search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3பேர் கைது"

    • 5 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருகின்றன.
    • சிலர் ஆன்லைன் மூலம் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவ தாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வேலகவுண்டன்பட்டி, நல்லூர், பரமத்தி, ஜேடர்பா ளையம், பரமத்தி வேலூர் ஆகிய 5 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருகின்றன.

    இந்நிலையில், பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே உள்ள கலைமகள் காம்ப்ளக்ஸில் சிலர் ஆன்லைன் மூலம் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவ தாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு ஆன்லைன் மூலம் லாட்டரி

    சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதனை யடுத்து லாட்டரி சீட்டுக ளை விற்பனை செய்த பரமத்திவேலூர் தெற்கு தெருவை சேர்ந்த வடிவேல் (வயது 42), விஜய் (24), சுல்தான்பேட்டையைச் சேர்ந்த மோகன்குமார் (33) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுக ளின் முடிவுகளை வெளியிடுவதற்கு பயன்ப டுத்தப்பட்ட 5 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை கம்ப்யூட்டர் மூலம் பிரிண்ட் எடுத்து விற்பனை செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • 7 பெண்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் சந்தேகத்திற்குரிய இடத்தில் சோதனை நடத்தினர்.

    விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. நகரில் ரகசியமாக நோட்டமிட்டனர். அப்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சொரத்தூரை சேர்ந்த வினோ(28) மற்றும் மரகதபுரம் சத்தியா(34) ஆகிய இருவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதேபோல் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் பூந்தோட்டம் பாதை என்ற பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தியதில் ஒரு பெண் வாடகை வீடு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பனையபுரம் பகுதியை சேர்ந்த அபுல்ஹசன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

    விழுப்புரத்தில் இருவெவ்வேறு இடங்களில் வாடகை வீடு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 நபர்களை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் 7 பெண்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.

    • தேனி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • வருசநாடு பகுதியில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்து பறிமுதல் செய்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கஞ்சா விற்பனை யில் ஈடுபட்டு வருபவர்களின் உடமைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்க ளின் சொத்துக்களும் பறி முதல் செய்யப்பட்டு வரு கிறது. மேலும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு போலீ சார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதனால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்கள் தங்கள் யுக்திகளை மாற்றி வருகின்றனர். அதன்படி ஒரே இடத்தில் மொத்தமாக கஞ்சா விற்பனையை நடத்தாமல் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக பிரிந்து சென்று விற்று வருகின்றனர்.

    குறிப்பாக கஞ்சா வாங்கு பவர்களின் செல்போன்கள் மூலம் தகவல் வந்தால் சம்பவ இடத்துக்கே சென்று பைக்கில் கொடுத்து வருகின்றனர். இதனால் மொத்தமாக கஞ்சா பறிமுதல் தடுக்கப்படும் என்று அவர்கள் நினைத்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீசாரும் அவர்களை கண்டறியும் வகையில் வெவ்வேறு இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    வருசநாடு பகுதியில் இதே போல பைக்கில் சென்று கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்த னர். சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த அழகுராஜா (வயது 20), லெனின் குமார் (21), பிரேம்குமார் (18) ஆகிய 3 பேரும் 200 கிராம் கஞ்சாவை பைக்கில் வைத்து தங்களுக்கு ஆர்டர் வரும் இடத்துக்கு நேரடியாக சென்று விற்று வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • ரகசிய எண்ணை கேட்டு அதன்மூலம் 5 தவணைகளாக ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் பணத்தை கும்பல் அபேஸ் செய்தனர்.
    • புகாரின் பேரில் தேனி சைபர் கிரைம் போலீசார் டெல்லியில் இருந்த 3 பேரை கைது செய்து பணத்தை மீட்டனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் போடி மெட்டு பகுதியை சேர்ந்த கந்தசாமி மனைவி ரஞ்சிதம் (வயது78). இவர் தனது மகள் ஸ்ரீதேவி மற்றும் பேரன் பேத்தியுடன் வசித்து வருகிறார்.

