search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபராதம் விதிப்பு"

    • அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவு.
    • தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சிறைக்காவல் முடிந்து புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலா ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த மாதம் 8ம் தேதி புத்தளம் கடல் பகுதியில் 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது ெசய்தனர்.அத்துடன் மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

    முன்னதாக, இன்று நடைபெற்ற மற்றொரு விசாரணையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த 10 மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • வாகனம் அம்மாநிலத்தில் 21 முறை விதிமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
    • ஜூலை 14 அன்று அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

    கர்நாடக மாநிலத்தில் அரசு வாகனத்திற்கு ரூ.18 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு இ சல்லான் முறையில் அபராதம் வசூலிக்கும் திட்டம் கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக அமலில் இருந்து வருகிறது.

    அந்த வரிசையில், அம்மாநிலத்தின் அரசு பயன்பாட்டிற்காக KA-01-G-6601 என்ற பதிவு எண் கொண்ட வாகனம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த வாகனம் அம்மாநிலத்தில் 21 முறை விதிமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து அந்த வாகனத்திற்கு அபராதத் தொகையாக ரூ.18 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மீறல்களும் 2 மாதங்களுக்குள் (ஜூலை, ஆகஸ்ட்) பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்களுக்கு ஒவ்வொரு வாகனத்திற்கும் தலா ரூ. 1,000 அல்லது ரூ. 500 விதிக்கப்படுகிறது.

    கர்நாடக காவல்துறையால் தொடங்கப்பட்ட இ-சலான் (https://echallan.ksp.gov.in/) இணையதளத்தின் தரவுகளின்படி, இந்த வாகனம் பல முறை விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

    ஜூலை 14 அன்று அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில், சித்தலிங்கபுராவில் ஜூலை 18 அன்று சீட்பெல்ட் அணியாமல் சென்றது, மதநாயக்கனஹள்ளி மற்றும் கெஜ்ஜலகெரே கேஎம்எஃப் போன்ற பல்வேறு இடங்களில் அதிவேகமாக சென்றது உட்பட பல விதிமீறல்கள் ஏற்படுத்தி இருக்கிறது.

    இதே போன்று தொடர் விதிமீறல்கள், போக்குவரத்துச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் உள்ள குறைபாட்டை காட்டுகின்றன. மேலும் விதிமீறல்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

    • ஓட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
    • மீன், இறைச்சி, நண்டு போன்றவை சமைத்து பயன்படுத்தாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல்களில் திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர். கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள 5-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் சோதனை மேற்கொண்ட போது மீன், இறைச்சி, நண்டு போன்றவை சமைத்து பயன்படுத்தாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இவ்வாறு 150 கிலோவுக்கும் மேற்பட்ட பழைய மற்றும் கெட்டுபோன உணவு பொருட்களை கைப்பற்றி அவற்றை குப்பைத் தொட்டியில் கொட்டி பினாயில் ஊற்றி அழித்தனர். அத்துடன் 5 ஓட்டல்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இதுகுறித்து குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் கூறும்போது, ' உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து வழங்கினாலோ, செயற்கையான வண்ண பொடிகளை சமையலில் பயன்படுத்தினாலோ அந்த ஓட்டல்களுக்கு 'சீல்' வைக்கப்படும். ஓட்டல்களில் தரமற்ற உணவுகளை வழங்கினால் பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்' என்றார்.

    இந்த சோதனையின்போது அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன், தக்கலை வட்டார அலுவலர் பிரவீன் ரகு, குளச்சல் வட்டார அலுவலர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் பல்வேறு புகார் தொடர்பாக சோதனை நடத்தினர்.
    • பிளாஸ்டிக் பயன்படுத்தியது தொடர்பாக 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் ஓட்டல்கள், ரெ ஸ்டா ரண்டுகள், டீக்கடை கள், பாஸ்ட்டிட் கடைகள், மளிகை கடைகள், பேக்கரி களில் அதிகாரிகள் சோதனை நடத்தி உணவு பொருள் கலப்படம் சட்ட விரோத விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட உணவு பொருள் பாது காப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் குழுவினர் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஈரோடு, பவானி, சத்தியமங்கலம், அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, உள்பட பகுதிகளில் 447 ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் பல்வேறு புகார் தொடர்பாக சோதனை நடத்தினர்.

