என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேஇஇ"

    • ஜே.இ.இ. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் சிபிஎஸ்இ செய்முறை தேர்வை என்ன செய்வது என்று தவிக்கும் நிலை உள்ளது.
    • தேர்வில் பங்கேற்க 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அடுத்து ஐ.ஐ.டி. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து என்ஜினீயரிங் படிக்க ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

    அதன்படி அடுத்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு 2 முறை நடத்தப்படுகிறது.

    அதில் முதல் கட்ட ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு நாளை (24-ந்தேதி) தொடங்குகிறது. 31-ந்தேதி வரை இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 8 லட்சம் முதல் 9 லட்சம் வரை தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள்.

    2-ம் கட்ட ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடக்கிறது. முதல்கட்ட தேர்வில் பங்கேற்றவர்களும், பங்கேற்காதவர்களும் 2-ம் கட்ட தேர்வை எழுத முடியும்.

    ஜே.இ.இ. நுழைவு தேர்வு நடக்கும் நாட்களில் சில சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் செய்முறை தேர்வுகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

    எனவே ஜே.இ.இ. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் செய்முறை தேர்வை என்ன செய்வது என்று தவிக்கும் நிலை உள்ளது.

    சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்ச்சிக்கு மொத்த மதிப்பெண்ணில் செய்முறை தேர்வு மதிப்பெண்ணும் கட்டாயம் என்பதால் இந்த தேர்வில் மாணவர்கள் பங்கேற்பது மிகவும் அவசிய மாகும்.

    எனவே ஜே.இ.இ. மெயின் தேர்வு நடைபெறும் நாட்களில் செய்முறை தேர்வுகளை நடத்தாமல் வேறு நாட்களுக்கு மாற்றும்படி மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஜே.இ.இ. முதன்மைத் தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து 372 பேர் எழுதினர்.
    • இதில் 100 சதவீத மதிப்பெண்ணை 43 மாணவ-மாணவிகள் பெற்றிருக்கிறார்கள்.

    சென்னை :

    நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. அந்தவகையில் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என 2 கட்டங்களில் கணினி வாயிலாக நடத்தி வருகிறது. இதில் முதன்மைத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது.

    அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 24, 25, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1-ந் தேதிகளிலும், கடந்த 6, 8, 10, 11, 12, 13 மற்றும் 15-ந் தேதிகளிலும் என பி.இ., பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மை தாள்-1 தேர்வு 2 முறை நடத்தப்பட்டது. இதில் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்வை எழுத 8 லட்சத்து 60 ஆயிரத்து 64 பேர் விண்ணப்பித்து, 8 லட்சத்து 23 ஆயிரத்து 967 பேர் எழுதினார்கள். இதற்கான முடிவு கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியிடப்பட்டது.

    அதைத் தொடர்ந்து இந்த மாதத்தின் 2-வது வாரத்தில் நடத்தப்பட்ட ஜே.இ.இ. முதன்மைத் தேர்வை எழுத 9 லட்சத்து 31 ஆயிரத்து 334 பேர் விண்ணப்பித்து, 8 லட்சத்து 83 ஆயிரத்து 367 பேர் எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டு இருக்கிறது. இதில் 100 சதவீத மதிப்பெண்ணை 43 மாணவ-மாணவிகள் பெற்றிருக்கிறார்கள். முதல் இடத்தில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சிங்கராஜூ வெங்கட் கவுன்டினியாவும், அதற்கு அடுத்தபடியாக கள்ளக்குரி சாய்நாத் ஸ்ரீமந்த் (ஆந்திரா), இஷான் காண்டல்வல் (ராஜஸ்தான்), தேஷாங் பிரதாப் சிங் (உத்தரபிரதேசம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.கே.விஸ்வாஜித் என்ற மாணவர் 100 சதவீத மதிப்பெண்ணுடன் 24-வது இடத்தில் உள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார். 2 முறை நடந்த தேர்வுகளில் எதில் சிறந்த மதிப்பெண் பெறப்பட்டிருக்கிறதோ அதை மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்

