என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி பறிமுதல்"

    • உரிய ஆவணங்கள் இன்றி கிரானைட் கற்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.
    • அந்த லாரியை மத்தூர் போலீசாரிடம் கனிம வள அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லம்பள்ளி பிரிவு சாலையில் கனிம வள அலுவலர் பொன்னுமணி தலைமையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக ஒரு லாரி வந்தது.

    அதிகாரிகளை பார்த்ததும் லாரியை நிறுத்திவிட்டு அதை ஒட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதையடுத்து அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி கிரானைட் கற்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.

    அந்த கற்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்படுகிறது. கிரானைட் கற்களுடன் நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரியை மத்தூர் போலீசாரிடம் கனிம வள அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த லாரி யாருடையது? தப்பி ஓடிய டிரைவர் யார்?என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்க விரைந்து சென்றனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து லாரியை டிரைவர் பாண்டிதுறையை கைது செய்தனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை தாலுகா மட்டிகை கிராமத்தில் அனுமதி பெறாமல் ஜல்லி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வருவதாக திருநாவலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்க விரைந்து சென்றனர். அப்போது லாரி ஒன்று அதிவேகமா வந்தது. போலீசார் உடனடியாக அந்த லாரியை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மன்னார்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை அனுமதி இன்றி லாரியில் ஜல்லி கடத்தியது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து லாரியை டிரைவர் பாண்டிதுறையை கைது செய்தனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்தனர். 

    • புவியியல் மற்றும் சுரங்க துறை தனி வருவாய் ஆய்வாளர் கவுதமன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தினர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள ஆரூர்பட்டி கிரா மத்தில் சேலம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை தனி வருவாய் ஆய்வாளர் கவுதமன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தினர். அப்போது அதன் டிரைவர் கீழே இறங்கி ஓடினார். லாரியை சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து

    தாரமங்கலம் காவல்

    நிலையத்தில் ஒப்படைத்த னர். மேலும் இது தொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணியாமூரில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 4 முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2.5 டன் யூனிட் கருங்கல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் உதவி புவியிலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தனி துணை வட்டாட்சியர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் (கணிமம்) ஆகியோருடன் கணியாமூரில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 4 முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அனுமதியின்றி 2.5 டன் யூனிட் கருங்கல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிறகு உதவி புவியிலாளர் பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஓடை பகுதியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள லாரியை பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள காவேரியப்பன் கொட்டாய் கிராமத்தில் ஓடை பகுதியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில், பாலக்கோடு வருவாய் வட்டாட்சியர் ராஜா சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் பொப்பிடி பகுதியை சேர்ந்த சிவக்குமார் அரசு அனுமதி இன்றி செம்மண் அள்ளுவது தெரிய வந்தது. இதில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள லாரியை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • டிப்பர் லாரியில் அனுமதியின்றி செம்மண் பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
    • போலீசார் டிரைவர் முனுசாமியை கைது செய்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே லாரிகளில் கனிமவளம் கடத்தப்படுவதாக பவானி தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பொன்னு சாமி, உதவியாளர் ரவிக்குமார், அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பவானி - மேட்டூர் ரோட்டில் மாணிக்கம்பாளையம் பிரிவு அருகே வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது அனுமதியின்றி செம்மண் பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    விசாரணையில் லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த பல்லக்கா பாளையத்தை சேர்ந்த ஒசுவங்காட்டை சேர்ந்த முனுசாமி என்பதும், லாரி யின் உரிமையாளர் சங்க கிரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த சிவசங்கர் மற்றும் ஜெகன் ஆகியோர் லாரியை வாடகைக்கு எடுத்து செம்மண்ணை கடத்தி சேலம், நாமக்கல் மாவட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் முனுசாமியை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிவசங்கர் மற்றும் ஜெகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பறக்கும் படை அதிகாரி தலைமையில், குழுவினர் பாகலூரில் சர்ஜாபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • லாரியை சோதனை செய்த போது 6 யூனிட் கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது

