என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துண்டிப்பு"

    • நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன.
    • வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன. இவற்றின் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 27 கோடி வருவாய் கிடைக்கிறது.

    இதனைக்கொண்டு நகரில் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம், மின் இணைப்பு கட்டணம் போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது. நடப்பு ஆண்டுக்கான சொத்து வரி, தொழில்வரி வசூல் செய்யப்பட்டு வருகின்றன.

    இது குறித்து நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை உள்ளடக்கிய சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட இனங்களில் இதுவரை 35 சதவீத தொகை மட்டுமே வசூல் செய்யப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 65 சதவீத தொகை நிலுவையாக உள்ளது.

    பொதுமக்களில் பெரும்பாலானோர் வரி மற்றும் கட்டணங்களை மார்ச் மாதம் செலுத்த வேண்டும் என தவறுதலாக கருதி வருகிறார்கள். தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் திருந்திய சட்டத்தின் படி முதல் அரையாண்டுக்கான வரி இனங்கள் ஏப்ரல் 30ந் தேதிக்கு முன்னரும், இரண்டாம் அரையாண்டிற்கான தொகையினை அக்டோபர் மாதம் 31ந் தேதிக்கு உள்ளும் செலுத்தி இருக்க வேண்டும்.

    20232024ம் நிதியாண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டு உரிய தொகையினை முழுவதுமாக கடந்த 31ந் தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். எனவே தங்களது வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள பொதுமக்கள் அனைவரும் வருகிற 30ந் தேதிக்குள் நிலுவையின்றி செலுத்தி, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் காகித கப்களை உற்பத்தி செய்யும் சிறிய தொழிற்சாலை இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
    • இனிமேல் பிளாஸ்டிக் கப்கள் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சேலம் கோட்ட என்ஜினீயர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேற்று தாதம்பட்டியில் சோதனை நடத்தினர்.

    அப்போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் காகித கப்களை உற்பத்தி செய்யும் சிறிய தொழிற்சாலை இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஏரித் தெரு வில் இயங்கிய தனியார் பேப்பர் கப்ஸ், சூலக்கரை உடையார் தெருவில் இயங்கிய பேப்பர் கப்ஸ் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. இனிமேல் பிளாஸ்டிக் கப்கள் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர், விற்போரின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு உற்பத்தி எந்திரங்களும் முடக்கப்படும், என்றனர்.

    • திருமங்கலம் அருகே கனமழையால் கிராமம் துண்டிக்கப்பட்டது.
    • மழைநீர் நேசனேரி கிராமத்தை சூழ்ந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை 10 மணிவரை பெய்தது.

    இதனால் நகரில் மின்தடை ஏற்பட்டது. கன மழையால் கவுண்டமா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழைநீர் நேசனேரி கிராமத்தை சூழ்ந்தது. இதனால் செங்கப்படையிலிருந்து நேசனேரி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியது.

    இதேபோல் மதுரை- விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து நேசனேரி விலக்கு வழியாக செல்லும் தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியதால் அந்த வழியாகவும் நேசனேரி கிராமத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நேசனேரி கிராமம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் கிராமமக்கள் வீடுகளில் முடங்கினர்.

    செங்கப்படை, திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் கிராமத்தை விட்டுவெளியே செல்ல முடியவில்லை. கூலித்தொழில் மற்றும் விவசாய பணிக்கு செல்லும் கிராமமக்களும் வெளியேற வழியின்றி தவித்து வருகின்றனர்.

    திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டையில் ரெயில்வே தரைப்பாலம் உள்ளது. திருமங்கலத்திலிருந்து காரியாபட்டிக்கு செல்லும் சாலையில் ெரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வசதியாக இந்த தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

    மழைகாலத்தில் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை கொடுத்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் மேலக்கோட்டை தரைப்பாலத்தில் தண்ணீர் அதிகளவில் தேங்கியது.

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு வெள்ளைப்பூடு, கருவாடுகளை ஏற்றி கொண்டு சென்ற மினிவேன் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேலக்கோட்டை தரைப்பாலத்தை கடக்க முயன்றது. நடுப்பாலத்தினை அடைந்த போது அந்த வேன் தண்ணீரில் சிக்கி கொண்டது.

