என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லேப்டாப்"
- இதில் புதிய ஆப்பிள் பென்சில்கள் மற்றும் மேஜிக் கீபோர்டு உள்ளிட்டவை அடங்கும்.
- இந்த சாதனங்கள் சர்வதேச சந்தையில் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்.
ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சாதனங்கள் செய்தி குறிப்பின் வாயிலாகவே அறிவிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.
இம்முறை புதிய மேக்புக் ஏர் மாடல்களுடன் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் புதிய நிற ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் புதிய ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் மற்றும் மேக்புக் ஏர் மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த சாதனங்கள் வரும் வாரத்திலேயே அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பிரபல ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில் வரும் வாரங்களில் ஆப்பிள் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள், மேம்பட்ட ஐபேட் ஏர், 12.9 இன்ச் மாடல், புதிய ஆப்பிள் பென்சில்கள் மற்றும் மேஜிக் கீபோர்டு உள்ளிட்டவை அடங்கும்.
மேக் சாதனங்களை பொருத்தவரை 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல்கள் அதிநவீன M3 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த சாதனங்கள் அனைத்தும் சர்வதேச சந்தையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை மிக விரைவில் அறிவிக்க ஆப்பிள் விளம்பர குழுக்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
- இத்தகைய வசதி கொண்ட முதல் லேப்டாப் என்ற பெருமையை பெற்றது.
- டிரான்ஸ்பேரன்ட் கீபோர்டு பகுதி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
லெனோவோ நிறுவனம் தனது புதிய தின்க்பேட் லேப்டாப் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய கான்செப்ட் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சம் அதில் உள்ள டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே (Transparent Display) ஆகும். இத்தகைய வசதியுடன் அறிமுகமாகி இருக்கும் முதல் லேப்டாப் இது என்ற பெருமையை புதிய லெனோவோ தின்க்பேட் பெற்று இருக்கிறது.
புதிய தின்க்பேட் கான்செப்ட்-இல் 17.3 இன்ச் அளவில் மைக்ரோ எல்.இ.டி. டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ப்ளே பார்டர்லெஸ் டிசைன் மற்றும் கண்ணாடி போன்று அதன் பின்புறம் இருப்பவற்றை பார்க்க செய்கிறது. இத்துடன் டிரான்ஸ்பேரன்ட் கீபோர்டு பகுதி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இதில் மைக்ரோ எல்.இ.டி. தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது. இதனால் நிறங்கள் உண்மைக்கு நிகராகவும், அதிகளவு அடர்த்தியாகவும் பிரதிபலிக்கிறது. இந்த டிஸ்ப்ளே 1000 நிட் பிரைட்னஸ் கொண்டிருப்பதால், நேரடி சூரிய வெளிச்சத்திலும் காட்சிகளை சீராக பார்க்க செய்கிறது.
டெக் வொர்ல்டு 2023 நிகழ்வை ஒட்டி, லெனோவோ மற்றும் மோட்டோரோலா நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் அடாப்டிவ் டிஸ்ப்ளே கான்செப்ட்-ஐ காட்சிப்படுத்தின. இந்த கான்செப்ட்-ஐ பயனர் தேவைகளுக்கு ஏற்ப பல வடிவங்களில் மடித்துக் கொள்ளலாம். புதிய தின்க்புக் டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே லேப்டாப் கான்செப்ட் எப்போது உற்பத்தி நிலையை அடையும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படலாம்.
- மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என தகவல்.
ஆப்பிள் நிறுவனம் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டிற்கு முன் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார்.
அந்த வகையில், மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட ஐபேட் ஏர், அளவில் பெரிய ஐபேட் ஏர் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றில் மேக்புக் ஏர் மாடல் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் டிஸ்ப்ளே ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இவற்றில் M3 பிராசஸர்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
புதிய ஐபேட் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்களுடன் புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐ.ஒ.எஸ். 17.4 வெர்ஷனின் முதல் பீட்டாவில் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவை ஐபேட் ப்ரோவில் பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. இத்துடன் ஃபேஸ் ஐ.டி. கேமராவும் வழங்கப்படுகிறது.
