என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இடம்"
- ேவறு எந்த அலுவலகத்தற்கும் விராலிமலை அரசு பள்ளி வளாகத்திற்குள் இடம் கொடுக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
- 600 மாணவிகள் படித்து வந்த நிலையில் தற்போது 1100 க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
விராவிமலை,
விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு இடம் ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் கேட்டிருந்தது. அதற்கு பொதுமக்கள் மற்றும் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர். அந்த அம்மனுவில் கூறியிருப்பதாவது:- விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு இடம் ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் கேட்டிருந்ததாக தெரியவந்தது.
இப்பள்ளிக்கு ஏற்கனவே இடம் குறைவாக உள்ளது. 600 மாணவிகள் படித்து வந்த நிலையில் தற்போது 1100 க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். வகுப்பறை கட்டிடங்கள் போக மீதி உள்ள இடத்தில்தான் விளையாட்டு மைதானம், கழிப்பறைகள் உள்ளது. இப்பள்ளி மாணவிகள் கல்வியில் மாவட்ட அளவில் சாதனை செய்து வருவதால் ஆண்டு தோறும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்ட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இப்பள்ளி வளாகத்தில் வேறு அலுவலக கட்டிடத்திற்கு இடம் ஒதுக்கினால் நிச்சயம் இப்பள்ளிக்கு இடப்பற்றாக்குறை ஏற்படும். வேறு அலுவலகம் உள்ளே இயங்கும்பட்சத்தில் வெளி நபர்கள் வாகனங்களில் வந்து போகும்போது பள்ளியின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும். மாணவிகளுக்கு வெளி நபர்கள் தொந்தரவு கொடுக்கும் நிலையும் ஏற்படும்.மேலும் இந்த அலுவலகத்திற்கு நில மாற்றம் செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் பள்ளி நிர்வாகத்தில் உள்ள யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. எனவே விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் வேறு எந்த ஒரு அரசு அலுவலகத்திற்கும் இடம் ஒதுக்கிதர வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் கூறியிருந்தனர்.
- கிருஷ்ணா மாளிகா அரங்கம் திறப்பு விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
- குமரி மாவட்டத்தில் பொது மக்களின் நலன் கருதி விமான நிலையம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறினார்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் அருகே கோட்டகம் ஸ்ரீ கிருஷ்ணா அறக்கட்டளையால் நவீன முறையில் ஏசி வசதிகளுடன் கூடிய புதிதாக கட்டப்பட்டு இருக்கும் பிருந்தாவனம் ஸ்ரீ கிருஷ்ண மாளிகா அரங்கத்தினை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு பேராசிரியை முனைவர் ஸ்ரீஜா ஸ்டாலின் குத்து விளக்கு ஏற்றினார். சென்னை நேசம் டெக் உரிமையாளர் மோகனகுமார், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலய தலைவர் கோட்டகம் விஜயகுமார் தலைமை உரையாற்றினார்.
முன்னதாக கோட்டகம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-
குமரி மாவட்டத்தில் பொது மக்களின் நலன் கருதி விமான நிலையம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். கிருஷ்ண பகவான் அன்று கூறிய உபதேசங்கள், இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பாடமாக மாணவர்கள் படித்து வருகின்றனர். நமது நாட்டிற்கு எத்தனை பிரச்சனைகள் எத்தனை நெருக்கடிகள், அதையெல்லாம் பிரதமர் மோடி அரசு முறியடித்து வெற்றிக்கொடி நாட்டி வருகின்றது,
அதேபோல குமரி மண்ணும் பல பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. எங்கு பெண்கள் அதிகமாக இருக்கிறார்களோ அங்கே சிறப்பு அதிகமாக இருக்கும், கோவில்களின் அருகாமையில் அனைத்து பகுதிகளிலும் மண்டபங்கள் கட்ட வேண்டும், அப்போதுதான் திருமணம் நடைபெற்ற பின்னர் இறைவனை அருகாமையில் தரிசிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள், துறவிகள், மடாதிபதிகள், அரசியல் பிரமுகர்கள், இந்து இயக்க தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த இடம் கையகப்படுத்துவது.
- சாலை பணிக்கு அரசு நிலம் கையகப்படுத்தும் போது அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மாதிரி மங்கலம், முடிகண்டநல்லூர் இணைப்பு சாலை, சீர்காழி திருமுல்லைவாசல் சாலை பணி, கதிராமங்கலம் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணிக்கு அரசுக்கு சொந்தமாக உள்ள வருவாய்த் துறையைச் சார்ந்த இடம், இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்த இடம், கையகப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட பணிகள் குறித்தும் முன்னேற்றம் குறித்தும் விரிவாக வருவாய் துறை ஊரக வளர்ச்சித் துறை நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் தங்களின் துறைகளில் சாலை பணிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறியப்பட்டது.
