என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குற்றவாளி கைது"
- அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் வசூலித்த நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர்.
- மோசடியில் தொடர்புடைய ஆரூத்ரா அதிபர் ராஜசேகர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருந்தார்.
சென்னை:
சென்னை அமைந்தகரையை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆரூத்ரா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் வசூலித்த நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த மோசடியில் தொடர்புடைய ஆரூத்ரா அதிபர் ராஜசேகர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்தார்.
துபாயில் பதுங்கி இருக்கும் அவரை பிடிக்க போலீஸ் வியூகம் வகுத்திருந்தது. கடந்த 3 வருடமாக தேடப்பட்டு வந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
- பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.
- மோசடியில் முக்கிய குற்றவாளியான சிவக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சொத்து பத்திரத்தின் மூலம் கடன் பெற்று டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என பலரிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
இதற்கு சம்மதித்த பொதுமக்களிடம் சொத்து பத்திரங்களை வாங்கி வங்கியில் அடமானம் வைத்து சுமார் ரூ.100 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரவீனா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியான சிவக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நேற்று இரவு பல்லடத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
- வழக்கில் தொடர்புடைய 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
பல்லடம் :
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் மண்டல் என்பவரை கடந்த 20-ந் தேதி ஒரு கும்பல் கடத்தி அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சென்னையைச் சேர்ந்த சுசிதரன் என்பவரது மகன் டாட்டூ தினேஷ் (வயது 28) என்பவரை போலீசார் சின்னக்கரை அருகே வைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரை ஜெயப்பிரகாஷ் தாக்கிவிட்டு தப்ப முயன்றார்.
- ஜெயப்பிரகாஷ் காலில் சுடப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி:
கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில், கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார்.
போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஜெயப்பிரகாஷை போலீசார் சுட்டுப்பிடித்தனர். ஜெயப்பிரகாஷ் காலில் சுடப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் சுடலைமணிக்கு இடது கையில் வெட்டு பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சென்னையில் இருந்து, இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
- விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஆலந்தூர்:
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார்(32). இவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா போலீசில், பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ வழக்கு கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அவர் போலீசிடம் சிக்காமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லவும் முயன்று வந்தார்.
இதையடுத்து தினேஷ் குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். இதுபற்றி அனைத்து சர்வதேச விமானநிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து, இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பாலியல் குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த தினேஷ் குமார் இலங்கைக்கு செல்வதற்காக விமானத்தில் பயணிக்க வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் தினேஷ்குமாரின் பயணத்தை ரத்து செய்து கைது செய்தனர். இதுபற்றி பஞ்சாப் மாநில போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
- துபாயில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது.
- பஞ்சாப் மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 9-ந் தேதி நாட்டுத் துப்பாக்கியால் ரஞ்ஜித் சுட்டு கொலை செய்து விட்டு தப்பித்தார்.
- குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே கெம்மாரம்பாளையம் கண்டியூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இதே கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்ஜித்குமார்(33). இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில் கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி அய்யாசாமியை தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் ரஞ்ஜித் சுட்டு கொலை செய்து விட்டு தப்பித்தார். இதுதொடர்பாக அவரது உறவினர் காரமடை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் ரஞ்ஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து காரமடை போலீசார் இவர் மீது பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதகமாக செயல்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்பட பல்வேறு வழக்கில் காஞ்சிபுரம் உப்பேரிகுளம் தெருவை சேர்ந்த ஷேக் காதர் என்பவர் சிக்கினார்.
- மாவட்ட கலெக்டர், சரித்திர பதிவேடு குற்றவாளியான ஷேக் காதரை ஓராண்டு தடுப்புக்காவலில வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்பட பல்வேறு வழக்கில் காஞ்சிபுரம் உப்பேரிகுளம் தெருவை சேர்ந்த ஷேக் காதர் (36) என்பவர் சிக்கினார்.
இந்த நிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதைத்தொடர்ந்து, அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, சரித்திர பதிவேடு குற்றவாளியான ஷேக் காதரை ஓராண்டு தடுப்புக்காவலில வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
- சொத்தில் பங்கு வேண்டும் என்று சத்யா கணவரிடம் கூறினார்.
- செந்தாமரைக்கண்ணன் என்னுடைய இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து விட்டு சென்றார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன் (வயது55).தெருக்கூத்து நாடக கலைஞர். இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளது.
முதல் மனைவி செல்வி, கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து, தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இரண்டாவது மனைவி கமலா (வயது50), அவரது மகன் குரு (17). இருவரும் செங்கல்பட்டியிலுள்ள ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். 3-வது மனைவி சத்யா. இவர் தற்போது கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து தந்தை காவேரி, தாய் சாலா ஆகியோருடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை பூட்டிய வீட்டுக்குள் கமலா, குரு ஆகியோர் தீயில் கருகி சடலமாக கிடப்பதாக, கல்லாவி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிருஷ்ணகிரி கூடுதல் எஸ்.பி. சங்கு, ஊத்தங்கரை டி.எஸ்.பி. அலெக்சாண்டர், கல்லாவி இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது எரிந்த நிலையில் கிடந்த தாய்-மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சத்யாவுக்கும், திருப்பத்தூர் மாவட்டம், கூறிசலாபட்டு பகுதியை சேர்ந்த ராமதாஸ் (37) இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது தெரியவந்தது.
கொலை நடந்த மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அங்கு அந்த மோப்பநாய் செந்தாமரைக்கண்ணன் வீட்டின் ஜன்னல் பகுதிக்கு சென்று மோப்பம் பிடித்தது. பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் உள்ள சத்யா வீட்டில் இருந்த ராமதாஸ் வேட்டியை கவ்வி பிடித்தது. இதனால் அவர் போலீசில் மாட்டி கொண்டார்.
அப்போது ராமதாஸ் போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.
எனக்கும், சத்யாவுக்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை செந்தாமரைக்கண்ணன், சத்யாவை கண்டித்துள்ளார். இதனால் நானும், சத்யாவும் செங்கப்பட்டிக்கு வந்தோம். அப்போது சொத்தில் பங்கு வேண்டும் என்று சத்யா கணவரிடம் கூறினார். அப்போது என்னையும், சத்யாவையும் செந்தாமரை கண்ணன் கண்டித்தார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த செந்தாமரைக்கண்ணன், என்னுடைய இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து விட்டு சென்றார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அந்த தீயை அணைத்தனர்.
பின்னர் செந்தாமரைக்கண்ணன் வீட்டிற்குள் சென்று விட்டார். அவரை கொலை செய்ய திட்டமிட்டு நான் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தேன். பின்னர் செந்தாமரைக்கண்ணன் வீட்டின் கதவை வெளிபக்கமாக பூட்டி ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்தேன்.
பின்னர் நானும் எதுவும் தெரியாதபடி சத்யாவின் வீட்டில் இருந்தேன். மறுநாள் காலையில் தான் தாய்-மகன் இருவரும் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. ஆனால் வீட்டில் செந்தாமரைக்கண்ணன் அங்கு இல்லை என தெரியவந்தது.
காலையில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். நான் எதுவும் தெரியாது என கூறினேன். மோப்பநாய் வந்து என் வேட்டியை கவ்வி பிடித்தது. இதனால் நான் மாட்டி கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக கல்லாவி போலீசார் வழக்குபதிவு செய்து ராமதாஸ், சத்யா, காவேரி, சாலா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்