என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மர்மச்சாவு"
- போலீசார் விசாரணை
- சபை போதகர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே பொன்னப்பநகர் பகுதியை சேர்ந்தவர் சோபனம். இவர் கிறிஸ்தவ சபையில் போதகராக பணியாற்றி கடந்த 3 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்று விட்டார். திருமணமாகாத இவர், பொன்னப்பநகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று காலை சோபனம் வீட்டுக்கு அவரது தம்பி ரசல்ராஜ் வந்துள்ளார். வீடு பூட்டி இருந்ததால், அவர் வெளியில் நின்று சத்தம் கொடுத்துள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ரசல் ராஜ், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
அப்போது அங்கு சோபனம் இறந்த நிலையில் காணப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இதுகுறித்து களியக்காவிளை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக குழித் துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரசல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சபை போதகர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- சிறுவன் மூக்கில் ரத்தம் வழிந்து வாயில் நுரைதள்ளியநிலையில் மயக்கமடைந்தான்.
- அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நித்தின் உயிரிழந்தான்.
தேவதானப்பட்டி:
பெரியகுளம் அருகில் உள்ள குள்ளப்புரத்தை சேர்ந்த பிரபாகரன் மகன் நித்தின்(5). இச்சிறுவனுக்கு சம்பவத்தன்று மூக்கில் ரத்தம் வழிந்து வாயில் நுரைதள்ளியநிலையில் மயக்கமடைந்தான்.
உடனடியாக பெற்றோர்கள் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தனர். ஆனால் வழியிலேயே நித்தின் உயிரிழந்தான். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உடனடியாக வேலுச்சாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- மனைவி இந்துசெல்வி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்து செல்வி (27). இவர்களுக்கு 4 வயதில் ஒருமகள் உள்ளார்.
கடந்த 7 நாட்களுக்கு முன்பு வேலுச்சாமிக்கு கிட்னியில் கல் அடைப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். பின்னர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் அவர் 3 நாட்கள் ஓய்வில் இருந்தார்.
மீண்டும் வேலுச்சாமி கடந்த 23-ந் தேதி வேலைக்கு சென்றார். அப்போது மில்லில் காவலாளியாக வேலை பார்க்கும் சார்லி என்பவர் வழக்கமாக வேலுச்சாமியை தூக்கி விளையாடுவது வழக்கம். அதேபோல சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவரை தூக்கி விளையாடினார். அப்போது நிலைகுலைந்த வேலுச்சாமி தலை சுற்றி மயங்கி கீழே விழுந்தார். அவரது வாயிலும் மூக்கிலும் இருந்து ரத்தம் வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக வேலுச்சாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வேலுச்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது மனைவி இந்துசெல்வி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் காவலாளி விளையாட்டாக தூக்கியதால் வேலுச்சாமி இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையில் உடல் கிடந்ததால் பரபரப்பு
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் பாலாசிங் (வயது 52). இவர் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரித்து வருகிறார். இவரது மனைவி பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையின் ஓரத்தில் மர்மமான முறையில் பாலாசிங் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ெதாடர்ந்து உடலை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத் துள்ள னர்.
இதுகுறித்து மார்த் தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியரின் உடல் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சுங்கான்கடை அருகே தோட்டியோட்டில் காளி தாஸ் என்பவருக்கு சொந்த மான இடத்தில் ஹாலோ பிரிக்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார்.
இங்கு கோவை ரத்தின புரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கார்த்திகேயன் (வயது 40) வேலை பார்த்து வந்தார். அவர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. சம்பவத்தன்று வேலை முடிந்து இரவு கார்த்திகேயன் தூங்க சென்று விட்டார். காலை வெகுநேரம் ஆகியும் எழும்பாததால் ஆறுமுகம் ரூமில் சென்று பார்த்து உள்ளார். அப்போது கார்த்திகேயன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து இரணியல் போலீசில் ஆறுமுகம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீஜேஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- அன்னூர் போலீசார் குழந்தையின் சித்தியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை அன்னூர் அருகே உள்ள பிள்ளையப்பம் பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). ஏ.சி. மெக்கானிக். இவருக்கு பபிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஸ்ரீகையா (4) என்ற பெண் குழந்தையும், ஸ்ரீ ஜேஸ் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளது. பபிதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.