    ஓசூர்,

    விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி பொறியாளரும், மண்டல பறக்கும் படை அதிகாரியுமான விஜயலட்சுமி தலைமையில், குழுவினர் நேற்று முனதினம் பாகலூரில் சர்ஜாபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில் 6 யூனிட் கற்கள் அனுமதியின்றி கடத்தி வந்தது தெரிய வந்தது-. இது குறித்து அதிகாரி விஜயலட்சுமி, பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் கனிமொழி வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அடைக்கலசாமி காரைக்கால் பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
    • இதுகுறித்து, அவரது மனைவி அனிதாமேரி புகார் கொடுத்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அடுத்த நெடுங்காடு காமராஜர் சாலை, அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் அடைக்கலசாமி (வயது42) லாரி ஓட்டுநர். இவரது மனைவி அனிதாமேரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அனிதாமேரி, காரைக்கால் பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அடைக்க லசாமி காரைக்காலில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற்று லாரி ஒன்று வாங்கினார். கடனை சரிவர செலுத்தாததால், வங்கி நிர்வாகத்தினர், அடைக்கலசாமி லாரியை பறிமுதல் செய்தனர். இதனால் மனமுடைந்த அடைக்கலசாமி, மது குடிக்க ஆரம்பித்தார். சம்பவத்தன்று வழக்கம் போல், அடைக்கலசாமி அதிகமாக மது குடித்து வீட்டில் சண்டை போட்டு ள்ளார். இதனையடுத்து அடைக்கலசாமி தூங்கி விட்டார். மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது, அடைக்கலசாமி தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது மனைவி அனிதாமேரி கொடுத்த புகாரின் பேரில், காரை க்கால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் மேலப்பட்டி - வசந்தபுரம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் லாரியை சோதனை செய்தபோது, அதில் அரசு அனுமதி இன்றி மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் நல்லூர் ஆர்.ஐ மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் மேலப்பட்டி - வசந்தபுரம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். இதையடுத்து டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிஓடி விட்டார்.

    அதிகாரிகள் லாரியை சோதனை செய்தபோது, அதில் அரசு அனுமதி இன்றி மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து மேல்சாத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் கீதா, நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து, மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • மேட்டூர் அருகே மேச்சேரியில் செம்மண் கடத்தப்படுவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
    • சேலம் கனிம வள தனி வருவாய் ஆய்வாளர் பிரசாத் தலைமையிலான அலுவலர்கள், மேச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே மேச்சேரியில் செம்மண் கடத்தப்படுவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில், சேலம் கனிம வள தனி வருவாய் ஆய்வாளர் பிரசாத் தலைமையிலான அலுவலர்கள், மேச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, தொப்பையாறு பகுதியில் இருந்து வரும் வாகனங்களை தீவிர சோதனை செய்தனர்.

    அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்த அதிகாரிகள் முயன்றபோது, லாரியை நிறுத்தி விட்டு, ஓட்டுநர் தப்பியோடினார். இதையடுத்து லாரியை சோதனை செய்ததில் 3 யூனிட் செம்மண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    லாரியை கைப்பற்றிய அதிகாரிகள் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வேலூர் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று மாலை நடந்தைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று மாலை நடந்தைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, டிரைவர் லாரியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    லாரியை சோதனை செய்தபோது, அரசு அனுமதி இன்றி 1 யூனிட் கிராவல் மண்ணை கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து நடந்தை கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி, நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் பூபதிராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • போலீசார் தருமபுரி முடங்கேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • ஒரு யூனிட் அளவிலான நுரம்பு மண்ணை வெட்டி கடத்தியது.

    தருமபுரி,

    தருமபுரி பகுதியில் நுரம்பு மண்ணை சிலர் வெட்டி கடத்துவதாக டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் தருமபுரி முடங்கேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சிலர் நுரம்பு மண்ணை டிப்பர் லாரியில் கடத்தி வந்தனர். உடனே போலீசார் அந்த வண்டியை வழிமறித்தனர். போலீசாரை கண்ட டிப்பர் லாரியை ஓட்டிவந்த டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    அந்த வண்டியை போலீசார் சோதனை செய்ததில் ஒரு யூனிட் அளவிலான நுரம்பு மண்ணை வெட்டி கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரு யூனிட் நுரம்பு மண்ணையும், கடத்தலுக்கு பயன்படுத்திபோலீசார் தருமபுரி முடங்கேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ய டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். தலைமறைவாக உள்ள டிரைவர், லாரி உரிமையாளர் ஆகிய 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

    ×