search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ.பி.எஸ்."

    • நியாயமான விளக்கம் தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை
    • மருத்துவர்கள் நியமிக்கப்பட வில்லை என்பதும் தெளிவாகிறது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள பல மருத்துவக் கல்லூரிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதத்தை தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ளது.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்லூரி வளாகங்களில் 75 விழுக்காட்டிற்கும் குறைவாக மருத்துவப் பேராசிரியர்கள் இல்லை என்றால் விளக்கம் கேட்டு அறிவிப்புகள் பெறப்படும் என்றும், இதன் அடிப்படையில், தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளன என்றும், தேர்வுப் பணி, ஆய்வுப் பணி போன்ற காரணங்களால் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேட்டில் மருத்துவப் பேராசிரியர்கள் கையெழுத்திடவில்லை என்று தெரிவிக்கப்பட்டாலும், அதனை தேசிய மருத்துவ ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை என்றும் கூறி இருக்கிறார்.

    அதே சமயத்தில், இதுபோன்ற அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்பு தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகளுக்கு இரண்டு முறை விளக்கம் கேட்டு அறிவிப்புகள் அனுப்பப்படும் என்றும், விளக்கங்கள் திருப்தி அளிக்காத பட்சத்தில், கல்லூரி நிர்வாகத்தினருக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதற்கு பின்பே அபராதம் விதிக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக் கல்வி வாரியத் தலைவர் தெரிவித்து உள்ளார்.

    தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரின் கூற்றையும், தேசிய மருத்துவ ஆணைய அதிகாரியின் கூற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, முறையான, நியாயமான விளக்கம் தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை என்பதும், போதுமானமருத்துவர்கள் நியமிக்கப்பட வில்லை என்பதும் தெளிவாகிறது.

    மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கேற்ப தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், இனி வருங்காலங்களில், அங்கீகாரம் ரத்தாகும் நிலை, அபராதம் விதிக்கும் நிலை போன்றவற்றிற்கு மருத்துவக் கல்லூரிகள் தள்ளப்படாது இருப்பதை உறுதி செய்யவும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ். சார்பில் வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சி அணிவிக்கப்பட்டது.
    • வெள்ளி கவசம் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

    பசும்பொன்

    கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் நினைவிட த்தில் வருகிற 30-ந் தேதி 61-வது குருபூஜை மற்றும் 116-வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.

    கடந்த ஆண்டு ஓ.பன்னீர் செல்வம் குடும்பத்தினர் சார்பில் தேவர் நினை விடத்தில் உள்ள தேவர் சிலைக்கு சுமார் 10½ கிலோ எடை கொண்ட வெள்ளிக் கவசம் வழங்கபட்டு இருந்தது.

    இந்நிலையில் நேற்று, அந்த வெள்ளி கவசம் தேவர் சிலைக்கு ஓ.பி.எஸ். மகன் விஜயபிரதீப் முன் னிலையில் மீண்டும் அணி விக்கப்பட்டது. மேலும் புதிதாக இந்த ஆண்டு செய்யப்பட்ட 12 கிலோ எடையுள்ள வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சியும் பூஜைகள் நடத்தி அணிவிக்கபட்டது.

    இதனையொட்டி தங்க கவசம் வரும் வரை வெள்ளி கவசம், அணிவிக்கபட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் மூக்கையா, ஒன்றிய செய லாளர்கள் கருப்புச்சட்டை முருகேசன், முத்துராம லிங்கம், வாசு, அழகு சரவ ணன், மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் பரிதி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சின்னாண்டு, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சோலைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓ.பி.எஸ்.-அ.ம.மு.க. அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • துணை ஒருங்கிணைப்பா ளரும், முன்னாள் அமைச்ச ருமான கு.ப.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஓ.பி.எஸ். அணி சார்பில் கோட நாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசா ரிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர்

    எம்.பி. ஏற்பாட்டில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணை ஒருங்கிணைப்பா ளரும், முன்னாள் அமைச்ச ருமான கு.ப.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    அ.ம.மு.க. கிழக்கு மாவ ட்ட செயலாளர் முனிய சாமி, மேற்கு மாவட்ட செயலாளர் முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன்,மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொகுதி செயலாளர் நவநாதன், மூக்கையா, ராமகிருஷ்ணன், முத்துப்பாண்டி, மாவட்ட துணை செயலாளர் கற்பகம் பழனிச்சாமி, இணைச்செயலாளர் சித்ரா,பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் நந்திவர்மன் (ஆர்.எஸ். மங்கலம்),முத்து முருகன் (ராமநாதபுரம் தெற்கு), உடைய தேவன் (திருப்புல்லாணி).

