search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவணை"

    • மாநிலத்தில் உள்ள 5.25 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் மொத்தம் ரூ3,330 கோடி வழங்கப்படுகிறது.
    • நேற்று 97 ஆயிரம் பேருக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஒவ்வொரு மாதமும் முதல் 2 தினங்களுக்குள் அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும். மாநிலத்தில் உள்ள 5.25 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் மொத்தம் ரூ3,330 கோடி வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் பிப்ரவரி மாத சம்பளம் மாத தொடக்கத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தலைமை செயலக ஊழியர்கள் அறிவித்தனர்.

    இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி வரலாற்றில் முதல் முறையாக தவணை முறையில் சம்பளம் வழங்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாக சம்பளம் உள்ளவர்களுக்கு முழுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் கூடுதல் சம்பளம் பெறுபவர்களுக்கு முதல் கட்டமாக அதிக பட்சமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் மீதமுள்ள தொகை எப்போது வழங்கப்படும் என்பது பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லை. நேற்று 97 ஆயிரம் பேருக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

    இன்று ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு முதல் தவணை சம்பளம் வழங்கப்பட்டது. 3 அல்லது 4 நாட்களில் சம்பளப் பகிர்வு முடிக்கப்படும் என்று தெரிவித்த மாநில நிதி மந்திரி பாலகோபால், ஓய்வூதியம் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது என்றார்.

    இதற்கிடையில் கரூவூலத்தில் உள்ள வைப்புத் தொகையை திரும்ப பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    • அரசுகள் அறிவித்த முழுத்தொகையை வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
    • மொட்டை அடித்து, கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் 18-வது நாளாக, தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மொட்டை அடிக்கும் போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தங்க.காசிநாதன் தலைமையில் கரும்பு விவசாயிகள், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீர்க்க வேண்டும்.

    மத்திய மாநில அரசுகள் அறிவித்த முழுத்தொகை முழுவதையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட
    5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் நாங்ககுடி கிராமத்தை சேர்ந்தவர்களான ராஜேந்திரன், தமிழரசன், ராஜவேலு, சம்பத், செல்வகுமார் ஆகிய 5 பேரும் மொட்டை அடித்து, கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 7ஆண்டுக்கு முன் கோவை தனியார் வங்கி கிளையில் வீட்டு கடன் வாங்கி இருந்தார்.
    • ரத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரை சேர்ந்தவர் மாணிக்கம்( வயது 47) . தனியார் வங்கி ஊழியர். இவர் கடந்த 7ஆண்டுக்கு முன் கோவை தனியார் வங்கி கிளையில் வீட்டு கடன் வாங்கி இருந்தார். இதற்கான மாத தவணை கடந்த மாதமாக சில செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அந்த வங்கி கிளை சார்பில் தவணை தொகையை வசூல் செய்ய நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர் மாணிக்கத்தின் வீட்டுக்கு வந்துள்ளார். அவருடன் வாக்கு வாதம் செய்து தகராறில் ஈடுபட்ட மாணிக்கம் கட்டையால் அவரது தலையில் தாக்கினார். இதில் தலையில் ரத்த காயம் அடைந்த நிலையில் சிவராமகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிவராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மாணிக்கத்தை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

    • ஐ.டி பைல் செய்வதற்காக ரூ.11,700 மற்றும் அதை ெதாடர்ந்தும் பலமுறை சிறுகசிறுக மொத்தமாக ரூ.1,12,780 கட்டியுள்ளார்.
    • 100-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு அபிராமி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது36).

    மரவாடியில் கூலி வேலை பார்க்கும் இவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக பாண்டிச்சேரியை சேர்ந்த சுந்தரபாண்டியன் என்று கூறி செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ரூ.2 லட்சம் தனிநபர் கடன் (லோன்) தருவதாக கூறியுள்ளார்.

    லோன் பெறுவதற்கு முதலில் லோன் பிராசஸி ங்குக்கு இன்ஸியல் தொகை யாக ரூ.8000-ஐ வங்கிக் கணக்கில் செலுத்தச் சொல்லியுள்ளார்.

    மணிகண்டன் பணம் அனுப்பியதைத் தொடர்ந்து மறுநாள் ரூ.7340 அனுப்ப சொல்லியுள்ளார்.

