என் மலர்
நீங்கள் தேடியது "வாக்காளர் அட்டை"
- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
- இதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம் இப்பணியை கடந்த 2021ல் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நிறைவடைகிறது.
இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் 2024, மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
- இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
- 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர்.
தாராபுரம் :
வாக்காளர் பட்டியலை முறைப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் முதல் வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு தொடங்கியது.
'Voter Help Line' செயலி, nvsp.in என்கிற தேர்தல் கமிஷன் இணையதளம் வாயிலாக ஆதார் எண் இணைக்க வழிவகை செய்யப்பட்டது. வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்றபோது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விவரங்களை பெற்றனர். ஆதார் இணைப்புக்கு இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர். இவர்களில் இதுவரை 55.84 சதவீதம் பேர் அதாவது 12 லட்சத்து 90 ஆயிரத்து 837 பேர் மட்டுமே ஆதார் எண் இணைத்துள்ளனர்.வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் 36.13 சதவீதத்துடன் திருப்பூர் வடக்கு தொகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர் 3.84 லட்சம் பேரில் 1.38 லட்சம் பேர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர். பல்லடம் தொகுதியில் 52.13 சதவீதம் பேர், திருப்பூர் தெற்கில் 53.80 சதவீதம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். ஆதார் இணைப்பு விகிதத்தில் மடத்துக்குளம், உடுமலை தொகுதிகள் முந்துகின்றன.
2.29 லட்சம் வாக்காளரில் 1.58 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதனால் 69.04 சதவீதத்துடன் ஆதார் இணைப்பில் மடத்துக்குளம் முன்னிலை வகிக்கிறது. உடுமலையில் 63.21 சதவீதம், தாராபுரத்தில் 62.68,அவிநாசியில் 61.47, காங்கயத்தில் 60.76 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.போலிகளை களைந்து செம்மையான வாக்காளர் பட்டியல் உருவாக வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு மிகவும் அவசியமாகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் மொத்த வாக்காளரில் 44 சதவீதம் அதாவது 10.20 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண் இணைக்கவி ல்லை. தேர்தல் கமிஷன், ஆதார் இணைப்புக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி 100 சதவீத ஆதார் இணைப்பை எட்ட செய்யவேண்டும் என்பது பெரும்பாலான அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- நாடு முழுவதும் இன்று 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு.
- அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்லலாம்.
வாக்காளர்கள் ஓட்டுப்போட செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.
அவ்வாறு இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்லலாம். அதன் விவரம் வருமாறு:-
1. ஆதார் அட்டை
2. பான் அட்டை
3. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை
4. வங்கி மற்றும் தபால் நிலையங்களில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய புத்தகம்.
5. தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை.
6. ஓட்டுனர் உரிமம்.
7. பாஸ்போர்ட்
8. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை.
9. மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கான அட்டை.
10. மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை.
- கலியமூர்த்தி, திருசங்குவிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 59). இவருக்கு ரூ.50லட்சம் மதிப்பிலான 38 சென்ட் நிலம் பண்ருட்டி அருகே உள்ள மனம்தவிழ்ந்த புத்தூர் கிராமத்தில் உள்ளது.
இந்த நிலையில் கலியமூர்த்திக்கு சொந்தமான 38 சென்ட் நிலம், அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் திருசங்குவின் பெயரில் மாறியதாக தகவல் வந்தது. இதையடுத்து கலியமூர்த்தி, தனது வீட்டில் இருந்து நிலப் பத்திரத்தை தேடிய போது அதனை காணவில்லை. மேலும், வாக்காளர் அடையாள அட்டையையும் காணவில்லை.
இதனைத் தொடர்ந்து கலியமூர்த்தி, திருசங்குவிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருசங்கு, கலியமூர்த்தியை அசிங்கமாக திட்டி விரட்டியடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர், கலியமூர்த்தியை மீட்டு அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கலியமூர்த்தி, இது குறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகாரளித்தார்.
விசாரணையில், கலியமூர்த்திக்கு சொந்தமான நிலத்தின் பத்திரத்தையும், வாக்காளர் அடையாள அட்டையையும், திருசங்கு திருடியது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கலியமூர்த்தியின் வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த அவரது போட்டோவுக்கு பதிலாக, பொண்ணாங்குப்பத்தை சேர்ந்த மூர்த்தியின் போட்டோவை வைத்து போலியாக வாக்காளர் அடையாள அட்டையை திருசங்கு தயார் செய்துள்ளார்.
