என் மலர்
நீங்கள் தேடியது "அதிமுக கூட்டம்"
- கரூர்-ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் இன்று மாலை 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
- கண்டன பொதுக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமை தாங்குகிறார்.
கரூர்:
கரூர் மாவட்ட ஊராட்சி குழுவில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டுகளை தி.மு.க.வும், 6 வார்டுகளை அ.தி.மு.க.வும் கைப்பற்றி சம பலத்துடன் இருந்தன.
மாவட்ட ஊராட்சி குழுத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் துணைத்தலைவர் பதவி தொடர்ந்து காலியாக இருந்தது.
இந்த பதவிக்கான தேர்தல் பல்வேறு காரணங்களால் 6 முறை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் துணைத்தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் திருவிகாவும், தி.மு.க. சார்பில் தேன்மொழியும் போட்டியிட திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் 9-வது வார்டு கவுன்சிலர் திருவிகா சென்ற கார் மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தி, கவுன்சிலரை கடத்தி சென்றதாக புகார் எழுந்தது. தேர்தல் முடிந்த பின் அவர் விடுவிக்கப்பட்டார். தன்னை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டத்துக்கு புறம்பாக நடத்தப்பட்ட இந்த தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என்றும் அ.தி.மு.க. வேட்பாளர் திருவிகா கூறினார்.
இதற்கு மறுநாள் (20-ந்தேதி) கரூர் அருகே கோதூர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் சிவராஜ் (45) என்பவரை கரூர்-ஈரோடு சாலையில் வேலுசாமிபுரம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து கடத்தி சென்றது. பின்னர் அவர் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் தி.மு.க.,வினரின் அராஜக செயல்களை கண்டித்து கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று கண்டன பொதுக்கூட்டம் கரூர்-ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமை தாங்குகிறார்.
இதில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வரவேற்புரை ஆற்றுகிறார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, சின்னசாமி, கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். கூட்டத்தில் திரளானோர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தில் நடந்தது.
- கூட்டத்துக்கு அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார்.
சென்னை:
அ.தி.மு.க.வுக்கும், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டபடி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றிருந்த போது அமித்ஷா சமரசம் செய்தார்.
பா.ஜ.க. தேசிய தலைவர்கள் அறிவுறுத்தலின் பேரில் சில வாரங்கள் அமைதியாக இருந்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீண்டும் அதிரடி கருத்துக்களை வெளியிட தொடங்கி உள்ளார். நேற்று அவர் ஆங்கில பத்திரிகைக்கு அளித்திருந்த பேட்டியில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.
இதற்கு அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்தது. பாரதிய ஜனதாவுடன் உள்ள கூட்டணியை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டணி என்பது எல்லோரும் இணைந்ததுதான். பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது என்று பா.ஜ.க. பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் பற்றி கூட்டத்தில் காரசாரமாக பேசப்பட்டது.
இதையடுத்து அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அண்ணாமலையை கண்டித்து பேசிய அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் பா.ஜ.க.வுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருப்பதால் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் சில அ.தி.மு.க. தலைவர்கள் பேசினார்கள்.
- தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்தவும், பலப்படுத்தவும் பா. ஜனதா முயன்று வருகிறது.
- கடந்த சட்டமன்ற தேர்தலில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே தோற்றது.
சென்னை:
தமிழகத்தில் அ.தி.மு.க. தனித்தனி அணிகளாக பிரிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சட்டபோராட்டம் நடத்தி கட்சியை தன்வசப்படுத்தினார். பெருவாரியான தொண்டர்கள் பலமும் அந்த தரப்புக்கே உள்ளது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தி.மு.க.வுக்கு எதிராக வலிமையான அணியாக இருக்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக அ.தி.மு.க.வை ஒன்றுபடுத்த பா.ஜனதா தலைவர்கள் இதுவரை எடுத்த எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.
இப்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்தவும், பலப்படுத்தவும் பா. ஜனதா முயன்று வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா எல்லோரையும் ஒருங்கிணைத்து கட்சியை பலப்படுத்த அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் அந்த 3 பேரையும் சேர்ப்பதில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.