2024 ஐபேட் மாடலில் புதிய OLED ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் இவற்றில் அதிக பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்கும் மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
- அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு பகுதிகளிலும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 350 வீடுகள் கட்டப்பட்டன.
- புரட்சித்தலைவி ஜெயலலிதா மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கோல்டன் நகரில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு பகுதிகளிலும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 350 வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் திமுக., ஆட்சியில் எங்கேயாவது ஒரு வீடாவது கட்டிக் கொடுத்திருக்கிறார்களா? அதுமட்டுமல்ல , அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள். புரட்சித்தலைவி ஜெயலலிதா மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார். அதையும் நிறுத்திவிட்டார்கள்.
திருப்பூர் தொழில் வளர்ச்சிக்கு அ.தி.மு.க.,அரசு வட்டியில்லா கடன் 200 கோடி ரூபாய் வழங்கியது. ஆனால் இன்றைக்கு தி.மு.க. ஆட்சி யில் தொழில் முடங்கி கிடக்கிறது. அந்த அளவுக்கு மோசமான ஆட்சி தி.மு.க., ஆட்சி. எப்போது ஸ்டாலின் வந்தாலும் அந்த ஆட்சியினுடைய அலங்கோலத்தை மக்கள் அனுபவிக்கிறோம்.
ஏழை எளிய மக்கள் மருத்துவ கல்லூரியில் படிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 450 டாக்டர்களையும் உருவாக்கியது அ.தி.மு.க.,தான். இவ்வாறு அவர் பேசினார்.
- ஆப்பிள் நிறுவனத்தின் M3 சீரிஸ் பிராசஸர்கள் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
- புதிய பிராசஸர்கள் முந்தைய வெர்ஷனை விட அதிவேகமானது.
ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ப்ரோ லேப்டாப் மாடல்களை முற்றிலும் புதிய M3, M3 ப்ரோ மற்றும் M3 மேக்ஸ் பிராசஸர்களை கொண்டு அப்டேட் செய்திருக்கிறது. இந்திய நேரப்படி இன்று (அக்டோபர் 31) அதிகாலை நடைபெற்ற ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது M3 சீரிஸ் சிப்செட்களை அறிமுகம் செய்தது.
இதில் M3, M3 ப்ரோ மற்றும் M3 மேக்ஸ் என மூன்று வகையான வேரியண்ட்கள் உள்ளன. புதிய M3 சீரிஸ் மாடல்கள் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. M3 சீரிஸ் பிராசஸர்கள் முந்தைய வெர்ஷனை விட அதிவேகமானது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய பிராசஸர்களை அறிவித்ததும், மேக்புக் ப்ரோ மற்றும் 24 இன்ச் ஐமேக் உள்ளிட்ட சாதனங்களை M3 சிப்செட்களுடன் ஆப்பிள் நிறுவனம் அறிவித்து விட்டது.
அதன்படி புதிய M3 சிப்செட் கொண்ட 14 இன்ச் மேக்புக் ப்ரோ, M1 சிப்செட் கொண்ட 13-இன்ச் மேக்புக் மாடலை விட 60 சதவீதம் வேகமானது ஆகும். இதேபோன்று M3 ப்ரோ சிப்செட் கொண்ட 14 மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள், M1 ப்ரோ சிப்செட் கொண்ட 16 இன்ச் மேக்புக் ப்ரோ-வை விட 40 சதவீதம் வேகமானது.
புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் அனைத்திலும் லிக்விட் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 20 சதவீதம் அதிக பிரகாசமான SDR தரவுகளை, 600 நிட்ஸ், 1000 நிட்ஸ் பிரைட்னசில் காண்பிக்கிறது. இத்துடன் வைபை 6E, ப்ளூடூத் 5.3, அதிகபட்சம் 4 எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் M3 சீரிஸ் பிராசஸர் கொண்ட மேக்புக் ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் M3 மேக்ஸ் பிராசஸர் கொண்ட 16 இன்ச் மேக்புக் ப்ரோ விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் அனைத்தும் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் புதிய ஸ்பேஸ் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கின்றன.
- ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்கிறது.
- குறைந்த விலை மேக்புக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் இந்த லேப்டாப் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இது குறித்து ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் தகவல்களில் M2 சிப்செட் குறைபாடு காரணமாக இந்த ஆண்டு மேக்புக் மாடல்களின் வினியோகம் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்து M2 பிராசஸர் கொண்ட மேக்புக் மாடல்களையும் தொடர்ந்து விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு செய்வதன் மூலம் மேக்புக் மாடல்கள் விற்பனை அதிகரிக்கலாம். ஒருவேளை இது பலனளிக்கவில்லை எனில், 2025 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ரிடிசைன் செய்யப்பட்ட மேக்புக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. இதற்காகவே ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
குறைந்தவிலை மேக்புக் மாடல்களை கொண்டு ஆப்பிள் நிறுவனம் ஆண்டிற்கு 8 முதல் 10 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கும் என்று தெரிகிறது. குறைந்த விலை மேக்புக் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- புதுப்பிக்கப்பட்ட லேப்டாப்கள் இந்தியாவில் தான் விற்பனைக்கு வருகிறது.
- அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களை பயன்படுத்த ஹெச்.பி. முடிவு.
ஹெச்.பி. நிறுவனம் மாணவர்கள், சிறு, குறு வியாபாரங்களை செய்வோர், ஸ்டார்ட்-அப் மற்றும் பகுதிநேர பணி செய்வோரை குறிவைத்து புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட லேப்டாப்கள் இந்தியாவில் தான் விற்பனைக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட கணினிகளை வினியோகம் செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களை பயன்படுத்த ஹெச்.பி. நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. முதலில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த மாடல்கள் அடுத்த ஆண்டு மேலும் சில பகுதிகளில் விற்பனைக்கு வரும் என்று ஹெச்.பி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
முழுமையாக விற்பனை செய்வது மட்டுமின்றி கணினிகளை சந்தா முறையில் வழங்கவும் ஹெச்.பி. நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்ட கணினிகளை 6, 12 அல்லது 24 மாதங்கள் வரை சந்தா முறையில் பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட நோட்புக் மாடல்களும், அதன் பிறகு மேலும் பல்வேறு மாடல்களை வழங்க ஹெச்.பி. முடிவு செய்துள்ளது.
இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட சாதனங்களுக்கு ஹெச்.பி. சார்பில் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு வாரண்டியும் வழங்கப்படுகிறது. முன்னதாக இதற்கான திட்டம் சோதனை அடிப்படையில் ஹெச்.பி. நிறுவன ஊழியர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட சாதனங்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த திட்டத்தை தனது ஊழியர்களிடமும் விரிவுப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
- ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு 30 சதவீதம் தள்ளுபடி.
- மேக்புக் ஏர் மாடலை வாங்குவோருக்கு வங்கி சார்ந்த சலுகையும் அறிவிப்பு.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் துவங்கும் முன்பே, ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலின் விலை அமேசான் வலைதளத்தில் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் மேக்புக் ஏர் M1 விலை அதன் முந்தைய விலையை விட 30 சதவீதம் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஆப்பிள் இந்தியா வலைதளத்தில் மேக்புக் ஏர் M1 மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், அமேசான் வலைதளத்தில் இந்த மாடல் ரூ. 69 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது அதன் உண்மையான விலையில் இருந்து 30 சதவீதம் குறைவு ஆகும். இத்துடன் எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ. 1500 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலில் 13.3 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் IPS டிஸ்ப்ளே, 2560x1600 பிக்சல் ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பிரைட்னஸ், M1 சிப்செட், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 2 டி.பி. வரை எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப் மேக் ஒ.எஸ். வென்ச்சுரா மூலம் இயங்குகிறது.
