search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டித் தேர்வுகள்"

    • பெண் கான்டபிள் ஒருவர் சீருடை அணைத்தவாறு நடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
    • ரத்லாம் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இந்த தனியார் பயிற்சி மையம் இயங்கி வருகிறது

    மத்தியப் பிரதேசத்தில் காவலர் சீருடை அணைத்தவாறு தனியார் பயிற்சி மைய விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில் இயங்கி வரும் போட்டித் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் பெண் கான்டபிள் ஒருவர் சீருடை அணைத்தவாறு நடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் மேலதிகாரிகளின் கவனத்துக்கு இது சென்றுள்ளது. எனவே அவரை தற்போது இடைநீக்கம் செய்து காவல் கண்கணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதியளித்துள்ளார்.   

    • மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் இந்த தகவலை தெரிவித்துள்ளார்
    • 2021-22 ஆண்டில் ரூ. 490 கோடி ஈட்டிய நிலையில் 2022-23 ஆண்டு காலத்தில் ரூ.873 கோடி ஈடுபட்டுள்ளது.

    2024 நீட் முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான CUET, பொறியியல் படிப்புகளுக்கான JEE தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தேசிய தேர்வு முகமை நடந்தி வருகிறது.

    கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் உருவாக்கப்பட்ட இந்த தேசிய தேர்வு முகமை அமைப்பு இதுவரை நடத்திய தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,513 கோடி லாபம் ஈட்டியுள்ளது . கடந்த புதன்கிழமை பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி விவேக்.கே எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பதிலளித்துப் பேசும்போது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    ஈட்டிய தொகையில் 87.2 சதவீதம் தேர்வுகளை நடத்துவதற்காகச் செலவிடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாகக் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட CUET பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்குப் பிறகு தேசிய தேர்வு முகமையின் வருமானம் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22 ஆண்டில் ரூ. 490 கோடி ஈட்டிய நிலையில் 2022-23 ஆண்டு காலத்தில் ரூ.873 கோடி ஈடுபட்டுள்ளது.  

    • 31ந் தேதிக்குள் பதிவு செய்ய கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
    • ஆசிரியர் தேர்வாணைய தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக நடைபெற வேண்டும்

    நாகர்கோவில், ஆக.14-

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு நடப்பு ஆண்டில் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இந்த இரு தேர்வுகளுக்கு மான பாடதிட்டத்தில் தமிழ், ஆங்கிலம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் போன்ற பாடத்திட்டங்கள் பொதுவாக உள்ளதால் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

    இதற்கான அறிமுக வகுப்பு வருகிற 21-ந் தேதி காலை 11 மணிக்கு வைத்து நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் மாண வர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் 31-ந் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும.

    முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும், ஸ்மார்ட் போர்டு வகுப்புகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

    பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் வாராந்திர மாதிரி தேர்வுகள் தொடர்ச்சி யாக நடைபெற உள்ளது. மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • இலவச பயிற்சி வகுப்புகள் 01.09.2022 முதல் வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காலி பணி இடங்களுக்கான அரசுப்பணியாளர் 1089 நில அளவையர், வரைவாளர் தேர்விற்கும், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 889 பணியிடத்திற்கான மருந்தாளர் தேர்விற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நில அளவையர், வரைவாளர் பணிக்காலியிடங்களுக்கு இணையதள வாயிலாகவும், மருந்தாளர் பணிக்காலியிடங்களுக்கு இணையதள வாயிலாகவும்  விண்ணப்பிக்கலாம்.

    அதனை தொடர்ந்து, இத்தேர்வுகளுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டித் தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 01.09.2022 முதல் வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்வாணையத்தால் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நில அளவையர், வரைவாளர் அல்லது மருந்தாளர் தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப நகல், புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சி, 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு தங்களின் விவரத்தினை தெரிவித்து பதிவுசெய்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடப்பு நிகழ்வுகள், பாடநூல்கள் பழைய வினாத்தாள்கள், மாதிரி தேர்வுகள், பதிவேற்றம்.
    • போட்டித்தேர்வர்கள் மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

    சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சு. அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – I , தொகுதி – II/II-A , தொகுதி – IV/VAO மற்றும் தொகுதி – VII/VIII ஆகிய தேர்வுகளுக்கும் மேலும் மத்திய அரசால் நடத்தப்படும் IBPS, SSC, RRB, INDIAN POSTAL SERVICE,UPSCதேர்வுகளுக்கும் பாடத்திட்டங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகள், பாடநூல்கள் பழைய வினாத்தாள்கள், மாதிரி தேர்வுகள், கேள்வி & பதில்கள் ஆகியன https://tamilnaducareerservices.tn.gov.in வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித்தேர்வர்கள் Virtual Learning Portal - Tamil Nadu | Login  என்ற மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் (Virtual Learning Portal) தங்களைப் பற்றிய விவரங்களை உள்ளீடு செய்து, இவ்வலைதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர், சு. அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

    ×