என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புளியங்குடி"

    • பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது.
    • முப்பெரும் தேவியர் அம்மனுக்கு 27வகை அபிஷேகம் நடந்தது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் தை மாத பவுர்ணமி பூஜை சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது.

    இங்குள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு 1008 லிட்டர் பாலபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு மாலை 6 மணிக்கு குருநாதர் சக்தியம்மா தைப்பூசம், தை மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    மாலை 7 மணிக்கு முப்பெரும் தேவியர் அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர் நறுமண பொருட்கள் உள்பட 27வகை அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்று காளி, நாகக்காளி சூலக்காளி, ரத்தக் காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளி அம்மன், மாகாளியம்மன், பேச்சியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

    இதில் பெண்கள் கலந்துகொண்டு தீபமேற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • புளியங்குடி அருகே உள்ள அரியூரை சேர்ந்த மனோஜ்பாண்டி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • டிராக்டரின் பின்பக்க சக்கரம் மற்றும் அதன் அருகே பொருத்தப்பட்டிருந்த ரொட்டவேட்டர் எந்திரத்தில் சிக்கினார்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அரியூரை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் மனோஜ்பாண்டி (வயது15). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மாணவன் பலி

    இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (16). இவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை நண்பர்கள் இருவரும் அங்குள்ள வயல்பகுதிக்கு சென்றனர்.

    பின்னர் விவசாயத்திற்கு பயன்படுத்தபடும் டிராக்டரில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் இருந்த மனோஜ்பாண்டி தவறி கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் பின்பக்க சக்கரம் மற்றும் அதன் அருகே பொருத்தப்பட்டிருந்த ரொட்டவேட்டர் எந்திரத்தில் சிக்கினார். இதில் அவரது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    போலீசார் விசாரணை

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு புளியங்குடி இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் போலீசார் மனோஜ்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருசாபிஷேகத்தை முன்னிட்டு கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி மீனாட்சி அம்பாள் சொக்கலிங்க சுவாமி கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது. வருசாபிஷேகத்தை முன்னிட்டு கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பூஜை களை கோவில் அர்ச்சகர் சிவா பட்டர், கண்ணன் பட்டர், முத்துக்குட்டி பட்டர் நடத்தினர். விழாவில் செயல் அலுவலர் ஸ்ரீதேவி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சித்துராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கட்ராமன், உபயதாரர்கள் கணேசன், செல்லத்துரை, செல்வ நாராயணன், பால்ராஜ், மரியதாஸ், வைத்தியலிங்கம் மற்றும் பிரதோஷ கமிட்டி குமார், ஆண்டியப்பன், மகேந்திரன், உதயகுமார், ரமேஷ், முன்னாள் திருப்பணி கமிட்டி ஆவுடையப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அனிதாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் திருமணமாகவில்லை.
    • மருதநாச்சியார்புரத்தில் உள்ள ஒரு வயலில் அனிதா மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார்.

    நெல்லை:

    புளியங்குடி அருகே சுப்பிரமணியபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அனிதா(வயது 35). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் திருமணமாகவில்லை. அவரது பெற்றோரும் இறந்துவிட்டதால் தனது சகோதரிகளின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த அனிதா திடீரென மாயமானார். இதனால் அவரது தங்கை மகன் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அனிதா மருதநாச்சியார்புரத்தில் உள்ள ஒரு வயலில் மர்மமான முறையில் இறந்துகிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அவரது உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர். புளியங்குடி போலீசாரும் அங்கு சென்று அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    • புளியங்குடி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சுப்ரமணியன் காட்டு பன்றியை வேட்டையாடியது விசாரணையில் தெரியவந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனவர் மகேந்திரன், குமார் தலைமையில் வனத்துறையினர் முருகேசன், அஜித் ராஜ், மணிகண்டன், தாசன் ஆசீர்வாதம், மாரியப்பன், திருமலை, சன்னாசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில், அவர் புளியங்குடி பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பதும், அவர் கொய்யாப்பழத்தில் வெடி மருந்து வைத்து காட்டு பன்றியை கொன்று வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து வேட்டையில் ஈடுபட்ட சுப்ரமணியனுக்கு ரூ.40 ஆயிரம் வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.  

    • முப்பெரும்தேவியருக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • வருகிற 2-ந்தேதி பால்குடம், தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெறும்.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் நாகக் கன்னியம்மன், பெரிய பாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன் கோவிலில் சித்திரைப் திருவிழாவிற்கு நாள் கால் நட்டுதல் நிகழ்ச்சி இன்று குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடைபெற்றது.

    அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும்தேவியர் அம்மாக்களுக்கு சந்தனம், குங்குமம், தயிர், பால், இளநீர் நறுமணப் பொருட்கள் உள்பட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின் சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக் காளி, பதினெட்டாம் படி கருப்பசாமி, மகாகாளி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து அக்னிச்சட்டி, பால்குடம், தீர்த்த குடம் எடுக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முக்கிய திருவிழாவான வருகிற 2-ந்தேதி காலை 7 மணிக்கு பால்குடம், தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெறும்.

    காலை 8 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் பக்தர்கள் அக்னிச்சட்டி, அக்னி காவடி, அலகு குத்துதல் நடைபெற இருக்கிறது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இரவு 8 மணி அளவில் சிறப்பு அன்ன தானம் நடைபெறுகிறது. 3-ந்தேதி அதிகாலை 6 மணி அளவில் கோவில் முன்பு பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    திருவிழா நாட்களில் அம்மனுக்கு தினமும் காலையில் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். மாலை 6 மணி முதல் முளைப்பாரி கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெறும்.இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா ஆந்திரா கர்நாடகா மும்பை ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • சுசீலா சேர்ந்தமரத்திற்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
    • பர்சை திருடிவிட்டு தப்ப முயன்ற மூதாட்டியை சக பயணிகள் பிடித்தனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி பஸ் நிலையத்தில் நேற்று மதியம் சேர்ந்தமரத்திற்கு செல்வ தற்காக சுசீலா என்ற பெண் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அவரது அருகில் வந்த மூதாட்டி ஒருவர், கண்ணி மைக்கும் நேரத்தில் சுசீலா கையில் வைத்திருந்த பையில் இருந்த பர்சை திருடிக் கொண்டு தப்பி ச்செல்ல முயன்றார்.

