search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூலம்"

    • நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.
    • பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.

    பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பரிசல் மூலம் தேடுதல்

    உடனடியாக இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசா ருக்கு தகவல் அளித்தனர்.

    இதனிடையே சம்பவம் நடந்த இடம் ஈரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் பள்ளிபாளையம் போலீசார் ஈரோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் துணையுடன் காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    7-க்கும் மேற்பட்ட பரிசல்களுடன் நேற்று இரவு 7 மணி வரை பெண்ணை தேடும் பணி நடந்தது.

    இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை முதல் 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    காவிரி ஆற்றில் குதித்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளிர் உரிமை தொகை பெற சேலத்தில் சிறப்பு முகாம்களில் பயோ மெட்ரிக் மூலம் பெயர் பதிவு நடந்தது.
    • ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்தனர்.

    சேலம்:

    சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்ப டும் என வாக்குறுதி அமைக் கப்பட்டது.

    இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்ட நிலையில் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்

    தொடங்கப்படும்என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்திருந்தார்.

    விண்ணப்பம்

    இதற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப் பம் மற்றும் டோக்கன் விநியோகம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் விண் ணப்ப பதிவு முகாம் தொடங்கி யது. இதையொட்டி தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விண்ணப்ப பதிவு முகாமை தொடங்கி வைத்தார்.

    ஆயிரம் முகாம்

    இதை தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் உள்ள 11 லட்சம் கார்டுகளில் 500 கார்டுகளுக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் அரசு பள்ளிகள், திருமண மண்டபங்களில் 1000-க்கும் மேற்பட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் இன்று தொடங்கியது. இதையொட்டி, டோக்கனில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தின் படி பொதுமக்கள் முகாம்களில் குவிந்தனர்.

    அவர்களிடம் முதலில் ஆதார் எண் பதியப்பட்டது. பின்னர் விரல் ரேகை பயோ மெட்ரிக் கருவி மூலம் சரி பார்க்கப்பட்டது. விரல் ரேகை பதிவு சரியாக அமை யாத வர்களுக்கு ஆதார் அட்டை யுடன் இணைக்கப் பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. பெறப்பட்டு பதிவு ெசய்யப்பட்டது. பின்னர் விண்ணப்பங்களுக்கு ரசீதுகள் வழங்கப்பட்டது.

    இந்த பணியில் வட்ட வழங்கல் துறை மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட் டுள்ளனர். இந்த முகாம் நடைபெறும் சில இடங்க ளில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் மாவட்ட வழங்கல் துறை அதிகாரி களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தகுதி உள்ள அனை வருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன.
    • நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்

    ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றை தலா மூன்று நட்சத்திரமாகக் கொண்டு ஒன்பதாக பிரிப்பர். அதன்படி நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் இங்கே தரப்பட்டுள்ளன. உங்களின் நட்சத்திரம் எதில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள்.

    அஸ்வினி, மகம், மூலம்

    நட்சத்திர அதிபதி கேது ஆவார். கேது திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் விநாயகர். எப்போதும் விநாயகரை வழிபட்ட பின் பணிகளை தொடங்குங்கள். சதுர்த்தி நாளில் விநாயகர் கோயிலுக்கு செல்ல மறக்காதீர்கள்.

    அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்போடு பல நிறமும் கலந்த ஆடைகள் அணிவது யோகம் தரும். அதிர்ஷ்ட எண் 5,7,9. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். நவரத்தினத்தில் வைடூரியத்தை அணிந்து கொள்வது நன்மை தரும். மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.

    பரணி, பூரம், பூராடம்

    சுக்ரனே உங்களின் நட்சத்திர அதிபதி. சுக்ர திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் மகாலட்சுமி. காலையில் கண் விழிக்கும் போதே மகாலட்சுமி படத்தை பார்த்து வணங்குங்கள். வெள்ளிக்கிழமையில் லட்சுமி சந்நிதியில் நெய்தீபமிடுங்கள். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவது யோகம் தரும்.

    அதிர்ஷ்டம் தரும் எண்கள் 3,6,8. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் எளிதில் முடியும். அதிர்ஷ்ட கல் வைரம். எல்லோராலும் வாங்கமுடியாது. வைரத்திற்குப் பதிலாக, ஸ்படிக மாலை வாங்கி அணிவதும் நல்லது. மிதுனம், தனுசு, மகரம், கும்பம் ராசியினரோடு நல்ல நட்பு மலரும்.

    கிருத்திகை, உத்திரம், உத்திராடம்

    சூரியனே உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். நீங்கள் சூரிய திசையில் பிறந்தவர். சிவபெருமானைத் தொடர்ந்து வழிபடுவதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். பிரதோஷ நாளில் சிவாலய தரிசனம் செய்வது சிறப்பு.

    அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்பு நிற ஆடை அணிவது யோகம் தரும். 1,5,7 ஆகிய எண்கள் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு வரவழைக்கும். இந்த தேதிகளில் ஆரம்பிக்கும் செயல்களில் கிடைக்கும். அதிர்ஷ்ட கல் மாணிக்கம். கடகம், விருச்சிகம், தனுசு, மீனராசியினர் நண்பர்களாக அமைந்தால் நட்பு நீண்ட காலம் தொடரும்.

