என் மலர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர் பலி"
- வேலூரை சேர்ந்தவர்
- பஞ்சுமிட்டாய் தயாரிக்க சுவிட்சை ஆன் செய்தபோது விபரீதம்
ஆரணி:
வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் அருள்மாறன் (வயது 19), ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் படித்து வந்தார்.
கல்லூரி மாணவர்
இவர் படித்துக் கொண்டு விடுமுறை நாட்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து கொடுப்பது மற்றும் கேட்ரிங் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், திருவண் ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பஞ்சுமிட்டாய், பாப்கான் தயாரித்து கொடுப்பதற்காக அருள்மாறன் சென்றார். அப்போது திடீரென மின்நிறுத்தம் ஏற்பட்டது.
பின்னர், சிறிது நேரம் கழித்து மின்சாரம் வந்தது. மீண்டும் பாப்கான், பஞ்சுமிட்டாய் தயாரிக்க சுவிட்சை ஆன் செய்தார். அதிலிருந்த மின்சாரம் இவர் மீது பாய்ந்தது.
இதில் அருள்மாறன் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, அருள் மாறனின் தந்தை குமார் நேற்று களம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அருள்மாறன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுசம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலை தடுமாறி கீழே விழுந்த தேவானந்த் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார்.
- விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாயி லே அவுட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் தேவானந்த் (வயது 20). சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் காலை உடல் பயிற்சி செய்வது வழக்கம்.
இன்று காலை வழக்கம் போல் உடற்பயிற்சி செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குமரன் ரோடு எம்ஜிஆர்., சிலை அருகே செல்லும் போது, குமரன் ரோட்டை கடந்து பார்க் ரோடு வழியாக செல்ல முயன்றார். அப்போது குமரன் ரோட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தேவானந்த் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார். இதில் அவரது வலது கை டயரில் சிக்கி சிதைந்தது.
வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால் திடீரென தேவானந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.
கொடுமுடி:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த சத்திய நாயக்கன் பாளையம், திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் காந்தி (வயது55). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகன் மேகராஜ் (19) தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படி த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காந்தி தனது உறவினர் வீட்டு கிடா விருந்துக்காக இளைய மகன் மேகராஜை அழைத்துக்கொண்டு ஈரோடு மாவட்டம் பாசூர் அருகே உள்ள சங்கிலிகருப்பண்ணசாமி கோவிலுக்கு சென்றுள்ளார். கிடா விருந்தில் கலந்து கொண்டு விட்டு மேகராஜ் மற்றும் உறவினர்கள் 10 பேர் சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலுக்கு முன்பாக உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர்.
அங்கு மேகராஜ் மற்றும் உறவினர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென மேகராஜ் நீரில் மூழ்க தொடங்கினார். அவருக்கு நீச்சல் தெரியாது. சிறிது நேரத்தில் மேகராஜ் நீரில் மூழ்கினார். உறவினர்கள் மேகராஜ் நீரில் மூழ்கியதை கண்டு கூச்சலிட்டனர்.
உடனடியாக இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய மேகராஜை தேடினர். பின்னர் சிறிது நேரத்தில் மேகராஜை தண்ணீரில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இதையடுத்து அவரை கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் மேகராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.
- வீட்டில் தனியாக இருந்த மாணவர் பாத்ரூமில் உள்ள சுவிட்ச் அழுத்திய போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.
- மயங்கிய வாலிபரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே குண்டாம்பட்டி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். அதே பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களது மகன் சுதர்சன் சக்திவேல் (வயது18). தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் பேக்கரிக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த சுதர்சன், பாத்ரூமில் உள்ள சுவிட்ச் அழுத்திய போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர்.
அங்கு மயங்கி கிடந்த இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம னைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரி சோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதனை அடுத்து பிரேத பரி சோதனை க்காக சுதர்சன் உடல் மருத்துவ மனையில் வைக்க ப்பட்டு ள்ளது. இச்சம்பவம் குறித்து எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அணைப்பட்டி சாலையில் சென்றபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்த போது தடுமாறி கீழே விழுந்தார்.
- படுகாயமடைந்த கல்லூரி மாணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சித்தர்கள்நத்தம் சக்கிலிய ப்பட்டியை சேர்ந்தவர் சென்றாயன் மகன் முகேஸ்க ண்ணா (வயது18). இவர் ஆத்தூர் அரசு கூட்டுறவு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தனது சகோதரி செல்ல ம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருந்து வாங்க நிலக்ேகாட்டைக்கு பைக்கில் சென்றார். அணைப்பட்டி சாலையில் சென்றபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்தார். அப்போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.
