என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்"

    • நேற்றிரவு சிவா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் வெள்ளியங்கிரி மலையேறினர்.
    • உயிரிழந்த சிவா இதயநோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மலைகோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது.

    இந்த மலையில் உள்ள சுயம்பு வடிவ லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த ஆண்டும் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை துருவம் பகுதியை சேர்ந்தவர் சிவா(வயது43). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    சிவா, தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக திருவண்ணாமலையில் இருந்து நேற்று கோவைக்கு வந்தார்.

    நேற்றிரவு சிவா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் வெள்ளியங்கிரி மலையேறினர். 6 மலைகளை கடந்து 7-வது மலைக்கு சென்ற அவர்கள், அங்கு சாமி தரிசனம் செய்தனர்.

    சாமி தரிசனம் முடித்த பின்னர் இன்று காலை அவர் மலையில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்தனர். 3-வது மலையில் வந்தபோது, சிவாவுக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் அப்படியே மயங்கினார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவரது நண்பர்கள் உடனடியாக டோலி கட்டி அவரை கீழே தூக்கி வந்தனர். பின்னர் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் சிவாவை ஏற்றினர்.

    அப்போது ஆம்புலன்ஸ் உதவியாளர் அவரை பரிசோதித்தபோது, சிவா உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த சிவா இதயநோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர் ஆஞ்சியோ செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உயிரிழந்த சிவா, பெங்களூருவில் பல ஆண்டுகளாக பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். 

    • அ.தி.மு.க. ஆட்சியில் திருச்செந்தூர் கோவிலுக்கு செய்தது என்ன?
    • கணவருக்கு சுவாசப் பிரச்சனை இருக்கிறது என்று அவரது மனைவி கைப்பட எழுதி கொடுத்துள்ளார்.

    திருச்செந்தூர் கோவிலில் ஓம்குமார் என்பவர் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்த நிலையில் திருச்செந்தூர் கோவிலில் சாமி கும்பிட சென்றவர் உயிரிழந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. ஆட்சியில் திருச்செந்தூர் கோவிலுக்கு செய்தது என்ன?

    * கணவருக்கு சுவாசப் பிரச்சனை இருக்கிறது என்று அவரது மனைவி கைப்பட எழுதி கொடுத்துள்ளார்.

    * இறந்தவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பாராட்டு
    • அய்யப்ப பக்தர்கள் ஆதிமணியை 9442164154 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்

    நாகர்கோவில்:

    அகில பாரத அய்யப்ப சேவா சங்க கன்னியாகுமரி மாவட்ட யுனியன் சார்பில் சபரிமலை விழாக்கால அன்னதானம் வழங்கும் தொடக்கவிழா சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் அய்யப்ப பக்தர்கள் ஓய்வு இல்லத்தில் மாவட்டத் தலைவர் மதுசூதன பெருமாள் தலைமையில் நடைபெற்றது. மாநில இணைச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ஆதிமணி அறிமுக உரையாற்றினார். இவ்விழாவில் சபரிமலை விழாக்கால அன்னதானத்தை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். அன்னதானத்தை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா, கோவா, மேற்கு வங்காளம் போன்ற பல்வேறு வெளிமாநி லங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் கன்னியாகுமரி மாவட்ட யுனியன் சார்பில் சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் புதிதாக ஓய்வு இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதில் வருகை தருகின்ற ஐயப்ப பக்தர்கள் தங்கலாம். மேலும் மூன்று நேரம் உணவு வழங்கும் வசதி, குடிநீர் வசதி உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்களுக்காக சிறந்த முறையில் பல்வேறு வசதிகளை செய்துள்ள அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கன்னியாகுமரி மாவட்ட யுனியன் பணிகளை பாராட்டுகிறேன்.

    வெளி மாநிலங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் தங்களுக்கு உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் மாநில இணைச் செயலாளரும், மாவட்டசெயலாருமான ஆதிமணியை 9442164154 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.