    சீனிமாரி ( மண்டபம் கிழக்கு),சிவக்குமார் (மண்டபம் மத்தி), அழகர்சாமி (மண்டபம் மேற்கு), ராமநாதபுரம் நகர் செயலாளர் பால சுப்பிரமணியன்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செய லாளர் திசைநாதன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராமநாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர், விவசாய அணி செயலாளர் மாரிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சோலை முருகன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சக்தி, மகளிரணி செயலாளர் சபீனா பேகம்,சிறுபான்மை பிரிவு செயலாளர் முஹமது அஸ்லாம், இளைஞரணி செயலாளர் சின்னாண்டு தேவன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை சதிஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • மீண்டும் அ.தி.மு.க.ஆட்சி அமைய அனைவரும் அணிதிரள்வோம்.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) திருப்பூர் மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி.காமராஜ் தலைமை யேற்று ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    மாவட்ட அவைத்தலைவர் வெங்கிடுபதி, மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, நகர செயலாளர் ஜவகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தளி மாரிமுத்து, நகர துணை செயலாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மாவட்ட செயலாளர் டி.டி.காமராஜ் கூறுகையில் "முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சி தலைவி ஜெயலலிதா காட்டிய வழியில் அ.தி.மு.க.வை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான முறையில் வழிநடத்தி செல்வோம். மீண்டும்அ.தி.மு.க.ஆட்சி அமைய அனைவரும் அணிதிரள்வோம்.இதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். விழாவில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜாபர் சாதிக், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் இப்ராஹிம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுஜித்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், நகர பொருளாளர் நாகேஸ்வரன், தாராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தாராபுரம் மேற்கு செயலாளர் மனோகர், நகர அம்மா பேரவை மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
    • மாணவரணி செயலாளர் கண்ணதாசன், பாசறை செயலாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட ஓ.பி.எஸ். அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர். அசோகன் வழிகாட்டுதலின்படி காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர செயலாளர் பாலா தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் திருஞானம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் அங்குராஜ், ரவி, மாவட்ட பிரதிநிதி மகேஷ், நகர மாணவரணி செயலாளர் கண்ணதாசன், பாசறை செயலாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என்று கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கூறினார்.
    • கால்பந்து வீராங்கனை மரணத்தில் தவறு நடந்துள்ளதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீப்பெட்டி தொழில்

    டெல்லியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் தீப்பெட்டி தொழிலுக்கு பாதகமான லைட்டர்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும். கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

    அதன்படி தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும் வில்லிசேரி கிராமத்தில் இந்த மாதத்துக்குள் வங்கி கிளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த வங்கி திறப்பு விழாவுக்கு நிர்மலா சீதாராமன் வருவார் என்று எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க. பொதுக்குழு ஏற்கனவே வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. இதில் 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். அதன் பின்னர் அவர் கூறும் கருத்துகள் அ.தி.மு.க.வுக்கு பொருந்தாது.

    கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக தி.மு.க.வினர் யாரும் வாய் திறக்க மறுக்கின்றனர். இந்த சம்பவம் தமிழக முதல்வரின் தொகுதியில் நடந்துள்ளது. கால்பந்து வீராங்கனை மரணத்தில் தவறு நடந்துள்ளதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. ஆகவே தமிழகத்தில் சிகிச்சை தேவைப்படும் நிலையில் சுகாதாரத்துறை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆதர வாளர்களை சந்தித்து வருகிறார்.
    • அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் 7 முறை நகர செயலாளராக பதவி வகித்துள்ளார்.