    இதை த்தொடர்ந்து, பல செல்பேசி எண்களில் இருந்துபலர் மணிகண்டனைதொடர்பு கொண்டு கேட்டதையடுத்து, லோன் தொகை கிடைத்துவி டும் என்ற நம்பிக்கையில் பல தவணைகளாகமொத்தம் ரூ.67,880-ஐ வங்கிக்க ணக்கில் செலுத்தியுள்ளார்.

    ஆனால், மணிகண்டனுக்கு லோன் கிடைக்கவில்லை.

    இதுவரை கொடுத்த பணத்தை திரும்பத் தரும்படி கேட்டதற்கு மணிகண்டன் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கியிருப்பதால், அதனை கேன்சல் செய்ய வேண்டும் என்றால் மேலும் ரூ.10,000 கட்ட வேண்டும் என கேட்டு வாங்கியுள்ளனர்.

    அதன்பின்னர் பணத்தை திரும்பக் கேட்டபோது, ஐ.டி பைல் செய்வதற்காக ரூ.11,700 மற்றும் அதைத்தொடர்ந்தும் பலமுறை சிறுகசிறுக மொத்தமாக ரூ.1,12,780 கட்டியுள்ளார்.

    முடிவில் தான் முழுமையாக ஏமாந்ததும், தனது பணம் திரும்பக் கிடைக்காது என்பது தெரிந்த பின்னர் மணிகண்டன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் உத்தரவின் பேரில் தனி ப்படை அமைக்க ப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி முடிவில் காட்டுமன்னார் கோவிலில் பதுங்கியிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில்அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையா ர்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெரு வைச் சேர்ந்த சஞ்சய் (22), சித்தார்த்தன் (20), கடலூர் மாவட்டம் காட்டும ன்னா ர்கோயில் ரம்ஜான் தைக்கால் புதுத்தெருவைச் சேர்ந்த சையது அப்துல்கலாம் (25) ஆகியோர் என தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்கள் மூவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து லேப்டாப், ஆன்ட்ராய்டு போன் உள்ளிட்ட 16 செல்போ ன்கள், 28 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவர்கள் தமிழகத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோரிடம் இதேபோல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது.

    மேலும், தலைமறைவாகவுள்ள அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெ ருவைச் சேர்ந்த அமர்நாத், மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் புதுப்பட்டியைச் சேர்ந்த கணேஷ் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    மோசடியில் ஈடுபட்ட அனைவரும் பட்டதாரி இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மோசடி யில்பல்வேறு நபர்கள் ஈடுபட்டு ள்ளதாக வும் அனைவரையும் விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அறிமுகம்இல்லாத நபர்களிடம் தங்கள் ஆவணங்களை கொடு க்கவோ, அறிமுகம் இல்லாத செல்போன் எண்கள் மூலம் லோன் கொடுப்பதாக கூறுவதை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பறிமுதல் செய்த ஆவணங்களை மயிலா டுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தனிப்படை யினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, டி.எஸ்.பி வசந்தராஜ் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    • மகளிர் குழுக்களுக்கு ரூ.186 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
    • 3 கிராமங்களைச் சேர்ந்த குழுக்களுக்கு விருதுகளும், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கருப்பூர், கவ்டெசி தொண்டு நிறுவனத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மகளிர் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா மற்றும் சிறந்த மகளிர் குழுக்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடுமண்டல ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

    சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட 25 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ 1.50 கோடி வங்கி கடனுதவிகளை வழங்கி பேசும்போது கடந்த 10 ஆண்டுகளாக கவ்டெசி தொண்டு நிறுவன வழிகாட்டுதலோடு செயல்பட்டு வரும் மகளிர் குழுக்களுக்கு ரூ.186 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    தவணை தொகையும் முறையாக செலுத்தப்பட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அனிஷ்குமார், தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக உதவி பேராசியர் மற்றும் தலைவர் ஜெகதீசன், ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகள் சீனிவாசன், சாமிநாதன், எழில் இளங்கோ, லோகேஷ்குமார், கவ்டெசி தொண்டு நிறுவன செயலாளர் மற்றும் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கருணாமூர்த்தி கலந்து கொண்டனர்.

    முன்னதாக கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் தலைவர் மாவடியான் வரவேற்றார்.

