search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரிவசூல்"

    • 2023-2024-ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான காலம் 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.
    • மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நூதன உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் என்ற 4 மண்டலங்கள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.

    இந்த வார்டுகளில் வசிக்கும் மக்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை சேவைக் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள், கடைகளின் வாடகை போன்ற வைகள் ஆண்டுதோறும் மார்ச் 31-ந்தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும்.

    அந்த வகையில் 2023-2024-ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான காலம் 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.

    ஆனால் இதுவரை பலர் வரிகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இந்த மாதத்திற்குள் வரியை வசூலிக்க ஆலோசிக்கப்பட்டது.

    பெரும்பாலானோர் பணிக்கு செல்பவர்கள் வீடு திரும்ப நேரம் ஆகிவிடுவதால், அவர்கள் வரியை கொண்டுவந்து மையங்களில் செலுத்துவதற்கு நேரம் இல்லாமல் போய் விடுகிறது என்ற கருத்து எழுந்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நூதன உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

    அதன்படி அனைத்து மண்டலங்களிலும் உள்ள வரிவசூல் மையங்களும் கூடுதல் நேரம் செயல்பட அறிவுறுத்தினார்.

    இதனை தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக வரித்தொகைகளை செலுத்திட ஏதுவாக வருகிற 31-ந்தேதி வரை மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை விடுமுறையின்றி செயல்படும் என கமிஷனர் தெரிவித்தார்.

    அதன்படி அனைத்து வரிவசூல் மையங்களும் நேற்று முதல் கூடுதல் நேரம் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு சில மையங்களில் நேற்று இரவு நேரத்திலும் பெரும்பா லானோர் தங்களது வரி களை செலுத்தினர். இதனை பயன்படுத்தி 2023-2024ம் ஆண்டிற்கான வரித் தொகைகளை உடனடியாக செலுத்தி உரிய ரசீது பெற்று கொள்ள கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.

    • ஆன்-லைன் மூலம் வரிவசூல்செய்யும் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக பூங்குணம் ஊராட்சியில் ஆன்-லைன் மூலம் வரிவசூல்செய்யும் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி தொடங்கி வைத்தார். தமிழக அரசு ஊராட்சி களில் வரிவசூல்செய்யும் பணியினை ஆன்லைன் முறையில்மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட அளவில் முதன் முதலில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம், பூங்குணம் ஊராட்சியில் வரிவசூல் பணிக்காக பி.ஓ.எஸ். கருவியை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர்கூறு கையில், பொதுமக்களி டமிருந்து நேரடியாக வரி வசூல் செய்யப்படுவதற்கு மாற்றாக வங்கிகள் மூலமாகவும், நெட் பேங்கிங் மூலமாகவும், 'ஜிபே' மூலமும் வரிகளை அரசு கணக்கில் சேர்க்கலாம். இந்த ஊராட்சியை மாதிரி ஊராட்சியாக தேர்ந்தெடுத்துள்ளோம். ஆகவே இந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.

    பின்னர் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார். ஊராட்சியில் தகுதியுள்ள முதியோர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் முதியோர் உதவித் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டுக் கொண்டார். இதில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, துணைவட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி, ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி வெங்கடேசன், துணை தலைவர் லட்சுமி, ஊராட்சி செயலாளர்கள் ராஜ்குமார், ஆரோக்கியராஜ் உடனிருந்தனர்.

    • கபிஸ்தலம் ஊராட்சியில் 100 சதவீத வரிவசூல் செய்யப்பட்டிருப்பதை பாராட்டினார்.
    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் நெற்களம் அமைக்கும் பணிகள் ஆய்வு.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    பின்னர் ஊராட்சி பதிவேடுகளை ஆய்வு செய்து பார்வையிட்டு அதனை தொடர்ந்து பி.எல். எப், மற்றும் சுய உதவி குழுக்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகியவுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்.

    அப்பொழுது சுயதொழில் செய்யும் நபர்களை அழைத்து அவர்கள் செய்த மண்பாண்டங்கள், அகல் விளக்குகள், ஆகியவற்றை பார்வையிட்டு சிறப்பாக செய்துள்ளதாக அவர்களை ஊக்குவித்து தொழில் முனைவோரில் தஞ்சை மாவட்டம் தலைசிறந்த மாவட்டமாக திகழ வேண்டும் என அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து கபிஸ்தலம் ஊராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டிருப்பதை பாராட்டி நல்ல முறையில் செயல்பட்டு கொண்டுள்ள இந்த ஊராட்சி மேலும் சிறப்பாக செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

    ஊராட்சியில் தனியார் வசமுள்ள குளங்களை ஊராட்சி நிர்வாகத்திற்கு கீழ் கொண்டு வந்தால் ஊராட்சிக்கு வருமானத்தை பெருக்க வழிவகை செய்ய முடியும் என ஊராட்சி மன்ற தலைவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க குளங்களை பராமரித்து வரும் தனியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து சோமேஸ்வரபுரம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை பணி, மற்றும் நெற்களம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து விரைவில் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆயுள் போது பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவகுமார், ஆனந்தராஜ், வட்டார துணை வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன், சரவணன், வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள், சுய உதவி குழுவினர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • 1,800 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடத்துக்கு 75 சதவீதம் மற்றும் இதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு100 சதவீதம் உயர்த்தி வரி விதிக்கப்பட உள்ளது.
    • கட்டடங்கள் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், மறுசீராய்வு செய்யப்பட்ட புதிய சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதன்படி 600 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடங்களுக்கு 25 சதவீதம் ,1,200 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடத்துக்கு 50 சதவீதம், 1,800 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடத்துக்கு 75 சதவீதம் மற்றும் இதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு100 சதவீதம் உயர்த்தி வரி விதிக்கப்பட உள்ளது.

    இந்த சொத்து வரி உயர்வு குறித்து பொதுமக்கள் மத்தியில் கருத்துகள் கேட்கப்பட்டன.பெருவாரியான மக்களிடம் ஆட்சேபனை எழுந்துள்ள நிலையில், வரியை உயர்த்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றது. இந்தநிலையில் பல்லடம் நகராட்சியில் மறுசீராய்வு செய்யப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது.

    இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள்,1,263 வணிக நிறுவனங்கள், 546 தொழில் கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.சொத்துவரி மறுசீராய்வு தொடர்பாக கட்டடங்கள் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.வரிகள் மறுசீராய்வு பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.இதன்படி உயர்த்தப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த புதிய சொத்து வரி, பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளையும் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மறுசீராய்வு செய்யப்பட்ட புதிய சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.
    • வரியை உயர்த்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    பல்லடம் :

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், மறுசீராய்வு செய்யப்பட்ட புதிய சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதன்படி 600 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடங்களுக்கு 25 சதவீதம் 1,200 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடத்துக்கு 50 சதவீதம், 1,800 சதுர அடிக்கு உட்பட்ட கட்டடத்துக்கு 75 சதவீதம், மற்றும் இதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு 100 சதவீதம் உயர்த்தி வரி விதிக்கப்பட உள்ளது. இந்த சொத்து வரி உயர்வு குறித்து பொதுமக்கள் மத்தியில் கருத்துகள் கேட்கப்பட்டன.

    பெருவாரியான மக்களிடம் ஆட்சேபனை எழுந்துள்ள நிலையில், வரியை உயர்த்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பல்லடம் நகராட்சியில் மறுசீராய்வு செய்யப்பட்ட சொத்து வரி வசூல் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என நகராட்சி நிர்வாத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து நகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் கூறியதாவது:- பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள்,1,263 வணிக நிறுவனங்கள், 546 தொழில் கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.சொத்துவரி மறுசீராய்வு தொடர்பாக கட்டடங்கள் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளன. தற்போது, பழைய வார்டுகளில் இருந்து புதிய வார்டுகள் மாற்றும் பணி நடந்து வருகிறது. அடுத்த 6 மாதங்களுக்குள் புதிய வார்டு அடிப்படையில், வீட்டு கதவு எண்கள் மாற்றி அமைக்கப்படும். அது வரை பழைய எண்களே பயன்பாட்டில் இருக்கும். மறுசீராய்வு பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.இதன்படி உயர்த்தப்பட்ட சொத்து வரி வசூல் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்துக்கு பின்பு துவங்கும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×