என் மலர்
நீங்கள் தேடியது "சிறப்பு யாகம்"
- லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.
- 24 வது பட்டம் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டு பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினார்.
உடுமலை :
உடுமலை தளி ரோடு பள்ளபாளையம் அருகே செங்குளம் கரையில் உடுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு, நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் நடந்த இந்த பூஜையில் 24 வது பட்டம் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள்கலந்துகொண்டு பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினார். இந்த சிறப்பு யாகம் மற்றும் பூஜையில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை உடுமலை பாலாஜி சாரிட்டபிள் ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
- உலக நன்மைக்காக நடந்தது
- தினமும் யாக பூஜைகள் நடக்கிறது
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை காஞ்சிபுரம் சாலையில் உள்ள காக ஆசிரமத்தில் உலக நன்மைக்காக உத்தம வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. உலக நன்மைக்கான உத்தம வழிபாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் கொல்லிமலை சித்தர் ஸ்ரீ தருமலிங்க சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.
உத்தம வழிபாட்டு நிகழ்ச்சி நேற்று காலை சிறப்பு யாக பூஜையுடன் தொடங்கியது. யாக பூஜையை தொடர்ந்து அன்ன தானமும், புடவை தானமும் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து 2-வது நாளான இன்று காலை யாக பூஜையுடன் அன்ன தானமும் வழங்க ப்பட்டது. செப்டம்பர் 6-ந் தேதி காலை 9 மணிக்கு மகா பைரவ யாகம், 7-ந் தேதி சித்தர் வேள்வி பூஜையுடன் சாதுக்களுக்கு ஆடை தானமும் வழங்கப்படும். 8-ந் தேதி சிறப்பு யாக பூஜையுடன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
உலக நன்மைக்காக நடைபெறும் உத்தம வழிபாட்டு நிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பைரவர் அருள் பெறுமாறு காக ஆசிரம நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- சத்ரு சம்ஹார யாகம் வளர்த்து சாமி தரிசனம்.
- துலாபாரத்தில் அமர்ந்து அரிசியை கோவிலுக்கு வழங்கினார்.
திருச்செந்தூர்:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் இன்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.
அப்போது கோவிலில் உள்ள துலாபாரத்தில் அமர்ந்து அரிசியை கோவிலுக்கு வழங்கினர். தொடர்ந்து கோவிலில் மூலவர், சண்முகர், குருபகவான் சன்னதியில் வழிபட்டும், சத்ரு சம்ஹார யாகம் வளர்த்தும் சுவாமி தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சியின் போது பா.ம.க. தெற்கு மாவட்ட செயலாளர் பரமகுரு, தெற்கு மாவட்ட தலைவர் சிவபெருமாள், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகரச் செயலாளர் முருகன், நகரத் தலைவர் முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.
- சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றச்சாட்டு.
- பலகோடி பக்தர்களின் மனம் புண்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெய் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தரமற்றதாக உள்ளது என புகார் எழுந்தது.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும் கோவிலின் புதிய நிர்வாக அதிகாரியாக சியாமளா ராவ் நியமிக்கப்பட்டார்.
அவர் மேற்கொண்ட ஆய்வில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறைவாக இருப்பதை அறிந்தார்.
அந்த நெய்யை குஜராத் மாநிலம், ஆனந்த் பகுதியில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தார். பரிசோதனை அறிக்கையில், "நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்துள்ளது. இது தரமற்ற நெய் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முந்தைய ஆட்சியின் கொள்முதல் டெண்டரை சந்திரபாபு நாயுடு அரசு ரத்து செய்தது. கடந்த ஆகஸ்ட் முதல் அனைத்து பிரசாதங்களுக்கும் கர்நாடக அரசின் நந்தினி நெய் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆட்சியில் பிரசாதங்கள் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்ட தாக சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்ய அறிக்கை தயாராகி வருகிறது.
இந்தநிலையில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை விநியோகம் செய்ததற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்பது குறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தலைமையில், 4 ஆகம ஆலோசகர்கள், பிரதான அர்ச்சகர் வேணு கோபால தீட்சிதர், இணை நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி மற்றும் உயரதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது கோவிலை சுத்தப்படுத்தி யாகம் நடத்த தீர்மானிக்கப் பட்டது. அதன்படி கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. நாளை முதல் 3 நாட்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மகா சாந்தி யாகம், சாந்தியாகும் மகா சம்ராக்ஷண யாகம் நடத்த உள்ளனர்.
இதற்கிடையில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
ஏழுமலையான் விஷயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் கண்டிப்பாக சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். பல நூற்றாண்டுகளாக புகழ் பெற்று விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புகழை குலைப்பதற்காகவே இதுபோன்ற செயல்களில் கடந்த ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தோன்றுகிறது.
