என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வருமுன் காப்போம்"
- ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவ மனைக்கு செல்ல முடியாதவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் சிறப்பாக பயன்பட்டு வருகிறது.
- உள்ளாட்சி பிரிதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பரஞ்சேர்வழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின்சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
முத்தமிழறிஞர் கலைஞர் 1996 ம் ஆண்டு 4-வது முறையாக பொறுப்பேற்ற போது வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார்கள்.இத்திட்டத்தின் நோக்கம் மருத்துவமனையில் மட்டுமே மருந்துவர்கள் பணிபுரிவதோடு அல்லாமல் கிராமப்புறங்களுக்கு சென்று வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவ மனைக்கு செல்ல முடியாதவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் சிறப்பாக பயன்பட்டு வருகிறது.
நோயை ஆரம்ப கட்டத்தில் சரி செய்வதால் தான் இது வருமுன் காப்போம் திட்டம் என்றழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் நடைபெறும். ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தை நல மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர் குழுக்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு சிறந்த திட்டமாக உள்ளது.பரஞ்சேர்வழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று இந்த முகாம் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்றார்.
இம்முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார், காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழு த்தலைவர் மகேஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, உள்ளாட்சி பிரிதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- முகாமில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சிகிச்சையும், ஆலோசனையும் பெற்று பயனடைந்தனர்.
கருங்கல் :
கிள்ளியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
முகாமிற்கு கிள்ளியூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமாமாலினி தலைமை தாங்கினார். மாவட்ட தலைமை மருத்துவமனை பொது மருத்துவர் கணேசன், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் ஸ்டாலின் ஜோஸ்வா, குழித்துறை அரசு ஆஸ்பத்திரி பொது அறுவை சிகிச்சை மருத்துவர் அனுபாவ், குழந்தைகள் மருத்துவர் அருண் சேம் பிரதீப், கிள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அஜிஷன், போஸ் பல் மருத்துவர் சுஜாதா குமாரி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு சிகிச்சையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர்.
முகாமில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு, சிறுநீரில் சர்க்கரை அளவு, உப்பு அளவு, காசநோய்க்கான சளி பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் ஆய்வக பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அய்யப்பன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், சமுதாய நல செவிலியர் சரஸ்வதி மற்றும் செவிலியர்களும் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். முகாமில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சிகிச்சையும், ஆலோசனையும் பெற்று பயனடைந்தனர்.
- கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.
- கிராமப்புற செவிலியர் பாண்டீஸ்வரி, வி.ஏ.ஓ. ஜோதிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத் திற்கு உட்பட்ட கண்ணனூர் ஊராட்சி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமை உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. அய்யப் பன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தமிழரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், இ.சி.ஜி., எக்கோ, ரத்தம், சிறுநீர் பரிசோதனை, ஊட்டச்சத்து பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி, தொழு நோய், காசநோய், பல், கண், பொதுமருத்துவம், இருதயம், காது, மூக்கு, தொண்டை தொடர்பான பரிசோத னைகள், எலும்பு மூட்டு, எய்ட்ஸ் பரிசோ தனை, பெண்கள் குழந்தை களுக்கான பொது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் செல்லம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் பாண்டியராஜன் தலைமையில் ராமச்சந்தி ரன், சிந்தனா, ஹசைனா, பிரியா, சாந்தினி, பிருந்தா வசந்ந்,அபிநயா, மோனிஷா, சாந்தினி, குழுவினர்கள் நோயாளிகளை பரிசோ தனை செய்தனர். முகாமில்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் நாகஜோதி, பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுராமன், கிராமப்புற செவிலியர் பாண்டீஸ்வரி, வி.ஏ.ஓ. ஜோதிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கே சென்று மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் சிகிச்சை அளிக்கின்றனர்.
- உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினி கிராமம், வரதப்பம்பாளையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான இலவச சிறப்பு மருத்துவ முகாமினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் வீடு வீடாக சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கே சென்று மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் சிகிச்சை அளிக்கின்றனர். காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களுக்கும் மருந்து பெட்டகங்களையும் 60 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கே வந்து வழங்கப்படுகிறது.
கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு கண்களில் குறைபாடு இருந்தால் கண் பரிசோதனை செய்யப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு முக்கு கண்ணாடி மற்றும் சிகிச்சை அளிக்கும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
தொடர்ந்து மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களையும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடி களையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் முரளி, மாவட்ட ஊராட்சி கிருஷ்ணவேணி வரதராஜ், காங்கேயம் ஊராட்சி தலைவர் மகேஷ்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு மற்றும் இயன்முறை மருத்துவம் நோய்த் தடுப்பு பராமரிப்பு செவிலியர் மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சையாளர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு கண்கண்ணாடிகளையும் வழங்கினார்.
