search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவர் இடிந்தது"

    • வால்வு உடைந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • லாரியில் ஏற்பட்ட எரிவாயு கசிவை கட்டுப்படுத்த ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் அருகே சமையல் எரிவாயு உடன் நின்றிருந்த லாரி மீது சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. வால்வு உடைந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    லாரியில் ஏற்பட்ட எரிவாயு கசிவை கட்டுப்படுத்த ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

    அப்பகுதியில் லாரியை சுற்றி 500 மீட்டர் தொலைவு வரை தீக்குச்சி, செல்போன், டார்ச் லைட் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • வெங்கடேசன் வீட்டின் முன்பு மழைநீர் தேங்குவதை தடுக்க தரைத்தளம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டினார்.
    • எதிர்பாராதவிதமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து வெங்கடேசன் மீது விழுந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடசெட்டியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53) கட்டிட தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு மழைநீர் தேங்குவதை தடுக்க தரைத்தளம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து வெங்கடேசன் மீது விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீசார் இடிபாடுகளை அகற்றி பலியான வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மனைவி குமுதவள்ளி கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெரியசாமியின் கால் முறிவு ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுநெசலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. . இவர் இன்று காலை 8 மணி அளவில் அவர் வீட்டிற்கு அருகே உள்ள முத்துக்கருப்பன் என்பவரது வீட்டின் சந்தில் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது தொடர் மழை காரணமாக முத்துக் கருப்பனின் கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெரியசாமியின் கால் முறிவு ஏற்பட்டது.

    இது குறித்து கால் முறிவு ஏற்பட்ட பெரியசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.

    • இடிந்து விழுந்த கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் இருக்கும்.
    • தந்தையும் மகளும் வெளியே கிளம்புவதற்காக சென்ற நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 2-ம் தெருவில் 11 வீடுகள் கொண்ட குடியிருப்பு உள்ளது.

    இந்த கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த கட்டிடம் முறையான பராமரிக்கப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் அந்த குடியிருப்பில் ஒரு வீட்டில் வசித்து வருபவர் ரஹீம் (45). இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செய்யதலிபாத்திமா என்ற மனைவியும், ரபீக் (9) என்ற மகனும், ரூபினா (7) என்ற மகளும் உள்ளனர். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக ரஹீம் கிளம்பினர்.

    அப்போது 2-ம் வகுப்பு படிக்கும் அவருடைய மகள் ரூபினாவும் கிளம்புவதற்காக சென்ற நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் ரூபினா மற்றும் அவரது தந்தை ரஹீம் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    ×