    இதில் 44 ஓட்டல்களில் சுகாதாரம் மேம்படுத்தப்படாமல் இருந்தது தொடர்பாக தல ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர். இதேபோல தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியது தொடர்பாக 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 434 மளிகை கடைகள், பெட்டி கடை யில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கடை களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இத்தொடர்பாக தல ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • போக்குவரத்து அலுவலர்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    ஈரோடு:

    போக்குவரத்து ஆணை யர் மற்றும் ஈரோடு கலெ க்டர் உத்தரவின் பேரில். துணை போக்கு வரத்து ஆணையர் வழிகாட்டுதலின் படி, ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கட்டரமணி, பதுவை நாதன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், சுரேந்திரக்குமார் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறை சுற்றுச்சூழல் விஞ்ஞானி அருண்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரோடு மத்திய பஸ் நிலையத்தில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன், கண் கூசும் முகப்பு விளக்குகள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது சுமார் 45 பஸ்களில் ஏர் ஹாரன் அகற்றப்பட்டது. பஸ் நிலையத்திற்குள் அதிக ஒலி எழுப்பிய 13 பஸ்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இதுபோன்று அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன், கண் கூசும் முகப்பு விளக்கு கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பின் அனுமதிச்சீட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • சிவகங்கையில் வீதிமீறலில் ஈடுபட்ட பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • 2 அரசு பேருந்துகளும், 5 தனியார் பேருந்துகளிலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆர்.டி.ஒ தலை மையிலான குழுவினர் சோதனை செய்ததில் விதி முறைகளை பின்பற்றாமல் இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்து களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப் படும் பேருந்துகளில் அரசு விதிமுறைகளை பின்பற்றா மல் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் அதிக ஒளி வீசும் விளக்குகள் பயன்படுத்தப்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது.

    மேலும் போக்குவரத்து துறை ஆணையர் சார்பில் வாகனங்களை அடிக்கடி போக்குவரத்து துறையினர் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் சிவகங்கை வட்டார போக்கு வரத்து அலுவலர் மூக்கன் மற்றும் ஆய்வாளர் மாணிக் கம் தலைமையிலான குழுவினர் சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டனர்.

    இதில் 2 அரசு பேருந்துகளும், 5 தனியார் பேருந்துகளிலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் அதிக ஒளி வீசும் விளக்குகள் பயன்படுத்தப்பட்டதும் அதே போல் ஓட்டுநர்கள் தங்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட பேட்ச்கள் அணியாமல் விதிமுறை களை மீறியது தெரியவரவே அவர்களுக்கு ரூ17.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    • 2 கடைகளில் இருந்து செயற்கை நிறம் ஏற்றப்பட்ட இறைச்சி மற்றும் குளிர்ப்பதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சமைத்த இறைச்சி 5 கிலோ பறிமுதல் செய்து அழித்தனர்.
    • விதிமுறைகளை பின்பற்றாத கடை, ஓட்டல் களுக்கு தலா 1,000 வீதம் அபராதம் விதித்தனர்.