குண்டடம்:
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், செங்கோடம்பாளையம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு நோய்களில் பாதிக்கக்கட்டவர்களின் இல்லத்திற்கே சென்று மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் சிகிச்சை அளிக்கின்றனர். மேலும், படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு மற்றும் இயன்முறை மருத்துவம் நோய்த் தடுப்பு பராமரிப்பு செவிலியர் மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சையாளர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.தொடர்ந்து மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களையும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு கண்கண்ணாடிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார் , வட்டார மருத்துவ அலுவலர் நாகராஜ், செங்கோடம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் சரஸ்வதி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மருத்துவ முகாமிற்கு ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.
- மருத்துவ முகாமில் 280 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவமுகாம் ஆறுமுகநேரி கா.ஆ. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார். காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாசி, ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சீனிவாசன் மற்றும் டாக்டர்கள் அம்பிகாபதி, அகல்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் மகராஜன், ஜெய்சங்கர், ஆனந்த ராஜ் உள்ளிட்ட குழுவினர் சிகிச்சைக்கான நடவடிக்கை களை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி சுகாதார பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன், நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் ஆகியோர் முகாமை பார்வையிட்டனர்.
இதன் மூலம் 280 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர். இவர்களில் 15 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், கண் சிகிச்சை, பல் சிகிச்சை மற்றும் நீரிழிவு, இரப்பை, குடல் நோய், சிறுநீரக பரிசோதனை ஆகியவை நடந்தன. இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன.
- முகாமில் ஸ்கேனிங் இ.ஜி.சி., கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை, புற்றுநோய் கண்டறிதல், சுகர் மற்றும்உயர் ரத்தழுத்தம், கண் சிகிச்சை, சித்தா, ஹோமியாபதி, யுனானி உள்ளிட்டவைகள் மூலம் நோய்களைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்தனர்.
- இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்அன்பர சன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, சேர்மன் காமாட்சி மூர்த்திஆகியோர் முன்னிலை வகித்த னர். சுகாதார மேற்பார்வை யாளர் பாஸ்கர் வரவே ற்றார். ராஜ்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் ஸ்கேனிங் இ.ஜி.சி., கர்ப்பிணி பெண்களு க்கான பரிசோதனை, புற்றுநோய் கண்டறிதல், சுகர் மற்றும்உயர் ரத்தழுத்தம், கண் சிகிச்சை, சித்தா, ஹோமியாபதி, யுனானி உள்ளிட்டவைகள் மூலம் நோய்களைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவர் பிரபா, மருத்துவர்கள் கிளின்டன், செந்தில், சுகாதார ஆய்வாளர் மலர்கொடி, தி.மு.க ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் ரஜினி நன்றி கூறினார்.
- ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
- முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் ரத்த அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.
சாத்தான்குளம்:
தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தூத்துக்குடி சுகாதார பணிகளின் பொற்செல்வன் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பண்டாரபுரம் சத்தியநகரம் டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சுகாதார ஆய்வாளர் மந்திர ராஜன் வரவேற்று பேசினார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஐலின் சுமதி திட்ட விளக்க உரையாற்றினார். சத்தியநகரம் சேகர குரு மர்காசிஸ் டேவிட் வெஸ்லி ஜெபம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ் செல்வதுரை நன்றி கூறினார்.
முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, கொலஸ்டிரால் பரிசோதனை, கொரோனா சளி பரிசோதனை, கொரோனா தடுப்பூசி ரத்த அளவு பரிசோதனை செய்யப்பட்டது.
- மயிலம் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
- கர்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது.
விழுப்புரம்:
மயிலம் அருேக ஆலகிராம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா சுரேஷ் தலைமை தாங்கினார்.மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி வரவேற்றார் முகாமில்சிவக்குமார் எம்.எல்.ஏ. மயிலம் ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்து சிறப்புறையாற்றினார்கள்.இதில் ஸ்கேன், எக்ஸ்ரே,இரத்தப் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, சித்த மருத்துவம், கர்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. பின்னர் நிலவேம்பு கசாயம், ஊட்டச்சத்து கண்காட்சி, ஊட்டச்சத்து உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சேதுநதன், ஒன்றிய செயலாளர் மணிமாறன், மாவட்ட கவுன்சிலர்கள் விஜயன், மகேஸ்வரி குமரேசன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், தி.மு.க. நிர்வாகி சுரேஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பூங்கொடி சுகாதார மே ற்பார்வை யாளர் துறை சாமி, ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் நிலவேம்பு கசாயம், ஊட்டசத்து உணவு வழங்கப்பட்டது, முடிவில் பள்ளி ஆசிரியர் வீரமணி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்