search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்டெய்னர் லாரி"

    • பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
    • போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்

    குனியமுத்தூர்,

    கோவை ஆத்துப்பாலம் முக்கிய சாலைகளை இணைக்க கூடிய பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

    தற்போது ஆத்துப்பாலம் பகுதியில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலையில் கோவை துடியலூரியில் இருந்து தேயிலை தூள்களை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று கேரளாவிற்கு செல்வதற்காக இந்த வழியாக வந்தது.

    கோவை ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் வந்த போது, கன்டெய்னர் லாரி திடீரென வெளியில் வர முடியாமல் சிக்கி கொண்டது. லாரி டிரைவர் எவ்வள வோ முயன்றும் லாரியை எடுக்க முடியவில்லை. இதனால் அதன்பின்னால் வந்த வாகனங்கள் அனை த்தும் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    ஆத்துப்பாலம் பகுதி முக்கிய சாலைகளை இணைக்க கூடிய சந்திப்பு என்பதால் பொள்ளாச்சி நோக்கி செல்லும் சாலை, பாலக்காடு சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    இதற்கிடையே அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. லாரி சிக்கி கொண்டதால் வாகனங்கள் செல்ல முடியாதபடி நின்றிருந்தன. உடனடியாக மக்களை விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை சீர்படுத்தி, ஆம்புலன்சுக்கு வழிவிட்டனர்.

    இதற்கிடையே லாரி சிக்கிய தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து, போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்ட னர். தொடர்ந்து மேம்பாலத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியும் நடந்தது. வெகு நேரத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டு அங்கிருந்து சென்றது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இன்று காலை லாரி ஒன்று பாலத்திற்கு அடியில் சிக்கி கொண்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த பகுதி முக்கிய சந்திப்பாக இருப்ப தால் எப்போதுமே போக்கு வரத்து அதிகமாக இருக்கும். எனவே இங்கு நடைபெறும் மேம்பால பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கரடிவாவி பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்து விட்டு பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    பல்லடம்

    கோவை மாவட்டம் சூலூர் செங்கதுறையை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). இவர் மொபட் வாகனத்தில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கரடிவாவி பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்து விட்டு பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறி மொபட்டுடன் மாரிமுத்து ரோட்டில் விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்தார். அக்கம் -பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது மகன் சரவணக்குமார் கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் செய்த கண்டெய்னர் லாரி குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • 259 தட்டுகளில் பல்வேறு சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
    • லாரிக்கு முன்புறம் 2 மாட்டு வண்டிகள், 2 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி சென்றன.

    சேலம் :

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வகுமார்-ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகள் அர்ச்சிதாவின் மஞ்சள் நீராட்டு விழா நேற்று குஞ்சாண்டியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு அர்ச்சிதாவின் தாய் மாமனான அருண்பிரசாத் மேச்சேரி அருகே உள்ள மூர்த்திப்பட்டியில் இருந்து சீர்வரிசைகளை கன்டெய்னர் லாரியில் ஊர்வலமாக கொண்டு வந்தார்.

    லாரியில் பழம் வகைகள், பூ வகைகள், தேங்காய், வாழைப்பழம் உள்பட பல்வேறு சீர்வரிசைகளை 259 தட்டுகளில் வைத்து லாரிக்கு முன்புறம் 2 மாட்டு வண்டிகள், 2 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி சென்றன. அதிலும் சீர்வரிசைகளை எடுத்து ஊர்வலமாக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும் திருமண மண்டபத்திற்கு சுமார் 2½ மணி நேரத்தில் வந்து சேர்ந்தனர். இந்த ஊர்வலத்தின் போது செண்டை மேளம் முழங்க பட்டாசுகள் வெடித்து சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. மேலும் 19 கார்கள், 75 மோட்டார் சைக்கிள்களில் குஞ்சாண்டியூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு வந்து சீர்வரிசைகளை வழங்கினார்.

    தாய் மாமன் அருண்பிரசாத்தின் செயல்பாட்டை சதாசிவம் எம்.எல்.ஏ. நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    • கன்டெய்னர் லாரிகளுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 17 பேர் பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.
    • சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சென்றபோது திடீரென ஒரு கன்டெய்னர் லாரி பழுதானது.

    தாம்பரம்:

    சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.535 கோடி பணத்துடன் விழுப்புரம் நோக்கி நேற்று 2 கன்டெய்னர் லாரிகள் சென்று கொண்டிருந்தது.

    அந்த கன்டெய்னர் லாரிகளுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 17 பேர் பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.

    சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சென்றபோது திடீரென ஒரு கன்டெய்னர் லாரி பழுதானது. லாரியில் இருந்து புகை வந்ததால் டிரைவர் உடனடியாக நிறுத்திவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள சித்த ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் 2 கன்டெய்னர் லாரிகளும் கொண்டு செல்லப்பட்டது.

    மேலும் பணத்துடன் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரிகளுக்கு தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் தாம்பரம், குரோம்பேட்டை போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும் கூடுதல் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் பழுது சரி செய்யப்படாததால் பழுதான கன்டெய்னர் லாரியை மட்டும் ராட்சத கிரேன் வாகனம் உதவியுடன் கட்டி இழுத்து மீண்டும் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ரூ.535 கோடி பணத்துடன் 2 கன்டெய்னர் லாரிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்து.
    • போக்குவரத்து போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை.

    சென்னை திருவொற்றியூர்-எண்ணூர் விரைவு சாலையில் தினந்தோறும் துறைமுகத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் சென்னை துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு மீஞ்சூரில் உள்ள சேமிப்பு கிடங்குக்கு கன்டெனர் லாரி ஒன்று சென்றபோது, திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள மஸ்தான் கோவில் அருகே நிலைத்தடுமாறி சாலைக்கு நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் டிரைவர் செந்தில்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்துக்குள்ளான லாரியின் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

    • கேரளாவில் இருந்து தூத்துக்குடி நோக்கி ரப்பர் ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி சாலைப்புதூரில் நான்கு வழி சாலை பணி நடை பெறும் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • சாலைப் பணி நடைபெறும் பகுதிகளில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தாமல் இருப்பதே முக்கிய காரணம் என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    தென்காசி:

    நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரில் புதிய சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை உயரமாக கொட்டியுள்ளனர்.

    இப்பகுதியில் ஏற்கனவே இருந்த பழைய சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரு வாகனங்கள் எதிரெதிரே சாலையில் செல்லும் பொழுது வாகனங்கள் விலகிச் செல்ல போதிய இடம் இல்லாததால் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    விபத்து

    நேற்று இரவு கேரளாவில் இருந்து தூத்துக்குடி நோக்கி ரப்பர் ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரியை விருதுநகர் மாவட்டம் பசும்பொன் தேவர் நகரை சேர்ந்த தர்மர் ( வயது 29) என்பவர் ஓட்டி சென்றார்.

    அப்போது சாலைப்புதூரில் நான்கு வழி சாலை பணி நடை பெறும் பள்ளத்தில் லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தர்மர் கன்டெய்னர் லாரி க்குள் சிக்கிக்கொண்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்து தர்மரை மீட்டனர். டிரைவர் தர்மர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த பாவூர்சத்திரம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சாலையில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தினர்.

    நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் பாவூர்சத்திரம் பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் அரசுப் பேருந்துகளும் வாகனங்களும் தொடர்ந்து விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. சாலைப் பணி நடைபெறும் பகுதிகளில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தாமல் அலட்சியமாக இருந்து வருவதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்தி புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பாவூர்சத்திரம் யூனியன் அலுவலகம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    ×