    கடத்தூர், 

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் குழுவினர் கடத்தூர், சில்லாரஅள்ளி, புளியம் பட்டி, நத்தமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள், மளிகை கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது 2 கடைகளில் இருந்து செயற்கை நிறம் ஏற்றப்பட்ட இறைச்சி மற்றும் குளிர்ப்பதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சமைத்த இறைச்சி 5 கிலோ பறிமுதல் செய்து அழித்தனர். 2 ஓட்டல்களில் இருந்து உரிய விபரங்கள் அச்சிடாத மசாலா பாக்கெட்டுகள் 2 கிலோ, பலமுறை பயன் படுத்திய சமையல் எண் ணெய் 2 லிட்டர் மற்றும் செயற்கை நிறமூட்டி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    விதிமுறைகளை பின்பற்றாத கடை, ஓட்டல்களுக்கு தலா 1,000 வீதம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து நத்தமேடு பகுதிகளில் 3 கடைகளில் காலாவதியாக பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து முறைகேடாக மீன்குட்டைகளுக்கு ஒகேனக்கல் குடிநீரை பயன்படுத்தி வருவதால், சம்மந்தப்பட்ட கிராமமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • அரசு பேருந்தை, காலிகுடங்களுடன் கிராம மக்கள் சம்பவத்தன்று சிறைப்பிடித்து, சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மானியதஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது மலையப்பநகர் கிராமம்.இக்கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளது.

    இக்கிராமத்தை சேர்ந்த குடியிருப்பு மக்களின், குடிநீர் தேவைக்காக சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதன் மூலம் ஒகேனக்கல் குடிநீர் வழங்கி வருகிறது.

    குடியிருப்பு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, முறைகேடாக ஒகேனக்கல் குடிநீரை பூமிக்கடியில் பிளாஸ்டிக் பைப் அமைத்து, அதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த சிலர் 4 மீன்குட்டைகள் அமைத்து, விற்பனைக்காக டன் கணக்கில் மீன்களை வளர்த்து வருகின்றனர்.

    மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து முறைகேடாக மீன்குட்டைகளுக்கு ஒகேனக்கல் குடிநீரை பயன்படுத்தி வருவதால், சம்மந்தப்பட்ட கிராமமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    குடிநீர் பற்றக்குறையால் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், பல்வேறு பணிக்கு செல்லும் மக்கள் நாள்தோறும் தவித்துவரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு, காரணமான மீன்குட்டை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, இதற்கு துணைப்போன பெண் டேங்க் ஆப்ரேட்டரை பணி நீக்கம் செய்யக்கோரி, மலையப்பநகருக்கு வந்த அரசு பேருந்தை, காலிகுடங்களுடன் கிராம மக்கள் சம்பவத்தன்று சிறைப்பிடித்து, சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    இந்த விவகாரம் தொடர்பாக நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தொப்பூர் போலீசார் இணைந்து, சம்மந்தப்பட்ட மலையப்ப நகர் கிராமத்திற்கு நேரடியாக சென்று, அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து பூமிக்கடியில் முறைகேடாக, அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைப்புகளையும், ஒகேனக்கல் குடிநீர் மூலம் அமைக்கப்பட்டுள்ள 4 மீன்குட்டைகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தியதில், முறைகேடாக ஒகேனக்கல் குடிநீரை பயன்படுத்தியது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து மீன்குட்டைகளுக்கு முறைகேடாக ஒகேனக்கல் குடிநீரை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட பெண் டேங்க் ஆப்ரேட்டர் நாகம்மாள் என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து, முறைகேடாக பயன்படுத்திய ஒகேனக்கல் குடிநீருக்கு ரூ.8189-ஐ அபரதாமாக செலுத்திட, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் உத்தரவிட்டுள்ளார்.

    • 2 கடைகளில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
    • தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தாபாக்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா மேற்பார்வையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் அனுமந்தபுரம், எலுமிச்சன அள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல் மற்றும் தாபாக்களில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது 2 கடைகளில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    மளிகை கடைகளில் நடத்திய சோதனையில் காலாவதியான கடலை மாவு மற்றும் பல்வேறு உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தின்பண்டங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி ஆகும் தேதி பொறிக்கப்படாதது கண்டறியப்பட்டு அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 4 கடைகளுக்கு தலா ரூ.1,000 வீதம் 4 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

    • பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலம் அருகிலுள்ள போலீஸ் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்திய தாக 3 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலை மையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணன், உமா மகேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலம் அருகிலுள்ள போலீஸ் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்திய தாக 3 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. அந்த வழியே வந்த ஜே.சி.பி வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்யப்பட்டதில் அந்த வாகனத்திற்கு ஆண்டு வரி செலுத்தப்படாதது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த வாகனத்திற்கு அபராத தொகையுடன் சேர்த்து ரூ.13ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டது. மேலும் அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனத்திற்கு ரூ.30 ஆயிரம் இணக்க கட்டணம் வசூலிக்கும் பொருட்டு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

    மேலும் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாமலும் அனுமதி சீட்டு இல்லாமலும் அந்த வழியாக வந்த கனரக வாகனம் சிறை பிடிக்கப்பட்டு பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • முதலில் அவர் தனக்கு இதுபோன்ற சம்பவம் நடந்தது ஞாபகம் இல்லை என்று கூறிய நிலையில், பின்னர் நண்பர் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
    • முருகேசனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்ைக எடுத்தனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையை கடந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சாலை ஓரத்தில் நின்றிருந்த காட்டு யானை முன்பு ஒருவர் வணங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த வீடியோ பெரும் வைரல் ஆனது.

    இந்த நிலையில் வீடியோ காட்சிகள் தொடர்பாக வனத்துறையினர் விசா ரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் யானையை வணங்கி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளி யிட்டவர் பென்னாகரம் அருகே உள்ள மேக்லாம்திட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 50) என தெரியவந்தது. இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, யானையை பார்த்ததும் வண்டியில் இருந்து இறங்கி சென்று வணங்கியதாகவும், அதே நேரத்தில் அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர் இந்த வீடியோவை எடுத்ததும், பின்னர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதும் தெரியவந்தது.

    இது தொடர்பாக பென்னா கரம் வனச்சரக அலுவலர் முருகன் வழக்குப்பதிவு செய்து முருகேசனிடம் விசாரி த்தார்.

    முதலில் அவர் தனக்கு இதுபோன்ற சம்பவம் நடந்தது ஞாபகம் இல்லை என்று கூறிய நிலையில், பின்னர் நண்பர் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து முருகேசனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்ைக எடுத்தனர்.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறும் போது, 'ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காப்புக்காட்டில் உள்ளே நுழைந்து புகைப்படம் மற்றும் செல்பி வீடியோ எடுக்கக்கூடாது. மீறினால் வனச்சட்டத்தின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்து உள்ளனர்.

    • காவிரி ஆற்றுப்பாலம் போலீஸ் சோதனை சாவடி அருகே நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையிலான குழுவினர் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • மணல் ஏற்றி வந்த 5 லாரிகள் மீது சிறப்பு தணிக்கை செய்யப்பட்டு, 5 லாரிகளுக்கும் தலா ரூ.1000 வீதம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், காவிரி ஆற்றுப்பாலம் போலீஸ் சோதனை சாவடி அருகே நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையிலான குழுவினர் திடீர் வாகன சோ தனை மேற்கொண்டனர்.

    அப்போது, தார்பாய் போடாமல் மணல் ஏற்றி வந்த 5 லாரிகள் மீது சிறப்பு தணிக்கை செய்யப்பட்டு, 5 லாரிகளுக்கும் தலா ரூ.1000 வீதம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அந்த மணல் லாரிகள், தார் பாய் போர்த்தப்பட்டு எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், அவ்வழி யாக தார் பாய் போடாமலும், வாகனம் இயக்குவதற்கான அனுமதி சீட்டு இல்லாமலும் வந்த மற்றொரு லாரிக்கு, அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், லாரியை பறிமுதல் செய்த னர். இதேபோல், அவ்வழி யாக வந்த கார் ஒன்றை சோ தனை மேற்கொண்டதில், சொந்த காரை வாடகைக்கு இயக்கியது தெரியவந்தது.

    அந்த காரையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர்.

    இதனிடையே, மணல் லாரிகள் தார் பாய் போடா மல் இயக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ×