search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமாஜ்வாதி"

    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்து விடுவார்கள்.
    • ராமர் மீண்டும் கூடாரத்துக்குச் செல்ல நேரிடுவார் என் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    அயோத்தி தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மாற்ற விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இது எப்படி சாத்தியம் என்று சிலர் நினைக்கலாம்.

    சுதந்திரப் போராட்டத்தின் போது நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று பேசும்போது, நாட்டைப் பிரிக்கமுடியாது என்று மக்கள் சொன்னார்கள். ஆனாலும் அது நடந்தது. அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களின் சாதனை பதிவு அத்தகையது. அவர்களுக்கு நாடு முக்கியமில்லை. குடும்பம், அதிகாரம்தான் முக்கியம்.

    காங்கிரசும், சமாஜ்வாடியும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடித்துவிடுவார்கள். காங்கிரஸ் வெற்றி பெற்றால் குழந்தை ராமர் கோவிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார். புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும், எங்கு பயன் படுத்தக்கூடாது என்று யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

    தேர்தலில் வெற்றி பெற்று மோடி அரசு ஹாட்ரிக் சாதனை படைக்கும். தேர்தல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கி உள்ளன.

    பா.ஜக-தேசிய ஜனநாயக கூட்டணி தேசிய நலனுக்காக அர்ப்பணித்து உழைக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணி நாட்டில் உறுதியற்ற தன்மையை உருவாக்க களத்தில் உள்ளது.

    புதிய அரசில் ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்காக பல முக்கிய முடிவுகளை நான் எடுக்க உள்ளேன். ரேபரேலி மக்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

    இதைக்கேட்ட சமாஜ்வாதி இளவரசரின் (அகிலேஷ் யாதவ்) இதயம் உடைந்தது. கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. ஆனால் அவரது இதயத்தின் ஆசைகள் அனைத்தும் உடைந்துவிட்டன. அகிலேஷ் யாதவ் புதிய அத்தையின் (மம்தா பானர்ஜி) கீழ் அடைக்கலம் அடைந்துள்ளார்.

    இந்த புதிய அத்தை மேற்கு வங்காளத்தில் இருக்கிறார். அவர் (மம்தா பானர்ஜி) இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு தருவேன் என கூறியுள்ளார்.

    உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் காரணமாக தற்போது நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் பரிசுகளைத் தேர்ந்தெடுக்க எனது மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. மாநில இணையதளத்தைப் பார்த்து பரிசு பொருட்களை எடுத்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    • டெல்லி, அரியானாவில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
    • தற்போதைய கள நிலவரப்படி பா.ஜ.க. 220-க்கும் குறைவான தொகுதிகளையே பெறும் என்றார்.

    லக்னோ:

    டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தர பிரதேச மாநிலம் சென்றார். லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகத்துக்குச் சென்ற கெஜ்ரிவாலை அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது:

    டெல்லி, அரியானாவில் பா.ஜ.க. படுதோல்வி அடையும். பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க. குறைந்த எண்ணிக்கையிலேயே வெற்றி பெறும்.

    தற்போதைய கள நிலவரப்படி பா.ஜ.க. 220-க்கும் குறைவான தொகுதிகளையே பெறும்.

    உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, பீகார், கர்நாடகாவில் பா.ஜ.க. வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.

    மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 400 தொகுதிகளுக்கு மேல் வென்றால் இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுவார்கள். இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பிரதமர் மோடி விரும்புகிறார். அமித் ஷாவை பிரதமராக்கவே பிரதமர் மோடி வாக்கு கேட்கிறார்.

    பா.ஜ.க.வில் 75 வயதானவர்கள் கட்சி பதவியில் இருந்து ஓய்வு பெறுவர் என்ற விதியை பிரதமர் மோடி பின்பற்றுவார் என நம்புகிறேன் என்றார்.

    இதைத் தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 143 இடங்கள்தான் கிடைக்கும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெயின்புரி தொகுதியில் இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் அமைச்சர் ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.
    • 3-வது கட்டமாக மெயின்புரி தொகுதியில் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது.

    உத்தர பிரதேசத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி 8 தொகுதிகளுக்கு நடக்கிறது.

    இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் மனைவியான டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அகிலேஷ் யாதவ் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    மெயின்புரி தொகுதியில் இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் அமைச்சர் ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.

    மூன்றாவது கட்டமாக மெயின்புரி தொகுதியில் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது.
    • பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமென்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக ரூ.6,986 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019- 20ம் ஆண்டில் மட்டும் பாஜகவிற்கு ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து தேர்தல் ஆணையத்திடம் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில் எங்கள் அலுவலகத்துக்கு திடீரென வந்த சிலர் சீலிடப்பட்ட கவரை வைத்துவிட்டு சென்றனர். அதனை திறந்துபார்த்தபோது அதில் 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பத்திரங்கள் இருந்தன. அதனால் யார் எங்களுக்கு நன்கொடை கொடுத்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை என்று ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது.

