search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலமுறை ஊதியம்"

    • 10 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்–படையில் பணியாற்றி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
    • பணியாளர்கள் வாழ்வாதார கோரிக்கைகளை ஏற்று உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தபட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.

    பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சரவணகுமார் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். மாநில பொருளாளர்சதீஷ் வரவு, செலவு வாசித்தார்.

    அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் குமார், பொதுச் செயலாளர் பொன்னி வளவன், தஞ்சை மாவட்ட செயலாளர்பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    இந்த கூட்டத்தில், 10 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்–படையில் பணியாற்றி வரும் பல்நோக்கு மருத்துவ–மனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தை ஏப்ரல் மாதத்தில் நடத்திட வேண்டும். அரசால் அனுமதிக்கப்பட்ட அரசின் காலி பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் வாழ்வாதார கோரிக்கைகளை ஏற்று சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தபட்டது.

    இதில் மாநில நிர்வாகிகள் தினேஷ்குமார், முருகன், கார்த்தி, ராஜசேகர், இளைய–ராஜா, தமிழ்செல்வன், மணி, கோபி, அருண்குமார், மணமங்கலம், நாகலட்சுமி, சியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சை மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம் வரவேற்று பேசினார். முடிவேல் மாநில துணை செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    • ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்ஏ என ஏ.ஐ.டி.யூ.சி மனு அளிக்கப்பட்டது.
    • ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்ஏ என ஏ.ஐ.டி.யூ.சி மனு அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம், மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி பொதுச் செயலாளர் தில்லைவனம் தலைமையில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் துரை .மதிவாணன், நிர்வாகிகள் சுதா , கல்யாணி, பாலமுருகன், அயூப்கான் ஆகியோர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் தூய்மை பணியாளர் பணிக்கு ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர் மாநகராட்சி தினக்கூலி துப்புரவு பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. உடன் வழங்க வேண்டும் . சுய உதவிக்குழு மூலம் சம்பளம் வழங்குவதை நேரடியாக வழங்க வேண்டும். முழு நேர பணியாளர்களை பகுதி நேர பணியாளராக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்.

    மாநகராட்சி மற்றும் தஞ்சை மாவட்ட நகராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் . அவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

    ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்ஏ என ஏ.ஐ.டி.யூ.சி மனு அளிக்கப்பட்டது.தூய்மை பணிகளுக்குரிய சீருடை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ .21,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர், இறந்தவர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் மாநில சங்கம் ஒட்சா கூட்டமைப்பு சார்பில் 300-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் எம். கண்ணன், மாநிலத் தலைவர் எம் லட்சுமணன் ஆசிரியர் தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    தமிழகம் முழுவதும் பணிபுரியும் துப்புரவு, பணியாளர்கள்., கொரோனா தொற்றிலிருந்து பொது மக்களை காக்க வேண்டி, இரவு பகல் என்று பாராமல் தங்கள் உயிர்களை பணயம் வைத்து துப்புரவு பணிகளை செய்து வருகின்றனர்.

    10 ஆண்டு பணி முடித்த பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க பட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும், திடகழிவு மேளாண்மை திட்டத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று பிரித்து முழுநேரம் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஊதியமாக ரூ.3,600 வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பணியில் முழுவதும் பெண்களே பணிபுரிந்து வருகிறார்கள் இந்த பணியாளர்களுக்கு பணிப்பதிவேடு பராமரிக்க வேண்டும் பணியாளர்கள் இறந்தால் குழுக்காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் வழங்கப்பட வேண்டும்.

    மேலும் இந்த தூய்மை காவலர்களை சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 40 ஆண்டு பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் கிரிஷா, வெங்கடேசன் ஒன்றிய செயலாளர் பிரதாப் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தின் அமைப்பு மாநாடு தாராபுரத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.இதில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதைப்போல அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்.

    பணி ஓய்வின்போது பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக மாவட்டத் தலைவராக கவிதா, செயலாளராக சாந்தாமணி, பொருளாளராக மகாலட்சுமி, மாவட்ட துணைச் செயலாளராக பானுப்பிரியா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

    மாநாட்டில் மாநில பொதுச் செயலாளா் லட்சுமி, மாநிலப் பொருளாளா் மலா்விழி, சிஐடியூ. திருப்பூா் மாவட்டச் செயலாளா் ரங்கராஜ், மாவட்ட துணைத் தலைவா்கள் உண்ணிகிருஷ்ணன், கனகராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • அங்கன்வாடி மற்றும் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்
    • ஓய்வு பெறும் போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சம், உதவியாளர்களுக்கு ஐந்து லட்சம் பணப்பலன் வழங்க வேண்டும்.

    திருச்சி:

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திருச்சி மாவட்ட ஐந்தாவது மாநாடு இன்று திருச்சியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் மல்லிகா பேகம் தீர்மானம் வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி வரவேற்றார்.மாநில பொருளாளர் தேவமணி மாநாடு துவக்க உரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் சித்ரா வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் ராணி வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர்.

    இதில் சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ரங்கராஜன் ,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்பாண்டி, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டெய்சி, மாநில தலைவர் ரத்தினமாலா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இந்த மாநாட்டில் அங்கன்வாடி மற்றும் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். அது மட்டுமல்லாமல் முறையான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் அமல்படுத்த வேண்டும்.

    ஓய்வு பெறும் போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சம், உதவியாளர்களுக்கு ஐந்து லட்சம் பணப்பலன் வழங்க வேண்டும்.

    பத்து ஆண்டுகள் பணியாற்றிய அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    5 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட செல்போன்கள் முற்றிலும் செயலிழந்து விட்டது. ஆகவே உடனடியாக புதிய செல்போன்கள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×