என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடித்து"
- அரசு உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
- 2 மகன்கள் உள்ளனர்.
திருவட்டார்:
குலசேகரம் அருகே பேச்சிப்பாறை வலியமலை காணி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், பால் வெட்டும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்தமகன் அபினேஷ் (வயது 13). ஆலம்பாறை பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால் வீட்டுக்கு வந்த மாணவன் மணலோடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு தாயுடன் சென்று உள்ளான். அங்கு சென்ற அபினேஷ் தாயுடன் நடந்து வரும்போது பாம்பு ஒன்று அபினேஷ் காலில் கடித்துவிட்டது. இது குறித்து அபினேஷ் தனது தாயாரிடம் கூறியுள்ளார். உடனே அந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் முதலுதவி செய்தார்கள். போக்குவரத்து வசதி இல்லாததால் அந்த பகுதியில் இருந்து உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லமுடியவில்லை. வெகுநேரம் கழித்து குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவனை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அபினேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து மணிகண்டன் குலசேகரம் போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்டு அபினேஷ் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தோட்டத்திற்கு செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் தோட்டத்திற்கு சென்றார்.
- கிருஷ்ணன் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள வெள்ளாந்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 52).
இவருக்கு அந்த பகுதியில் ரப்பர் தோட்டம் உள்ளது. தினமும் காலையில் ரப்பர் பால் வெட்டுவதற்காக கிருஷ்ணன், தோட்டத்திற்கு செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக கரடி ஒன்று வந்தது. அதனை பார்த்ததும் கிருஷ்ணன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் அவரை துரத்திச்சென்று கரடி கடித்தது. இதில் கிருஷ்ணனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனை தொடர்ந்து கரடி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. காயத்துடன் கிடந்த கிருஷ்ணன் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கரடி மீண்டும் தோட்டத்திற்கு வராத வகையில் நடவடிக்கை எடுத்தனர்.
- நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக, அருகில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
- அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று, ஹேமலதாவை கடித்து விட்டது.
சேலம்:
சேலம் அருகே உள்ள சின்ன வீராணம் அடுத்த வயக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஹேமலதா (வயது 37). இவர் நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக, அருகில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று, ஹேமலதாவை கடித்து விட்டது. இதனால் வலியால் அலறி துடித்த ஹேமலதாவை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வலசையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஹேமலதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாய்களில் இனப்பெருக்க காலம் என்பதால்தெரு நாய்கள் கும்மபலாக ரோட்டில் திரிகின்றன. இதனால் பொதுமக்கள்தெருவில் நடக்வோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ அச்சப்பட்டு வருகின்றனர்.
- திருச்செங்கோடு பகுதியில் கடந்த 24மணி நேரத்தில் 20 பேரை தெரு நாய்கள் கடித்து குதறி யுள்ளன.
திருச்செங்கோடு:
தற்போது நாய்களில் இனப்பெருக்க காலம் என்பதால்தெரு நாய்கள் கும்மபலாக ரோட்டில் திரிகின்றன. இதனால் பொதுமக்கள்தெருவில் நடக்வோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ அச்சப்பட்டு வருகின்றனர். தெருக்களின் குறுக்கே திடீரென நாய்கள் கூட்டமாகஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு அதுவும் வேகமாக சாலையை கடப்பதால் இருசக்கர வாகனஓட்டிகள் நாய்கள் மீத மோதிவிழுந்து காயமடைவது தொடர்ந்து நடந்து வந்தது.
திருச்செங்கோடு பகுதியில் கடந்த 24மணி நேரத்தில் 20 பேரை தெரு
நாய்கள் கடித்து குதறி யுள்ளன. காயம் அடைந்த வர்களில் நாமக்கல் ரோடு சஞ்சய், ஆயிரத்தா குட்டை தரணி, எஸ்.என்.டி.ரோடு சின்னதம்பி, கொல்லப்பட்டி உஷா, ஏ.கே.இ. ரோடு காவியா, அம்பேத்கார் நகர் பகுதியைசேர்ந்த சுசிலா , ராஜம்மாள், முத்துலட்சுமி, நேசமணி உள்பட சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் அடங்குவர். இவர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் சிலர் ஈரோடு தனியார் மருத்துவமனை சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்யவும் நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்த வருகின்றனர். நாய்க்கடி மருந்துகள் இருப்பில உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
- திகினாரை அருகே உள்ள ரங்கசாமி கோவில் அருகில் மானாவாரி நிலத்தில் மர்ம விலங்கு கடித்து நாய் ஒன்று இறந்து கிடந்தது.
- இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்கு அவ்வப்போது விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடி வருவதும் தொடர்கதை ஆகிய வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட திகினாரை அருகே உள்ள ரங்கசாமி கோவில் அருகில் மானாவாரி நிலத்தில் மர்ம விலங்கு கடித்து நாய் ஒன்று இறந்து கிடந்தது. இது பற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு அப்பகுதி விவசாயிகள் தகவல் அளித்தனர்.
இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் இதே பகுதியில் மர்ம விலங்கு கடித்து உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது. புலி அல்லது சிறுத்தை வனப்பகுதியில் இருந்து வந்து நாயை வேட்டையாடி இருக்கலாம் என விவசாயிகள் கருதுகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்