என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொசு"

    • கொசுக்கள் சூறாவளி போல கூட்டமாக பறக்கிறது.
    • ஆற்றங்கரைகளில் கொசுக்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது.

    தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக மணல் சூறாவளி, நீர் சூறாவளி உருவாவதை பார்த்திருப்போம். ஆனால் மராட்டிய மாநிலம் புனேவில் ஆயிரக்கணக்கான கொசுக்கள் சூழ்ந்து சூறாவளி உருவானது போன்று பரவிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 'பீயிங் புனே அபிஷியல்' என்ற பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் ஆற்றங்கரைகளில் கொசுக்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது.

    பின்னர் அந்த கொசுக்கள் சூறாவளி போல கூட்டமாக பறக்கிறது. இந்த வீடியோ வைரலாகி 45 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். புனே மாநகராட்சி அதிகாரிகள் ஆற்றங்கரை மற்றும் நதிகளை சுத்தம் செய்யும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். இதன் மூலம் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என ஒரு பயனரும், இதுபோன்ற கொசு சூறாவளி ஆபத்தானதாக தெரிகிறது என மற்றொரு பயனரும் பதிவிட்டனர். பொது சுகாதாரம் மோசமாக இருப்பதாக பயனர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    • டிரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியை புதுச்சேரி நகராட்சி தொடங்க உள்ளது.
    • ஒரு நாளைக்கு மொத்தமாக 15 ஏக்கர் அளவிற்கு மருந்து அடிக்கும் பணி நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொசுக்கள் அதிகரிப்பால் மக்கள் இரவு நேரங்களில் தூக்கமின்றி கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    பகல் நேரங்களிலும் கொசு தொல்லையால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.

    அதையொட்டி புதுச்சேரி நகராட்சி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த தீவிரமாக களம் இறங்கி உள்ளது. புதுச்சேரி நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளுக்கு கொசு மருந்து தெளிப்பான் மிஷின்கள் 30, புகை மருந்து அடிக்கும் 5 மிஷின்கள் புதிதாக வாங்கப்பட்டு, நகராட்சி ஊழியர்களுடன், மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் புதுச்சேரியின் நகர பகுதியான முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை ஆகிய 5 தொகுதிகளில் செல்லும் பிரதான பெரிய வாய்க்கால்களில் வாடகை 'டிரோன்' மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியை புதுச்சேரி நகராட்சி தொடங்க உள்ளது.

    இதற்காக விவசாய நிலங்களில் பூச்சி மருந்து அடிக்கும் டிரோனை புதுச்சேரி நகராட்சி வாடகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த டிரோனில் 20 நிமிடத்தில் ஒரு ஏக்கர் அளவிற்கு மருந்து அடிக்க முடியும். ஒரு நாளைக்கு மொத்தமாக 15 ஏக்கர் அளவிற்கு மருந்து அடிக்கும் பணி நடைபெற உள்ளது.

    • நூதன அறிவிப்பால் பலர் கொசுவை பிடித்து கொடுத்து பணம் வாங்கி சென்றனர்.
    • ஏராளமானோர் கொசுவை பிடிக்கும் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா நகர் அருகே உள்ள கிராம பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 2 பேர் சமீபத்தில் இறந்தனர்.

    இதனைத் தொடர்ந்து அங்குள்ள உள்ளாட்சி நிர்வாகம் கொசுவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக ஒரு கொசுவை பிடித்து கொடுத்தால் ஒரு பிலிப்பைன்ஸ் பெசோ அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி ரூ.1.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நூதன அறிவிப்பால் பலர் கொசுவை பிடித்து கொடுத்து பணம் வாங்கி சென்றனர்.

    இதனால் ஏராளமானோர் கொசுவை பிடிக்கும் வேட்டையில் இறங்கி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மக்களை தேடி மருத்துவ தன்னார்வலர்கள் காய்ச்சல் விவரங்களை சேகரித்தினர்.
    • தொட்டிகளில் குளோரினேஷன் செய்து சுத்தம் செய்து தண்ணீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

    வல்லம்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்படி டாக்டர்.நமசிவாயம் துணை இயக்குனர் சுகாதார பணிகள் அறிவுறுத்தல் படியும் வட்டார மருத்துவர் டாக்டர் மு.அகிலன் தலைமையில் வல்லம் வட்டார மருத்துவ பணியாளர்கள் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யா ணசுந்தரம் மற்றும் செயல் அலுவலர் பிரகந்தநாயகி மற்றும் பேரூராட்சி பணியாளர்களுடன் "ஒருங்கிணைந்த காய்ச்சல் தடுப்பு பணிகள்" விரிவாக செயல்படுத்தப்பட்டது.

    வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வல்ல வட்டார ஆரம்ப சுகாதார நிலையமும் பேரூராட்சி அலுவலகமும் இணைந்து சுமார் 150 பணியாளர்களைக் கொண்டு ஒருங்கிணைந்த காய்ச்சல் தடுப்பு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    வீதி வீதியாக ஒவ்வொரு வீடு வீடாக 24 கிராம சுகாதாரசெவிலியர்கள், மக்களை தேடி மருத்துவ தன் ஆர்வலர்கள் காய்ச்சல் விவரங்களை சேகரித்தினர்.