போலியாக தயாரிக்கப்பட்ட ஆதாரத்தை வைத்து கலியமூர்த்திக்கு சொந்தமான நிலத்தை மூர்த்தியை வைத்து புதுப்பேட்டை பத்திரபதிவு அலுவலகத்தில் திருசங்கு கிரயம் பெற்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திருசங்கு, அவருக்கு உடந்தையாக இருந்த மூர்த்தி, திருநாவுக்கரசு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், புதுப்பேட்டை பத்திர பதிவு அலுவலர் பாலாஜி, பத்திர எழுத்தர் சீனிவாசன் ஆகியோர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஒருவர் இறந்துவிட்டால், அவர்களது உறவினர்கள் அளிக்கும் படிவம் 7ன் அடிப்படையில் பெயர் நீக்கப்படும்.
- முகவரி மாற்றம் என்பது, வாக்குச்சாவடி அலுவர்களின் கள ஆய்வின்போது கண்டறியப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை தன்னிச்சையாக நீக்க முடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் புகாருக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
வாக்களார் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கான பெயர்களை தேர்தல் துறையால் தன்னிச்சையாக நீக்கப்பட்டதாக ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார்.
இதற்கு, விளக்கம் அளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறுகையில், "சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் விளக்கம் கேட்ட பிறகுதான் பெயர்கள் நீக்கப்படுகிறது. முகவரி மாற்றம், மரணம் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே பெயர்கள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கைகளுக்கு சுமார் 2 வார காலம் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகே, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுகிறது.
ஒருவர் இறந்துவிட்டால், அவர்களது உறவினர்கள் அளிக்கும் படிவம் 7ன் அடிப்படையில் பெயர் நீக்கப்படும். வீடுகளில் வாக்காளர்கள் இல்லாமல் இருப்பது, ஒவ்வொரு முறையும் வாக்குச்சாவடி அலுவலர்களால் உறுதி செய்யப்படுகிறது.
முகவரி மாற்றம் என்பது, வாக்குச்சாவடி அலுவர்களின் கள ஆய்வின்போது கண்டறியப்படுகிறது" என்றார்.
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
- வரும் ஜன.1, 2025 அன்று 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில்,
நவம்பர் 9, 10, 23, 24 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
வரும் ஜன.1, 2025 அன்று 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற உள்ளது.
தேவையான அளவு படிவங்களை வைத்திருக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
- தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க உத்தரவிட்டுள்ளது .
- பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர் :
தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க உத்தரவிட்டுள்ளது . இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் வாகனத்தில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சியினரின் இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் பெற்றுள்ளது.
- வீடு வீடாக சென்று ஆதார் கருடா செயலி மூலமாக இணைப்பையும் மேற்கொள்கின்றனர்.
- வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்ணையும், மார்ச் 31-ந் தேதிக்குள் இணைத்துவிட வேண்டும்.
திருப்பூர் :
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடுமுழுவதும் நடந்து வருகிறது. இதற்காக 6பி என்ற படிவத்தை அறிமுகம் செய்துள்ள தேர்தல் ஆணையம், வீடு வீடாக வாக்காளர் பதிவு அலுவலரை அனுப்பி விவரங்களை பெற்று வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் வீதம் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களே வீடு வீடாக சென்று ஆதார் கருடா செயலி மூலமாக இணைப்பையும் மேற்கொள்கின்றனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- பலரும் வங்கிக்கணக்கு, ஆதார் எண் இணைப்பது என தவறான புரிதலில் உள்ளனர்.சில வீடுகளில், எல்லாரும் வேலைக்கு போய்ட்டாங்க என்றும் கூறுகின்றனர்.எவ்வளவு பிரச்னை என்றாலும், வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்ணையும், மார்ச் 31-ந் தேதி 2023க்குள் இணைத்துவிட வேண்டும். பள்ளி வேலைநாட்களில் சுழற்சி முறையில் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆசிரியருக்கும் குறைந்தது 800 முதல் 1500 பேருக்கு மேல் இணைக்க வேண்டி வரும்.இந்நிலையில், பாடக்குறிப்பேட்டை தயார் செய்ய வேண்டும். காலாண்டு தேர்வுக்கான பாடம் நடத்த வேண்டும். ஓராசிரியர், இரண்டு ஆசிரியர் மட்டுமே இருக்கும் பள்ளிகளில் சுழற்சி முறையில் மாற்று ஆசிரியர் கற்பிக்கவும் வழியில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வாக்காளர்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைக்க நாளை அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்.
- வாக்காளர்கள் படிவம் 6B-னை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 1-8-2022 முதல் இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கி செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. வாக்காளர்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
அப்போது வாக்காளர்கள் படிவம் 6B-னை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த வாய்ப்பை அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
- வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி 1.8.2022 தொடங்கி 31.3.2023 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர்.
சென்னை:
நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆகஸ்டு 1-ந்தேதியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இந்த பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, ஆதார் விவரங்களை வாக்காளர்கள் படிவம் 6பி என்ற படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் நேரடியாகவோ அல்லது என்.வி.எஸ்.பி, வி.எச்.ஏ என்ற ஆன்லைன் மூலமோ வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி 1.8.2022 தொடங்கி 31.3.2023 வரை (8 மாதம்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களே வீட்டுக்கு நேரடியாக வந்து, விண்ணப்ப படிவத்தை வழங்கி, வாக்காளர்களின் விவரங்களை பூர்த்தி செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் இந்த பணி ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும், தற்போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு அதிகம் பேர் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 கோடியே 66 லட்சத்து 48 ஆயிரத்து 608 பேர் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பதிவு செய்துள்ளனர்.
இது 27.78 சதவீதம் ஆகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் 6.08 சதவீதம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக 21 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பம் அளித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, 'இவர்களில் 90 சதவீதம் பேருக்கும் மேற்பட்டவர்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழியாக பதிவு செய்துள்ளனர். வருகிற நவம்பர் மாதம் 9-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெறும். அப்போது அதிகம் பேர், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு உள்ளது' என்றார்.
- போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆதார் இணைப்பில் மந்தம் நிலவியது.
- ஆர்.டி.ஓ., பண்டரிநாதன், ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில், 23.33 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி வாக்காளர் விவரத்துடன் ஆதார் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆதார் இணைப்பில் மந்தம் நிலவியது. அதன்பின் மாவட்ட அதிகாரிகளின் உத்தரவுப்படி, சட்டசபை தொகுதி வாரியாக, வாக்காளர் விழிப்புணர்வு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக, கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்தி, இளம் வாக்காளராகிய கல்லூரி மாணவ, மாணவிகள் ஆதார் இணைக்க வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. திருப்பூர் தெற்கு தொகுதி சார்பில், செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறப்பு முகாம் நடந்தது. ஒரு மணி நேரத்தில் 500க்கும் அதிகமான வாக்காளர்கள், தங்கள் ஆதார் விவரத்தை இணைத்துள்ளனர்.திருப்பூர் வடக்கு தாலுகாவில், பொதுமக்களுக்கு ஆதார் இணைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்டோ பிரசாரம் துவங்கியுள்ளது.
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ., பண்டரிநாதன், ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்தார்.தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், ஆதார் இணைப்பு என்பது, வாக்காளரின் விருப்பம் என்றாலும், ஆதார் இணைப்பின் மூலமாக செம்மையான பட்டியலை தயாரிக்க முடியும். எனவே தேர்தல் கமிஷன் அழைப்பை ஏற்று வாக்காளர் தங்களின் ஆதார் விவரத்தை இணைக்க முன்வர வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 2.60 லட்சம் வாக்காளர் ஆதார் இணைத்துள்ளனர். இது மொத்த வாக்காளரில் 10 சதவீதம். ஆதார் இணைக்க போதிய அவகாசம் இருந்தாலும் முன்கூட்டியே விவரத்தை இணைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.
- 1-ந் தேதி முதல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Voters Helpline App என்ற கைப்பேசி செயலி மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
கோவில்பட்டி:
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நாளை ( சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் பட்டி தாசில்தார் சுசிலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் வாக்காளரை உறுதி செய்யவும், வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தவிர்க்கும் வகையில் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் பேரில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது.
இப்பணியானது கடந்த 1-ந் தேதி முதல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடுகளுக்குச் சென்று ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் அனை வரும் பயன்பெறும் வகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி அலுவலர்க ளால் இப்பணி நடைபெற உள்ளது.
பொதுமக்கள் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளிடம் உரிய ஆவ ணங்களை சமர்ப்பித்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் www.nvsp.in, Voters Portal என்ற இணையதளங்களின் மூலம் இணையவழியில் படிவம் 6பி உள்ளீடு செய்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். Voters Helpline App என்ற கைப்பேசி செயலி மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.