என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழங்க"
- வெளியுறவுத்துறை மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
- அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.
நாகர்கோவில்:
விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட 12 மீனவர்கள் கடந்த 11-ந்தேதியன்று மாலத்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அந்நாட்டின் இழுவை கப்பல் மீன வர்களின் படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் படகு மற்றும் அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் கடலில் முழ்கின. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.
அந்நாட்டு அரசு அவர்களை கைது செய்தது. பின்னர் அவர்களை விடுவிக்க இந்திய தூதரகத்தை நான் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டேன். மீனவர்கள் தாயகம் திரும்பி வரவும் நடவடிக்கை எடுத்தேன். பின்னர் ஊர் திரும்பிய மீனவர்களை சந்தித்து அவர்கள் கோரிகை் கையை கேட்டறிந்தேன். அப்போது சேதம் அடைந்த படகு உள்பட ரூ.1½ கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனை கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற்று தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து நான் நேற்று டெல்லி சென்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தேன். அப்போது மாலத்தீவு கப்பல் மோதி படகு விபத்துக் குள்ளான மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனு அளித்தேன்.
இதுதொடர்பாக மாலத்தீவு அரசை தொடர்பு கொண்டு நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
- பாலமோர் சாலைக்காக விட்டு கொடுக்கும் இடத்திற்கு போதுமான இழப்பீட்டினை வழங்குவதற்கு மாநகராட்சியால் இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பாலமோர் ரோட்டில் இரு பக்கமும் 10 அடி அகலப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர், வணிகர்கள், கடை உரிமையாளர்களை அழைத்து பேசி உள்ளனர். அப்போது சாலையை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக 10 அடி அகலத்தில் இடத்தை விட்டு கொடுக்கும்படி கேட்டுள்ளார்கள். மேலும் பாலமோர் சாலைக்காக விட்டு கொடுக்கும் இடத்திற்கு போதுமான இழப்பீட்டினை வழங்குவதற்கு மாநகராட்சியால் இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலையை விரிவுபடுத்த இடம் தரவில்லை என்றால் கட்டிடத்தின் மேல் நகர் ஊரமைப்பு திட்டம் 56, 57-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தங்கள் கட்டிட உபயோகம் நிறுத்தப்படும் என்றும் அச்சுறுத்தி வருகின்றனர்.மேலும் இடத்தை விட்டு தர வணிகர்கள் மற்றும் கடை உரிமை யாளர்கள் சம்ம தித்து விட்டதாக உண்மைக்கு மாறாக வெளியிட்டுள்ளார்கள். சாலை விரிவாக்கத்திற்கு இடம் விட்டு தர மாட்டோம் என்று வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் கூறவில்லை. மேற்கண்ட இடத்திற்கான இட மதிப்பீட்டில் இழப்பீடு வழங்கினால் அவர்கள் தருவதற்கு தயாராக உள்ளார்கள்.
அரசு இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு மேற்கண்ட சாலையினை அகலப்படுத்துவதற்கு தேவையான இடத்திற்குரிய இன்றைய மதிப்பீட்டில் இழப்பீட்டு தொகையினை அனுமதித்து வணிகர்கள் மற்றும் கடை உரிமை யாளர்களின் நலனை பாதுகாத்திட வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வாழப்பாடி வட்ட கிளை பொதுக்குழு கூட்டம் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.
- மாநில செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் செல்லதுரை சிறப்புரையாற்றினர்.
