என் மலர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர் பலி"
- சிங்கம்புணரி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
- இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் ஆகாஷ் (வயது 19). இவர் மதுரையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று மாலை மாணவர் ஆகாஷ், திருப்பத்தூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டி பகுதியில் சென்று கொண்டி ருந்தபோது அவரது மோட்டார் சைக்கிள், எதிரே காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பஸ் மீது மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய மாணவர் ஆகாஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்.பி.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடகனாற்று தடுப்பணை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
- எதிர்பாராமல் கால் தவறி வழுக்கி ஆற்றில் இருந்த நீர் சுழல் பகுதியில் விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே வக்கம்பட்டி அடுத்த முன்னிலைக்கோட்டை ஊராட்சி ஏசுபாளையத்தை சேர்ந்த அந்தோணி மகன் மரியகவுதம் (வயது 19). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் பிரிவு 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வக்கம்பட்டியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் குடகனாற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றிருந்தார். வீ.கூத்தம்பட்டி பார்வதி அம்மன் கோயில் அருகே உள்ள குடகனாற்று தடுப்பணை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராமல் கால் தவறி வழுக்கி ஆற்றில் இருந்த நீர் சுழல் பகுதியில் விழுந்தார். இதில் தண்ணீருக்குள் அவர் மூழ்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அப்போது நண்பர்கள் தண்ணீரில் உயிருக்கு போராடி தத்தளித்துக் கொண்டிருந்த மரிய கவுதமை கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீரில் மூழ்கி பலியான மரியகவுதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து வேடசந்தூர் வரை செல்லும் குடகனாற்றில் யாரும் குளிக்க கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கிணற்றில் குளித்து கொண்டிருந்த போது நீச்சல் தெரியாததால் பாரதி கிணற்றில் மூழ்கியுள்ளார்.
- தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் மூழ்கி இருந்த பாரதியை மீட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியங்கலம் அருகே உள்ள கஞ்ச நாயக்கனூரை சேர்ந்தவர் ரேணுகா தேவி (38). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது தாய் வீட்டில் தங்கி தனியார் டெக்ஸ்டைல் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் பாரதி (19). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். பாரதி தனது நண்பரும் உறவினருமான, அதே கல்லூரியில் படித்து வரும் பரணி (19) என்பவருடன் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.
இருவரும் கிணற்றில் குளித்து கொண்டிருந்த போது, நீச்சல் தெரியாததால் பாரதி கிணற்றில் மூழ்கியுள்ளார்.இதனையடுத்து அவரை காப்பாற்ற முடியாமல் பரணி சத்தம் போட்டதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் மூழ்கி இருந்த பாரதியை மீட்டு, சத்தியங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பாரதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
- இம்ரானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் கீழ் பாட்சா தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் இம்ரான் (வயது 19). கல்லூரி மாணவர்.இவர் தனது நண்பர்கள் சிலருடன் ஒரு காரில் நேற்று சேலம் நோக்கி சென்றுள்ளார். சொக்கராபட்டி சாலையில் கார் சென்றபோது முன்னால்ஒரு லாரி சென்றது.
காரை ஒட்டி சென்ற இம்ரான் அந்த லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது நிலைதடுமாறிய கார் சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இம்ரானுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.
அவரை உடனே மீட்டு தருமபுரி தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர். பின்னர் சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இம்ரானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து கோபிநாதம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- வசந்த் பவானி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார்.
- நீச்சல் தெரியாததால் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார்.
சத்தியமங்கலம்:
கோபிசெட்டிபாளையம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் வசந்த் (19). இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் வசந்த் தனது கல்லூரி நண்பர்க ளுடன் சத்தியமங்கலம் அடுத்த அரசூர் பவானி ஆற்று பகுதிக்கு சென்றார்.
இதையடுத்து வசந்த் பவானி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார்.
அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு நீச்சல் தெரியா ததால் அவர் திடீரென நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார்.
இதை கண்ட அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர். இவர்களது சத்தத்தை கேட்டு அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டனர். ஆனால் அவர் நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீ சாருக்கு தகவல் கிடைத்தும் அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
- விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் நிற்காமல் சென்றதால் அப்பகுதி மக்கள் விரட்டிச்சென்று பஸ்சை நிறுத்தினர்.
- சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த முத்துகிளி மகன் லோகேஸ்வரன்(19). போடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் இன்று தனது நண்பரான நாட்டுத்துரை(19) என்பவருடன் பைக்கில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது தேனியில் இருந்து போடி நோக்கி வந்த தனியார் பஸ் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் வந்த மாணவர் லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த நாட்டுத்துரை படுகாயங்களுடன் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் நிற்காமல் சென்றதால் அப்பகுதி மக்கள் விரட்டிச்சென்று பஸ்சை நிறுத்தினர். இதுகுறித்து போடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 19 வயதான கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வயல்வெளி உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே அசநெல்லிக்குப்பம் பகுதியல் கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.
வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 19 வயதான கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வயல்வெளி உரிமையாளர் வரதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெமிலி அருகே பரிதாபம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் விக்னேஷ் (19).இவர் ராமச்சந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லூரி மாணவர்
இவர் நெமிலி அடுத்த அசநெல்லிப்குப்பம் பகுதியில் இரவு நடந்த திருவிழாவை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியில் இருந்த வயல்வெளியில் சிறுநீர் கழிப்பதற்காக இறங்கியுள்ளார்.வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் அரக்கோணம் ஏ.எஸ்.பி. கிரிஸ்யாதவ் விசாரணை மேற்கொண்டார்.
இது தொடர்பாக விளை நிலத்தின் உரிமையாளர் அலிநெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த வரதன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ்சுக்காக ரோஷன் வழி விட ஒதுங்கினார்.
- மோட்டார் சைக்கிளில் சென்ற ரோஷன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் ரோஷன் பிஜி (வயசு 19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை ரோஷன் பிஜி மோட்டார் சைக்கிளில் தனது நண்பரை ஈரோடு காளைமாட்டு சிலை அருகே இறக்கி விட்டு மீண்டும் மணல் மேட்டில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
ஈரோடு சென்னிமலை ரோடு, பழைய கூட் செட் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ்சுக்காக ரோஷன் வழி விட ஒதுங்கினார். அந்த பகுதியில் புதிதாக ரோடு போடுவதற்காக சாலையை தோண்டி வைத்துள்ளனர்.
இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற ரோஷன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சின் பின் சக்கரம் ரோஷன் தலையில் ஏறி இறங்கியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிய ரோசனை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி ரோஷன் பிஜி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாணவனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தாய், மகன் படுகாயம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் அடுத்த எட்டிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 65). இவரது மனைவி கிளியம்மாள் (45). இவர்களுக்கு வெங்கடேசன் (25), விக்னேஷ் (21) என 2 மகன்கள் உள்ளனர். விக்னேஷ் கலசபாக்கம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
வெங்கடேசன் வேலூர் இடையஞ் சாத்தில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். கிளியம்மாள் சித்தாள் வேலை செய்து வருகிறார்.
நேற்று வேலை சம்பந்தமாக கிளியம்மாள், வெங்கடேசன், விக்னேஷ் ஆகியோர் பைக்கில் வேலூருக்கு வந்தனர். பின்னர் இரவு வேலூரில் இருந்து கண்ணமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலார்த்து வென்றான் கிராமத்தில் அருகே வரும்போது எதிரே வந்த தனியார் பஸ் இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் விக்னேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கிளியம்மாள், வெங்கடேசன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தட்சிணாமூர்த்தி சந்தவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கிருஷ்ணா கால்வாயில் அதிகஅளவு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
- தண்ணீரின் வேகத்தில் இமானுவேல் இழுத்து செல்லப்பட்டார்.
பெரியபாளையம்:
வெங்கல் அருகே உள்ள பட்டாபிராம் அடுத்த தண்டுரை பகுதியை சேர்ந்தவர் இமானுவேல் (வயது18). இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார்.
தற்போது பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கிருஷ்ணா கால்வாயில் அதிகஅளவு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இமானுவேல், தனது நண்பர்களுடன் புழல் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் இறங்கி குளித்தார்.
அப்போது தண்ணீரின் வேகத்தில் இமானுவேல் இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து வெங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் திருவூர் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய மாணவர் இமானுவேலை தேடினர். இரவு வரை தேடியும் அவரை மீட்க முடியவில்லை.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக இமானுவேலை தேடும் பணி நடந்தது. அப்போது அதே பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் இமானுவேல் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
- இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே உள்ள ஊஞ்சபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ராஜேஷ் (18). கல்லூரி மாணவர். மொடக்குறிச்சி அடுத்த பட்டறை வேலம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் பூபதி (17). இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மோட்டார் சைக்கிளில் ராஜேஷ், பூபதி மற்றும் பூபதியின் தம்பி கலைச்செல்வன் (15) ஆகிய 3 பேரும் பட்டறை வேலம்பாளையத்தில் இருந்து மூலனூர்-ஈரோடு ரோட்டில் சென்று கொண்டிருந்த போது வளைவில் திரும்பி உள்ளனர்.
அப்போது மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். பூபதிக்கு லேசான காயமும், கலைச்செல்வனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மொடக்குறிச்சி போலீசார் ராஜேஷ் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.