என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வீடு சேதம்"
- தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.
- சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது.
புதுச்சேரி:
வங்கக்கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
புதுச்சேரியில் நேற்று காலை வானம் இருண்டு காணப்பட்டது. ஆனால் பிற்பகல் வரை மழை பெய்யவில்லை. மாலை 3.30 மணிக்கு திடீரென இடியுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது.
கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. மழை நின்றதும் வெள்ள நீர் வடிந்தது. தொடர்ந்து இரவிலும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது. பெருத்த இடி ஒசையால் வீடுகளில் தூங்கியவர்கள் அச்சமடைந்தனர். குழந்தைகள் இடி சத்தத்தை கேட்டு அரண்டு போனார்கள்.
வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்களின் இணைப்புகளை துண்டித்தனர். தொடர்ந்து காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது.
தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.
குறிப்பாக புதுச்சேரியின் நகர பகுதியான புஸ்சி வீதி, பாரதி வீதி, சின்னசுப்புராய பிள்ளை வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.
கனமழை காரணமாக உழவர்கரை தொகுதி மூலக்குளம் பகுதியில் வசித்து வரும் வசந்தா என்ப வர் வீட்டின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.
சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது. வீட்டில் வசிப்போர் யாரும் அருகில் இல்லாததால் காயம் ஏற்படவில்லை.
இதனிடையே கடலில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்புமாறு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மீன்வளதுறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 29-ந் தேதி தாழ்வு மண்டலமாக வலுப் பெற கூடும் என வானிலை மையம் தெரித்துள்ளது. எனவே ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு தொலை தொடர்பு உபகரணங்கள் மூலம் புதுவை மீன்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
- பலத்த மழை காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு 2 ராட்சத பாறைகள் திடீரென கிருஷ்ணமூர்த்தி வீட்டின் மீது உருண்டு விழுந்தது.
- மக்கள் எந்த நேரத்திலும் பாறைகள் உருண்டு விழலாம் என்று பீதி அடைந்து உள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இரட்டை கரடு பகுதியில் மலை அடிவாரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த மலைப்பகுதியில் பெரிய, பெரிய ராட்சத பாறைகள் உள்ளன.
மலை அடிவாரத்தில் கிருஷ்ணமூர்த்தி (வயது 48) என்பவர் வீடு உள்ளது. கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி தமிழ்ச்செல்வி, மகன் ஸ்ரீதருடன் வீட்டில் வசித்து வருகிறார். கிருஷ்ண மூர்த்தி கூலி தொழிலாளி.
இந்நிலையில் இரட்டைக்கரடு பகுதியில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ண மூர்த்தி தனது மனைவி, மகனுடன் வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
பலத்த மழை காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு 2 ராட்சத பாறைகள் திடீரென கிருஷ்ணமூர்த்தி வீட்டின் மீது உருண்டு விழுந்தது.
ஒரு பாறை வீட்டின் சமையல் அறையிலும், மற்றொரு பாறை வீட்டின் ஹாலிலும் உருண்டு விழுந்தது. இதில் சமையல் அறையின் ஒரு பகுதி மற்றும் வீட்டின் ஹால் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. சமையலறையில் இருந்த ஸ்டவ், பாத்திரம், குடம் போன்றவை முற்றிலும் சேதமடைந்தது.
இரவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் கிருஷ்ணமூர்த்தி எழுந்து வந்து பார்த்தார். அப்போது பாறைகள் வீட்டின் மீது உருண்டு விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நல்ல வாய்ப்பாக பாறைகள் கிருஷ்ணமூர்த்தி தூங்கிக் கொண்டிருந்த அறையில் விழாததால் அவர் குடும்பத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும் அப்பகுதி மக்கள் எந்த நேரத்திலும் பாறைகள் உருண்டு விழலாம் என்று பீதி அடைந்து உள்ளனர்.
- வீட்டில் ஆனந்த், அவரது மனைவி மற்றும் தாயார் வேறு அறையில் இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
- பாறை விழுந்ததில் வீட்டின் அறை முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்துள்ளது.
களியக்காவிளை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக ஆறுகள், குளங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் விளைநிலங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தொடர் மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்களும் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் களியக்காவிளை அருகே உள்ள திருத்துவபுரம் அடுத்த தோப்புவிளை பகுதியில் ஆனந்த் என்பவரது வீட்டில் அருகில் இருந்த பெரிய பாறாங்கல் உடைந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் ஒரு பகுதி கடும் சேதம் அடைந்தது.
பாறை உடைந்து விழுந்த நேரத்தில் வீட்டில் ஆனந்த், அவரது மனைவி மற்றும் தாயார் வேறு அறையில் இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். பாறை விழுந்ததில் வீட்டின் அறை முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்துள்ளது.
- மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
- வீட்டுக்குள் மழைநீர் ஒழுகுவதால், மேற்பகுதியில் தார்பாய் போடப்பட்டு உள்ளது.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவில் உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, பாட்டவயல், தேவாலா, கரியசோலை, நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் பொன்னானி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூரில் பலத்த மழை பெய்தது.
சேரங்கோடு அருகே காப்பிகாடு பாரதியார் நகரில் பார்வதி என்பவரது வீடு இடிந்து சேதமடைந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும் வீட்டுக்குள் மழைநீர் ஒழுகுவதால், மேற்பகுதியில் தார்பாய் போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்