இத்துடன் 720 பிக்சல் ஃபேஸ்டைம் ஹெச்.டி. கேமரா, டச் ஐ.டி. சென்சார், டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 49.9 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 30 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5.0, 2x யு.எஸ்.பி. டைப் சி போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
- இறக்குமதி செய்யப்பட்ட லேப்டாப், டேப்லெட் மற்றும் கம்ப்யூட்டர்களின் விற்பனை திடீரென அதிகரித்து உள்ளது.
- விற்பனை அதிகரித்து வருவதால் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.
புதுடெல்லி:
சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட கம்ப்யூட்டர் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.
இப்படி இறக்குமதியாகும் லேப்டாப், டேப்லெட் போன்ற சாதனங்களால் பாதுகாப்பு ஆபத்துக்கள் அதிகம் உள்ளதாகவும். இதன் மூலம் தனிநபர் குறித்த தகவல்கள் கசிய வாய்ப்பு உள்ளதாகவும் கருதி மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி லேப்டாப், டேப்லெட் மற்றும் சிலவகை கணினி உள்ளிட்ட பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அரசிடம் அனுமதி அல்லது உரிமம் பெற வேண்டும். இப்படி உரிமம் பெற்றால் மட்டுமே அந்த பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
இந்த நடைமுறை வருகிற நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 31-ந்தேதிக்குள் விண்ணப்பம் செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு உரிமம் இல்லாமல் லேப்டாப் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய எந்தவொரு நிறுவனத்துக்கும் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் சீனா போன்ற நாடுகளில் இருந்து குறைவான அளவிலேயே கம்யூட்டர் சாதன பொருட்கள் இறக்குமதியாகும் நிலை உருவாகி உள்ளது. அதே சமயம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கம்ப்யூட்டர் பொருட்களுக்கு தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய கட்டுப்பாடுகளால் தட்டுப்பாடு ஏற்படும் என்ற நிலை உருவாகி இருப்பதால் இறக்குமதி செய்யப்பட்ட லேப்டாப், டேப்லெட் மற்றும் கம்ப்யூட்டர்களின் விற்பனை திடீரென அதிகரித்து உள்ளது. முந்தைய வாரத்தை விட கடந்த வாரம் இந்த பொருட்களின் விற்பனை 20 முதல் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த வாரம் இது மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் சுதந்திர தினத்தையொட்டி ஆன்லைன் மூலம் லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட கணினி பொருட்கள் விற்பனைக்கு சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளன. இதனால் விற்பனை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம் விற்பனை அதிகரித்து வருவதால் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.
- இந்தியாவில் கணினி இறக்குமதிக்கு மத்திய அரசு அவசரகதியில் கட்டுப்பாடுகளை அறிவித்தது.
- நவம்பர் 1-ம் தேதியில் இருந்து இதுபோன்ற சாதனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி பெற வேண்டும்.
லேப்டாப், டேப்லெட் மற்றும் கணினிகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தியாவில் லேப்டாப் மற்றும் கணினிகளை இறக்குமதி செய்வதற்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என கடந்த வியாழன் கிழமை அன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த அறிவிப்புக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதைய அறிவிப்பில் தற்போதுள்ள சாதனங்களை அக்டோபர் 31-ம் தேதி வரை இறக்குமதி செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. நவம்பர் 1-ம் தேதியில் இருந்து இதுபோன்ற சாதனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும்.
கணினி சார்ந்த சாதனங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு அவசரகதியில் கட்டுப்பாடுகளை அறிவித்ததை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சந்தையை சார்ந்து கட்டுப்பாடுகளை மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
சர்வதேச சந்தையில் கணினி துறையில் முன்னணியில் விளங்கி வரும் ஆப்பிள், டெல் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் பாதிக்கப்படுகின்றன. புதிய கட்டுப்பாடுகள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அரசு திட்டமிடுவதாக அறிவித்து இருக்கிறது. இதுதவிர உற்பத்தியில் சீனாவுடனான போட்டியை எதிர்கொள்ளவும் இந்த திட்டம் வழிவகுக்கும் என்று தெரிகிறது.