    மேலும், பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. ஆகிய பிரிவினர்களுக்கான ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு தாள்-1-க்கான கட்-ஆப் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டு இருக்கிறது. தேர்வர்கள் www.nta.ac.in, https://jeemain.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

    இதைத் தொடர்ந்து பி.ஆர்க்., பி.பிளானிங் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மை தாள்-2ஏ, தாள்-2பி தேர்வுக்கான முடிவு தனியாக பின்னர் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.

    • தனது தங்கும் விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
    • நான் ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன், ஆனால் அது எனக்கு அப்பாற்பட்டது. மன்னிக்கவும்

    கோச்சிங் சென்டர்களின் காடாக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் கோட்டாவில் நுழைவுத் தேர்வுக்காக படித்து வந்த 2 மாணவர்கள் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    இன்ஜீனியரிங் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக கோட்டா பயிற்சி மையத்தில் பயின்று வந்த 20 வயது மாணவன் கடந்த புதன்கிழமை தனது தங்கும் விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

    இறந்தவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணாவைச் சேர்ந்த அபிஷேக் லோதா என அடையாளம் காணப்பட்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் "என்னால் படிக்க முடியவில்லை.நான் ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன், ஆனால் அது எனக்கு அப்பாற்பட்டது. மன்னிக்கவும்" என்று எழுதி வைத்துள்ளார்

    24 மணி நேரத்திற்குள் கோச்சிங் சென்டர் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். கோட்டாவில் ஜேஇஇ தேர்வுக்கு கோச்சிங் சென்டரில் பயின்று வந்த அரியானவை சேர்ந்த நீரஜ் என்ற 19 வயது மாணவர் செவ்வாய்க்கிழமை மாலை தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டார்.

    கோச்சிங் சென்டர்கள் மற்றும் பெற்றோர்களின் தொடர் அழுத்தம் மாணவ மாணவிகளை மன ரீதியான நெருக்கடிக்கு உள்ளாக்குவதால் இந்த சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

    தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும். 

    • தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில், தனது அறையில் நேற்று மனன் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • கடந்த ஆண்டில் கோட்டா பயிற்சி மையங்களில் பயின்றுவந்த 17 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

    கோச்சிங் சென்டர்களின் காடாக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

    இன்ஜீனியரிங் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

    அந்த வகையில் ராஜஸ்தானின் பண்டி மாவட்டத்தை சேர்ந்த மனன் சர்மா என்ற மாணவர், கடந்த 3 ஆண்டுகளாக கோட்டா நகரில் தங்கியிருந்து, அங்குள்ள உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. தேர்வுக்காக தயாராகி வந்தார்.

    இந்நிலையில், ஜே.இ.இ. தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில், தனது அறையில் நேற்று மனன் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டில் நடப்பு மாதத்தில் கோட்டா நகரில் நடந்துள்ள 4-வது தற்கொலை சம்பவம் இது. கடந்த ஆண்டில் கோட்டாவில் வெவ்வேறு பயிற்சி மையங்களில் பயின்றுவந்த 17 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

     

    இந்நிலையில் மாணவர்கள் காதல் விவகாரங்களால் தற்கொலை செய்துகொள்வதாக ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு படிப்பு பற்றி அழுத்தம் கொடுக்கக்கூடாது. எனது வார்த்தைகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    மாணவர்கள் தற்கொலைக்கு பயிற்சி மையங்களின் பங்கு கொஞ்சம் இருக்கலாம். சில சமயங்களில் காதல் விவகாரங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் பெற்றோர்கள் கட்டுப்படுத்த தவறினால் மாணவர்கள் தவறான திசையில் செல்வார்கள் என்று தெரிவித்தார்.  