பின்னர் ராஜேஷ் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கீர்த்தனா (23) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவரது பராமரிப்பில் ஸ்ரீ ஜேஸ் இருந்து வந்தார். சம்பவத்தன்று குழந்தைக்கு காய்ச்சல் இருந்தது. அதற்கு கீர்த்தனா மருந்து கொடுத்து உள்ளார்.
பின்னர் ஸ்ரீஜேஸ் விளையாடி கொண்டு இருந்த போது கீழே விழுந்து இடது கை முட்டியிலும், வாயிலும் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக குழந்தைக்கு காய்ச்சல் அதிகமானது. இதனையடுத்து கீர்த்தனா குழந்தையை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீஜேஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் குழந்தையின் உடலை ஆய்வு செய்தனர். இடது கை மனிக்கட்டில் காயம் உள்ளது.
ஏதோ கடித்தது போல காயம் இருப்பது தெரியவந்தது. கீர்த்தனாவிடம் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். எனவே போலீசாருக்கு 2 வயது ஆண் குழந்தையின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தை எப்படி இறந்தது என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும் என போலீசார் தெரிவித்து உள்ளனர். குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் சித்தியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டு அறையில் ராமலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
- இது தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளி,
தூத்துக்குடியை சேர்ந்தவர் முத்துராஜ். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி 2 பேரும் மும்பைக்கு சென்று வசித்து வந்தனர். இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு முத்துராஜ் தனது மனைவி மற்றும் மகனுடன் கோவைக்கு வந்தார்.
கோவை வடவள்ளி வி.என்.ஆர் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர். ராமலட்சுமி கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் உள்ள அறையில் ராமலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சியாகி கதறி சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவரது கணவரிடம் விசாரணை நடத்தியபோது, சம்பவத்தன்று காலை எனது மனைவியிடம் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றேன். பின்னர் வந்து பார்த்த போது தூக்கில் தொங்கி கொண்டிருந்தாகவும், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே ராமலட்சுமியின் தந்தை தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், முத்துராஜ் தனது மகளை அடித்து கொன்று விட்டதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
கணவர் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார். ஆனால் கழுத்தில் அதற்கான தடயங்கள் இல்லை. இதனால் நர்சு சாவில் மர்மமாக உள்ளது. இது தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஏற்பட்ட தகராறு காரணமாக கார்த்திகா கோபித்துக்ெகாண்டு நடுப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார்.
- சித்ராவின் செல்போனுக்கு வெங்கடேஷ் தொடர்பு கொண்டு கார்த்திகா திடீரென்று தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நடுப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியண்ணன்-சித்ரா தம்பதியினரின் மகள் கார்த்திகா (வயது22). இவருக்கும் பஞ்சப்பள்ளி உடையாண்டஅள்ளியை அடுத்த பாலம்பட்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு கடந்த 3ஆண்டுகளுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் குழந்தையும் உள்ளது.
திருமணத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு ஒரு பவுன் நகைப்போட்டுள்ளனர். மேலும், பெண்ணிற்கு நகைகள் போட்டு திருமணம் செய்து கொடுத்தனர்.
இந்த நிலையில் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக கார்த்திகா கோபித்துக்ெகாண்டு நடுப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். உடனே வெங்கடேஷ் தனது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவி குடும்ப நடத்த அழைத்தார். அப்போது கார்த்திகாவை அவரது பெற்றோர் சமாதானப்படுத்தி கணவரிடம் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சித்ராவின் செல்போனுக்கு வெங்கடேஷ் தொடர்பு கொண்டு கார்த்திகா திடீரென்று தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வந்தது. உடனே கார்த்திகாவின் பெற்றோர்கள், உறவினர்கள் அங்கு விரைந்து வந்து அவரது உடலை பார்த்தபோது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். ஆனால், தரையில் கார்த்திகாவின் தலைமுடி கிடந்தது. மேலும், அவரது உடல்களில் காயங்கள் இருந்ததாக தெரிகிறது.