    ரோகிணி, அஸ்தம், திருவோணம்

    உங்களின் நட்சத்திர நாதனாக சந்திரன் இருக்கிறார். சந்திரதிசையில் பிறந்த நீங்கள், அம்பிகையை வழிபடுவதால் நன்மை பெறுவீர்கள். பவுர்ணமியில் அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவதன் மூலம் வெற்றி வந்து சேரும்.

    அதிர்ஷ்டம் தரும் எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் தொடங்கும் செயல் எதுவானாலும் வெற்றி உங்களுக்கே. முத்து பதித்த ஆபரணங்கள் அணிய நன்மை உண்டாகும். மிதுனம், சிம்மம், கன்னி ராசியின ரோடு பழகினால் நட்பு வாழ்வில் வளம் சேர்க்கும்.

    மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

    நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய நட்சத்திரம் உங்களுடையது. செவ்வாய்திசையில் பிறந்த உங்களுக்கு, அதிர்ஷ்டதெய்வம் முருகன். செவ்வாய் அன்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்டநிறம் இளஞ்சிவப்பு. சிவப்புநிற ஆடை அணிவதால் நலம் பெருகும்.

    அதிர்ஷ்ட எண்கள் 3,6,9. இந்த தேதிகளில் தொட்ட செயல்கள் யாவும் இனிதே முடியும். அதிர்ஷ்ட கல் பவளம். பவளத்தை மோதிரமாகவோ, டாலராகவோ அணிந்துகொள்ளலாம். சிம்மம், தனுசு, மீனராசியினர் நண்பராக அமைய அனுகூல பலன்கள் உண்டாகும்.

    திருவாதிரை, சுவாதி, சதயம்

    ராகுவிற்குரிய இந்த மூன்று நட்சத்திரங்கள் இவை. ராகு திசையில் பிறந்த நீங்கள் வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் துர்க்கை. ராகு வேளையில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைதரும். அதிர்ஷ்டநிறம் கருமை. ஆடையில் கருப்பு புள்ளிகள், கோடு இருந்தாலும் போதுமானது.

    அதிர்ஷ்ட எண்கள் 1,4,7. இந்த தேதிகளில் தொடங்கும் விஷயம் எளிதில் நிறைவேறும். அதிர்ஷ்ட கல் கோமேதகம். கோமேதகத்தை மோதிரத்தில் பதித்தும், டாலராக அணிந்து கொள்ளலாம். மிதுனம், கன்னி, தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.

    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

    நவகிரகங்களில் பூரணசுபரான குரு உங்களுக்கு நட்சத்திர அதிபதியாவார். குருதிசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் தட்சிணாமூர்த்தி. வியாழன் அன்று இவருக்கு நெய்தீபம் ஏற்றி, கொண்டகடலை மாலை சாத்தி, வழிபட்டு வந்தால் சுப பலன் உண்டாகும். அதிர்ஷ்டநிறம் மஞ்சள். இந்நிறத்தில் கைக்குட்டையாக வைத்துக்கொள்ளுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் புதிய பணிகளைத் தொடங்குவது நன்மை தரும். அதிர்ஷ்ட கல் புஷ்பராகம். மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிக ராசியினரின் நட்பு கொள்வதால் நற்பலன் உண்டாகும்.

    பூசம், அனுஷம், உத்திரட்டாதி

    உங்களின் நட்சத்திர அதிபதியாக இருப்பவர் சனி. முதல் திசையாக சனியில் பிறந்த நீங்கள், வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் சாஸ்தா. காலையில் எழுந்ததும் இவரை தரிசிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடும் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இயன்ற போதெல்லாம் சாஸ்தா கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம் கருநீலம்.

    அதிர்ஷ்டஎண்கள் 5,6,8. இத்தேதிகளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும். அதிர்ஷ்ட கல் நீலம். ரிஷபம், மிதுன ராசியினரிடம் நட்பு கொண்டால் நன்மை ஏற்படும்.

    ஆயில்யம், கேட்டை, ரேவதி

    கிரகங்களில் புதன் உங்களின் நட்சத்திர அதிபதி. புதன்திசையில் பிறந்த உங்களுக்கு அதிர்ஷ்டம் அருள்பவர் மகாவிஷ்ணு. சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது யோகம் தரும். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் சிறப்பு. அதிர்ஷ்டநிறம் பச்சை.

    அதிர்ஷ்டஎண்கள் 1,5,8. இத்தேதிகளில் செய்யும் செயல்கள் அனைத்தும் நற்பலன் தரும். அதிர்ஷ்டக்கல் மரகதம் என்னும் பச்சைக்கல். ரிஷபம், சிம்மம், துலாம் ராசியினரிடம் உண்டாகும் நட்பு உண்மையானதாகவும், ஆழமானதாகவும் இருக்கும்.