    இவ்விழாவில் சிறப்பாக செயல்பட்ட 3 கிராமங்களைச் சேர்ந்த குழுக்களுக்கு விருதுகளும், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    விழாவில் 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும், 25-க்கும் மேற்பட்ட கவ்டெசி தொண்டு நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கவ்டெசி தொண்டு நிறுவன அலுவலகப் பணியாளர்கள் சுபாஷினி, கோமதி, கனேஷ்வரி, ஆர்த்தி, ரூபன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழா நிறைவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினர்.

    • கடந்த இரண்டு மாதங்களாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் கடனை சரிவர கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.
    • பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கதுவினை உடைத்து அவரை தகாத வார்த்தையில் திட்டி கடனை உடனடியாக செலுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணி–யை அடுத்த செம்பியன் மகாதேவியைச் சேர்ந்த அகிலா.இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கீழ்வேளூரில் செயல்பட்டு வரும் நிதி வங்கி நிறுவனத்தில் 30,000 கடனாகப் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் மாதந்தோ றும் தவணையாக 2020 வீதம் பத்து மாதங்கள் தவணைக் தொகையை சரியாஞ கட்டி கடனை ஓரளவுக்கு அடைத்து வந்துள்ளார்.மேலும் கடந்த இரண்டு மாதங்களாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் கடனை சரிவர கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நிறுவ னத்தில் பணி புரியும் ஊழியர்கள் இவர்களை கட்டாயப்படுத்தி கடனை கட்டுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.மேலும் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் பூட்டி இருந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கதுவினை உடைத்து அவரை தகாத வார்த்தையில் திட்டி கடனை உடனடியாக செலுத்த வேண்டும் இல்லை யெனில் வீட்டில் உள்ள பெண்ணை அனுப்பி வைக்குமாறு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் கடும் மனஉளைச்ச லுக்கு ஆளான அகிலா வீட்டில் உள்ள மண்ணெண்ணையை குடித்து தற்கொலைக்கு மேடு உள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு நாகை அரசு தலைமை மருத்து–வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கொடுத்த கடனை செலுத்த வற்புறுத்தி பெண்ணை தகாத முறையில் திட்டி தற்கொலை முயற்சிக்கு காரணமாய் இருந்த நிதி நிறுவனம் இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்க–ப்பட்ட பெண்ணின் உறவி னர்கள் முன்வை த்தனர். பெண்ணை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த இரண்டு மாதங்களாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் கடனை சரிவர கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.
    • பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கதுவினை உடைத்து அவரை தகாத வார்த்தையில் திட்டி கடனை உடனடியாக செலுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செம்பியன் மகாதேவியைச் சேர்ந்த அகிலா.இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கீழ்வேளூரில் செயல்பட்டு வரும் நிதி வங்கி நிறுவனத்தில் 30,000 கடனாகப் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் மாதந்தோ றும் தவணையாக 2020 வீதம் பத்து மாதங்கள் தவணைக் தொகையை சரியாஞ கட்டி கடனை ஓரளவுக்கு அடைத்து வந்துள்ளார்.மேலும் கடந்த இரண்டு மாதங்களாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் கடனை சரிவர கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நிறுவ னத்தில் பணி புரியும் ஊழியர்கள் இவர்களை கட்டாயப்படுத்தி கடனை கட்டுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.மேலும் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் பூட்டி இருந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கதுவினை உடைத்து அவரை தகாத வார்த்தையில் திட்டி கடனை உடனடியாக செலுத்த வேண்டும் இல்லை யெனில் வீட்டில் உள்ள பெண்ணை அனுப்பி வைக்குமாறு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் கடும் மனஉளைச்ச லுக்கு ஆளான அகிலா வீட்டில் உள்ள மண்ணெண்ணையை குடித்து தற்கொலைக்கு மேடு உள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு நாகை அரசு தலைமை மருத்து–வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கொடுத்த கடனை செலுத்த வற்புறுத்தி பெண்ணை தகாத முறையில் திட்டி தற்கொலை முயற்சிக்கு காரணமாய் இருந்த நிதி நிறுவனம் இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்க–ப்பட்ட பெண்ணின் உறவி னர்கள் முன்வை த்தனர். பெண்ணை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×