என் மலர்
நீங்கள் தேடியது "ஜிம்பாப்வே இந்தியா தொடர்"
- 2016-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஜிம்பாப்வேயில் இந்தியா டி20 தொடரில் விளையாடுகிறது.
- ஐந்து போட்டிகளும் ஹராரேயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் 3 போட்டிகள் உள்ளது. 5-வது டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
இதனையடுத்து ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. ஐ.பி.எல். போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் தான் விளையாடுகிறது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது.
2016-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஜிம்பாப்வேயில் இந்தியா டி20 தொடரில் விளையாடுகிறது. ஐந்து போட்டிகளும் ஹராரேயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. போட்டிகள் ஜூலை 6, 7, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
- சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை நாளை எதிர் கொள்கிறது.
- டி20 உலகக் கோப்பை தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
பிரிட்ஜ்டவுன்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது.
குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு எதிர்கொள்கிறது. அரை இறுதியில் நுழைய 2 ஆட்டத்தில் வெல்ல வேண்டும். இதனால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முன்னேற இந்திய அணி முயற்சிக்கும்.
இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் மூத்த வீரர்கள் ரோகித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களில் கவனம் செலுத்த ஓய்வு வழங்கப்பட உள்ளதாகவும், புதுமுக, இளம் வீரர்களை உள்ளடக்கிய அணி ஜிம்பாப்வேவுக்கு செல்லும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
- இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 6-ந் தேதி நடைபெறும்.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் அணிகளை தீர்மானிக்கும் சூப்பர் 8 சுற்று ஆட்டம் நாளை முடிவடைய உள்ளது. இதில் தற்போது வரை குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதியை உறுதி செய்துள்ளது.
குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. 4 அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இந்த தொடர் வருகிற 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 6-ந் தேதி நடைபெறும்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கபட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க தேர்வு குழு விருப்பம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷித் ராணா இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர்.
டி20 உலகக் கோப்பையின் இடம் பிடித்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோடும் இதில் அடங்குவர்.
- இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கோலி, ரோகித், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், பும்ரா, பாண்ட்யா, ஜடேஜா, ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அபிஷேக் சர்மா மற்றும் ரியான் பராக் இந்திய அணிக்கு அறிமுகமாகி உள்ளனர்.
இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20-ஐ தொடருக்கான இந்திய அணி:-
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, ரவி பிஷ்னோய்.
- ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
- காயம் காரணமாக நிதிஷ் ரெட்டி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா, ரியான் பராக் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகமாகி உள்ளனர்.
இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐதராபாத் அணி வீரரான நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:-
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, ரவி பிஷ்னோய், ஷிவம் துபே.
- இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
- ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டது. இந்த இளம் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக அனுபவம் வாய்ந்த வீரர் சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பைக்கு இந்த அணி தகுதி பெறத் தவறியதால், புதிய தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் சம்மன்ஸின் கீழ் மீண்டும் கட்டமைக்கும் நோக்கத்தில், ஜிம்பாப்வே ராசாவின் கீழ் ஒரு இளம் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஜிம்பாப்வே அணி:
சிக்கந்தர் ராசா (கேப்டன்), அக்ரம் ஃபராஸ், பென்னட் பிரையன், கேம்ப்பெல் ஜொனாதன், சதாரா டெண்டாய், ஜாங்வே லூக், கையா இன்னசென்ட், மடண்டே கிளைவ், மாதேவெரே வெஸ்லி, மருமணி தடிவானாஷே, மசகட்சா வெலிங்டன், மவுடா பிராண்டன், முசரபானி பிளஸ்ஸிங், மியர்ஸ் டியான், நக்வி ஆன்டம், ங்கரவா ரிச்சர்ட், ஷும்பா மில்டன்.
- இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையின் கீழ் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார், ரியான் பரக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், உலகக் கோப்பைத் தொடருக்கான ரிசர்வ் வீரர்களான ரிங்கு சிங், கலீல் அகமது ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியில், ருதுராஜ் கெய்க்வாட், துருவ் ஜுரேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்திய அணி ஜிம்பாப்வே-க்கு புறப்பட்டு சென்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது.
- ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது.
- ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரது தலைமையின் கீழ் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் இந்த சுற்றுபயணத்தில் விளையாடுகின்றனர். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் வெஸ்ட் இண்டீஸில் இருந்து நாடு திரும்ப தாமதமாவதால் அவருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதை தொடர்ந்து ஜித்தேஷ் சர்மா, ஹர்சித் ரானா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் 2024 டி20 உலகக் கோப்பையில் பார்க்க மாட்டேன் என்று பராக் கூறியிருந்தார்.
- அவர்களுக்கு முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்வேன்.
ஐபிஎல் தொடரில் பெரிய அளவிள் விளையாடாத ரியான் பராக். 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தம் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இதனால் டி20 உலகக் கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
அதனை தொடர்ந்து தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஜெயித்தால் என்ன? தோற்றால் என்ன? என்று பராக் தெரிவித்திருந்தார். அத்துடன் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது மட்டுமே அதைப்பற்றி கவலைப்படுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் ஃபைனலில் மட்டும் எந்த அணி வெல்லப் போகிறது என்பதை செய்தியில் பார்த்து தெரிந்து கொள்வேன் என்றும் ரியான் பராக் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த கருத்து ஏற்கனவே இந்திய ரசிகர்களிடம் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரில் இடம்பிடித்துள்ள அவர் முதலில் நாட்டுப்பற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை என்று சில இளம் வீரர்கள் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்வேன். அதன் பின்பே நீங்கள் கிரிக்கெட்டின் ரசிகனாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நாட்டுக்காக தேர்வாகியுள்ள வீரர்களுக்காக நீங்கள் முழு மனதுடன் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
என ஸ்ரீசாந்த் கூறினார்.
- உலகக் கோப்பையில் பங்கேற்ற ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் நாடு திரும்ப தாமதம் ஏற்பட்டது.
- அவர்களுக்கு பதிலாக ஹர்ஷித் ரானா, சாய் சுதர்சன், ஜிதேஷ் சிங் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க ஜிம்பாப்வே செல்கிறது. முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.
உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே, அவர்களுக்கு பதிலாக ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றதன் அடிப்படையில் ஹர்ஷித் ரானா, சாய் சுதர்சன், ஜிதேஷ் சிங் ஆகியோர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ளனர்.
ஆனால், முன்னணி வீரர்களான இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், வருண் சக்ரவர்த்தி, மயங்க் யாதவ், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் போன்றோரை சேர்க்காதது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் வரை இந்திய அணியின் அனைத்து வடிவ வீரராக இருந்த இஷான் கிஷன், பிசிசிஐயிடம் ஓய்வு கேட்டார். தென் ஆப்பிரிக்கா தொடருக்கும், டி20 உலகக் கோப்பை 2024 அணித் தேர்வுக்கும் இடையில் நிறைய நடந்தது. இது மும்பை இந்தியன்ஸ் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரை ஓரங்கட்டி வைக்க தேர்வாளர்களைத் தூண்டியது.
இஷான் தேர்வுக்கு பரிசீலிக்கப்பட வேண்டுமெனில் ஜார்க்கண்டிற்காக ரஞ்சி டிராபி மற்றும் வேறு சில உள்நாட்டு போட்டிகளில் விளையாடும்படி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் ஐ.பி.எல். தொடருக்காக ஹர்திக் பாண்ட்யாவுடன் பயிற்சிபெற முடிவு செய்திருந்தார்.
இஷான் கிஷனின் இத்தகைய நகர்வு பிசிசிஐ முதலாளிகள் மற்றும் ஜிம்பாப்வே தொடருக்கு அவரைத் தேர்வு செய்யாத தேர்வாளர்களுடன் சரியாகப் போகவில்லை. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் இஷான் கிஷனை விட பந்தயத்தில் முன்னிலையில் உள்ளனர்.
இதேபோல கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட 7 வீரர்களிடமும் இதேபோன்ற கேள்விகள் கேட்கப்படலாம்.
- ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஹராரே:
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் வி.வி.எஸ்.லட்சுமண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
அபிஷேக் சர்மா, துருவ் ஜூரல் மற்றும் ரியான் பராக் ஆகியோர் இன்று அறிமுகமாகின்றனர்.
- டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 115 ரன்கள் எடுத்தது.
ஹராரே:
ஜிம்பாப்வே, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணியில் பிரையன் பென்னட் மற்றும் டியான் மேயர்ஸ் ஆகியோர் 23 ரன்கள் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கிளைவ் மதானே 29 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 4 ஓவரில் 2 மெய்டன் உள்பட 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினார்.