search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓவிய போட்டி"

    • பதிவு செய்யாத நபர்களும் சேர்த்து 1250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மொத்தம் ரூ.1லட்சத்து 25 ஆயிரம் ரொக்கபரிசுகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நடைப்பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவிய போட்டி 'தூரிகை 2023'-க்கான ஆன்லைன் ரிஜிஸ்டர் ரேஷனில் 865 மாணவ மாணவிகள் பதிவு செய்திருந்தனர். மேலும் பதிவு செய்யாத நபர்களும் சேர்த்து 1250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதன் அடிப்படையில் 6 பிரிவு களில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 7 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் ஆயிரம், நான்காம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என 24 பிரிவினர்களுக்கு மொத்தம் ரூபாய் 1லட்சத்து 25 ஆயிரம் ரொக்கபரிசுகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர். இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர் திலீப் குமார் , மண்டல இணைப்பதிவாளர் நந்த குமார் , வங்கியின் பொது மேலாளர் (பொறுப்பு) , உதவி பொது மேலாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள், கலந்து கொண்டார்கள். 

    • வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தூரிகை 2023 ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.
    • ஆன்லைனில் விண்ணப்பித்து இந்தப்போட்டியில் கலந்துகொண்டு பயனடையலாம்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 32 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது வங்கியில் 3 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்காக 'அரும்புகள்' என்ற பெயரில் சேமிப்பு கணக்கு திட்டத்தை மேம்படுத்திட ஏதுவாக, செப்டம்பர் 9-ந் தேதி வடலூரில் உள்ள வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தூரிகை 2023 ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.

    ஓவியப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர், வங்கியின் விளம்பரப்பலகை, பள்ளியின் விளம்பரப்பலகை படத்துடன் வாட்ஸ்அப் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து இந்தப்போட்டியில் கலந்துகொண்டு பயனடைய, அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • காவல்துறை சார்பில் சிறார்மன்றங்கள் பத்து இடத்தில் இயங்கி வருகின்றன.
    • சிறுவர் சிறுமியர்களுக்கு 10 இடங்களில் ஓவியப்போட்டி, சதுரங்க போட்டி நடந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சிறார்மன்றங்கள் பத்து இடத்தில் இயங்கி வருகின்றன. தருமபுரி ஆயுதப்படை வாழாகத்தில் 2, மதிகோன்பாளையம், கிருஷ்ணாபுரம், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், மொரப்பூர், பாப்பாரப்பட்டி, ஒகேனக்கல், ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுவர் சிறுமியர் மன்றங்கள் இயங்கி வருகின்றன.

    இந்த மன்றங்கள் மூலம் அப்பகுதி சிறார்களுக்கு புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த நூலகத்திற்கு செல்ல வழிகாட்டுதல், விளையாட விளையாட்டு பொருட்கள் வாங்கி கொடுத்தல், மற்றும் சாலையில் செல்லும்போது சாலை விதிகளை கடைபிடித்தால், டூவீலரில் செல்லும்போது தலைக்கவசம் அணிதல், போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக சிறுவர் மன்றங்கள் சார்பில் இலவச மருத்துவ முகாம், கடந்த வாரம் தருமபுரி மாவட்டத்தில் நடந்தது.

    இதனை தொடர்ந்து நேற்றும் நேற்று முன்தினமும் காவல்துறை சார்பில் சிறுவர் சிறுமியர்களுக்கு 10 இடங்களில் ஓவியப்போட்டி, சதுரங்கம் (செஸ்) போட்டி நடந்தது.

    இந்த ஓவியப் போட்டியில் 2000 சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற சிறுமியர்களுக்கு எஸ்.பி. ஸ்டீபன் ஜேசு பாதம் மேற்பார்வையில் அந்தந்த பகுதி டி.எஸ்.பி,க்கள் பரிசு வழங்கினர்.

    • தஞ்சாவூர் பள்ளியை சேர்ந்த ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது.
    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பள்ளி கல்வித்துறை ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவை தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் தொடங்கி வைத்தார். ரெட் கிராஸ் நிறுவனர் படத்தை அரசர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேலாயுதம் திறந்து வைத்தார்.

    தஞ்சை சுழற்சங்கம் கிரானரி செயலர் ராமமூர்த்தி, தலைவர் ஆல்பர்ட், கொடையாளர் வேலுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இவ்விழாவில் தஞ்சாவூர் பள்ளியை சேர்ந்த ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

    பள்ளிகளில் சிறப்பாக ஜே.ஆர்.சி. செயல்பாடுகளை செய்த ஊராட்சி நடுநிலைப்பள்ளி கூத்தூர் தமிழ்மாறன், வளம்பகுடி பாலகிருஷ்ணன், செம்மங்குடி ராணி, திருப்பழனம் உக்கடை அம்மாள் உயர்நிலைப்பள்ளி லதா, அருள்நெறிஉயர்நிலை ப்பள்ளி முருகன் ஆகியோருக்கு சிறந்த கவுன்சிலர் விருதை மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் வழங்கினார்.

    முன்னதாக இணை கன்வீனர் பாலமுருகன் வரவேற்றார்.

    இதில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலர் ரவிச்சந்திரன், பொருளாளர் முத்துக்குமார், கௌரவ ஆலோசகர் ஜெயக்குமார், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இணை கன்வீனர்கள் அமர்நாத் ,தமிழன்பன் ஆகியோர் நன்றி கூறினர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கன்வீனர் பிரகதீசு செய்திருந்தார்.

    மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

    வண்டலூர்:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செங்கல்பட்டு மண்டலத்தில் உள்ள 18 நகராட்சிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் என் குப்பை என் பொறுப்பு பணிகள் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்று முதல் 8 இடங்களை பிடித்த நகராட்சிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் லட்சுமி, நகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு ஓவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற திருவேற்காடு நகராட்சி பகுதியை சேர்ந்த மாணவி ஷ்ரவந்திகாவிற்கு ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை எம்.எல்.ஏ. வழங்கினார். இதேபோல 2-ம் இடம் பெற்ற திருவள்ளூர் நகராட்சி சேர்ந்த மாணவி அக்ஷயாவுக்கு ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் சான்றிதழ், 3-ம் இடம் பெற்ற பூவிருந்தவல்லி நகராட்சியை சேர்ந்த மாணவிக்கு ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் சான்றிதழ், ஆறுதல் பரிசு பெற்ற மதுராந்தகம், மறைமலைநகர், வடலூர், திருநின்றவூர், செங்கல்பட்டு, ஆகிய நகராட்சிகளை சேர்ந்த மாணவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், துப்புரவு ஆய்வாளர் ஆர்.சிவமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×