search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் கோபுரம்"

    • எங்கள் கிராமத்தில் செல்போன் இல்லாத வீடுகள் இல்லை. ஆனால், சிக்னல் கிடைப்பதில்லை.
    • எங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றால் 1 கிமீ தூரம் காப்புக்காடு வழியாகச் சென்று உயரமான மலைக்குன்று பகுதியில் நின்று பேச வேண்டும்.

    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் சிகரமாகனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தோட்ட கணவாய், மேட்டுப்பாளையம், கே.கொத்தூர், பூதிமூட்லு, சிகரமானப்பள்ளி மற்றும் கொங்கனப்பள்ளி கிராமங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வனத்தையொட்டியுள்ள இக்கிராமங்களில் செல்போன் சிக்னல் கிடைப்பதில்லை.

    குறிப்பாக கொங்கனப்பள்ளி கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இக்கிராமங்கள் வனத்தையொட்டி இருப்பதால், அடிக்கடி கிராமத்துக்குள் வன விலங்குகள் புகுந்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.

    இது போன்ற அவசர நேரத்தில் வனத்துறையைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையிருந்து வருகிறது. இதையடுத்து, தங்கள் பகுதிக்கு செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து பி.எஸ்.என்.எல் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இக்கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது தொடர்பாக கொங்கனப்பள்ளி கிராம மக்கள் கூறியதாவது:-

    எங்கள் கிராமத்தில் செல்போன் இல்லாத வீடுகள் இல்லை. ஆனால், சிக்னல் கிடைப்பதில்லை. இதனால், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் அழைக்க முடிவதில்லை.

    மேலும், எங்கள் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஊருக்குள் வன விலங்குகள் வந்தால், வனத்துறைக்கும் தகவல் அளிக்க முடியாது. இதனால், விடிய, விடிய அச்சத்துடனும் இருந்து வருகிறோம்.

    எங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றால் 1 கிமீ தூரம் காப்புக்காடு வழியாகச் சென்று உயரமான மலைக்குன்று பகுதியில் நின்று பேச வேண்டும்.

    இதேபோல, இங்குள்ள ரேஷன் கடையில் பயோ-மெட்ரிக்கும் செயல்படாது. இதனால், பழைய முறையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகிறோம்.

    தற்போது, கொங்கனப்பள்ளி - கே.கொத்தூர் இடையே பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடப்பதால் மகிழ்ச்சியளிக்கிறது என்றனர்.

    இது தொடர்பாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கூறும்போது, இங்கு 130 அடி உயரத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி ஓரிரு மாதங்களில் நிறைவு பெற்றவுடன் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றனர்.

    • கடந்த 6 ஆண்டுகளாக வாடகை பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
    • செல்போன் டவர் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு வடக்கு மாட வீதியில் சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன் ஆகிய 3பேருக்கும் சொந்தமான நிலம் உள்ளது.

    இவர்களது இடத்தில் கடந்த 2006-ம் ஆண்டு பிரபல தனியார் நிறுவனம் செல்போன் டவர் ஒன்றை அமைத்தது. இதற்காக முறையாக ஒப்பந்தம் போட்டு நிலத்தின் உரிமையாளர்களுக்கு மாதந்தோறும் வாடகை பணம் செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அந்த நிறுவனம் மூடப்பட்டதால் கடந்த 6ஆண்டுகளாக வாடகை பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள செல்போன் டவர்களை அவ்வப்போது அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஆய்வு செய்து பராமரித்து வந்தனர். கடந்த மாதம் வழக்கம் போல கோயம்பேடு வடக்கு மாட வீதியில் அமைக்கப்பட்டு உள்ள டவரை ஆய்வு செய்துவிட்டு சென்று இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை மீண்டும் ஊழியர்கள் அங்கு சென்றபோது செல்போன் டவர் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து செல்போன் நிறுவன மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். விசாரணையில் வாடகை பணம் தராததால் செல்போன் டவரை பிரித்து நில உரிமையாளர்கள் விற்று இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து சந்திரன் உள்ளிட்ட 3பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்போன் டவர் சேதமடைந்து கீழே விழும் நிலையில் இருந்ததால் அதை பிரித்து இரும்பு கடையில் விற்று விட்டதாக உரிமையாளர்கள் போலீசில் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    செல்போன் கோபுரத்தின் மதிப்பு ரூ.8 லட்சத்து 62 ஆயிரம் ஆகும். வாடகை பணம் செலுத்தாததால் செல்போன் டவரை கழற்றி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவர் இறந்து விட்டதால் உறவினர்கள் வீடுகளில் தங்கிக் கொண்டு, கிடைத்த வேலையை செய்து வந்தார்.
    • தனியார் இடத்தில் அத்துமீறி நுழைந்ததாக சுமதி மீது பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிப்பதாக மிரட்டல் விடுத்த பெண் ஒருவரை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், அவர் தர்மபுரி மாவட்டம், குறிஞ்சி பட்டியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது மனைவி சுமதி என்பதும், கணவர் இறந்து விட்டதால் உறவினர்கள் வீடுகளில் தங்கிக் கொண்டு, கிடைத்த வேலையை செய்து வந்தார்.