- ஹெச்பி டிராகன்பிளை G4 லேப்டாப் வின்டோஸ் 11 ப்ரோ ஒஎஸ் கொண்டிருக்கிறது.
- புதிய ஹெச்பி லேப்டாப் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
ஹெச்பி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய லேப்டாப் மாடலை- டிராகன்பிளை G4 என்ற பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹெச்பி லேப்டாப் எடை ஒரு கிலோவுக்கும் கீழ் உள்ளது. இதில் 13th Gen இன்டெல் கோர் பிராசஸர், பெரிய டச்பேட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பேக்லிட் பிரைட்னஸ் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
புதிய ஹெச்பி டிராகன்பிளை G4 லேப்டாப்பில் 13.5 இன்ச் WUXGA+ டிஸ்ப்ளே, டச் ஸ்கிரன் மற்றும் OLED ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. வின்டோஸ் 11 ப்ரோ ஒஎஸ் கொண்டிருக்கும் புதிய லேப்டப் அதிகபட்சம் 32 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 5MP கேமரா வழங்கப்படுகிறது.
புதிய ஹெச்பி டிராகன்பிளை G4 லேப்டாப் விலை ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் விற்பனை ஹெச்பி ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. இந்த லேப்டாப் ஸ்லேட் புளூ மற்றும் நேச்சுரல் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- ஜியோபுக் லேப்டாப்பில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஜியோபுக் லேப்டாப்-இல் ஜியோ ஒஎஸ், ஜியோ டிவி ஆப் உள்ளிட்ட சேவைகள் உள்ளன.
ரிலையன்ஸ் ரிடெயில் நிறுவனம் தனது ஜியோபுக் லேப்டாப் 2023 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஜியோபுக் மாடல் ஸ்டைலிஷ் மேட் பினிஷ் செய்யப்பட்டு, மிக மெல்லிய தோற்றத்தில், 990 கிராம் எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த லேப்டாப் 11.6 இன்ச் ஆன்டி-கிளேர் HD ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்கிரீன் எக்ஸ்டென்ஷன் வசதி, வயர்லெஸ் ப்ரின்டிங், இன்டகிரேட் செய்யப்பட்ட சாட்பாட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 4ஜி எல்டிஇ, டூயல் பேன்ட் வைபை, பில்ட்-இன் USB/HDMI போர்ட்கள், HD வெப்கேமரா மற்றும் எட்டு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கப்படுகிறது.
ஜியோபுக் லேப்டாப்-இல் ஜியோ ஒஎஸ், ஜியோ டிவி ஆப், ஜியோ-பியான் கோடிங், ஜியோ கிளவுட் கேம்ஸ்-இன் கீழ் ஏராளமான கேம்கள், ஒரு வருடத்திற்கான 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், டிஜிபாக்ஸ் மற்றும் குயிக்ஹீல் பேரன்டல் கன்ட்ரோல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஜியோபுக் அம்சங்கள்:
11.6 இன்ச், 1366x768 பிக்சல், ஆன்டி கிளேர் HD டிஸ்ப்ளே
மீடியாடெக் 2.0 GHz ஆக்டா கோர் பிராசஸர்
4 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஜியோ ஒஎஸ்
2MP HD வெப் கேமரா
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
இன்பினிட்டி கீபோர்டு
ப்ளூடூத், 4ஜி, டூயல் பேன்ட் வைபை
I/O, USB, HDMI மற்றும் ஆடியோ போர்ட்கள்
ஜியோ-பியான் கோடிங், ஜியோகிளவுட் கேம்ஸ், ஜியோ டிவி ஆப்
4000 எம்ஏஹெச் பேட்டரி
8 மணி நேரத்திற்கு பேக்கப்
இந்திய சந்தையில் ஜியோபுக் மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர், அமேசான் வலைதளம் உள்ளிட்ட தளங்களில் நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்