இதுவரை அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி வந்தார். ஆனால் எக்காரணத்தை கொண்டும் அவரை மட்டும் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்றார் எடப்பாடி பழனிசாமி.
இப்போது அதையே ஓ.பன்னீர்செல்வம் திருப்பி சொல்கிறார். அதாவது எடப்பாடி பழனிசாமியை சேர்க்க மாட்டோம் என்று கூறி உள்ளார். அதே நேரம் மோடிதான் பிரதமர். பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறுவோம் என்றும் கூறி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே தோற்றது. அதற்கு காரணம் டி.டி.வி.தினகரன் கட்சி வாங்கிய ஓட்டுகள் தான். மேலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேயான வாக்குவித்தியாசம் ஒரு சதவீதம்தான். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த வாக்கு வித்தியாசத்தை ஈடுகட்ட அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று பா.ஜனதா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. பா.ஜனதாவின் இந்த நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.
இந்த நிலையில் நாளை மறுநாள் (5-ந் தேதி) அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது, கூட்டணி அமைக்க பா.ஜனதா விதித்துள்ள நிபந்தனைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா இணைப்பு உள்ளிட்ட எந்த நிபந்தனைகளையும் பா.ஜனதா விதிக்கக்கூடாது. நிபந்தனையற்ற முறையில் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை என்று தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது.
- நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர், மாவட்ட செயலாளர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
- நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ஊட்டி,
குன்னூரில் நகர அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் சரவணகுமார் செய்திருந்தார்.
நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்னுராஜ், மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி செயலாளர் சஜீவன், இளைஞரணி மாநில துணை செயலாளர் பாலாநந்தகுமார், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி ராமு, இளைஞரணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வரவேற்று பேசுகிறார்.
- மாநாட்டையொட்டி வேலூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
வேலூர்:
அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை வேலூர் மண்டலம் சார்பில் லட்சிய மாநாடு வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து ரெயில் மூலம் காட்பாடிக்கு வருகிறார்.
அங்கு அவருக்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்பு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை லட்சிய மாநாட்டிற்கு வருகை தருகிறார்.
மாநாட்டிற்கு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தலைமை தாங்குகிறார். பாசறை நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வரவேற்று பேசுகிறார். கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.
மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
மாநாட்டையொட்டி வேலூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கட்சி கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்ட மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு, மாநாட்டு வளாகத்திற்குள் தலைவர்களின் மின்விளக்கு கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
- கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ரூ.5 லட்சம் கோடி வரை கடன் வாங்கி உள்ளது.
- 2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவார்கள்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் புதூர் கிராமத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி தொழில்கள் நலிவடைந்து வருகிறது. பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க போராட வேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் உடனே நிவாரண நிதி வீடு தேடி வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ரூ.5 லட்சம் கோடி வரை கடன் வாங்கி உள்ளது. இது தான் தி.மு.க. அரசின் சாதனை. சிவகாசியில் சுற்றுச்சாலை திட்டம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்து நிதி ஒதுக்கினார். ஆனால் அந்த திட்டம் 2 நாளைக்கு முன்னர் தான் பூமிபூஜை போடப்பட்டு தொடங்கப்படுகிறது.
2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவார்கள். எம்.பி. தேர்தலில் இந்த தொகுதியில் தே.மு.தி.க. வெற்றி பெற்று இருக்க வேண்டும். தில்லுமுல்லு செய்து அவர்கள் வெற்றி பெற்றனர். இந்த பகுதியில் உள்ள தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் 18-ம் படி கருப்பசாமியாக வழித்துணை வருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நடிகை விந்தியா, மாநில நிர்வாகி வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மரியதாஸ், மாவட்ட, ஒன்றிய, மாநகர நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதே பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை போர்த்த நிர்வாகிகள் முண்டியத்தனர். வரிசையில் வராமல் முண்டியடித்துக்கொண்டு வந்த நிர்வாகியை, ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- 8-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதம்.
- ஈ.பி.எஸ். பதவியேற்றபின் முதன்முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில், 18-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல், எதிர்க்கட்சி துணைத் தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் விவாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ். பதவியேற்றபின் முதன்முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.