என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரோந்து பணி"
- அடையாளம் தெரியாதவர்கள் யாரும் தமிழகத்திற்குள் நுழையாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ரோந்து பணியானது கடலிலும், கடற்கரையோர பகுதிகளிலும் 2 நாட்கள் நடைபெறும்.
வேதாரண்யம்:
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று (19-ந்தேதி) தமிழகம் வருகிறார். இன்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
இந்நிலையில், பிரதமர் வருகையையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையோர பகுதிகளில் இருந்து அடையாளம் தெரியாதவர்கள் யாரும் தமிழகத்திற்குள் நுழையாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஆற்காட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் படகு மூலம் கடலுக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் சுற்றித்திரிந்தால் உடனடியாக தகவல் அளிக்கும்படி மீனவர்களிடம் அறிவுறுத்தினர்.
இந்த ரோந்து பணியானது கடலிலும், கடற்கரையோர பகுதிகளிலும் 2 நாட்கள் நடைபெறும் என கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் தெரிவித்தார்.
- தலைமை காவலர் கோவிந்தராஜ், பவானி ஆகியோர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கடலூர்:
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஏழுமலை, காவலர்கள் முருகானந்தம், ராஜா , தலைமை காவலர் கோவிந்தராஜ், பவானி ஆகியோர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக மினி வேன் மற்றும் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அவர்களை சோதனை செய்த போது மூட்டைகள் இருந்தன. இதனைத் தொடர்ந்து மூட்டைகளை சோதனை செய்தபோது ரேஷன் அரிசி இருந்தது ெதரிய வந்தது. பின்னர் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீ சார் விசா ரணை மேற்கொண்டனர். இதில் திட்டக்குடி தொழுதூர் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 28), ஒரங்கூர் சேர்ந்தவர் காளிமுத்து (30) என தெரிய வந்தது. மேலும் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- சங்கராபுரம் அருகே சாராயம், மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- விஜயகாந்தை கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டி யன் தலைமையில் போலீசார் மோட்டாம்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் விஜயகாந்த் (வயது 32) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே போலீசார் விஜயகாந்தை கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று சங்கரா புரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீ சார் பூட்டை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்த சிவா (33) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- பண்ருட்டியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சோதனையில் புதுச்சேரி மதுப்பாட்டில்கள் 15 வைத்திருந்தது தெரியவந்தது.
கடலூர்:
பண்ருட்டி உட்கோட்ட கிரைம் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பண்ருட்டி ஆர் எஸ் மணி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 37) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் புதுச்சேரி மதுப்பாட்டில்கள் 15 வைத்திருந்தது தெரியவந்தது பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் மோகன்ராஜை கைது செய்து அவனிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவைகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.அப்போது மாளிகம்பட்டு அம்மன் கோவில் தெரு சேர்ந்த பத்மநாபன் (43), என்பவர் கள்ளத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்தார். போலீசார் விரைந்து அவரை கைது செய்து மது பாட்டில்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவைகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில்அடைத்தனர்
- சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர்.
- சாக்கு மூட்டையில் தென்பெண்ணையாற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே தெம்மார் ஆஞ்ச நேயர் கோவில் அருகே திரு வெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மணி கண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு மூட்டையில் தென்பெண்ணையாற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து மினி லாரி டிரைவர் எரலூரை சேர்ந்த விஜய் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோழி சண்டை நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பேய்க்காநத்தம் பகுதியில் உள்ள வயல்வெளியில் சிலர் கும்பலாக அமர்ந்திருந்ததை பார்த்தனர்.
கடலூர்:
குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று இரவு சோர்ந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த ரோந்து பணி நடந்தது. அப்போது பேய்க்காநத்தம் பகுதியில் உள்ள வயல்வெளியில் சிலர் கும்பலாக அமர்ந்திருந்ததை பார்த்தனர். அங்கு சென்றபோது கோழி சண்டை நடத்தி சூதாட்டம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து கோழிச்சண்டை சூதாட்டம் நடத்திய கருப்பன்சாவடி விஜய், தா. பாளையம் பாஸ்கர், பேய்க்கா நத்தம் மனோ மூர்த்தி, வெங்கடாம்பேட்டை சதாசிவம் ஆகியோரை கைது செய்தனர். கோழிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
- பகண்டை கூட்டு ரோடு அருகே மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணபுரம் தாலுக்கா பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இளையனார்குப்ப த்தை சேர்ந்த கணேஷ் மகன் வெங்கடேசன்(வயது38) என்பவர் தனது வீட்டின் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை ேபாலீசார் கைது செய்தனர். இதே போன்று சின்னக்கொள்ளியூரை சேர்ந்த முனுசாமி(58) என்பவர் தனது வீட்டின் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த நாமக்குளம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (22).
இவர் கடந்த 7-ந் தேதி தனது பைக் தனது சித்தப்பா வீட்டிற்கு அருகில் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.
இது தொடர்பாக பத்மநாபன் சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சிப்காட் போலீசார் சீக்கராஜபுரம் செக்போஸ்ட் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த சிம்பு ( எ)குல்லா (20), சரத் (எ)தூள் (21), கவியரசன் (19)ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது பத்மநாபனின் பைக்கை திருடி வந்திருப்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.
- டாஸ்மாக்கில் கொள்ளை அடித்தவர்கள் கஞ்சா விற்ற வழக்கில் சிக்கினர்.
- திருச்சுழி அருகே போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதி–களவில் கஞ்சா விற்பனை செய்யபட்டு வருவதாக திருச்சுழி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து திருச்சுழி காவல் நிலைய இன்ஸ்பெக் டர் மணிகண்டன் தலைமை–யிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சத்திர புளி–யங்குளம் பகுதியில் ரோந்து வந்தபோது அங்கு சந்தேகிக் கும் வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசா–ரணை மேற்கொண்ட–னர். இதில் அவர்கள் முன் னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் இருவரையும் திருச்சுழி காவல் நிலையம் அழைத்துச்சென்று விசா–ரித்தனர்.
இதில் ஒருவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா நாகமுகுந்தங்குடி பகுதியை சேர்ந்த கிருஷ் ணன் மகன் ரஞ்சித் (23) மற்றும் சிவகங்கை மாவட் டம் மானாமதுரை தாலுகா மூங்கில் ஊரணி பகுதியை சேர்ந்த பாண்டிச்சாமி மகன் சிலம்பரசன் (17) என்பதும், இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை சட்டவிரோதமாக அப்பகு–தியிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து மேலும் அவர்களை சோதனை மேற்கொண்டதில் சுமார் இரண்டரை கிலோ கஞ்சா இருந்ததையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனை செய்த இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இருவரும் திருச்சுழி பள்ளி–மடம் அரசு டாஸ்மாக் கடை–யில் ரூ.6 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கைது செய்து, அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மரூர் பகுதியில் பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேல் (வயது 44) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- பெரம்பலூரில் வன விலங்கு வேட்டையை முற்றிலும் தடுக்க வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணி மேற்கொண்டனர்
- இந்த ரோந்து பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்பேரில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில் பெரம்பலூர் வனவர் குமார், வனக்காப்பாளர்கள் அன்பரசு, மணிகண்டன் மற்றும் களப்பணியாளர்கள் கொண்ட குழுவினர் கல்பாடி, சிறுவாச்சூர், சத்திரமனை, வேலூர், மங்கூன், அம்மாபாளையம், குரும்பலூர், லாடபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பன்றி , மான், முயல் உள்ளிட்ட வனவிலங்கு வேட்டை தடுப்பு, இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.இந்த ரோந்து பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தெரிவித்துள்ளார்.
- கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் வந்தது.
- மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா அத்திப்பாக்கம் கிராமத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிக்கு தகவல் வந்தது. அக்கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உளுந்தூர்பேட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி அதி்திப்பாக்கம் கிராமத்தில் திருநாவலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் 2 பெண்கள் உள்பட 3 பேர் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டனர். அவர்களை மடிக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த அஞ்சாமணி (வயது 48), சரிதா (25), தேவநாதன் (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அரசின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து மதுபாட்டில் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்