    விழாவில் அய்யப்ப பக்தர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது. இதனை தளவாய்சு ந்தரம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    • 10.15 மணிக்கு காமாட்சியம்மன் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • காலை 11 மணிக்கு தேச மங்கையர்க்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் பிரிவு, பழனிச்சாமி நகரில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு 4-ம் காலயாக பூஜையுடன் விழா தொடங்கியது. காலை 10 மணிக்கு விநாயகர், காமாட்சியம்மன், முத்துக்குமாரசாமி கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு காமாட்சியம்மன் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.வடி வேல், செயலாளர் டி.என். ஈஸ்வரன்,பொருளாளர் ஆர். செந்தில்குமார் உள்பட கோவில்கமிட்டிநிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 11 மணிக்கு தேச மங்கையர்க்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு திரைப்பட இன்னிசை விருந்து நடக்கிறது. நாளை 27-ந்தேதி மாலை 6 மணிக்கு முனைவர் அரசு பரமேசுவரன் தலைமையில் பக்தியும் பண்பாட்டையும் வளர்ப்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.வடி வேல், செயலாளர் டி.என். ஈஸ்வரன்,பொருளாளர் ஆர். செந்தில்குமார் உள்பட கோவில்கமிட்டிநிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • பைரவர் வீற்றிருக்கும் கருவறை பகுதி பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
    • ஸ்ரீமகா பைரவர் சிலையை சுற்றி 8 பைரவர்கள் அமையப் பெற்றுள்ளனர்.

    சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலைநகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    மகேந்திரா சிட்டி நகரின் உட்புறமாக சென்றால், அந்த வழித்தடம் நம்மை திருவடி சூலம் கிராமத்துக்கு அழைத்து செல்லும், அங்கு சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க, பச்சை பசேல் சூழ்நிலையில் மகா பைரவ ருத்ர ஆலயம் அமைந்துள்ளது. இந்த தலத்தின் நுழைவாயிலில் காலடி எடுத்து வைத்ததும் மனதில் அமைதி ஓடிவந்து ஓட்டிக் கொள்கிறது. பயம் என்ற சொல்லே பஞ்சாகப் பறந்து போய் விடுகிறது. பயம் போக்கும் பைரவர், நம் ஒவ்வொருவரது மனதிலும் வந்து உட்கார்ந்து கொள்கிறார்.

    கருவறை

    ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அதிலும் பைரவர் வீற்றிருக்கும் கருவறை பகுதி பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு மனிதன் தலைகீழாக நின்றால் எப்படி இருக்குமோ, அதே வடிவமைப்பில் பைரவர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கருவறை மிக அகலமாகவும், போக, போக மேலே ஒல்லியாகவும் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் பைரவருக்கு கீழ் 35 அடி ஆழத்தில் பாதாள பைரவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

    இந்த ஆகம தத்துவப்படி பார்த்தால், பைரவர் ஆலய கருவறையில் ஆசர்ஷணசக்தி நிலை கொண்டுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஆதிமூலம் உள்ளே உள்ளது. அதற்கு ஏற்ப மூலவர் ஸ்ரீமகா பைரவர் சிலையை சுற்றி 8 பைரவர்கள் அமையப் பெற்றுள்ளனர்.

    தேய்பிறை அஷ்டமி

    சிவ ஆகம விதிகளின்படி இங்கு தீப வழிபாடு நடத்தப்படுகிறது. இத்தலத்தில் பரிவார தெய்வங்களாக ருத்ர விநாயகர், வைஷ்ணவிதேவி, பிருத்தியங்கரா தேவி, வள்ளி- தேவசேனை சமேத சுப்பிரமணியர் உள்ளனர்.

    பிரகார காவல் தெய்வங்களாக நாகசக்தியும், வன துர்க்கையும் அமைந்துள்ளனர். சற்று தொலைவில் தன் வந்திரி பகவான் வீற்றுள்ளார்.

    அவர் முன் தீர்த்த கிணறு உள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எவ்வளவு கொடூர நோயாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகமாகும். ஸ்ரீமகா பைரவர் ஆலயத்தின் ஒரு பகுதியில் கோமாதா குடிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இத்தலத்தில் தினமும் காலை 6 மணி,மாலை 6 மணி, இரவு 8 மணி ஆகிய நேரங்களில் மூன்று கால பூஜை நடத்தப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறும். கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் ஒரு முழம்பூ வாங்கிப் போட்டு வணங்கினால் கூட பைரவர் மகிழ்ச்சி அடைவார்.

    பைரவ சித்தாந்தம் சுவாமிகள்

    இயல்பான நிலையில் இறைவனை வழிபட வேண்டும் என்பது இந்த ஆலயத்தை கட்டியுள்ள ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகளின் கருத்தாகும்.

    ஸ்ரீமகா பைரவர் 12 ராசிகளையும் தன் அங்கமாக கொண்டவர். எனவே ராசிப்படி ஏற்பட்ட கர்மங்கள் தொலைந்து போகும். திருவடி சூலம் ஸ்ரீமகாபைரவ ருத்ர ஆலயத்தில் ஒருதடவை காலடி எடுத்து வைத்தால் நீங்கள் அதை உணர்வீர்கள்.

