search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட்டார"

    • தமிழகம் முழுவதும், தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது.
    • இந்த தேர்விற்காக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,409 பேர் விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும், தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது.

    தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் இந்த போட்டித் தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் இந்த போட்டித் தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்விற்காக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,409 பேர் விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர். ஆசிரியர் தேர்வு வாரிய விதிமுறைப்படி தேர்வு நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தை, மாவட்ட கலெக்டர் டாக்டர். உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 4 மையங்களில் நடைபெற்ற தேர்வில், மொத்தம் 1,196 தேர்வர்கள் பங்கேற்றனர். 213 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டு வருகிறது.
    • காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    ஈரோடு, 

    ஈரோட்டில் அவ்வப்போது வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் புகாரை தொடர்ந்து பஸ்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன், பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் ஈரோடு பஸ் நிலையத்தில் வாகன தணிக்கை செய்யப்பட்டது.

    சுற்றுச்சூழல் விஞ்ஞானி தனபால், கருணாசாகரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சுரேந்திரகுமார், கதிர்வேல் ஆகியோர் கொண்ட குழுவினர் 105 அரசு மற்றும் தனியார் பஸ்களை சோதனை யிட்டனர்.

    அதில் 40 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் (ஏர்ஹா ரன்கள்) கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. அனைத்து பஸ் டிரைவர்களுக்கும் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என அறிவு றுத்தப்பட்டது. மீண்டும் காற்று ஒலிப்பான் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
    • அமைச்சர் மா.சுப்பிர மணியன், ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    கன்னியாகுமாரி:

    தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆறுதேசம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளி கள் சிகிச்சைக்கு வருகின்றனர். மாதந்தோறும் 5 முதல் 10 பிரசவம் நடைபெற்று வருகிறது. பிரசவித்த தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் நடைபெற்று வருகிறது.

    இங்குள்ள ஆய்வக பிரிவு, புற நோயாளிகள் பிரிவு மற்றும் குடும்ப நலப்பிரிவு கட்டிடம் போன்றவை பழுதடைந்து உள்ளதால் அவற்றை மாற்றி, புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டி மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை-குடும்ப நலத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் வழங்கினேன். தொடர்ந்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து குரல் கொடுத்தேன்.

    இதன் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன், ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், தேசிய சுகாதார திட்டம் சார்பில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை கட்டிடங்கள் அமைக் கப்படும் என்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகி யோருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் எனது சார்பிலும், தொகுதி மக்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

    மேலும் இந்த கட்டிட பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்பதனையும் தொகுதி மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி முன்னிலை வகித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி முன்னிலை வகித்தார்.

    விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் பி.பி.தனராசு தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் செயல்பாடுகள் திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும். பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல்விளக்கம், பண்ணைப்பள்ளி, போன்ற திட்டப்பணிகள் குறித்தும் விரிவாக விளக்கம–ளிக்கப்பட்டது.

    வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் மேற்கொள்ளும் மானியத் திட்டங்கள். தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்ப–டும் திட்டங்கள் மற்றும் மானியங்கள். கால்நடை பராமரிப்புப்துறையின் மூலம் வழங்கப்படும் தடுப்பூசி முகாம்கள், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் அதற்காக வழங்கப்படும் மானியங்கள். பட்டுவளர்ச்சித் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், மானியங்கள், இடுபொருள் குறித்தும், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானி–யத்திட்டங்கள், உழவர் சந்தை, சேமிப்பு கிடங்கு குறித்தும் வருகை புரிந்த விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

    கூட்டத்தில் பரமத்தி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்செல்வன், வேளாண்மை அலுவலர் பாபு, தோட்டக்கலை அலுவலர் மஞ்சு, கால்நடை உதவி மருத்துவர் நளினி, பட்டு உதவி ஆய்வாளர் கோமதி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் சற்குணம் ஆகியோர் பங்கேற்று விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் அட்மா திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் விபரங்களையும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும், உழவன் செயலி செயல்பாடுகள், பயன்கள் குறித்தும் வருகை புரிந்த விவசாயிகள் ஆலோச–னைக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.

    • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பரமத்தி வேலூர் வட்டார கிளை கூட்டம் மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு தொடர வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர், வெங்கமேட்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பரமத்தி வேலூர் வட்டார கிளை கூட்டம் மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி தலைமை வகித்தார். கபிலர்மலை ஒன்றிய தலைவர் மணிவண்ணன் வரவேற்றார்.

    பரமத்தி ஒன்றிய தலைவர் ரங்கசாமி, பரமத்தி ஒன்றிய பொருளாளர் பத்மாவதி, கபிலர்மலை ஒன்றிய பொருளாளர் முத்துசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டச் செயலாளர் சங்கர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். மாநில பொருளாளர் முருக செல்வராசன் இயக்க உரை ஆற்றினார்.

    கூட்டத்தில் ஓய்வூதிய திட்டத்தினை முழுமையாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு தொடர வேண்டும். மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை மற்றும் சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும்.

    நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வரும் 14-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெறும் கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தில் 100- க்கும் மேற்பட்ட ஆசிரிய- ஆசிரியைகள் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பரமத்தி ஒன்றிய செயலாளர் நன்றி கூறினார்.

    ×