search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடி"

    • கண்காணிப்பு கேமராவில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடி யாத்தம் அடுத்த புவனேஸ் வரிபேட்டையில் ஸ்ரீமுத் துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு பூஜைகள் நடைபெறும்.

    வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் அம்ம னுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இத னால் அதிகளவு பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல் கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 7-ந்தேதி கோவிலுக்கு பூசாரி வந்தபோது, கோவி லுக்குள் இருந்த மைக்செட், ஸ்பீக்கர் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயி ரம் மதிப்பிலான பொருட் கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் கோவில் நிர்வாகத்தினர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    அதில் ஒரு வாலிபர் கோவிலுக்குள் நுழைந்து, பொருட்களை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. தொடர்ந்து அந்த வாலிபர் குறித்து விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் (வயது 22) என்பது தெரிந்தது.

    இந்த நிலையில் நேற்று புவனேஸ்வரி பேட்டையில் சுற்றி திரிந்த நித்தியா னந்தத்தை பொதுமக்கள் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்தியானந்தத்தை மீட்டனர்.

    பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கோவிலில் பொருட்களை திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெட்ரோல் பங்க் ஊழியருக்கு இரும்புக்கம்பியால் அடி விழுந்தது.
    • கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை 

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி விக்கிர மங்கலத்தை சேர்ந்தவர் காசி. இவரது மகன் விக்ரம் (வயது24). இவர் மேலூர் மெயின் ரோடு உத்தங்கு டியில் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் வேலை பார்ப்பவர் ஆசாத்அலி. இவர்கள் பணியில் இருந்த போது உத்தங்குடி பாண்டிகோவில் தெருவை சேர்ந்த வேலு மகன் மணிவண்ணன் (27) என்பவர் ஒரு வேனில் வந்தார். அவர் அங்கு பெட்ரோல் நிரப்பும்போது ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் மோதி கொண்டனர். மணி வண்ணன், அஜித்குமார், கவுதம் ஆகிய 3 பேரும் அவதூறாக பேசிய, ஆசாத் அலியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து விக்ரம் கே.புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மணிவண்ணன், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தப்பி சென்ற கவுதமை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 5- ம் வகுப்பு படித்து வருகிறாள்.
    • அதே பள்ளியில் 8- ம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவியை அடித்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள பாரகல்லூர் பகுதியை சேர்ந்த மாதையன்- பிரேமா தம்பதியின் மகள் அரசு நடுநிலை பள்ளியில் 5- ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பள்ளியில் 8- ம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவியை அடித்துள்ளார்.

    இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறியதால் மாதையன்-பிரேமா இருவரும் மாணவனின் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டனர். இதில் 2 குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பை சேர்ந்த மணிகண்டன், சேகர், சத்யராஜ், ஜெகதாம்பால், மாலா, கோவிந்தன், மாதையன், பிரேமா, விஜயா, கமலக்கண்ணன் உட்பட 10 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருமூர்த்தி மற்றும் அவரது தந்தை ஆறுச்சாமி ஆகியோரை இரும்புகம்பியால் தாக்கியுள்ளார்.
    • பல்லடம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வேலப்பகவு ண்டம்பா ளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி( வயது 30). இவர் அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் என்பவரது பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக சம்பள பாக்கி இருந்துள்ளது. எனவே சம்பள பாக்கியை கேட்பதற்காக சதீஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது. அப்ேபாது சதீஷின் உறவினரான பாலசு ப்பிரமணியம் என்பவர் திருமூர்த்தி மற்றும் அவரது தந்தை ஆறுச்சாமி ஆகி யோரை இரும்புகம்பியால் தாக்கியுள்ளார். இதில் ஆறுச்சாமியின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருமூர்த்திக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாகஅருகில் இருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் உடனடியாக பல்லடம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனை க்குஅனுப்பிவைக்க ப்பட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்க ன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அழகாபுரம் காட்டூர் பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் சிக்கன் கடையில் தகராறு நடப்பதாக வந்த தகவலை அடுத்து விசாரணை நடத்த சென்றார்.
    • அப்போது அந்த கடையில் 2 வாலிபர்கள் குடிபோதையில் சிக்கன் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பரமசிவம் இவர் நேற்று இரவு அழகாபுரம் காட்டூர் பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் சிக்கன் கடையில் தகராறு நடப்பதாக வந்த தகவலை அடுத்து விசாரணை நடத்த சென்றார்.

    அப்போது அந்த கடையில் 2 வாலிபர்கள் குடிபோதையில் சிக்கன் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த வாலிபர்களை சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் எச்சரித்து வீட்டுக்கு போகும் படி கூறினார்,

    இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் அங்கு கீழே கடந்த உருட்டு கட்டையால் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவத்தை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரமசிவத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரமசிவத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது..போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பரமசிவத்தை தாக்கியவர்கள் சேலம் அழகாபுரம் சிவாயநகர் 5-வது கிராஸ் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன்கள் சீனிவாசன்(27), பன்னீர்செல்வம்(25) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • இரணியல் போலீசார் 4 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை
    • ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள பேயன்குழி அடுத்த கல்லுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கசுவாமி (வயது 53). இவர் பேயன்குழி சந்திப்பில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 8 மாதங்களுக்கு முன்பு பேயன்குழியைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து ரூ.2900-க்கு ஜவுளிகள் வாங்கியதாக தெரிகிறது. பின்னர் ரூ.200 கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை மறுநாள் ஏ.டி.எம்.மில் எடுத்து தருவதாக கூறிச் சென்றுள்ளனர். ஆனால் கடந்த 8 மாதங்களாக கடனை திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை தங்கசுவாமி கடனை திருப்பி கேட்க பேயன்குழி சென்றுள்ளார். அப்போது மோகன்ராஜ் மகன் நிகேஷ், அவரது நண்பர்கள் 3 பேர்கள் என 4 பேர் சேர்ந்து தங்கசுவாமியை தடுத்து நிறுத்தி அவதூறாக பேசி கம்பு மற்றும் கல்லால் தாக்கி உள்ளனர். மேலும் அவரது செல்போனை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் தங்கசுவாமிக்கு கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயமும், கல்லால் தாக்கியதில் மேல் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

    தங்கசுவாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தங்கசுவாமி இரணியல் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நிகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என 4 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திருப்பி கேட்ட ஜவுளிக்கடை உரிமையாளரை 4 பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 3 பேர் மீது வழக்கு
    • மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை அடுத்த கல்படி சடையன் விளையை சேர்ந்தவர் ஜோதிநாத் (வயது 41), தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று அங்குள்ள படிப்பகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ், லிவிங்ஸ்டன், சிவா ஆகி யோர் வந்தனர்.

    அவர்கள் படிப்பகம் அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த ஜோதிநாத், இங்கு வைத்து ஏன் மது அருந்து கிறீர்கள் என கண்டித்தார்.

    இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த 3 பேரும், ஜோதிநாத்தை தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக மணவாளக்குறிச்சி போலீ சில் புகார் செய்யப் பட்டது.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிரின்ஸ், லிவிங்ஸ்டன், சிவா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • பிணமாக கிடந்தவர் தக்கலை மேல்பாறையை சேர்ந்த ரவிராஜ் (வயது 29) என்பது தெரியவந்தது.
    • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி அவர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கும், இரணியல் ரெயில் நிலையத்துக்கும் இடையே உள்ள கண்டன்விளை ரெயில்வே கேட் அருகே நேற்று இரவு ஒரு வாலிபர் பிணம் கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கு மார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிணமாக கிடந்தவர் தக்கலை மேல்பாறையை சேர்ந்த ரவிராஜ் (வயது 29) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வெளியே சென்று வருவதாக தன் தந்தையிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ரவிராஜை பல இடங்களில் தேடி வந்தனர்.

    ஆனால் ரவிராஜ் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரவிராஜ் ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி அவர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சொத்தை எழுதி கேட்டு பெற்றோரிடம் மகன் தகராறு
    • போலீசார் மகனை அழைத்து அறிவுரை

    கன்னியாகுமரி:

    குளச்சலை அடுத்த மேற்கு நெய்யூர் சரல்விளை பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 67). இவரது மனைவி சுசீலா (65). இந்த தம்பதியின் மகன் பிரபாகரன் (42).

    இவர் சொத்தை எழுதி கேட்டு பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இது குறித்து பழனி குளச்சல் போலீசில் பலமுறை புகார் செய்துள்ளார். போலீசார் பிரபாகரனை அழைத்து அறிவுரை கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி பிரபாகரன் வீட்டில் தகராறு செய்து தனது தாயார் சுசீலாவை கட்டையால் தாக்கி உள்ளார்.

    இதில் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு உடையார்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் குறித்த புகாரின்பேரில் குளச்சல் போலீசார் பிரபாகரன், அவரது மனைவி வனிதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 3 பேர் மீது வழக்கு
    • படுகாயம் அடைந்தவருக்கு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நல்லூர் வாழைப்பிலாவிளையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 26). மினி பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு சிராயன்குழி வழியாக சென்ற கிறிஸ்தவ ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற பிரகாசை அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ஜோபின் உட்பட 3 பேர் சேர்ந்து தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.

    இதனையடுத்து படுகாயம் அடைந்த பிரகாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே சிதறால் திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 29) கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

    கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சஜின் அடிக்கடி குடித்துவிட்டு வந்துள்ளார்‌. நேற்று சஜின் வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சஜின் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார்ராஜ், விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த சஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது தகராறு
    • டீ கடை உரிமையாளர் மீது வழக்கு

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் இடலாக்குடியை அடுத்த வட்டவிளையை சேர்ந்தவர் பசுபதி (வயது 37).

    இவர் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த சுனில் மனைவி அருள்மேரி (38) என்பவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை பார்வதிபுரம் கிறிஸ்டோபர்காலனியை சேர்ந்த ராம்ஜித் என்பவருக்கு கடனாக வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. ராம்ஜித் சுங்கான்கடை அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.

    இதில் ரூ.53 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்த ராம்ஜித் ரூ.47 ஆயிரத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுபற்றி பசுபதி மற்றும் அருள்மேரி இருவரும் சேர்ந்து சுங்கான்கடை டீக்கடையில் இருந்த ராம்ஜித்திடம் பணத்தை திருப்பி கேட்டு உள்ளனர்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் அருள்மேரியை கையால் தாக்கிய ராம்ஜித், பசுபதியை டீ போடும் ஜக்கால் தலையில் தாக்கி யுள்ளார். இதில் காயமடைந்த பசுபதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாகவும், அருள்மேரி வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பசுபதி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் ராம்ஜித் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×