என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாலை சேதம்"
- சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- 500 மீட்டர் நீளமுள்ள இச்சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன
கருங்கல் :
பாலூர் அருகே பரவ விளை முதல் கல்லடை செல்லும் இணைப்பு சாலை சுமார் 10 வருடங்கள் முன்பு போடப்பட்டது. இந்த சாலையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். சுமார் 500 மீட்டர் நீளமுள்ள இச்சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் இச்சாலையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாலூர் ஊராட்சி சார்பில் மேற் கண்ட சாலையின் நடுப் பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்குவ தற்காக குழி தோண்டி குழாய்கள் பதித்துள்ளனர். இதனால் சாலை முழு வதுமாக சேதம டைந்துள் ளது.
சாலை முழுவதும் சகதி நிறைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இந்த பகுதியை ஆய்வு செய்து ரோட்டோ ரமாக குடிநீர் குழாயை அமைப்பதோடு, சாலையை சீரமைத்து தார்போட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எதிர்பாராதவிதமாக காருக்கு முன்னால் சென்ற டெம்போ சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கொண்டது.
- சாலை மோசமாக இருந்ததால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் வழியிலேயே நோயாளி இறந்து விட்டார்.
குனியமுத்தூர்:
கோவை மாநகராட்சி 87-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் சக்தி நகரை சேர்ந்தவர் பாப்பாத்தி என்ற நாகம்மாள்(வயது70). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்.
இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து நாகம்மாள், தனது மகன் ராஜபாண்டியனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த நாகம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது மகன் ராஜபாண்டி தாயை காரில் அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். கார் சக்தி நகர் பகுதியில் சென்ற போது முன்னால் ஒரு டெம்போ சென்றது.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், சக்தி நகர் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் சாலையில் பள்ளங்கள் இருப்பது எதுவுமே தெரியவில்லை.
அப்போது எதிர்பாராதவிதமாக காருக்கு முன்னால் சென்ற டெம்போ சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கொண்டது. எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
பின்னால் காரில் நாகம்மாள் நெஞ்சுவலியால் துடித்து கொண்டிருந்தார். டெம்போ சென்றால் தான் அந்த இடத்தை விட்டு நகர முடியும் என்ற நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் ராஜபாண்டி தவித்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் எந்திரம் உதவியுடன் டெம்போ மீட்கப்பட்டது. அதன்பின்னரே ராஜபாண்டி தனது தாயை அழைத்து கொண்டு வேக, வேகமாக ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். ஆனால் நாகம்மாள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் காரிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதனை அறிந்த ராஜபாண்டி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்து விட்டால் இதில் நடந்து செல்வதே சிரமமாக இருக்கும். இது தொடர்பாக எவ்வளவோ முறை புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரியும் மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது சாலை மோசமாக இருந்ததால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் வழியிலேயே நோயாளி இறந்து விட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனிமேலாவது இந்த சாலையை முறையாக சீரமைத்து தருவதற்கு மாநகராட்சி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மோசமான சாலையால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் மின்வாரிய பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் சாலை மேலும் சேதமடைவதற்குள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
- தரமாக சாலை அமைப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
அரூர்,
மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் சாலை மேலும் சேதமடைவதற்குள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
தரமாக சாலை அமைப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தருமபுரி மாவட்டம், அரூர் நகரில் இருந்து சிட்லிங், நரிப்பள்ளி, கோட்டப் பட்டி, தீர்த்த மலை, பையர்நாயக்கன் பட்டி, செல்லம்பட்டி, வேப்பம்பட்டி, வேடகட்ட மடுவு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையில் பயணித்து வருகின்றனர்.
குறிப்பாக கார்கள்,சிறிய ரக சரக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் இந்த சாலையில் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் பல வருடங்களாக குண்டும், குழியுமாக இருந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. பலமுறை கோரிக்கை விடப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சிமெண்ட் சாலை அமைத்து 3 மாதங்களே ஆன நிலையில் தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது.
நீண்ட நாள் கோரிக்கையின் பேரில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை தரமில்லாமல் போடப்பட்டதால் குறைந்த காலத்திலேயே சேதமடைந்துள்ளது.
மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் சாலை மேலும் சேதமடைவதற்குள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். தரமாக சாலை அமைப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மழை பெய்து வரும் நிலையிலும் பொதுமக்கள் சாலைகளில் உள்ள குண்டு, குழிகளில் விழுந்து விபத்து ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
- சாலையில் தோன்றிய பள்ளங்கள் உடனுக்குடன் கான்கிரீட் கலவை, சிமெண்ட் கலவை கற்கள் மூலம் நிரப்பப்படுகின்றன.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒருவருடமாக மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வந்தன.
பருவமழையின் போது சென்னையில் மட்டும் மழை நீர் தேங்காமல் உடனடியாக வடியக்கூடிய வகையில் 1000 கி.மீ. தூரத்திற்கு பணிகள் நடந்து முடிந்துள்ளன. மழைநீர் வடிகால்வாய் பணிக்காக பல இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் பருவமழைக்கு முன் மூடப்பட்டன. ஆனாலும் ஒரு சில இடங்களில் பணிகள் நிறைவு பெறாததால் மூட முடியவில்லை.
இதற்கிடையில் பருவமழை தொடங்கியதால் சாலைகளில் குழி-பள்ளங்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. நவம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழையால் சென்னையில் உள்ள பேருந்து சாலைகள் மட்டுமின்றி சிறிய சாலைகள், தெருக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
2,620 ரோடுகளில் பள்ளங்கள் ஏற்பட்டன. கடந்த மாதம் 20-ந்தேதி முதல் நேற்று வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த தகவல் தெரியவந்துள்ளது.
மழை பெய்து வரும் நிலையிலும் பொதுமக்கள் சாலைகளில் உள்ள குண்டு, குழிகளில் விழுந்து விபத்து ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சாலையில் தோன்றிய பள்ளங்கள் உடனுக்குடன் கான்கிரீட் கலவை, சிமெண்ட் கலவை கற்கள் மூலம் நிரப்பப்படுகின்றன.
இதுவரையில் 9,035 பள்ளங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1070 பள்ளங்கள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. 4,696 குழிகள் ஜல்லி மூலமாகவும், 535 பள்ளங்கள் தார் கலவை மூலமாகவும், 365 குழிகள் ரெடிமேடு தார் கலவை மூலமாகவும் நிரப்பப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
3,436 பள்ளங்கள் கான்கிரீட் கலவை கொண்டு தற்காலிகமாக நிரப்பப்பட்டு உள்ளது. பருவமழை முடிந்தவுடன் சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படுகிறது. அடுத்த மாதம் வரை மழைக்காலம் இருப்பதால் அதன் பின்னர் கணக்கெடுப்பு நடத்தி சாலைகள் புதிதாக போடப்படும் என்று தெரிவித்தனர்.
- வில்பட்டி கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.
- காய்கறிகளை ஏற்றி செல்ல முடியாமலும் சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறான சூழலில் வில்பட்டி கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி வழியே காய்கறிகளை ஏற்றி செல்ல முடியாமலும் சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும்அப்பகுதியின் வழியே பொதுமக்களும் பள்ளி மாணவ-மாணவிகளும் சென்றுவர பெரும் இடையூறு இருந்துவருவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். சேதமடைந்த சாலைகளால் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
எனவே வில்பட்டி பிரதான சாலை நாயுடுபுரம் சாலை உள்ளிட்ட சாலைகளை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்