ஏழுமலையான் விஷயத்தில் நான் ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பேன். ஒருபோதும் நாங்கள் தவறிழைக்க மாட்டோம். ஜெகன் மோகன் ரெட்டியின் அரசின் நடவடிக்கையால் பலகோடி பக்தர்களின் மனம் புண்பட்டுள்ளது. அந்த பக்தர்களில் நானும் ஒருவன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 11 நாள் மகா சண்டி யாகம் நல்லா சுரேஷ்ரெட்டி என்பவர் நடத்துகிறார்.
- 35 வேத பண்டிதர்கள் இதில் பங்கேற்றனர்.
திருப்பதி:
தெலுங்கான மாநிலம் பாலோஞ்சாவில் அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற 11 நாள் மகா சண்டி யாகம் நல்லா சுரேஷ்ரெட்டி என்பவர் நடத்துகிறார்.
மஹான்யபூர்வக ஏகாதச ருத்ராபிஷேகம், சூரிய நமஸ்காரங்கள், சுப்ரமணியேஸ்வர ஸ்வாமி ஆராதனை, ஷத சண்டி ஹோமம், மஹா சுதர்ஷன ஹோமம், மஹா நாராயண ஹ்ருதய கவச்ச பாராயணம் ஆகியவை தினமும் நடக்கிறது. 35 வேத பண்டிதர்கள் இதில் பங்கேற்றனர்.
பாலோஞ்சா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டனர்.
மினசோட்டா ஆளுநரும், அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளருமான டிம் வால்ஸ், ஹாரிஸின் வெற்றிக்காக யாகம் செய்ததற்காக நல்லா சுரேஷ்ரெட்டியை பாராட்டி செல்போனில் வீடியோ செய்தி அனுப்பியுள்ளார். இந்த யாகம் நாளை நிறைவடைகிறது.
- பிரதமருக்கு நீண்ட ஆயுள் வேண்டி சிறப்பு பூஜை, யாகம் நடைபெற்றது.
- கவுதமானந்த புரி சம்பத் சுவாமி யாகத்தினை நடத்தினார்.
தென்திருப்பேரை:
பிரதமர் மோடிபிறந்த நாள் வருகிற 17-ந் தேதி கொண்டாட படுவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், சேதுக்குவாய்த்தான் பகவதி அம்மன் கோவிலில் பாரதீய ஜனதா கட்சி வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர், கல்வியாளர் அரியமுத்து குணசேகர் தலைமையில் பிரதமருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், 2024-ல் பா.ஜனதா ஆட்சி அமையவும், மக்கள் நலம் பெற வேண்டியும் இன்று சிறப்பு பூஜை, யாகம் நடைபெற்றது.
யாகத்தினை கவுதமானந்த புரி சம்பத் சுவாமி நடத்தினார்.இதில் தொழிலதிபர், அரசு ஒப்பந்ததாரர் ஸ்டாலின், கூட்டுறவு பிரிவு மாநில துணைத் தலைவர் அருமைதுரை, மாநில விவசாய அணி திட்ட பொறுப்பாளர் தமிழ் செல்வி, கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் மாரி துரைசாமி, தென்திருப்பரை ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் குமார் என்ற பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய தலைவர்கள் ஜெயசிங், காமினி, கார்த்திக், ஒன்றிய துணைத் தலைவர் லிங்க சடச்சி, கோமதிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாஜக நிர்வாகி கோமதிராஜ் செய்திருந்தார்.
- சிறப்பு மூலிகைகள், வாசனை திரவியங்கள் யாக குண்டத்தில் போடப்பட்டது.
- சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
திருவண்ணாமலை:
உலக நன்மைக்காகவும், உலகத்தில் இருந்து கொரோனாவை முற்றிலும் விரட்டவும், நாடு முழுவதும் நல்ல மழை பொழிய வேண்டிய சித்தர்கள் அருள் வேண்டி சித்தர்கள் வாழும் ஆன்மீக நகரமான திருவண்ணாமலை நகரை ஒட்டி அமைந்துள்ள தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ள சுயம்பு சுப்பிரமணியசாமி கோவிலில் ஜப்பான் பக்தர்கள் சிறப்பு யாகம் செய்தனர்.
இதில் பல்வேறு வகையான சிறப்பு மூலிகைகள் வாசனை திரவியங்கள் யாக குண்டத்தில் போடப்பட்டது.
இந்த யாகத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சாக்கிகோ ஓஷி, சாயாஓஷி, மாஸ்கோஓஷி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இந்த யாகத்திற்கான சிறப்பு ஏற்பாடுகளை மரக்காணத்தை பூர்வீகமாக கொண்ட ஜப்பான் குடியுரிமை பெற்ற சுப்ரமணியம் செய்திருந்தார்.
இந்த யாகத்தில் தேவனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதில் கோவில் குருக்கள் சந்தோஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகம் நடத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.