    • ஆடி வெள்ளியை முன்னிட்டு உடுமலையின் காவல் தெய்வமான மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனையும் அஷ்டதிக் நாகர்களையும் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்

     உடுமலை:

    ஆடி வெள்ளியை முன்னிட்டு உடுமலையின் காவல் தெய்வமான மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு மஞ்சள், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால் தயிர், பன்னீர், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், திருநீறு உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மாலை 6 மணிக்கு சிறப்பு யாகத்துடன் வாசுகி, குளிகன், தட்சகன், பத்மன், கார்கோடகன், மகாபத்மன், அனந்தன், சங்கபாலன், நாகர்களுக்கு பூஜை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனையும் அஷ்டதிக் நாகர்களையும் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

    முன்னதாக பக்தர்கள் திரிசூலத்திற்கு எலுமிச்சைகனியையும் பலிபீடத்திற்கு கல்உப்பு சாற்றியும் விளக்கு ஏற்றியும் வழிபட்டனர். 

    • ஏழைகளின் ரதம் என்று அழைக்கக்கூடிய ரெயில் போக்குவரத்து அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
    • தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்

    உடுமலை,ஜுலை.31-

    குறைவான செலவில் நிறைவான பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தி தருவது ரெயில் போக்குவரத்து. ஏழைகளின் ரதம் என்று அழைக்கக்கூடிய இந்த போக்குவரத்து அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.இதன் காரணமாக ஆன்மீகப் பயணம் சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட நீண்ட தூர பயணம் செய்பவர்களின் முதல் தேர்வாக ரெயில் போக்குவரத்து உள்ளது. அந்த வகையில் கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    மேலும் திருச்செந்தூர் கோவிலுக்கு முருகனை தரிசிக்க மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.இந்த நிலையில் சனி ஞாயிறு வார விடுமுறை யொட்டி திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நேற்று உடுமலை ரெயில் நிலையத்தில் திரண்டனர். இதன் காரணமாக டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் அலைமோதியதால் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கு மாற்று ஏற்பாடாக அங்கு அமைக்கப்பட்ட தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரமும் சரியாக செயல்படவில்லை என்று தெரிகிறது.

    இதனால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். நீண்ட நேர காத்திருப்புக்கு பின்பு ஒரு வழியாக டிக்கெட் எடுத்துக்கொண்டு ரெயிலில் ஏறிச் சென்றனர். மேலும் வார விடுமுறை, பொது மற்றும் அரசு விடுமுறைகள், பண்டிகை நாட்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்தால் பொதுமக்கள் அதிகளவில் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆடிப்பெருக்கு விழாவை நடத்துவதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை இணைந்து நடவடிக்கை எடுத்தது.
    • ஆடிப்பெருக்கு விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்கு பொதுமக்களும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு பயனாளிகளும் வருகை தருவார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் அளித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப் பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியில் திருமூர்த்தி அணை, சிறுவர் பூங்கா, நீச்சல் குளம்,படகு இல்லம், வண்ண மீன்காட்சியகம் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களும் அமைந்துள்ளது. இதனால் திருமூர்த்தி மலையில் உள்ள இயற்கை சூழலை ரசிக்கவும் பஞ்சலிங்க அருவியில் குளித்து புத்துணர்வு பெறவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்வதற்கும் நாள்தோறும் ஏராளமான வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கிறார்கள். இதனால் திருமூர்த்தி மலை சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.

    இதன் காரணமாக திருமூர்த்தி மலைப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆடிப்பெருக்கு விழாவை நடத்துவதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை இணைந்து நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2013 -ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் வருகின்ற ஆடிப்பெருக்கு தினத்தன்று திருமூர்த்திஅணைக்கு அருகே உள்ள பகுதியில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது வனம்,வருவாய், தோட்டக்கலை, சமூகநலம், பொதுப்பணி, சுற்றுலா, சுகாதாரம், போக்குவரத்து, பட்டு வளர்ச்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கால்நடை பராமரிப்பு, குழந்தைகள் வளர்ச்சி, வேளாண்மை துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக அதற்கான தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும்.அதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களை எளிதில் சென்றடைந்தது.

    அதுமட்டுமின்றி தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம்,வால் சண்டை,மான் கொம்பு உள்ளிட்ட தற்காப்பு கலைகளும், பரதம், யோகாசனம்,கிராமிய பாடல்கள்,கரகாட்டம் போன்றவற்றையும் வீரர்,வீராங்கனைகள் விழாவில் தத்துவமாக செய்து காட்டுவார்கள். ஆடிப்பெருக்கு விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்கு பொதுமக்களும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு பயனாளிகளும் வருகை தருவார்கள்.

