search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் அட்டை"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை (கிசான் கிரிடிட் கார்டு) விண்ணப்பம் பெறும் முகாம்
    • முகாமில் ரூ.1,60,000 வரை வட்டி இல்லா பயிர் கடனுக்கான பரிந்துரை செய்யபடும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை (கிசான் கிரிடிட் கார்டு) விண்ணப்பம் பெறும் முகாம் பாண்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற உள்ளது. முகாமில் ரூ.1,60,000 வரை வட்டி இல்லா பயிர் கடனுக்கான பரிந்துரை செய்யபடும். ஆகவே கேசிசி அட்டை இதுவரை பெறாத விவசாயிகள் ஆதார், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம்-1 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும் கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் அனைவரும் வங்கி கடன் பெற்று பயன்பெற வேண்டும்
    • கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் கிசான் அடையாள அட்டை பெற்று பயன் பெற வேண்டும்,

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகளுக்கான கடன் அட்டை முகாம் நடந்தது. முகாமில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். இம் முகாமினை முழுமையாக பயன்படுத்தி தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் வங்கி கடன் பெற்று பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா கோத்தகிரி தோட்டக்கலை துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் ஆவின் மருத்துவர் மற்றும் கால்நடை மருத்துவர் கோத்தகிரி சார்ந்தோர் கலந்து கொண்டனர். தங்கள் துறையில் கிசான் கடன் அட்டை மூலம் கால்நடைகளுக்கான கடன் பெறுவது பற்றி எடுத்துரைத்தனர். இம்முகாமில் கோத்தகிரி வட்டாரத்தைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 175 விவசாயிகள் கடன் அட்டை பேருக்காக பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர். மேலும் கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் கிசான் அடையாள அட்டை பெற்று பயன் பெற வேண்டும், அதற்கான விண்ணப்பங்களை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

    • கால்நடை வளர்ப்போருக்கு உழவர் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு முக்கிய வாழ்வாதார தொழிலாக கருதப்படுகிறது. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கால்நடை வளர்ப்போரின் வருமா னத்தை இரட்டிப் பாக்கவும் அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

    விவசாயிகள் புதிய கால்நடைகளை கொள் முதல் செய்த பின்னர், உரிய அளவிலான தீவனம் மற்றும் தாது உப்புகள் வழங்கப் படாததினால் பால் மற்றும் இறைச்சி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விகிதாச்சார முறையில் உரிய நேரத்தில் உரிய அளவில் தீவனம் முறைகளை கடைபிடியாமை ஆகும்.

    விவசாயிகளின் இந்த குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு கால்நடைகளின் பராமரிப்புக்கென அனைத்து வங்கி கிளைகள் மூலம் உழவர் கடன் அட்டை கடந்த மே 1-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு பசு மாட்டினை பராமரிப்பதற்கு ரூ14 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்குரிய வட்டி விகிதம் 4 சதவீதமாகும். ஒரு பசு மாடு என்பது 10 ஆடுகளுக்கும், 100 கோழிகளுக்கும் சமமாகும். எனவே கறவை மாடு, ஆடு மற்றும் கோழிப்பண்ணைகளின் பண்ணையாளர்கள் இந்த திட்டத்தில் பங்கெடுத்து கால்நடை பராமரிப்பு செலவினமாக குறைந்த வட்டி விகிததத்தில் வழங்கப்படும் தொகையினை பெற்று பயன்பெறுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

    வேளாண்மைத்துறை மூலம் உழவர் கடன் அட்டை பெற்றிருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதில் பயன்பெற விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல், 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் கால்நடை கொட்டகை நில ஆவண நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகங்களுக்கு சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கால்நடை மருத்துவர், கால்நடை உதவி மருத்துவர் அல்லது கால்நடை ஆய்வாளரிடம் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் மூலம் முன்னோடி வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு பின்னர் விண்ணப்பதாரது வங்கி கிளைகளுக்கு அனுப்பி பரிசீலிக்கப்பட்டு உழவர் கடன் அட்டையுடன் நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.

    இந்த அரிய வாய்ப்பினை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளு மாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மர்மநபர்கள் எனது கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி பண மோசடி செய்தது தெரியவந்தது
    • சிவா மற்றும் சரவணன் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    நாகர்கோவில் :

    வில்லுக்குறி அருகே சரல்விளை பகுதியை சேர்ந்த அய்யப்பன் மனைவி ஜெயக்குமாரி (வயது 43). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கரைம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நானும் (ஜெயக்குமாரி) எனது உறவினரான வில்லுக்குறி பகுதியை சேர்ந்த சிவா (26) என்பவரை அழைத்துக் கொண்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு கடைக்கு சென்று தனியார் நிதி நிறுவன கடன் அட்டை(இ.எம்.ஐ.கார்டு) மூலம் ஒரு செல்போன் வாங்கினேன். பின்னர் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து நீங்கள் ரூ.22 ஆயிரத்துக்கு ஒரு ஜவுளிக்கடையில் துணி எடுத்ததாகவும், அதற்கான கட்டணத்தை கடந்த 2 மாதங்களாக செலுத்தவில்லை என தெரிவித்தனர். ஆனால் நானோ கடன் அட்டை மூலம் துணிக்கடையில் எந்த ஒரு துணியும் எடுக்கவில்லை. மர்மநபர்கள் எனது கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி பண மோசடி செய்தது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் அட்டை மூலம் பண மோசடி செய்தவர்கள் பற்றி விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கடன் அட்டை மூலம் பெண்ணிடம் மோசடி செய்தது அவரது உறவினர் சிவா மற்றும் அவரது நண்பர் புத்தேரியைச் சேர்ந்த சரவணன்(26) என்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சிவா மற்றும் சரவணன் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    ×