    கடந்த ஜூலை மாதம் 6ந் தேதி ரஞ்சிதத்தின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் உங்களது கணவர் எல்.ஐ.சி.யில் இன்சூரன்ஸ் போட்டுள்ளார்.

    அது முதிர்வு அடைந்து விட்டதால் அந்த தொகை ரூ.37,041, உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கிறோம் என்று கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்டு அதன்மூலம் 5 தவணைகளாக ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்துள்ளனர். இதனை அறிந்த ரஞ்சிதம் ேதனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    எஸ்.பி. பிரவீன்உமேஷ்டோங்கரே உத்தரவின் பேரில் ஏ.எஸ்.பி. கார்த்திக் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில் 3 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    ரஞ்சிதத்துக்கு அழைப்பு விடுத்த எண் மற்றும் எந்த வங்கி கணக்கில் பரிமாறப்பட்டது என விசாரணை நடத்தியதில் டெல்லியை சேர்ந்த 3 பேர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனையடுத்து டெல்லிக்கு சென்ற போலீசார் வில்சன்குமார் (27), முருகன் (26), சதாசிவம் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், வங்கி புத்தகம், ரொக்க பணம் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் ஆகியவற்றை கைப்பற்றினர்.

    • பா.ஜ.க. நிர்வாகி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.
    • வெரைட்டிஹால் ரோடு ஆகிய பகுதிகளில் பஸ் கண்ணாடியை உடைத் ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை 

    கோவை மாநகரில் கடந்த 22-ந் தேதி இரவு வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பா.ஜ.க.அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை, 100 அடி ரோட்டில் உள்ள பா.ஜ.க. நிர்வாகி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.

    மறுநாள் குனியமுத்தூர், பொள்ளாச்சி பகுதியில் இந்து அமைப்பு நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. குனியமுத்தூர் மற்றும் வெரைட்டிஹால் ரோடு பகுதியில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

    குனியமுத்தூர் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நேற்று முன்தினம் பா.ஜ.க. அலுவல கத்தில் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் குனிய முத்தூரில் இந்து அமைப்பை சேர்ந்த வர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி யதாக இன்று ஒருவரை போலீ சார் கைது செய் தனர். மேலும் குனிய முத்தூர் வெரை ட்டி ஹால் ரோடு ஆகிய பகுதிகளில் பஸ் கண் ணாடியை உடைத் ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசார ணை நடத்தி வரு கின்றனர். 

    • விழுப்புரம் அருகே புதுவையில் இருந்து சாராயம் கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் கிளியனூர் அருகே கொஞ்சிமங்கலம் பகுதியில் நேற்று வாகன சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலத்தி லிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் வழியாகபல்வேறு பகுதிகளுக்கு சாராயம் மற்றும் மது பாட்டில்கள் திருட்டுத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இதனைதடுக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இதற்குதனிப்படை அமை த்து தீவிர வாகன சோதனை செய்து வருகிறார். இந்நிலையில் புதுவை யில் இருந்து காரில் மது பாட்டில் கடத்துவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு வந்த தகவலின் பெயரில் அந்த பகுதியில் தீவிர வாகன சோதனை செய்ய உத்தரவிட்டார்.

    அதனபடி கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் வேல்மணி மற்றும் தலைமை காவலர் பிரபுதாஸ் சுதாகர் மற்றும் போலீசார் கிளியனூர் அருகே கொஞ்சிமங்கலம் பகுதியில் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 700 சாராய பாக்கெட்டுகள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் இந்த சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த சந்தை புதுகுப்பம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 22) சூர்யா (23) ரங்கநாதபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (23) இந்த மூவரையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • நகையை பறித்தவுடன் அருகே எந்த பஸ் நிறுத்தம் வருகிறதோ அங்கு இறங்கி கொள்வார்.
    • இந்த குடும்பத்தினர் மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது

    கோவை 

    கோவை மாநகரில் ஓடும் பஸ்ஸில் பெண்களை குறி வைத்து தொடர் நகை பறிப்பு சம்பவம் மற்றும் கோவில் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் பயன்படுத்தி பெண்களிடம் செயின் பறித்து செல்லும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

    இதனை அடுத்து தொடர் செயின் பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை குறி வைத்து பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் மாதவன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, நாகராஜ் மற்றும் போலீஸ்காரர்கள் உமா, கார்த்தி, பூபதி, ரங்கராஜ் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தெலுங்கு பாளையம் தாமு நகரை சேர்ந்த நாகம்மாள்(48) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    நாகம்மாளின் சொந்த ஊர் மதுரை. இவரது கணவர் ராமு, மகன் சத்யா. இவர்கள் 3 பேரும் காரில் ஊர் ஊராகச் சென்று நகை கொள்ளை அடிப்பது வழக்கம்.

    நாகம்மாள் பஸ்சில் ஏறி பயணிகளுடன் பயணிகளாக பயணித்து, அருகில் இருக்கும் பெண்களிடம் நகையை பறித்து கொள்வார்.

    நகையை பறித்தவுடன் அருகே எந்த பஸ் நிறுத்தம் வருகிறதோ அங்கு இறங்கி கொள்வார். அவர் செல்லும் பஸ்சை பின்தொடர்ந்து அவரின் கணவர் அல்லது மகன் காரில் செல்வார்கள். பஸ் நிறுத்தத்தில் வைத்து காரில் ஏறி தப்பிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இப்படி பலரிடம் நகையை பறித்துள்ளனர்.

    இப்படி சம்பாதித்த பணத்தில் காந்திபுரம் பாரதியார் ரோட்டில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி அதனை தற்போது வாடகைக்கு விட்டுள்ளனர். மேலும் திருடிய பணத்தை கொண்டு மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளுக்கு சுற்றுலா சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

    இந்த குடும்பத்தினர் மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சத்யாவின் மனைவி திருட்டு வழக்கில் கைதாகி கேரள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதையடுத்து போலீசார் நாகம்மாள் கொடுத்த தகவலின் பேரில் ராமு, சத்யாவையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். நாகம்மாளை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசார் கம்பம்மெட்டு சாலையில் ரோந்து சென்றனர்.
    • கஞ்சா கடத்திய 3 பேரை கைது செய்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசார் கம்பம்மெட்டு சாலையில் ரோந்து சென்றனர்.

    அப்போது பைபாஸ் ேராட்டில் வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் கஞ்சா கடத்தியது தெரியவந்தது.

    போலீசார் இதுதொடர்பாக தங்கபாண்டி, பிரவீன், ஆனந்தன் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 200 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர்.
    • 3 பேர் மீதும் ஏற்கனவே அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது

    கோவை:

    கோவை சுந்தராபுரம் குறிச்சியை சேர்ந்தவர் பூஞ்சோலை(46). ஆட்டோ டிரைவர்.

    இவர் நேற்று வாடிக்கையாளர் ஒருவரை ஆட்டோவில் ஏற்றி கொண்டு போத்தனூர் சாரதாமில் ரோட்டில் இறக்கி விட்டார்.

    பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் வந்த போது 3 வாலிபர்கள் ஆட்டோவை வழிமறித்தனர்.

    பின்னர் பூஞ்சோலையிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் அவர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த 200 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர்.

    இது குறித்து பூஞ்சோலை போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    அதில், கத்தியை வைத்து மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்தது போத்தனூர் நூராபாத்தை சேர்ந்த அஜீஷ் ரகுமான்(26), வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அனீஷ்(22) மற்றும் போத்தனூர் மைல்கல்லை சேர்ந்த சயத் அபுதாகீர்(26) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான 3 பேர் மீதும் ஏற்கனவே அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×