சேலம்:
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வாழப்பாடி வட்ட கிளை பொதுக்குழு கூட்டம் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. செயலாளர் வருதராஜன், பொருளா:ளர் ராணி உள்ளிட்ட நுஇர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மாநில செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் செல்லதுரை சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும், 70 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.80-இல் இருந்து ரூ.150 ஆகவும், மருத்துவ காப்பீடு ரூ.300-இல் இருந்து ரூ.497 ஆகவும் உயர்த்தியுள்ளதை மாற்றி அமைக்கவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் காமராஜர் காலனி உள்பட பல பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- இந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் காமராஜர் காலனி உள்பட பல பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் நட வடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை அடுத்து அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கூறியதாவது
காமராஜர் காலனி பாதியில் செப்டிக் டேங்க் அருகே குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தான் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் அங்குள்ள 400 குடும்பத்தினர் மிகவும் மோசமான குடிநீரை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
எனவே பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.எனவே கலெக்டர் தலையிட்டு உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வீடு இல்லாதோர் தங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
- ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து எங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினோம்.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு இல்லாதோர் தங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மக்கள் நலச் சேவை அமைப்பினர் தலைவர் என்.ஈஸ்வரி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனா். அவா்கள், ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டனா். பின்னா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவை வழங்கினா்.
இது குறித்து மக்கள் நல சேவை அமைப்பின் தலைவா் ஈஸ்வரி கூறுகையில் கடந்த 3 மாதங்களாக இலவச வீட்டு மனை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதனால் ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து எங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினோம். இனியும் தாம–தப்படுத் தும்பட்சத்தில் காலியாக உள்ள அரசுக்குச் சொந்த மான நிலங்களில் நாங்களாகவே குடியேறி விடு–வோம் என்றாா்.
- முருகம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுமுடி யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபனிடம் மனு கொடுத்தனர்.
- சுமை தாங்கி பகுதியில் தற்போது போர் போட்டு டேங்க் கட்டப்பட்டு உள்ளது. அதில் இருந்து எங்களுக்கு குடிநீர் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது முருகம்பாளையம். இக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுமுடி யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபனிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:
எங்கள் பகுதி நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது. இதனால் நிலத்தடி நீர் அனைத்தும் மாசுபட்டு உள்ளதால் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் மூடப்பட்டு விட்டன. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டமும் சரியாக செயல்படுவதில்லை. வீட்டுக்கு 2 குடம் குடிநீர் கிடைப்பதே அரிதாக உள்ளது.
மேலும் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கும் குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ளது.எனவே சுமை தாங்கி பகுதியில் தற்போது போர் போட்டு டேங்க் கட்டப்பட்டு உள்ளது. அதில் இருந்து எங்களுக்கு குடிநீர் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக ஊராட்சி செயலாளரை தொடர்பு கொண்டு குடி தண்ணீர் காலை, மாலை 2நேரமும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
- தமிழக அரசு கொரோனா நிவாரண திட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2 பகுதிகளைக் கொண்டுள்ளது.
- இந்த உதவி பெற பயனாளி 55 வயதிற்கு மேற்படாதவராகவும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2020-2021 மற்றும் 2021-2022 ஆகிய ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் வகையில் தமிழக அரசு கொரோனா நிவாரண திட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2 பகுதிகளைக் கொண்டுள்ளது.
பகுதி 1-ன் கீழ் கொரோனா பரவலால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தனி நபர்கள், தனியுரிமை அல்லது பங்குதாரர் நிறுவனங்கள் தங்கள் பழைய நிறுவனத்தை மறு உருவாக்கம் அல்லது ஒரு புதிய நிறுவனத்தினை தாமாகவோ அல்லது தமது சட்டபூர்வ வாரிசுகள் மூலமாகவோ தொடங்குவதற்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 கோடி வரை இருக்கலாம். இதில் நிறுவப்படும் எந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
இந்த உதவி பெற பயனாளி 55 வயதிற்கு மேற்படாதவராகவும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
பகுதி 2-ன் கீழ் மாநிலத்தின் எந்த பகுதியிலும் இயங்கி வந்த கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலை மேற்கொள்ள நிறுவப்படும் எந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
ஆர்வமும், தகுதியும் கொண்ட தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மானிய உதவி பெறுமாறு கேட்டுக்–கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கான விண்ணப்–பத்தினை இணையவழியாக msmeonline.tn.gov.in –ல் பதிவிடலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சேலம் ஐந்து ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தினை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்