    40 களப்பணியாளர்கள் 30 தூய்மை பணியாளர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் வீடு விடாக சென்று ஆய்வு செய்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்களை கண்டறிந்து அழித்தனர்.

    தண்ணீர் தேங்கும் கொட்டாங்குச்சி பிளாஸ்டிக் பெட்டிகள் தண்ணீர் தொட்டிகள் மூடி இல்லாத பாட்டில்கள் டயர்கள் போன்றவற்றை கண்டறிந்து அகற்றினர்.

    வீட்டிற்குள் இருக்கும் ப்ரிட்ஜ் போன்றவற்றில் கொசு உற்பத்தியாகும் பகுதிகளில் கொசுப்புழுக்கள் கண்ட றிந்து சுத்தப்படுத்தினர்.

    பொது மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரை சேமிக்கும் மேல் தொட்டிகள் போன்றவற்றில் குளோ ரினேஷன் செய்துசுத்தம் செய்து தண்ணீர் பொதும க்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. வடக்கு செட்டி தெரு, மூப்பனார் தெரு, அண்ணா நகர், ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற மருத்துவ முகாம் நடைபெற்றது.

    நிலவேம்பு குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருகளிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து ராட்சச புகை மருந்து அடிப்பான் மூலம் அடிக்கப்பட்டது.

    வல்லம் பெரியார் பல்கலை கழக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு அம்மாண வர்களும் காய்ச்சல் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த ப்பட்டனர்.

    வல்லம் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் பாரதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேலு, வல்லம் சமுதாய செவிலிய ர்ரேணுகா, வல்லம் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேஷ், வல்லம் சுகாதார ஆய்வாளர் அகேஸ்வரன், பெரியார் பல்கலை நாட்டு நலப்பணி த்திட்ட அலுவலர் நரேந்தி ரன் மற்றும் வல்லம் வட்டார அனைத்து மருத்துவ பணியாளர்கள், தன்னா ர்வலர்கள் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது-டாக்டர்.மு.அகிலன், வட்டார மருத்துவ அலுவலர்-வல்லம், தஞ்சாவூர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகள் முன்வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • வீடு, கடைகளில் மட்டுமல்ல வெளியில் நின்றாலும் கொசுக்கடியின் தாக்கத்தை உணர முடிகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உருவாகி வரும் கொசுக்கள் சாக்கடையில் மட்டுமல்லாமல் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகி வேகமாக பரவுகிறது. இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.

    டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா கொசுக்கடியால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனையில் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். மழை இல்லாவிட்டாலும் அவ்வப்போது பெய்யும் மழையினால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து நோய்களை பரப்பும் வேலையை தொடங்கி விட்டன.

    வீடு, கடைகளில் மட்டுமல்ல வெளியில் நின்றாலும் கொசுக்கடியின் தாக்கத்தை உணர முடிகிறது. இதனால் வேலைகள் முடியும் முன்பு அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், உடல்வலி, போன்ற வியாதிகளும் வந்து மருத்துவமனை செல்லும் சூழல் உள்ளது.

    சிலர் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகும் கொடுமையும் நடக்கிறது. கொசு ஒழிப்பில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் பெரும்பாலான உள்ளாட்சிகளில் சாக்கடை, தண்ணீர் தொட்டிகள், குப்பைகள் அகற்றப்படாததால் நோய்களுக்கு அச்சாரம் போடப்படுகிறது

    கொசுத்தொல்லை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு ஊராட்சிகளில் மந்தநிலை காணப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் அனைத்து ஊராட்சிகளிலும் கொசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • டெங்கு மற்றும் சிக்குன்குனியா சொசுக்களுக்கு எதிராக பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளோம்.
    • அராங்க ஒப்புதல்கள் இன்னும் நிலுவையில் உள்ளன என்பதால் கொசுக்களை வெளியிடுவதில் தாமதமாகிறது.

    டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்டுத்த ஐசிஎம்ஆர்- வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளது.

    புதுச்சேரியில் உள்ள ஐசிஎம்ஆர் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக வொல்பாச்சியா என்கிற கொசுக்கள் உற்பத்தி மீது ஆய்வு செய்து அதற்கான பணிகளை நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து ஐசிஎம்ஆர்- விசிஆர்சி மருத்துவர் அஷ்வனி குமார் கூறுகையில், " டெங்கு மற்றும் சிக்குன்குனியா சொசுக்களுக்கு எதிராக பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளோம். ஆண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும் பெண் கொசுக்களை விடுவிப்போம். இது வைரஸ்கள் இல்லாத லார்வாக்களை உருவாக்கும். நாங்கள் கொசுக்கள் மற்றும் முட்டைகளை உருவாக்கியுள்ளோம். அது எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம்.

    இதற்கான ஆய்வு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு இப்போது முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்க ஒப்புதல்கள் இன்னும் நிலுவையில் உள்ளன" என்றார்.

    ×