என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீதிமீறலில் ஈடுபட்ட பஸ்களுக்கு அபராதம் விதிப்பு
- சிவகங்கையில் வீதிமீறலில் ஈடுபட்ட பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- 2 அரசு பேருந்துகளும், 5 தனியார் பேருந்துகளிலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆர்.டி.ஒ தலை மையிலான குழுவினர் சோதனை செய்ததில் விதி முறைகளை பின்பற்றாமல் இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்து களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப் படும் பேருந்துகளில் அரசு விதிமுறைகளை பின்பற்றா மல் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் அதிக ஒளி வீசும் விளக்குகள் பயன்படுத்தப்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது.
மேலும் போக்குவரத்து துறை ஆணையர் சார்பில் வாகனங்களை அடிக்கடி போக்குவரத்து துறையினர் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் சிவகங்கை வட்டார போக்கு வரத்து அலுவலர் மூக்கன் மற்றும் ஆய்வாளர் மாணிக் கம் தலைமையிலான குழுவினர் சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டனர்.
இதில் 2 அரசு பேருந்துகளும், 5 தனியார் பேருந்துகளிலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் அதிக ஒளி வீசும் விளக்குகள் பயன்படுத்தப்பட்டதும் அதே போல் ஓட்டுநர்கள் தங்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட பேட்ச்கள் அணியாமல் விதிமுறை களை மீறியது தெரியவரவே அவர்களுக்கு ரூ17.500 அபராதம் விதிக்கப்பட்டது.