பணியா ளர் இஞ்ஞாசி ராஜசேகரன் தலைமை தாங்கி மலை யாள திருப்பலியை நிறை வேற்றுகிறார். 11.30 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், 6.30 மணிக்கு திருக்கொடி இறக்கம் ஆகியவை நடக் கிறது.

    இதற்கான ஏற்பாடு களை பங்குதந்தை வெ.சகாய ஜஸ்டஸ், இணை பங்குதந்தை சத்தியநாதன், துணைத்த லைவர் பி.எம். ஜஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலா ளர் லல்லி மலர், பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    • கன்னியாகுமரி கோவிலில் நவராத்திரி 6-ம் திருவிழாவையொட்டி நடந்தது
    • விஜய்வசந்த் எம்.பி., நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவி லில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த 26-ந் தேதி விழா தொடங்கியது. 6-ம் திருவிழாவான நேற்று அம்மனுக்கு நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் சார்பில் சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. மாலையில் ஆன்மீக சொற்பொழிவும், இரவு மெல்லிசைக் கச்சேரியும் நடந்தது.

    அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது பக்தர்களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாட லுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவ டைந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்‌.பி., நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா, கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க தலைவர் பால்சாமி, செயலாளர் அரிகிருஷ்ணபெருமாள், துணை செயலாளர் ஓம்நமச்சிவாயா, கொட்டா ரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வசந்தகுமாரி, கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாரா தனையும் நடந்தது. 7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபர ணங்கள் மற்றும் சந்தனக் காப்பு அலங்கா ரத்துடன் தீபாராத னையும் நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. மாலையில் சாய ரட்சை தீபாரா தனையும், இரவு பக்தி பஜனையும், வெள்ளி இமயகிரி வாகனத்தில் எழுந்தருளி அம்மன் கோவிலின் வெளிப் பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • கூடை-கூடையாக மலர் தூவி வழிபட்ட இலங்கை பக்தர்கள்
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ - திரளான பக்தர்கள் தரிசனம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. 5-ம்திருவிழாவான நேற்று இரவுபரத நாட்டியம் நடந்தது.

    அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக் கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்த ருளி கோவிலின் வெளிபிர காரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேல் தலைமையில் இலங்கை பக்தர்கள் கூடை-கூடையாகதாமரை, மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர் களை தூவி வழிபட்ட நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது பக்தர்களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவர் தம்பித்தங்கம், தென்தாமரை குளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ், அகஸ்தீஸ்வரம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் சிவபாலன், தோவாளை ஒன்றிய பொரு ளாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்டபெருமாள் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மா சனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.6-ம்திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும் இரவு 8 மணிக்கு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்த ருளி கோவிலின் வெளிப்பிர காரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • நவராத்திரி 5-ம் திருவிழாவையொட்டி நடந்தது
    • இலங்கை பக்தர் கூடை கூடையாக மலர் தூவி வழிபாடு

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்தக் கோவிலில் நவ ராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த 26-ந்தேதிதொடங்கியது. 4-ம்திருவிழாவான நேற்று இரவு பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது பக்தர்களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தைமூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் 4-ம் திருவிழா மண்டகப்படி கட்டளைதாரர்கள் பலவூர் அண்ணாதுரை முத்துக்குமாரி கொட்டா ரம் இசக்கிமுத்து கன்னியா குமரியைச் சேர்ந்த வருவாய்த்துறை வருவாய் ஆய்வாளர் மகாராஜன், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க தலைவர் பால்சாமி, செயலாளர்அரிகிருஷ்ண பெருமாள், பொருளாளர் வைகுண்ட பெருமாள், துணைச் செயலாளர் ஓம் நமச்சிவாயா, கொட்டாரம்பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வசந்தகுமாரி, சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசகர் வெங்கடகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

    5-ம்திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11 30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தியும் அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள்மற்றும் சந்தனக்காப்பு அலங்கா ரத்துடன் தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும் இரவு8 மணிக்கு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் கூடை கூடையாக தாமரை மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர்களை தூவி வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • பக்தர்கள் தேவார பாடல் பாடினர்

    கன்னியாகுமரி:

    கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கோவிலில் நவ ராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 2-ம் நாள்திருவிழா நேற்று வணிகவரித்துறை சார்பில்நடந்தது.

    இதையொட்டி நேற்று மாலை சமயஉரையும் அதைத்தொடர்ந்து பக்தி இன்னிசைக்க ச்சேரியும்நடந்தது. இரவு நெற்றிப்பட்டம்அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானைமுன்செல்ல வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்த நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது பக்தர்களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

    3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்ட பத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தைமூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்ட ப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்ம னின் வாகன பவனி நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நெல்லை கோட்ட வணிக வரி துறை இணை ஆணையர் சுகந்தி, நாகர்கோவில் துணை ஆணையர் கிருஷ்ணசாமி, தூத்துக்குடி துணை ஆணையர் சந்திரசேகர், வணிகவரித்துறைமாநில வரி அலுவலர்கள் (ஜி.எஸ் டி.) ராஜசேகரன், ராஜகோபால், முருகன், ராமசாமி சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசகர் வெங்கடகிருஷ்ணன்,

    ஆடிட்டர் சுரேஷ் கன்னியாகுமரிபோலீஸ் டி.எஸ்பி. ராஜா, கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் செயல்அலுவலர் ராஜேந்திரன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் தலைமை அலுவலக மேலாளர் வெங்கடேஷ்,

    கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க தலைவர் பால்சாமி செயலாளர்அரிகிருஷ்ண பெருமாள், பொருளாளர் வைகுண்டபெருமாள், துணைசெயலாளர் ஓம்நம ச்சிவாய,

    அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.3-ம்திருவிழாவான இன்று (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வருவாய்து றைசார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதில் நாகர்கோவில் ஆர்டிஓ சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர்காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11-30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள்மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது.

    மாலையில் சாயரட்சை தீபாராதனையும் ஆன்மீக உரை மற்றும் பரதநாட்டியம் போன்றவைகளும் நடக்கிறது. இரவு8 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ×