என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செயற்கைகோள்"
- செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
- அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
பீஜிங்:
விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தநிலையில் விமானம், விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு பாகங்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடை போன்றவற்றிற்காக இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அதேபோல் தைவானுக்கு ஆயுதங்களை விற்ற சில அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
- லிக்னோசாட் செயற்கைக்கோள் மக்னோலியா மரத்தினால் செய்யப்பட்டதாகும்.
- வெளிபுறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் மர செயற்கைக்கோளை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் சுமிட்டோமோ பாரெஸ்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.
சோதனை முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஒவ்வொரு பக்கமும் 10 சென்டி மீட்டர் (4 அங்குலம்) அளவைக் கொண்டுள்ளது. லிக்னோசாட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் வருகிற செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகிறது.
லிக்னோசாட் செயற்கைக்கோள் மக்னோலியா மரத்தினால் செய்யப்பட்டதாகும்.
வெளிபுறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. லிக்னோசாட் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு விண்வெளியை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தொவித்தனர்.
- டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனையை நடத்தி வந்தது.
- ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.
பிஜிங்:
செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை கொண்டு வர சீனா ஆய்வு மேற்கொண்டது.
இதற்காக டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனனையை நடத்தி வந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தரையில் செல்போன் கோபுரங்கள் இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட் போன் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தனர். இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.
தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட எந்த இடையூறும் இன்றி தொலை தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனால் இத்திட்டம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது.
- எப்-14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது.
இதனை, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப் பணியாக 27.5 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது.
எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
- ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி விண்ணில் பாய்வதற்கு 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.
இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2-வது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது.
அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும். இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக 'எல்1 பேண்ட் சிக்னல்'களை உள்ளடக்கியது.
இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று காலை 7.12 மணிக்கு தொடங்கியது. 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.
ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்கியது.
- ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை விண்ணில் பாய்வதற்கு 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை நாளை (திங்கட்கிழமை) காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.
இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2-வது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது. அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும். இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக 'எல்1 பேண்ட் சிக்னல்'களை உள்ளடக்கியது.
இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.12 மணிக்கு தொடங்கியது.
3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- செயற்கைகோள் மென்பொருள் தயாரித்த மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- 10 பேர் மென்பொருள் தயாரித்தனர்.
திருமங்கலம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் ஆசாதி-2 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் மென்பொருள் தயாரித்தனர். அவர்கள் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சிக்கு இஸ்ரோ சென்று வந்தனர். செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து மாணவிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இந்த நிலையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து செயற்கைக்கோள் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்தார்.
- செயற்கை கோளுக்கு மென்பொருள் தயாரித்து திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மாணவிகளை வாழ்த்தினார்.
திருமங்கலம்
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ சார்பில் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் புதிய செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டின் மூலம் செலுத்தப்பட்ட ஆசாதி சாட் எனப்படும் செயற்கை கோளை தயாரிக்க நாடு முழுவதும் 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவிகளைக் கொண்டு செயற்கைக்கோள் மென்பொருள்களை தயாரிப்பதற்காக இஸ்ரோ தேர்வு செய்தது.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவிகள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு செயற்கை கோளுக்கான மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதால் அவர்கள் ஸ்ரீஹரிகோட்டா சென்று வந்தனர்.
முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து மாணவிகளை பாராட்டினார். இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டினர்.
மேலும் ஒன்றிய அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் தன்ராஜ், சிவசுப்பிரமணி, மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் சரவணபாண்டி, மகேந்திரபாண்டி, சிங்கராஜ் பாண்டியன், வாகைகுளம் சிவசக்தி, மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் தமிழ்ச்செல்வம், திருப்பதி, ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அன்பழகன், நிர்வாகிகள் ஆண்டிச்சாமி, காசி, விஜி, தலைமை ஆசிரியர் கர்ணன், ஆசிரியைகள் சந்தியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஸ்ரீதேவி சண்முகபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- செயற்கைகோள் நிலவை அடைய 4 மாதங்கள் ஆகும்.
- புதிய சுற்றுப்பாதை மூலம் எரிபொருள் பயன்பாடு குறைகிறது.
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, ராக்கெட் லேட் மற்றும் அட்வான்ஸ்ட் ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கேப்ஸ்டோன் செயற்கைகோளை ஏவியது. நியூசிலாந்தின் மகியா தீபகற்பத்தில் சிறிய எலெக்டிரான் ராக்கெட்டில் 25 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் கடந்த 6 நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்ட பாதையை அடைந்த செயற்கைகோள் அதிலிருந்து விலகி வெற்றிகரமாக நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.
இந்த செயற்கைகோள் நிலவை அடைய 4 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராக்கெட் லேப் நிறுவனர் பீட்டர் பெக் கூறும்போது, மீதமுள்ள பணிகள் வெற்றிகரமாக இருந்தால் கேப்ஸ்டோன் செயற்கைகோள், நிலவை சுற்றி ஒரு புதிய சுற்றுப் பாதையில் முதன் முதலில் செல்லும். பல தகவல்களை பல மாதங்களுக்கு அனுப்பும் என்றார்.
இந்த செயற்கைகோள் குறைந்த செலவில் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேட்வே என்ற விண்வெளி நிலையத்தை சுற்றுப்பாதையில் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. அதில் இருந்து விண்வெளி வீரர்கள், ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவின் மேற்பரப்பில் இறங்கு திட்டம் வகுத்துள்ளது.
புதிய சுற்றுப்பாதை மூலம் எரிபொருள் பயன்பாடு குறைகிறது. மேலும் செயற்கைகோள் அல்லது விண்வெளி நிலையம் பூமியுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்