    இது குறித்து மேலக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் கோபி பொதுமக்கள் உதவியுடன் மினிவேனை தரைப்பாலத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்.

    மழைநீர் அதிகளவில் தரைப்பாலத்தில் தேங்கியதால் திருமங்கலத்தில் இருந்து காரியாபட்டி செல்லும் பஸ்கள், லாரிகள் மாற்றுபாதையான சாஸ்திரிபுரம் ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றன.

    மதுரை மாவட்டம் எழுமலையில் உற்பத்தியாகி வரும் தெற்கு ஆறு சின்ன–கட்டளை, சவுடார்பட்டி, மீனாட்சிபுரம், கிழவனேரி வழியாக செங்கப்படையை அடுத்த நேசனேரியில் கவுண்டமாநதியுடன் இணைகிறது.

    இங்குள்ள சிவரக்கோட்டை பகுதியில் 2 ஆறுகளும் கமண்டல நதியாக மாறுகிறது. திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில் விவசாயத்திற்கு பலன் தரும் கமண்டல நதி காரியாபட்டியில்உள்ள குண்டாற்றில் ஒன்று சேருகிறது. திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் கமண்ட நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீண்ட நாள்களுக்கு பின்பு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை கண்ட சிவரக்கோட்டை பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • அனுமதியின்றி குழாய் இணைப்பு பெற்றிருப்பதும் தெரிய வந்தது.
    • பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் போலீசில் புகார் கொடுக்கலாம்.

    அவிநாசி:

    நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திருமுருகன்பூண்டி பேரூராட்சியாக இருந்த போது 2,000க்கும் மேற்பட்ட அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.கடந்தாண்டு இத்தகைய இணைப்புகளை முறைப்படுத்தும் பணி நடந்தது. ஒரு இணைப்புக்கு 27 ஆயிரத்து 680 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதன் மூலம் ரூ.1.50 கோடி வரை வருவாய் ஈட்டப்பட்டது.

    இந்தநிலையில் புதிதாக பொறுப்பேற்ற நகர்மன்றம் புதிய இணைப்பு கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. இதுதொடர்பான கள ஆய்வில், நகராட்சிக்கு வரியே செலுத்தாமலும், எவ்வித அனுமதியும் பெறாமல் பலரும் குடிநீர் குழாய் இணைப்பு பெற்றிருப்பது தெரிய வந்தது. பலர், வரி செலுத்தியிருப்பினும் அனுமதியின்றி குழாய் இணைப்பு பெற்றிருப்பதும் தெரிய வந்தது.

    இத்தகைய முறையற்ற குடிநீர் குழாய் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்கவும், அவற்றை முறைப்படுத்தும் பணியை மேற்கொள்ள பிரத்யேக குழு அமைக்க வேண்டும் என நகராட்சி கமிஷனர், நகராட்சிகளின் மண்டல இயக்குனருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து பிரத்யேக குழு அமைக்கப்பட்டு, இத்தகைய முறையற்ற இணைப்புகளை துண்டிக்கும் பணி தொடங்கியது.

    இது குறித்துநகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:-

    பல ஆண்டுகளாக புதிய இணைப்பு கேட்டு, ஏராளமானோர் காத்துள்ளனர். குடியிருப்புகளுக்கு, 6 ஆயிரம் ரூபாய், வணிக பயன்பாட்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் மட்டும் கட்டணமாக வசூலித்து, புதிய இணைப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம்.அதற்கு முன்அனுமதியின்றி, முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றவர்களின் இணைப்புகளை முறைப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.

    இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் முறைப்படுத்தும் கட்டணத்தை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி, மீண்டும் புதிய இணைப்புக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். புதிய குடிநீர் குழாய் இணைப்புக்கு சிலர் பெரும் தொகையை வசூலித்துள்ளதாகவும், புகார் வந்துள்ளது. அவர்கள் மீது பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் போலீசில் புகார் கொடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினர். 

    ×