குறிப்பாக சாலை பணிக்கு அரசு நிலம் கையகப்படுத்தும் போது அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர்முருகண்ணன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சனா, மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சிதுறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலைத்துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் மின் பகிர்மான வட்டம், பரமத்தி வேலூர் கோட்டம், கபிலர்மலை உட்கோட்டத்திற்குட்பட்ட மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் பரமத்தியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் செயல்பட உள்ளது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மின் பகிர்மான வட்டம், பரமத்தி வேலூர் கோட்டம், கபிலர்மலை உட்கோட்டத்திற்குட்பட்ட பரமத்தி உதவி பொறியாளர் அலுவலகம் தற்போது பரமத்தியிலிருந்து கபிலர் மலைசெல்லும் சாலையில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நிர்வாக காரணங்களுக்காக இன்று(சனிக்கிழமை) முதல் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் பரமத்தியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் செயல்பட உள்ளது.
அதேபோல் கபிலர்மலை உதவி பொறியாளர் அலுவ லகம் தற்போது இயங்கி வரும் கட்டிடத்திலிருந்து கபிலர்மலையில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் சாலையில் உள்ள கபிலர்மலை துணை மின் நிலைய வளாகத்தில் செயல்படும். எனவே பொதுமக்கள் இந்த அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் கூறியுள்ளார்.
- புதிய மறுவாழ்வு மையம் அமைப்பதற்காக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது.
- வீட்டு மனை அற்ற 16 ஏழை குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் இடம் வழங்குவதற்கு ஆவணம் செய்யப்படும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கன்னியக்குடி கிராமத்தில் அரசின் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்டத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் காப்பகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சீர்காழி கார்டன் மறுவாழ்வு மையம் மற்றும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து கன்னியக்குடி கிராமத்தில் புதிய மறுவாழ்வு மையம் அமைப்பதற்காக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் இடத்தை நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து இடத்தை ஆர்ஜீதப்படுத்தும் பணியை தொடக்கி வைத்தனர். பயனற்று கிடந்த அரசுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்த வீட்டு மனை அற்ற 16 ஏழை குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் இடம் வழங்குவதற்கு ஆவணம் செய்யப்படும் என கலெக்டர் லலிதா உறுதி அளித்தார்.
- தொடர்ந்து சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
- நிலத்தை அளவிடும் பணி தீவிரம்.
சேலம்:
சேலம் மாநகராட்சி 22-வார்டுக்கு உட்பட்ட சூரமங்கலம் மண்டல பகுதி ஆண்டிபட்டி சுடுகாட்டில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பல வருடங்களாக விவசாயம் செய்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர், அதன் பேரில் நேற்று மாநகராட்சி சர்வேயர் நித்தியா, உதவி பொறியாளர் மலர் ஆகியோருடைய மேற்பார்வையில் ஆண்டிபட்டி சுடுகாடு பகுதியில் நில அளவு செய்யப்பட்டது.
தொடர்ந்து சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதிகாரிகளுடன் 22 -வது வார்டு கவுன்சிலர் கே. சி. செல்வராஜு மற்றும் பொதுமக்கள் சென்றிருந்தனர்.
- காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஆற்றோரம் வசிக்கும் பொதுமக்கள பாதிக்கப்படுகின்றனர்.
- பஞ்சமி நிலம், மற்றும் புறம்போக்கு நிலத்தை மீட்டு, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பள்ளிப்பாளையம்:
ஜனநாயக மக்கள் கழகத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், நிறுவன தலைவர் ஆத்துார் கண்ணன் கலந்து கொண்டு சிறப்புறையற்றினர். இதனை தொடர்ந்து, உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின் கட்டணத்தை உடனடியாக மாநில அரசு திரும்ப பெற வேண்டும்.காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஆற்றோரம் வசிக்கும் பொதுமக்கள பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் பஞ்சமி நிலம், மற்றும் புறம்போக்கு நிலத்தை மீட்டு, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குழந்தைவேல், பள்ளிப்பாளையம் நகர தலைவர் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
- மேற்கு மண்டலத்தில் சரகங்கத்தில் 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 16 இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
- 48 இன்ஸ்பெக்டர்களுக்கு மாறுதல் செய்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவிட்டார்.
கொண்டலாம்பட்டி:
மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, சேலம் சரகங்கள் கோவை, சேலம், திருப்பூர், மாநகர பகுதிகளுக்கு 48 இன்ஸ்பெக்டர் களுக்கு மாறுதல் செய்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் சேலம் மாநகரத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடி வடக்கு காவல் நிலையம் முருகன்,சென்னை அயனாவரம் காவல் நிலையம் செல்வராஜ்,மேற்கு மண்டல காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜதரண்,சசிகலா, திண்டுக்கல் மாவட்டம் மோகன்பாபு கண்ணா,நீலகிரி மாவட்டம் நடுவட்டம் காவல் நிலையம் சண்முகசுந்தரம்,கோவை மாநகர காவல் இருந்து விக்னேஸ்வரன், ஆனந்,ஆகிய 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சேலம் சரகத்திற்கு 16 இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்