    அதனை அறிந்த சுசீலா கத்தி கூச்சலிடவே, சக பயணிகள் அந்த மூதாட்டி யை பிடித்தனர். தகவல் அறிந்து புளியங்குடி போலீ சார் அங்கு விரைந்து வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தியதில், அவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலையை சேர்ந்த காஜா மைதீன் என்பவரது மனைவி பாத்திமுத்து(வயது 70) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பர்சை மீட்டனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நெல்லை கொக்கிர குளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    • அடிக்கல் நாட்டு விழா நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் சுமார் ரூ. 75 லட்சம் மதிப்பில் 3 ஆயிரம் சதுர அடியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 11-வது வார்டில் சுமார் ரூ. 70 லட்சம் மதிப்பில் குடிநீர் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. புதிய திட்டப் பணிகளை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜா அடிக்கல் நாட்டினர்.

    விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி, நகராட்சி ஆணையாளர் சுகந்தி, நகராட்சி பொறியாளர் முகைதீன், சுகாதார அலுவலர் கணேசன், நகர்மன்ற உறுப்பினர் லட்சுமி செல்வம், பீர்பாத்து சாகுல்ஹமீது, சங்கரநாராயணன், முகமது நைனார், பாலசுப்பிரமணியன், சீதாலட்சுமி முனியராஜ், நிர்வாகிகளான பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, வக்கீல் பிச்சையா, கம்பிளி மாரியப்பன், ராஜவேல்பாண்டியன், ராஜ்குமார், சேதுராமன், குருராஜ், அன்பு, அக்ரி சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அய்யாபுரம் பகுதியில்ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • மருத்துவ பணிகளை நகராட்சி தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புளியங்குடி:

    புளியங்குடி நகராட்சி 33-வது வார்டு அய்யாபுரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து புளியங்குடி நகராட்சி தலைவரும், மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டர் அணி அமைப்பாளருமான விஜயா சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கி மருத்துவ பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் நகர்மன்ற துணை தலைவரும், தி.மு.க.நகர செயலாளருமான அந்தோணிசாமி, சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமருத்துவர்கள் சூர்யா, ரேவதி, மாவட்ட மலேரியா அலுவலர் தண்டாயுதபாணி, சுகாதாரத்துறை அலுவலர்கள் ராமலிங்கம், பாலாஜி, சர்போஜி, கமிஷனர் சுகந்தி, என்ஜினீயர் முகைதீன் அப்துல் காதர், சுகாதார அலுவலர் கணேசன், 33-வது வார்டு செயலாளர் வெள்ளபாண்டி, ஊர் நாட்டாண்மை எட்வர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அய்யாபுரம் இந்திரா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் டேனியல் இன்பராஜ் நன்றி கூறினார்.

    • மாரியப்பன் காய்கறி வியாபாரம் பார்த்து வந்தார்.
    • போலீசார், மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி வல்லப விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 45). இவர் காய்கறி வியாபாரம் பார்த்து வந்தார். தினமும் மாலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து புளியங்குடி ஊருக்கு வெளியே ஒருவரது கிணற்றில் அமர்ந்து பேசுவது வழக்கம்.

    நேற்றும் அவர் தனது நண்பர்களுடன் இரவில் பேசிக்கொண்டிருந்த நிலையில் அனைவரும் கிணற்று ஓரத்திலேயே தூங்கி விட்டனர். இந்நிலையில் இன்று காலை அவரது சக நண்பர்கள் எழுந்துவிட்ட நிலையில், மாரியப்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீசார் அங்கு சென்று மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மக்கள் நன்மைக்காக, மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.
    • திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடினர்.

    புளியங்குடி:

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் ஆனி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம் உட்பட 21 நறுமண பொருட்கள் மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்திரகாளியம்மன், மகா காளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பவானி அம்மனுக்கு 21 நறுமணப் பொருள்களால் அபிஷேகங்கள் நடந்தது.
    • இரவு 9 மணிக்கு பவானி அம்மனுக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொள்வதன் மூலம் நீண்ட நாட்கள் திருமண மாகாதவர்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் இல்லாத வர்களுக்கும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு குருநாதர் சக்தியம்மா ஆடிப்பூர வளைகாப்பு பற்றி ஆன்மிக சொற்பொழி வாற்றினார்.

    தொடர்ந்து முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 நறுமணப் பொரு ள்களால் அபிஷேகங்கள் நடந்தது. தொ ர்ந்து மஞ்சள் காப்பு, வளையல் மாலைகள் அலங்காரம் செய்ய ப்பட்டு, 21 வகையான வளைகாப்பு சாதங்கள் படையல் வைத்து, பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. அதனைத்தொ டர்ந்து குருநாதர் சக்தியம்மா முப்பெரும்தேவியர் பவானி அம்மனுக்கு இரவு 9 மணிக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மன்களுக்கு வளைகாப்பு அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பவானி பத்ரகாளியம்மன், மகாகாளியம்மன், வள்ளி, தெய்வானை ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாத மாக வளைகாப்பு சாதம், வளையல், மஞ்சள் கிழங்கு, மஞ்சள் காப்பு, குங்குமம், தாலிக்கயிறு வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    இதில் தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, நெல்லை, தூத்து க்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த ர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×