என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடிநீர் கேட்டு"
- பெண்கள் குடிதண்ணீர் கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பு. புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் சாலையில் நான்காம் வார்டு கவுன்சிலர் துளசி மணி தலைமையில் பெண்கள் குடிதண்ணீர் கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தாகூர் வீதி 4-வது வார்டில் குடி தண்ணீர் கடந்த 6 நாட்களாக வருவ தில்லை. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடை ப்பதில்லை. அப்படியே ஆறு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வந்தா லும் முன்பு போல் வேகமாக வருவதில்லை. மிகவும் குறைவாகவே வருகிறது.
நேரமும் குறைவாக வருகிறது. மேலும் இந்த குடி தண்ணீர் பிரச்சனையைப் பற்றி நகராட்சி அலுவல கத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடி க்கையும் எடுக்கப்படவி ல்லை.
இதனால் நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். பின்னர் தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் குடிநீர் குழா ய்களை ஒரு வாரத்திற்குள் சரி செய்து குடிதண்ணீர் சீராக வருவதற்கு நடவடி க்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலை ந்து சென்றனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- கடந்த சில தினங்களாக இங்கு சீரான குடிநீர் வழங்கப்பட வில்லை.
- காலி குடும்பங்க ளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி செல்லும் சாலையில் உள்ள கல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இங்கு சீரான குடிநீர் வழங்கப்படவில்லை.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர் இன்றுகாலை திடீரென காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் பகுதியில் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் கல்லாவி- ஊத்தங்கரை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- பெண்கள் இன்று காலை காலிகுடங்களுடன் புதுக்கரை புதூர் என்ற பகுதியில் திரண்டனர்.
- ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள நஞ்சை கோபி செட்டிபாளையம் என்ற ஊரில் பவானி ஆற்றின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் இன்று காலை காலிகுடங்களுடன் புதுக்கரை புதூர் என்ற பகுதியில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் திடீரென அந்தியூர்-கோபி செட்டிபாளையம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
இதுப்பற்றி தெரியவந்ததும் கோபிசெட்டி பாளையம் இன்ஸ்பெக்டர் அ.சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
- வண்ணான்கொள்ளை கிராமத்தில் கடந்த 10 நாட்களாக முறையாக குடிநீர் வரவில்லை.
- ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடத்துடன் மறியல் போராட்டம் நடத்தினர்.
திருவோணம்:
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே இடையாத்தி வடக்கு வண்ணான்கொள்ளை கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக முறையாக குடிநீர் வரவில்லை.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் காலி குடத்துடன் நெய்வேலி கடைவீதியில் கரம்பக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும்
வட்டாத்திகோட்டை போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது.
- சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டம் செய்தனர்.
- இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளி–திருப்பூர் மரப்பாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிக்கு கடந்த 15 நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் செய்தனர். ஆனாலும் இதுவரை குடிநீர் வரவில்லை.
இதையடுத்து இன்று காலை இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் காலிகுடங்களுடன் ஒன்று திரண்டு வெள்ளிதிருப்பூர்-அந்தியூர் செல்லும் பிரதான சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டம் செய்தனர்.
இதன் காரணமாக ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
இதுப்பற்றி தெரிய வந்ததும் வெள்ளி திருப்பூர் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் செய்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வரவேண்டும். எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து போலீசார் போராட்டத்தை கைவிடுங்கள். குடிநீர் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
- பொதுமக்கள் தங்கள் பகுதியில் 2 நாட்களுக்கு ஒரு முறை ஒரு மணிநேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.
- தஞ்சை-திருச்சி சாலை பெரியார் சிலை அருகில் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
வல்லம்:
தஞ்சை அருகே வல்லத்தில் உள்ள சவேரியார் கோவில் தெரு, பெரியார் நகர், இந்திரா நகர், அம்பேத்கர் நகர், அகிலாங்கரை மேட்டு தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் 2 நாட்களுக்கு ஒரு முறை ஒரு மணிநேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதை மாற்றி தினமும் குடிநீர் வழங்க வேண்டும்.
பாதாள சாக்கடைப்பணிகளை தரமான முறையில் அனைத்து தெருக்களுக்கும் அமைத்து இரு புறமும் வடிகால் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்ேவறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் அதிகமான பொது மக்கள் வல்லத்தில் தஞ்சை - – திருச்சி சாலை பெரியார் சிலை அருகில் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்த வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யா ணசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்த நாயகி, வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பொது மக்கள் தங்கள் கோரிக்கை கள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தால் மட்டுமே சாலைமறியல் விலக்கி கொள்வோம் என்று தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கடந்த 3 மாதங்களாக ஆற்று குடிநீர் வராததால் பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளிலும், குடிநீர் குழாய்களிலும் வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
- ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கா ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை 8 மணி அளவில் சித்தார்- பூனாச்சி செல்லும் வழியில் செம்படாபாளையம் கரலாமணி என்ற இடத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்க ளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சி செம்படாபாளையம் அடுத்துள்ள கரலாமணியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக ஆற்று குடிநீர் வராததால் பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளிலும், குடிநீர் குழாய்களிலும் வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திடமும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் கொடுத்தாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கா ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை 8 மணி அளவில் சித்தார்- பூனாச்சி செல்லும் வழியில் செம்படாபாளையம் கரலாமணி என்ற இடத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்க ளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- குட்டை மேடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீெரன இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தகவல் அறிந்ததும் பவானி துணை தாசில்தார் சரவணன் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் பேரூராட்சி குட்டைமேடு பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தினந்தோறும் காலை 6 மணிக்கு குடிநீர் வினி யோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த பகுதிக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஏற்கனவே ஒலகடம் பேரூராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அந்த பகுதி மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குட்டைமேடு பகுதிக்கு போதுமான ஆற்று குடிநீர் வரவில்லை என பவானி -வெள்ளித்திருப்பூர் மெயின் ரோட்டில் ஒலகடம் அருகே குட்டை மேடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீெரன இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி துணை தாசில்தார் சரவணன் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்