அக்கம் பக்கத்தி னர் அவரை மீட்டு நிலக்கோ ட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்ட முகேஸ்க ண்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிர சாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சம்பவத்தன்று கல்லூரி செல்லும் பஸ்சை விட்டு விட்டதால் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- ஆண்டிபட்டி சாலையில் உள்ள பெருமாள் கோவில் ஓடை அருகில் சென்ற போது பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
தேவதானப்பட்டி:
பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பள்ளித்தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ஸ்ரீதர் (வயது 18). இவர் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரி செல்லும் பஸ்சை விட்டு விட்டதால் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆண்டிபட்டி சாலையில் உள்ள பெருமாள் கோவில் ஓடை அருகில் சென்ற போது பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இதில் படுகாயமடைந்த ஸ்ரீதர் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் கம்பெனி பஸ் மோதியது
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள வெள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவகன். இவரது மகன் ராகுல் (வயது 21). அதே ஊரைச் சார்ந்த முனியன் மகன் அசோக்குமார் (22).
2 ேபரும் செய்யாறில் தனியார் கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று மாலை 5.45 மணி அளவில் ராகுலும் அசோக்குமாரும் பைக்கில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வடபூண்டிபட்டு கூட்ரோட்டில் எதிரே வந்த சிப்காட் கம்பெனி பஸ் பைக் மீது மோதியது.
இதில் இருவரும் காயமடைந்து செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக இறந்தார். அசோக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து செய்யாறு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- நீரின் வேகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாமல் ஜீவா மூச்சுத்திணறியும், உடலில் காயங்களுடன் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
- உறவினர்கள் நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
நிலக்கோட்டை:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்த சின்னத்துரை மகன் ஜீவா(20). கல்லூரியில் படித்து வந்தார். இவரது உறவினரான நிலக்கோட்டை அருகே உள்ள சி.புதூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஈஸ்வரன் இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜீவா வந்திருந்தார்.
பின்னர் இவர் குளிப்பதற்காக சி. புதூர் அருகே வைகை அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தற்போது திறந்து விட்டுள்ள பெரியாறு பிரதான கால்வாய் நீரில் குளிக்க சென்றார். அப்போது கால்வாயில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஜீவாவை நீர் அடித்துச் சென்றது.
இதனை எதிர்பாராத அவர் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் நீரின் வேகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாமல் ஜீவா மூச்சுத்திணறியும், உடலில் காயங்களுடன் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் நீரில் சிக்கிய ஜீவாவின் உடலை நீண்டநேரம் போராடி மீட்டனர். பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜீவாவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து சின்னத்துரை கொடுத்த புகாரின்படி விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வாலிபர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வடக்கு மாவிலியூத்து கிராமத்தில் உள்ள கோவில் கொடை விழாவிற்கு பிரதீப் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
- அப்போது அங்கு பக்கத்து ஊரை சேர்ந்தவர்களுக்கும், பிரதீப் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரதீப்(வயது 20). இவர் மேலநீலிதநல்லூரில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
நேற்று வடக்கு மாவிலியூத்து கிராமத்தில் உள்ள கோவில் கொடை விழாவிற்கு பிரதீப் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு பக்கத்து ஊரை சேர்ந்தவர்களுக்கும், பிரதீப் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே பிரதீப் மற்றம் அவரது நண்பர்களை எதிர்தரப்பினர் தாக்க முயன்றதாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க பிரதீப் தரப்பினர் ஓடியதாகவும் கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக பிரதீப் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் பிரதீப் மற்றும் அவரது நண்பர்களை துரத்தியவர்களில் சுரண்டையை சேர்ந்த போலீஸ்காரர் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரின் சொந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் திரண்டு உள்ளதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பவானிசாகர் அருகே உடற்பயிற்சி நிலையம் சென்று விட்டு வீடு திரும்பிய மாணவர் மீது லாரி மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தியேலே இறந்தார்.
- இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் பு.புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வருகிறார்.
இவரது மகன் கரண் (20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கரண் உடற்பயிற்சி நிலையத்துக்கு சென்று விட்டு மேட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக தொட்டம்பாளையம் ரோட்டில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து பஞ்சாப் செல்வதற்காக எந்திர பாகங்கள் ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த லாரி எதிர்பாராதவிதமாக கரண் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிப்பட்டு கீழே விழுந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இற ந்தார்.
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஈரோடு-காங்கேயம் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் கல்லூரி மாணவர் ஜோஸ்வா சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
- அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஜோஸ்வா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறை அருகே உள்ள குப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா (வயது 22). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை ஜோஸ்வா ஈரோடு-காங்கேயம் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஜோஸ்வா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். எதிரே மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தினர் ஜோஸ்வாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோஸ்வா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.