search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளஸ்-2 மாணவர்"

    • நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கன்னியாகுமரியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் -1 படித்து வருகிறார்.
    • அவர் கடந்த சில நாட்க ளாக வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

    நாகர்கோவில் : நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கன்னியாகுமரியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் -1 படித்து வருகிறார்.

    அவர் கடந்த சில நாட்க ளாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் பெற்றோர் அவரை பரிசோத னைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவி கரு வுற்று இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி மாணவியின் பெற்றோ ரிடம் தெரிவித்தனர். மகள் 8 மாதம் கர்ப்ப மாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதை கேட்டு அவர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

    கர்ப்பத்திற்கு யார் காரணம்? என்று பெற்றோர் விசாரித்த போது, மாணவி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த பிளஸ் -2 மாணவர் ஒருவர் வீட்டிற்கு வரும்போது பழக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் தனிமை யில் உல்லாசமாக இருந்த தாகவும் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில் மகளிர் போலீ சில் புகார் செய்யப்பட்டது.புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.பின்னர் சம்பந்தப்பட்ட பிளஸ்-2 மாணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

    இதையடுத்து பிளஸ்-2 மாணவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர், மாணவியை காதலித்து வரு வதாக கூறினார்.

    இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் தனிமையில் உல்லாசமாக இருந்த தகவலையும் தெரிவித்தார்.இதற்கிடையில் கர்ப்பிணி யாக உள்ள மாணவியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் அனுமதித்து உள்ளனர்.

    • சிறப்பு வகுப்புக்கு சென்ற கவியரசு அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி கிராமம் மூலகவுண்டன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பராஜ். இவரது மகன் கவியரசு (17).

    கவியரசு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பருவாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் 11-ம் வகுப்புக்காக அவரை அந்தியூரில் உள்ள தனியார் பள்ளியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.

    இது கவியரசுக்கு பிடிக்கவில்லை. தான் பழைய பள்ளியில் படிப்பதாக கூறினார். அதற்கு அவரது பெற்றோர் பிளஸ்-1 மட்டும் இந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு உன்னை பழைய பள்ளியில் சேர்த்து விடுவதாகவும் கூறினர்.

    இதனால் விருப்பமின்றி கவியரசு அந்த பள்ளியில் படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென வீட்டில் யாருக்கும் சொல்லாமல் ரெயில் ஏறி சென்னை சென்று விட்டார். பின்னர் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் கவியரசை அவரது பெற்றோர் மீட்டு வந்தனர்.

    அதன் பின்னர் பிளஸ்-1 பொதுத்தேர்வை கவியரசு எழுதி முடித்தார். அதன் பின்னர் பிளஸ்-2 சிறப்பு வகுப்புக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் சிறப்பு வகுப்புக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கவியரசு அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர் பள்ளியில் தொடர்பு கொண்டு கேட்ட போது உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை என்று கூறி விட்டனர்.

    இதனையடுத்து அவரது பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பிளஸ்-2 மாணவர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பிளஸ்-2 மாணவர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

    யாகப்பா நகர் முத்துமணி மனைவி வெண்ணிலா (வயது23).இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    உத்தங்குடி சின்ன மங்கலக்குடியை சேர்ந்தவர் ஞானபண்டிதன் (42). இவர் ஷேர் மார்க்கெட்டில் வர்த்தகம் செய்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டது. மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் புதூர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அவனியாபுரம் தந்தை பெரியார் நகரை ேசர்ந்த சதீஷ்குமார் மனைவி முத்துலட்சுமி(23).இவர் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தார்.

    வீட்டில் தனியாக இருந்தபோது முத்துலட்சுமி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை தங்கராஜ் கொடுத்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தினர்.

    திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.நகர் முனியாண்டி கோவில் சந்தை சேர்ந்த பழனி மகன் வாசு(17). பிளஸ்-2 மாணவர். அவருக்கு படிக்க விருப்ப மில்லை. பெற்றோர் படிக்கும்படி வற்புறுத்தினர்.இதில் மனமுடைந்த மாணவர் வாசு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • பிளஸ்-2 மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமு பங்கேற்றார்.
    • மாணவ-மாணவிகள் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் சார்பில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ''எதிர்காலம்? மேற்படிப்பிற்கான பயணம்...'' என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் வரவேற்றார். டீன் மாரிசாமி உள்பட பலர் பேசினர்.

    சிறப்பு விருந்தினராக சினிமா நடிகரும், பலகுரல் கலைஞர் மற்றும் அப்துல்கலாமின் சீடருமான தாமு கலந்து கொண்டார். இவர் 2021-ம் ஆண்டிற்கான சிறந்த கல்வி சேவைக்கான தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் நடிகர் தாமு பேசியதாவது:-

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசிய இதே கல்லூரி மேடையில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை விதைக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைவதற்கான அறிவை தேட ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது ஆகும்.

    ஆசிரியர்கள் 2-வது பெற்றோர்கள். அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். ஆன்லைன் கேம்ஸ், வீடியோ கேம்ஸ் போன்றவைகளில் கவனம் செலுத்தக்கூடாது.

    உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக்கும் அதீத சக்தி இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. ''கனவு காணுங்கள்'' என்ற அப்துல்கலாமின் வார்த்தைகளை நனவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பி.எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியில் கல்லூரி முதல்வர் சுந்தரராஜ், கல்வி இயக்குநர் கோபால்சாமி, பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் திருப்பரங்கிரிராஜன், பி.எஸ்.ஆர். கல்வியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், அனைத்து கல்லூரிகளின் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சயின்ஸ் மற்றும் ஹூமானிட்டிஸ் துறைத்தலைவர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.

    ×