என் மலர்
நீங்கள் தேடியது "slug 248030"
- நாகை மாவட்டம் பேரிடர்களால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது.
- முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி கண்டிப்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 18--ந்தேதி நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் பின்வருமாறு:-
எம்.எல்.ஏ கேள்வி:
திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நிறைவேற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ள 10 கோரிக்கைகளில் 2வது கோரிக்கையாக இதை கொடுத்துள்ளோம்.விவசாயிகள் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி திருமருகல்.
நாகை மாவட்டம் பேரிடர்களால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது.
எனவே அங்கு அரசு நிர்வாக அமைப்புகள் எளிதில் மக்கள் அணுகும் வகையில் இருக்க வேண்டும்.
எனவே திருமருகலை தனி வருவாய் வட்டமாக அறிவிக்க வேண்டும்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், திருமருகல் வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள்.
மாவட்ட கலெக்டர் வாயிலாக இதற்கான முன்மொழிவை அனுப்பி உள்ளீர்கள்.
முதலமைச்சாடம் கலந்து பேசி நிச்சயமாக உங்கள் கோரிக்கை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை.
- பேரிடர் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, வாய்மேடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாய்மேடு தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமை தாங்கினார். வாய்மேடு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார்.
வாய்மேடு கூட்டுறவு சங்கம் எதிரே உள்ள வாய்க்காலில் பேரிடர் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன், கிராம நிர்வாக அலுவலர்கள், வாய்மேடு காவல் நிலைய உதவியாளர் மற்றும் வாய்மேடு இலக்குவனார் பள்ளி ஆசிரியர் மணிமொழி, பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பேரணி முக்கிய வீதிகள் வழியாக கபிஸ்தலம் பாலக்கரையில் வந்து நிறைவடைந்தது.
- பேரணிக்கு வருவாய் ஆய்வாளர் சுகுணா தலைமை வகித்தார்.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தல்படி கபிஸ்தலம் அருகே கோவிந்தநாட்டுச்சேரியிலும் மற்றும் கபிஸ்தலம் பாலக்கரையிலும் சர்வதேச பேரிடர் குறைப்பு மற்றும் விழிப்புணர்வு தின சிறப்பு பேரணி நடைபெற்றது.
கபிஸ்தலம் பாலக்கரையில் நடைபெற்ற பேரணிக்கு வருவாய் ஆய்வாளர் சுகுணா தலைமை வகித்தார்.
பேரணியை பாபநாசம் தாசில்தார் பூங்கொடி கொடி அசைத்து தொடக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக கபிஸ்தலம் பாலக்கரையில் வந்து நிறைவடைந்தது.
இதில் மண்டல துணை வட்டாட்சியர் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெகநாதன், ஜெய்சங்கர், காமராஜ், யசோதா சரவணன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பேரணியில் தன்னார்வ தொண்டு நிறுவன முதல்நிலை பொறுப்பாளர்கள், வருவாய்துறை பணியாளர்கள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காவிரியில் ஏற்பட்டதால் குமாரபாளையத்தில் 150 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
- தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் குமாரபாளையம் வந்தனர்.
குமாரபாளையம்:
காவிரியில் ஏற்பட்டதால் குமாரபாளையத்தில் 150 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் குமாரபாளையம் வந்தனர்.
மணிமேகலை தெரு, கலைமகள் தெரு, அண்ணா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளை ஆய்வு செய்த திருச்செங்கோடு வருவாய் பிரிவு அதிகாரி இளவரசி, மீட்பு படையினரிடம் ஆலோசனை வழங்கினார்.
இவர்களுடன் வட்டாட்சியர் தமிழரசி, தி.மு.க. நகர செயலர் செல்வம், வருவாய் ஆய்வாளர் விஜய், கிராம நிர்வாக அலுவலர் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- அவசரகால தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.
- தீயணைப்போர்கள் விபத்து மற்றும் தீயணைப்பது எவ்வாறு என்பது குறித்து விளக்கம் அளித்தனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா பாடைகட்டி மாரியம்மன் கோவிலில் வலங்கைமான் தீயணைப்பு துறையினர் அவசரகால தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்று செய்முறை விளக்கம் அளித்தனர்.
இதில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டு மீட்பு பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் நிலைய அலுவலர்(போக்குவரத்து) மார்த்தாண்ட பூபதி, சிறப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன், சிறப்பு அலுவலர் (போக்குவரத்து) பாலு, தீயணைப்போர்கள் இளங்கோவன், மாரியப்பன், வெக்காளிஸ்வரன், சந்தன குமார் ஆகியோர் விபத்து மற்றும் தீயணைப்பது பற்றி விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்வில் பாடைகட்டி மாரியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி ரமேஷ், தக்கார் ரமணி, எழுத்தர் சீனிவாசன் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.