search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிரடி ஆய்வு"

    • 1,519 டாஸ்மாக் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    • தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    கள்ளக்குறிச்சி, கருணா புரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் கள்ளச்சாராயத்திற்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் குறித்தும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடந்து வருகிறது.

    மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 19-ந் தேதி முதல் இன்று அதிகாலை வரை நடத்திய சோதனையில் மது கடத்தல் மற்றும் மது விற்பனை செய்த 105 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் 1,519 டாஸ்மாக் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து தமிழக எல்லையில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்த 4 பெண் கள் உட்பட 10 பேரை ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து 53 லிட்டர் கள்ளச்சாராயம் பறி முதல் செய்யப்பட்டு உள்ளது.

    கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்பட்டு வரும் 2 தொழிற்சாலை திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழில் பேட்டையில் செயல்பட்டு வரும் 2 தொழிற்சாலை என மொத்தம் 4 தொழிற்சாலைகளில் கும்மிடிப் பூண்டி, திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் கிரியாசக்தி, அழகேசன் தலைமையில் போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மெத்தனால் இருப்பு சரியாக உள்ளதா? என்றும் அவை பாது காப்பாக வைக்கப்பட்டுள்ள னவா? அவற்றின் காலக் கெடு, பாதுகாப்பு தன்மை ஆகியன குறித்தும் போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.

    கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் மூடிய ஒரு தொழிற்சாலையில் மெத்தனால் உபயோகிக்கக்கூடிய தொட்டியை போலீசார் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மெத்தனால் பயன்படுத்தி மூடி உள்ள தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    • குறைபாடுகளை சரிசெய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
    • வாகனத்துக்குள் சென்சார் பொருத்த வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளன

    நாகர்கோவில், மே.17-

    தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்யப்படுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டுக்கான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.

    குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்கள் ஆய்வு நாகர்கோவில் கண்கார்டியா பள்ளியில் இன்று நடந்தது. வட்டார போக்குவரத்து அதிகாரி சசி, ஆய்வாளர்கள் எஸ்.சக்திவேல், கே.சக்திவேல் ஆகியோர் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

    ஒவ்வொரு வாகனத்திலும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொருட்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? என்பது குறித்து இந்த ஆய்வு நடந்தது. ஆய்வு பணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளி வாகனங்களில் தீயணைப்பு பெட்டி, அவசர கால வெளியேறும் வசதி உள்ளிட்ட 16 விதமான பொருட்கள் இருக்க வேண்டும். அது வாகனங்களில் உள்ளதா? என்று ஒவ்வொரு வாகனங்களாக ஆய்வு நடத்தப்படும்.

    வாகன ஓட்டுனர்கள் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது செல்போன் பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒரு வினாடி கவன குறைவால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு வாகனத்தின் முன்பும், பின்பும் கேமரா பொறுத்த வேண்டும்.

    ஆனால் கேமரா மற்றும் சென்சார் பொறுத்தப்படாமல் உள்ளது.

    இதுபோன்ற விஷயங்கள் சரி செய்ய வேண்டும். பள்ளி வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    வாகனத்தில் குழந்தைகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஒரே வழி இடது புறத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். படிகள் தரையில் இருந்து 300 மீட்டருக்கு மிகாமல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கதவுகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அவசர வழி வலது பக்கத்தில் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    மாணவ- மாணவிகள் புத்தகப் பைகளை வைப்பதற்கு தனியாக அடுக்கு பலகை இருக்க வேண்டும். முதலுதவி பெட்டி உரிய மருந்துகளுடன் பராமரிக்கப்பட வேண்டும். ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற தீயணைப்பு கருவிகள் வாக னத்தின் உட்புறம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குறைகளை சரி செய்யவேண்டும்

    இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 78 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில் 396 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    பள்ளி வாகனங்களில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததை உடனே நிவர்த்தி செய்ய அறிவுறுத்தி உள்ளோம். பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த பணிகள் முடிந்ததும் மார்த்தாண்டத்தில் ஆய்வு பணி நடத்தப்படும். ஆட்டோக்களில் அதிக அளவு மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லக்கூடாது. தனியார் வாகனங்களில் மாணவர்களை ஏற்றி செல்வதாக புகார்கள் வந்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

    பள்ளி வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும், வாகனத்துக்குள் சென்சார் பொருத்த வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளன. ஆனால் ஆய்வுக்கு வந்த பெரும்பாலான வாகனங்களில் கண்காணிப்பு கேமரா நிறுவப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். கண்காணிப்பு கேமரா மற்றும் சென்சார் பொருத்தி விட்டு வரும்படி அறிவுறுத்தினர்.

    இதே போல ஒரு சில வாக னங்களில் அரசின் விதிமுறைகள் படி படிக்கட்டுகள் இல்லாதது தெரிய வந்தது. அந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சரி செய்து வருமாறு திருப்பி அனுப்பி வைத்தனர். அரசின் விதிமுறைக்கு உட்பட்டு இருந்த வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கான ஸ்டிக்கரை ஒட்டினார்கள்.

    • ஓசூர் பஸ் நிலையத்தில் மேயர் ஆய்வு செய்தார்.
    • சுகாதாரத்தை கடைபிடிக்க உத்தரவிட்டார்.

    ஓசூர்,

    ஓசூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகம் மற்றும் பஸ் நிலையத்தில் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை,கழிவறைகளை பார்வையிட்டு பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில், தூய்மை பணியாளர்கள் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றுஅறிவுறுத்தினார்.

    அதனைதொடர்ந்து பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டு உணவு தயாரிக்கும் சமையலறை,உணவு பொருட்களை நேரடியாக பார்வையிட்டு, சுத்தமானதாகவும், தரமானதாகவும் உணவை தயார் செய்யுமாறு பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, ஆணையாளர் பாலசுப்ரமணியன்,துணை மேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர்கள் ரவி, மல்லிகா தேவராஜ், உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×