என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கண்டெய்னர் லாரியில் ரூ.1.68 கோடி லேப்டாப், செல்போன் கொள்ளை- டிரைவர் உட்பட 3 பேர் கைது
- கண்டெய்னர் லாரியின் பூட்டை உடைத்து அதிலிருந்து செல்போன் லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தாங்கள் கொண்டு வந்த கார்களில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றனர்.
- தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை நடந்தபோது லாரி டிரைவர் ஜுபேரும் உடன் இருந்தது தெரிய வந்தது.
திருப்பதி:
அரியானா மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து தனியார் கொரியர் நிறுவனத்தின் கண்டெய்னர் லாரியில் சுமார் 2 கோடி மதிப்பிலான லேப்டாப், செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது. லாரியை ஜுபேர் என்பவர் ஓட்டி வந்தார்.
லாரி ஆந்திர மாநிலம் கடப்பா ஒய்.எஸ்.ஆர் மாவட்டம், குடிப்பாடு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது தன்னுடைய லாரியில் விலை உயர்ந்த லேப்டாப் செல்போன் உள்ளிட்டவை எடுத்து வருவதாக பெங்களூருவை சேர்ந்த சல்மான் அகமது, முகமது ரஹ்மான் ஷெரிப் ஆகியோருக்கு லாரி டிரைவர் ஜுபேர் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் 2 கார்களில் தங்களது நண்பர்களை அழைத்துக்கொண்டு கண்டெய்னர் லாரி இருந்த இடத்திற்கு வந்தனர். அப்போது கண்டெய்னர் லாரியின் பூட்டை உடைத்து அதிலிருந்து செல்போன் லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தாங்கள் கொண்டு வந்த கார்களில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றனர்.
லாரி டிரைவர் ஜுபேர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் லாரியில் இருந்த பொருட்களை திருடி சென்றதாக கடப்பா போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடப்பா டிஎஸ்பி வெங்கடேஷ் சிவா ரெட்டி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை நடந்தபோது லாரி டிரைவர் ஜுபேரும் உடன் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவர் ஜுபேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
ஜுபேர் நண்பர்களின் செல்போன் எண்ணை சோதனை செய்தபோது அவர்கள் காரில் ஐதராபாத் நோக்கி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து ஐதராபாத் அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி நிறுத்தினர். போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று 2 பேரை மட்டும் மடக்கி பிடித்தனர். மற்ற 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் காரில் சோதனை செய்தபோது கண்டெய்னர் லாரியில் கொள்ளையடிக்கப்பட்ட செல்போன், லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் காருடன் கொள்ளைபோன பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்