    அதே போல் சமாஜ்வாதி கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 10.84 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஆனால் அதில், 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பாத்திரங்கள் எங்களுக்கு தபால் மூலமாக வந்தது. ஆதலால் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்கள் தெரியவில்லை என சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

    • முபாரக்பூர் தொகுதியில் (2012, 2017) இரண்டு முறை சட்டமனற உறுப்பினராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஷா ஆலம் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்

    உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த ஷா ஆலம் அக்கட்சியில் இருந்து விலகி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

    உத்தரபிரதேசத்தில் முபாரக்பூர் தொகுதியில் (2012, 2017) இரண்டு முறை சட்டமனற உறுப்பினராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    2014 மற்றும் 2022 மக்களவை தேர்தல்களில் அசம்கர் தொகுதியில், முறையே சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மற்றும் தர்மேந்திரா யாதவ்க்கு எதிராக ஷா ஆலம் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனிப்பட்ட ஆதாயங்களை விரும்புவோர் பா.ஜ.க.வுக்குச் செல்லலாம் என்றார் அகிலேஷ் யாதவ்.
    • பா.ஜ.க.வின் அழுத்தத்தால் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சி மாறி வாக்களிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் இமாசல பிரதேசம் என மொத்தம்15 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடந்து வருகிறது.

    தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் சிலர் கட்சி மாறி வாக்களிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வான மனோஜ் குமார் பாண்டே, கட்சியின் தலைமைக் கொறடா பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் கூறுகையில், தனது கட்சியின் 3 வேட்பாளர்களும் உறுதியாக வெற்றி பெறுவர். தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க. அனைத்து உக்திகளையும் பயன்படுத்தும். தனிப்பட்ட லாபத்தை விரும்பும் தலைவர்கள் பா.ஜ.க.வுக்குச் செல்லலாம் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உத்தர பிரதேசம், கர்நாடகா, இமாசல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    • வரும் 29-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

    புதுடெல்லி:

    வருகிற ஏப்ரல் மாதம் 15 மாநிலங்களில் முடிவடைய உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இதில் சோனியா காந்தி, ஜே.பி.நட்டா உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர். உத்தர பிரதேசத்தில் 10 இடங்கள், கர்நாடகாவில் 4 இடங்கள் மற்றும் இமாசல பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகா, உத்தர பிரதேசம், இமாசல பிரதேசத்தில் உள்ள 15 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் லக்னோவில் தனது வாக்கைச் செலுத்தினார்.

    காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 4 மணிக்கு நிறைவடையும். வரும் 29-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

    • உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுடன் கூட்டணி உறுதி என்றார் அகிலேஷ் யாதவ்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே இன்று தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரசுக்கு வாரணாசி, ரேபரேலி, அமேதி, பாரபங்கி, ஜான்சி, காசியாபாத் உள்ளிட்ட 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ல 63 இடங்களில் சமாஜ்வாதி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், எல்லாம் நன்றாகத்தான் முடிந்துள்ளது. காங்கிரசுடன் கூட்டணி உறுதியாகி உள்ளது. எங்களுக்குள் மோதல் இல்லை. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
    • உத்தர பிரதேசத்தில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என சமாஜ்வாதி தெரிவித்துள்ளது.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியை இன்னும் சில நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் அனைத்துக் கட்சியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர்

    இதற்கிடையே, மத்தியில் உள்ள பா.ஜ.கவை எதிர்க்க அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • கடந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சவுகான் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.
    • சட்டசபை சபாநாயகர் மற்றும் சட்டசபை முதன்மை செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை சவுகான் வழங்கினார்.

    லக்னோ:

    சமாஜ்வாதி கட்சியின் மவு மாவட்டம் கோசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாராசிங் சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    சட்டசபை சபாநாயகர் சதீஷ் மகானா மற்றும் சட்டசபை முதன்மை செயலாளர் பிரதீப் துபே ஆகியோரிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை தாராசிங் சவுகான் அளித்துள்ளார்.

    சவுகான் ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மவு மாவட்டம் கோசி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவான தாராசிங் ஆகிய நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சவுகான் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். சட்டசபை தேர்தலுக்கு முன் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் சவுகான் இடம்பெற்றிருந்த நிலையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமீபத்தில் நடந்த உத்தர பிரதேசம் மாநில மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாதி தோல்வி அடைந்தது.
    • சமாஜ்வாதி கட்சியின் அனைத்து நிர்வாக அமைப்பு பதவிகளை கலைத்து அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது கட்சியின் தேசிய தலைவர் பதவி தவிர, அதன் அனைத்து அமைப்புகளின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாக அமைப்புகள் உடனடியாக கலைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டரில், சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ், கட்சியின் மாநிலத் தலைவர் தவிர, கட்சியின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாக அமைப்புகளை உடனடியாகக் கலைக்கப்படுகின்றன. தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், இளைஞர், மகளிர் அணிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியின் மாவட்டத் தலைவர்களும் கலைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

    மேலும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

    ×