    • நீதிமன்றங்களில்‌ நிலுவையில்‌ இருக்கும்‌ வழக்குகள்‌ சமரச மையம்‌ மூலம்‌ தீர்த்துக்‌ கொள்ள முடியும்‌.
    • சமரச முறையிலும்‌ தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச மையத்தில் வருகிற 16-ந்தேதி சமரச நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஏற்கெ னவே நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.

    இதில் தனி நபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம், தொழிலா ளர் நலம், உரிமையியல் மற்றும் இதர வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.

    சமரச மையம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்கிற்கு மேல் முறையீடு கிடையாது. இந்த வழக்கு களை சமரச மையத்தில் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காண்பதால், யார் வென்ற வர்? யார் தோற்றவர்? என்ற பாகுபாடு இன்றியும் உறவு முறைகள் தொடர்ந்து நீடிக்கவும், சமரச மையம் வழிவகை செய்கிறது.

    இதற்கு மேலாக சமரச மையம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமை யாக திருப்பிக்கொ டுக்கப்ப டும். எனவே பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தங்களது வழக்கு களை சமரச மையத்திற்கு அனுப்பி சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.

    • பரமத்திவேலூர் வெங்க–மேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் இ-நாம் செயலி மூலம் நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.82-க்கும், குறைந்த பட்சமாக ரூ.53.66-க்கும், சராசரியாக ரூ.78.88-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்து 464-க்கு ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்க–மேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் இ-நாம் செயலி மூலம் நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 521கிலோ தேங்காயை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.27.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.15.10-க்கும், சராசரியாக ரூ.18.56-க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.98ஆயிரத்து 326-க்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 2 ஆயிரத்து 90 கிலோ தேங்காயை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

    இதில் அதிகபட்சமாக தேங்காய் கிலோ ஒன்று ரூ.25.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.20.00- க்கும், சராசரியாக ரூ.23.00-க்கும் ஏலம் நடைபெற்றது.

    மொத்தம் ரூ.50 ஆயிரத்து 98- க்கு ஏலம் நடைபெற்றது. ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்போனது. கடந்த வாரம் வியாழக்கிழமை 8 ஆயிரத்து 136 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.79-க்கும், குறைந்தபட்சமாக ரூ.51.19- க்கும், சராசரியாக ரூ.78.59-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 6 ஆயிரத்து 749-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 10 ஆயிரத்து550 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

    இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.82-க்கும், குறைந்த பட்சமாக ரூ.53.66-க்கும், சராசரியாக ரூ.78.88-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்து 464-க்கு ஏலம் போனது. விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் வேளாண் பொருள் விற்பனைக்கான பணத்தை நேரடியாக செலுத்தினர்.

    • சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகர பகுதியில் சீரான முறையில் குடிநீர்விநியோகம் செய்வது குறித்தான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • 57 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் 1,17,000 குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படும் விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகர பகுதியில் சீரான முறையில் குடிநீர்விநியோகம் செய்வது குறித்தான ஆய்வுக்கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர பகுதியில் தற்போது எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்தும் மாநகர பகுதியில் உள்ள 57 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் 1,17,000 குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படும் விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    அனைத்து பகுதிகளுக்கும் தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஒவ்வொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் உள்ள குடிநீர் இணைப்புகள் எத்தனை என்பதை துல்லியமாக கணக்கெடுப்பு செய்து அதன் அடிப்படையில் குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    குடிநீர் விநியோகத்தினை முறைப்படுத்திட அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ள பகுதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மாநகர பகுதியில் பணிபுரியும் பிட்டர்கள் பகுதி வாரியாக குடிநீர் விநியோகம் செய்யும் நாள் ,நேரம் ,ஆகியவற்றை அட்டவணைப்படுத்தி பகுதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீர் விநியோகத்தை சீர்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    மாநகர பகுதியில் அனுமதியற்ற முறையில் குடிநீர் இணைப்புகள் பெறபட்டுள்ளதா என்பதையும் வணிக நிறுவனங்கள் அனுமதி அளித்திற்கு மேற்பட்டு முறைகேடாக குடிநீரை பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்காணிக்கவும், அனுமதி இல்லாமல் உள்ள குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிப்பு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் மாநகர பொறியாளர் ரவி, உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு , சாந்தி , தியாகராஜன், கதிரேசன். .சுப்பையா மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தை சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
    • 156 வகையான இ.எஸ்.ஐ., பி.எப், பிடித்தம் செய்யப்படாத தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுதளம் என்ற ஒரு தரவுதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

    இந்த தரவு தளத்தல் கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், பேக்கிங் செய்வோர், தச்சு வேலை செய்வோர், கல் குவாரி தொழிலாளர்கள், மர ஆலைத்தொழிலாளர்கள், உள்ளூர் கூலித் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள், அங்கன்வாடிப்பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், பால் வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 156 வகையான இ.எஸ்.ஐ., பி.எப், பிடித்தம் செய்யப்படாத அமைப்புச்சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.

    அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. https://eshram.gov.in என்ற இணைதளத்தில் தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வழிவகை உண்டு.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×