    • நாடு முழுவதும் 1.56 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
    • மும்பை மண்டலம் நடத்திய தேர்வில் பெங்களூர் மாணவர் ஆர்.கே.ஷிசிர் ஜே.இ.இ. முதன்மை தேர்வில் முதல் இடத்தை பிடித்தார்.

    ஜே.இ.இ. முதல்நிலை மற்றும் ஜே.இ.இ. முதன்மை (அட்வான்ஸ்) தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.டி. போன்ற மத்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற முடியும்.

    மேலும் இந்த தேர்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவர்கள் ஜே.இ.இ. முதன்மை தேர்வை எழுதும் தகுதியை பெறுவர்.

    முதன்மை தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்- தொழில்நுட்ப படிப்புகளில் சேர்க்கை பெற முடியும்.

    இந்தநிலையில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 1.56 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் 40 ஆயிரத்து 712 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 6 ஆயிரத்து 516 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    மும்பை மண்டலம் நடத்திய தேர்வில் பெங்களூர் மாணவர் ஆர்.கே.ஷிசிர் ஜே.இ.இ. முதன்மை தேர்வில் முதல் இடத்தை பிடித்தார். அவர் 360 மதிப்பெண்ணுக்கு 314 மார்க் பெற்றார்.

    • முக்கிய விடைகளைப் பார்த்ததும், அதிக மதிப்பெண்கள் எடுப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
    • ஜேஇஇ இரண்டாம் கட்ட தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது.

    கோவை:

    மத்திய பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு முதல் நிலை மற்றும் முதன்மை என இருகட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி. ஐஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் தகுதியை பெறுவார்கள்.

    இதற்காக நடத்தப்படும் முதல்நிலை தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்களில் முதல் இரண்டரை லட்சம் பேர் முதன்மை தேர்வை எழுதலாம். இந்த முதன்மை தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

    ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வை எழுத நாடு முழுவதும் இருந்து 8 லட்சத்து 7 ஆயிரம் விண்ணப்பத்து இருந்தனர். அவர்களில் 7 லட்சத்து 69 பேர் எழுதினர். 407 நகரங்களில் 588 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

    இதில் 14 மாணவர்கள் அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தெலுங்கானாவைச் சேர்ந்த வி.வி.எஸ். ஜஸ்தி யஷ்வந்த், ரூபேஷ் பியானி, அனிகேத் சட்டோபாத்யாய, தீரஜ் குருகுந்தா, ஆந்திராவைச் சேர்ந்த கே.சுஹாஸ், பி. ரவி கிஷோர், பொலிசெட்டி கார்த்திகேயா ஆகியோர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    மகேஸ்வரி (அரியானா), குஷாக்ரா ஸ்ரீவாஸ்தவா (ஜார்க்கண்ட்) மிருணாள் கர்க் (பஞ்சாப்), ஸ்னேஹா பரீக் (அஸ்ஸாம்), நவ்யா (ராஜஸ்தான்), போயா ஹர்சென் சாத்விக் (கர்நாடகா), சவுமித்ரா கர்க் (உத்தரபிரதேசம்) ஆகியோரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இந்த தேர்வில் கோவையைச் சேர்ந்த தீக்‌ஷா திவாகர் என்ற மாணவி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 100-க்கு 99.998 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் கோவையில் உள்ள சுகுணா பள்ளியில் பயின்றவர்.

    சாதனை படைத்த மாணவி தீக்‌ஷா திவாகர் கூறுகையில் இவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தேர்வு கடினமாக இருந்தது. ஆனால், முக்கிய விடைகளைப் பார்த்ததும், அதிக மதிப்பெண்கள் எடுப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இப்போது கிடைத்துள்ளது மிக மகிழ்ச்சி என்றார்.

    ஜேஇஇ இரண்டாம் கட்ட தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வு முடிந்தபிறகு முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட முதல்நிலை தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட என்.டி.ஏ. கொள்கையின் படி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.


    ×