    ஆனால் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த ஆடிப்பெருக்கு விழா பல்வேறு நிர்வாக காரணங்களால் கடந்த 2019 -ம் ஆண்டில் நடத்தப்படவில்லை. அதை தொடர்ந்து கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடத்தவில்லை. இந்த சூழலில் இந்த ஆண்டில் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவியது.ஆனால் அதற்குண்டான நடவடிக்கைகள் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை.இந்த நிலையில் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி திருமூர்த்தி மலையில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.கோவில், அருவி, அணைப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் ஆடிப்பெருக்கு விழாவை எதிர்நோக்கி வருகை தந்திருந்த வெளிமாவட்ட பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அத்துடன் ஆடி மாதம் முடிவதற்குள் திருமூர்த்தி மலையில் அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • அதிகாலை 4 மணி முதல் சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் காசிக்கு நிகரான கோவில் போன்ற பல சிறப்பு வாய்ந்த அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று ஆடிபெருக்கை முன்னிட்டு சுவாமி சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடந்தது.

    அதிகாலை 4 மணி முதல் சாமி தரிசனம் செய்வதற்காக அவினாசி, கருவலூர், சேவூர், தெக்கலூர், பழங்கரை, மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து குழந்தைகள் பெண்கள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதே போல் அவினாசி கரிவரதராஜப்பெருமாள் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில், காரணப் பெருமாள் கோவில், ஆகாசராயர் கோவில்,கருவலூர் மாரியம்மன் கோவில், பழங்கரை பொன்சோ ழீசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    • உலக நன்மைக்காக 45 நாள் மகா சகஷ்ர சண்டி யாகத்தில் அதிசயம்
    • 45-வது நாளில் வடமாநில சாமியார்கள் பங்கேற்பு

    சூலூர்,

    சூலூர் அருகே தென்னம்பாளையத்தில் ஜெய்ஹிந்த் பாரத பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை சார்பில் உலக நன்மைக்காக 45 நாள் மகா சகஷ்ர சண்டி யாகம் நடைபெற்று வருகிறது. இந்த யாகத்தின் ஒரு பகுதியாக தென்னம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் என்ற பக்தர் இலந்தை முள் படுக்கையில் தினமும் ஒரு மணி நேரம் படுத்து யாகத்தினை நடத்தி வருகிறார்.

    விழாவின் நிறைவில் பசு, குதிரை ஆகியவை யாக குண்டத்தினை வலம் வர மேள, தாளங்களுடன் பூர்ணாகுதி நடைபெற்றது. 45-வது நாளில் வட நாட்டில் இருந்து சாமியார்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த யாகத்தின் மூலம் எதிரிகள் அழிந்து உலக மக்கள் நலமுடன் வாழ்வர் என தெரிவிக்கப்பட்டது. இந்த யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று கூட்டம் அலை மோதியது
    • நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நாகர் சிலை களுக்கு பாலூற்றி வழி பட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணம் கை கூடும் என்பது ஐதீகம்.இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமை களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இன்று காலை புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இதனை முன்னிட்டு நாக ராஜா கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தன.நடை திறந்தது முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நாகராஜரை தரிசிக்க வந்திருந்தனர். கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பெண்கள் பாலூற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழி பட்டனர். நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    கோவில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதி கள் செய்யப்பட்டு இருந்தது. கடந்த 4 வாரங்களாக இரு சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களையும் கார்களையும் கோவில் வளாகத்திற்குள் நிறுத்தி விட்டு சாமி தரிசனத்திற்கு சென்றனர். பக்தர்களுக்கு கோவில் கலையரங்கத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    • கொழுக்கட்டை, பொரி படைத்து வழிபாடு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி இந்து மகா சபா பாரதிய ஜனதா தமிழ்நாடு சிவசேனா உள்பட பல்வேறு இந்த அமைப்பு கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முக்கிய சந்திப்புகள் பொது இடங்களில் விநா யகர் சிலைகளை இன்று அதிகாலையிலேயே பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலை களுக்கு பக்தர்கள் கொழுக்கட்டை படைத்தும் வழிபாடு செய்தார்கள். மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 2 அடி முதல் 10 அடி உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ளது. கற்பக விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர் உள்பட பல்வேறு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய் யப்பட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற் கொண்டனர். விநாயகர் சிலைகள் உரிய அனுமதி வாங்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி விநாயகர் கோவில்களிலும் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள், அபிஷேகங்கள் நடந்தது. இதை எடுத்து விநாயகர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோட்டார், மீனாட்சிபுரம், வடசேரி, கிருஷ்ணன் கோவில் உள்பட நாகர் கோவில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநா யகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய் யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    விநாயகருக்கு பொரி, கொழுக்கட்டை படைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்றிரவு தக்கலை, குளச்சல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட் டார். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×