இதனால் கார்த்திகாவின் சாவில் மர்ம உள்ளதாக எண்ணி, சித்ரா பஞ்சப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து கார்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பெண்ணின் தாய் சித்ரா போலீசாரிடம் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆனநிலையில் கார்த்திகா வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கணவர் வெங்கடேஷ் மற்றும் உறவினர்களிடம் தருமபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சப்பாத்து பாலம் பகுதியில் உடல் கிடந்ததால் பரபரப்பு
- 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே சப்பாத்து பாலம் பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி அவர்கள், ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற தலைவி ஹெப்சி பாய்க்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடம் வந்து பார்த்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் அந்த வாலிபரை ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்த போது வாலிபர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
அந்த வாலிபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றினர். தொடர்ந்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
- சமையல் மாஸ்டர் ராஜேந்திரனை காணவில்லை என தேடிய நிலையில் மரத்தில் பிணமாக தொங்கினார்
- அமர்ந்தநிலையில் இறந்ததால் கொலையா? தற்கொலையா? என போலீசார் சந்தேகிக்கிறார்கள்
சூலூர்,
சிவகங்கை மாவட்டம் சூரானம் ஏரிவயல் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 37). இவர் காங்கேயம்பாளையத்தில் உள்ள டாஸ்மார்க் மது பாரில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் பாரில் ரகளை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை சமையல் மாஸ்டர் ராஜேந்திரனை காணவில்லை என தேடி உள்ளனர். அப்போது டாஸ்மாக்கில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் ராஜேந்திரன் பிணமாக தொங்கினார். அவரது உடல் மண்டியிட்ட நிலையில் நைலான் கயிற்றில் தொங்கிக் கொண்டு இருந்தது.
சூலூர் போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். சூலூர் போலீசார் ராஜேந்திரன் உடலை விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ராஜேந்திரன் உடல் தரையில் முட்டி போட்டு அமர்ந்தநிலையில் இருப்பதால் அது தற்கொலையாக இருக்க முடியாது எனவும், கொலையாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.
- விவசாயி கிணற்றின் அருகில் அஜீத்குமாரின் செருப்பு, செல்போன் ஆகியவை கிடந்தது.
- கிணற்றில் அஜீத்குமார் நீரில் முழ்கி இறந்தது தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள ஏர்ரபையனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜீத்குமார் (வயது23). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள அண்ணாத்துரை என்பவருக்கு சொந்தமான விவசாயி கிணற்றின் அருகில் அஜீத்குமாரின் செருப்பு, செல்போன் ஆகியவை கிடந்தது.
இது குறித்து பென்னாகரம் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது கிணற்றில் அஜீத்குமார் நீரில் முழ்கி இறந்தது தெரியவந்தது. அவரை உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முனியப்பன் வீட்டின் வாசலில் நெற்றியில் காயங்களுடன் மயங்கி கிடந்தார்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் முனியப்பன் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கள்ளாங்காட்டானூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 65). கூலித்தொழிலாளி.
சம்பவத்தன்று முனியப்பனின் மனைவி தோட்டத்திற்கு சென்று விட்டார். இவர்களது 2 மகன்களும் வேலைக்காக வெளியூர் சென்று விட்டனர்.
இந்த நிலையில் முனியப்பன் வீட்டின் வாசலில் நெற்றியில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த மனைவி மற்றும் மகன்களும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முனியப்பன் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மதிகோண்பாளையம் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முனியப்பனை யாராவது அடித்து விட்டு வீட்டின் வாசலில் போட்டு சென்று விட்டனரா? அல்லது அவர் அதிகளவில் மது குடித்து விட்டு வீட்டு வாசலில் மயங்கி கிடந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்