    இந்தநிலையில் குடிபோதைக்கு அடிமையான அவர் பல்லடம் அருகே காரணம் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது, உறவினர்களுடன் தகராறு செய்துவிட்டு குடிபோதையில், செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது .இதையடுத்து, செல்போன் கோபுரம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், தனியார் இடத்தில் அத்துமீறி நுழைந்ததாக சுமதி மீது பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • ஊத்துக்குளி மேற்கு வீதியில் குமரன் நகா், காவலா் குடியிருப்பு மற்றும் டவுன் பகுதியில் 1,500க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
    • குடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. ஊத்துக்குளி பொதுமக்கள் சாா்பில் என்.மாணிக்கராஜ், சிவகுமாா் ஆகியோா் மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: -

    ஊத்துக்குளி மேற்கு வீதியில் குமரன் நகா், காவலா் குடியிருப்பு மற்றும் டவுன் பகுதியில் 1,500க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.இந்தப் பகுதியில் காவல் நிலையம், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி, பத்திரப் பதிவு அலுவலகம், அரசு நூலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.இந்த பகுதியில் தனிநபா் ஒருவா் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறாா். இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் பள்ளி மாணவா்களுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.இந்த பகுதியை சுற்றிலும் ஏற்கெனவே 3 செல்போன் கோபுரங்கள் உள்ளன. ஆகவே, குடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செல்போன் கோபுரம் மாயமான வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • செல்போன் நிறுவன அதிகாரி வேங்கடகிருஷ்ணன், ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் முத்து வேங்கடகிருஷ்ணன் (55). இவர் செல்போன் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். இந்த நிலையில் அந்த நிறுவனம், மதுரை தோப்பூரில் ரூ.29 லட்சம் செலவில் செல்போன் ேகாபுரத்தை அமைத்தது.

    இதனை தொழில்நுட்ப ஊழியர் சிவகுமார் பராமரித்து வந்தார். சம்பவத்தன்று காலை இவர் தோப்பூருக்கு சென்றார். அங்கு நிலை நிறுத்தப்பட்டு இருந்த செல்போன் கோபுரத்தை காணவில்லை. இதுகுறித்து அவர் சென்னை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். செல்போன் நிறுவன அதிகாரி வேங்கடகிருஷ்ணன், ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தோப்பூரில் கோகிலா என்பவருக்கு சொந்தமான நிலத்தில், செல்போன் நிறுவனம் கோபுரம் அமைத்து இருந்தது.

    இதற்காக அந்த நிறுவனம், கோகிலாவுக்கு வாடகை செலுத்தியது. அந்த நிறுவனம் சில ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தவில்லையாம். இந்த நிலையில் செல்போன் டவர் மாயமாகி உள்ளது. இந்த சம்பவத்தில் கோகிலா தரப்புக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடியிருப்பு பகுதியில் உயர் கோபுரம் அமைக்கக்கூடாது என மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
    • மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    குன்னத்தூர் :

    அவிநாசி அருகே குன்னத்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பூலாங்குளம் குடியிருப்பு பகுதி அருகே தனியாா் செல்போன் நிறுவனம், செல்போன் உயா் கோபுரம் அமைப்பதற்காக தனியாா் இடத்தில் பணிகளை தொடங்குவதாகக் கூறப்படுகிறது.

    இதையறிந்த அப்பகுதி மக்கள் உயா் கோபுரங்களால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி குடியிருப்பு பகுதியில் உயர் கோபுரம் அமைக்கக்கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். மேலும் பேரூராட்சி நிா்வாகத்தினா், கலெக்டர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனா்.

    இருப்பினும் உயா்கோபுரம் அமைக்கும் பணி தொடர இருப்பதாக அறித்த அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். கருப்புக் கொடி போராட்டம் குறித்து தகவலறிந்த குன்னத்தூா் போலீசார் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.இதைத்தொடா்ந்து செல்போன் உயா் கோபுரம் அமைக்க அனுமதி அளித்த தனியாா் இடத்தினா் அந்த முடிவைக் கைவிட்டனா். இதையடுத்து கருப்புக்கொடிகள் அகற்றப்பட்டன.

    • ஆண்டிபொற்றை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்க வேண்டும்‌
    • கலெக்டரிடம் ஊர் மக்கள் மனு

    நாகர்கோவில்:

    ஈசாந்திமங்கலம் பகு தியைச் சேர்ந்த பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி யில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோபுரத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இரும்பு பட்டை ஒன்று கழன்று விழுந்தது. அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினான்.

    இதனால் அந்த டவரை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். தொடர்ந்து அந்த செல்போன் கோபுரம் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே உடனடியாக அந்த செல்போன் கோபுரத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    இதே போல் பேச்சி ப்பாறை ஆண்டி பொற்றை பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் அளித்துள்ள மனு வில்ஆண்டிபொற்றை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்க வேண்டும்‌.ஆண்டிபொற்றையிலிருந்து தோனிக்குழி செல்லும் சாலையை சீரமைக்க வே ண்டும். தோனி குழியில் தெருவிளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    ×