    தாராபுரம் :

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என 2 அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆதர வாளர்களை சந்தித்து வருகிறார். ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து தனது அணி சார்பில் மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

    ஓ.பி.எஸ். அணிக்கு தாவல் :- இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் தனது ஆதரவாளர்கள் 200 பேருடன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைய உள்ளார். தாராபுரம் கிளை செயலாளர்கள், அவை தலைவர், நகர பொறுப்பாளர்கள் என நிர்வாகிகள் , தொண்டர்கள் 200 பேருடன் இன்று காலை ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தேனிக்கு புறப்பட்டு சென்றார். தாராபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் 7 முறை நகர செயலாளராக பதவி வகித்துள்ளார். தற்போது தாராபுரம் தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க தலைவராகவும் உள்ளார்.அவர் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவியுள்ளது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காமராஜ், ஓ.பி.எஸ். அணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    முன்னாள் நகர்மன்ற தலைவர் :- இதனிடையே தாராபுரம் நகர்மன்ற முன்னாள் துணை தலைவரும் அ.தி.மு.க. தொகுதி செயலாளராகவும் இருந்த கோவிந்தராஜ் , அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதலையடுத்து தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அவர் தி.மு.க.வில் இருந்து விலகி ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • ஓ.பி.எஸ்-வுடன் சேருவதற்கு வாய்ப்பில்லை என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்துள்ளார்.
    • அவருக்கு பின்னால் 63 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. திருப்பரங்குன்றத்தில் உள்ள அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலிமைமிக்க தீர்ப்பினை தொண்டர்கள் ஏற்கனவே வழங்கி விட்டனர். அவருக்கு பின்னால் 63 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் 2,663 பொதுக்குழு உறுப்பினர்களில் அதிக மெஜாரிட்டியாக எடப்பா டியாரை இடைக்கால பொதுச் செயலாளர் என்று தேர்வு செய்தனர்.

    இடைக்கால தீர்ப்பைப்பெற்று சிலர் அறிக்கை விடுகின்றனர்.இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை. மேல்முறையீடு உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தீர்ப்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் உயர்ந்த குழு என நீதிமன்றமே கூறியுள்ளது.

    கசப்பை மறக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் தி.மு.க.யுடன் தொடர்பு வைத்தவர்களை எப்படி மறக்க முடியும்?

    இடைக்கால தீர்ப்பை மட்டும் வைத்துக் கொண்டு கட்சி வளர்க்க முடியாது. நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்கள் மூலம் இறுதியான தீர்ப்பை பெறலாம்.

    ஓ.பி.எஸ். எடப்பாடி யாரை அழைக்கிறார். அவருக்கு அழைக்க எந்த தகுதியும் இல்லை. அவர் அழைத்தது தவறு.

    கூட்டுத் தலைமை என்று ஓபிஎஸ் கூறுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை தேர்ந்தெடுக்க பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டது. இரட்டைத் தலைமையே வேண்டாம் என கட்சியினர் கூறும் நிலையில் கூட்டுத் தலைமையை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.

    எப்பொழுதெல்லாம் தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்தவுடன் தென் மாவட்டங்களுக்கு ஓ.பி.எஸ். வருகிறார். இதன் மூலம் தென் மாவட்ட பகுதிகளை உரிமை கொண்டாட முயற்சி செய்கிறார். தென் மாவட்டம் என்பது ஜாதி- மதத்திற்கு அப்பாற்பட்டது. தென் மாவட்டத்தில் ஓ.பி.எஸ்.சுக்கு தனி செல்வாக்கு கிடையாது.

    தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொண்டர்களும், மக்களும் எடப்பாடியார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். ஏனென்றால் தென்பகு திகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மக்கள் கேட்காமலே வழங்கியவர். அதனால்தான் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டுக்கு சொந்தக்கா ரராக எடப்பாடி உள்ளார். நிச்சயம் வெற்றி பெற்று அ.தி.மு.க. இயக்கத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடியார் வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் எம்.ஆர். குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஓ.பி.எஸ் அணி அ.தி.மு.க. மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்று அளித்தனர்.
    • ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள கே.ஆர்.அசோகன் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் மதுரையில் இருந்து கார் மூலம் சிவகங்கை மாவட்டம் வந்தார்.அவருக்கு பூவந்தி அருகே அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.அதனைத் தொடர்ந்து சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்பு காரைக்குடிக்கு வந்த அ.தி.மு.க. புதிய மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகனுக்கு மாவட்ட பேரவை துணைச் செயலா ளர் பாலா, இளைஞர் அணி திருஞானம், காரைக்குடி நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் அங்கு ராஜ், ரவி, மகளிர் அணி ராமாமிர்தம், பத்மா, சாந்தி, இளைஞர் அணி காட்டு ராஜா, பக்கீர் முகமது, கண்ணதாசன் உள்ளிட்ட பலர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    காரைக்குடி 5 விளக்கு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கே.ஆர்.அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் செய்தி தொடர்பாளர் மருது அழகராஜ், வழக்கறிஞர் ராமநாதன், மாணவரணி ஆசைத்தம்பி, சுமித்ரா ரவிக்குமார் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • துரோக வரலாற்றில் ஓ.பி.எஸ். இடம் பிடித்துவிட்டார் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • அ.தி.மு.க. தலைமைகழகம் என்ன உங்கள் தாத்தா வீட்டு சொத்தா? இல்லை உங்கள் சொத்தா?.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று கூறியதாவது:-

    தமிழகத்தில் 50 ஆண்டு களாக சேவை செய்து சாமானிய மக்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை ஜனநாயக அடிப்படையில் பெற்று தந்த அ.தி.மு.க. இயக்கத்தை புரட்சித் தலைவர் தொடங்கினார்.

    அதன்பின் ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி, உலக தலைவர்கள் பாராட்டும் வழியில் புரட்சிதலைவி இந்த இயக்கத்தை மூன்றாம் பெரிய இயக்கமாக மாற்றி சிறப்பாக வழிநடத்தி னார்கள்.

    தற்போது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகை யில் கழக ரீதியில் 70 மாவட்ட கழகச் செயலா ளர்கள், 70க்கும் மேற்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், 2500 மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் தி.மு.க.வை எதிர்க்க சிம்ம சொப்பனமாகவும், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொண்ட ர்களின் கோரிக்கை யை ஏற்று எடப்பாடியார் இடைக்கால பொதுச் செய லாளராக பொறுப்பேற்றார்

    அதனைத் தொடர்ந்து ராமருக்கு பட்டாபிஷேகம் சுட்டுவது போல் விழா நடைபெற்ற போது அங்கு லட்சுமணனாய் உடனி ருந்து அந்த தியாகத்தில் இடம்பெற்றார். அதே சேவையால் வரலாற்றில் இடம்பெற வேண்டியவர் அந்தக் கோட்டை தாண்டி சென்னையில் அ.தி.மு.க. தொண்டர்களின் கோவி லாக வணங்கும் தலைமை கழகத்தில் வன்முறையை நிகழ்த்தி உள்ளார் ஒ.பி.எஸ்.இதன்மூலம் துரோக வரலாற்றில் இடம்பிடித்து விட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

    ஓ.பி.எஸ். 3 முறை தமிழகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தி ஆற்றும்பணிக்கு கோயிலாக இடம் பெற்றிருக்கும் தலைமை கழகத்தை ரவுடி களால், குண்டர்க ளால், காட்டுமிராண்டிகளால் இவர்களை வைத்து காலால் எட்டி உதைக்கும் சம்பவத்தை கண்டு தொண்டர்கள் இதயத்தில் ரத்தம் வடிந்து வருகிறது. இவர் செய்த செயலால் தலைமை கழகத்தை சீல் வைக்கும் வகையில் முடிந்து உள்ளது

    அலுவலகத்தில் இருந்த கோப்புகள் எல்லாம் ஓ.பி.எஸ். வந்த வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமைகழகம் என்ன உங்கள் தாத்தா வீட்டு சொத்தா? இல்லை உங்கள் சொத்தா? இது ஒன்றரைகோடி கழகத் தொண்டர்களின் சொத்தாகும்.

    கழகத்திற்கு மாசு ஏற்படும் வகையில் இதுபோன்று ஈடுபட்டால் அம்மா பேரவை ராணுவப்படையாக பாதுகாப்பு பணியில் முன்னே நிற்று அ.தி.மு.க.வையும், தலைமை கழகத்தை யும் காக்கும் தியாக பொறு ப்பில் இருப்போம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×